16-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்
ஓட்டு என்பது வெறும் விரல் மை அல்ல, அது ஒரு பெருவெள்ளத்தின் சிறுதுளி.
இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும், ஓட்டு உரிமை வழங்கப்படுகிறது. நாம் இந்திய குடிமகன் என்பதற்கு அத்தாட்சி, நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓட்டுரிமை. அதை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும். ஓட்டு போடுவது, ஒவ்வொருவரின் கடமை. எனவே, இன்று தவறாமல் ஓட்டளிப்போம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த தினம்
இந்தியாவின் வடகிழக்கு மூலையில் திபெத்தை ஒட்டி உள்ள சிறிய மாநிலம் சிக்கிம். 7096 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. இந்த மாநிலத்தில் 200க்கும் அதிகமான புத்த கோவில்கள் உள்ளன. லிம்பு எனப்படும் உள்ள+ர் மொழியுடன் நேபாளி, ஹிந்தி பேசப்படும் மொழிகளாக உள்ளன. மாநிலத்தின் சிறப்பு அம்சம் இங்குள்ள கஞ்சஞ்சங்கா மலைச் சிகரமே ஆகும். இந்தியாவின் உயர்ந்த சிகரமாக இது உள்ளது. இதன் உயரம் 8586 மீட்டர் கொண்டது. இந்தியா - சீனாவின் எல்லை பிரச்சனையில் இது பல ஆண்டுகளாக இந்த மாநிலம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது குழப்பமாகவே இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டுக்கு பிறகும், சிக்கிம் மாநிலம் ஒரு தனி முடியரசாக இருந்து வந்தது. பின்னர் 1975ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி மக்கள் வாக்கெடுப்பின் மூலமாக சிக்கிம் மாநிலம் இந்தியாவின் 22வது மாநிலமாக இணைந்தது.
1932 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி அன்று பம்பாயில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1960 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.
1975 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி ஜூன்கோ டபெய் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்.
ரஷ்ய நாட்டு நுண்ணுயிரியல் விஞ்ஞானி இல்யா இல்யிச் மெச்னிகோவ் 1845 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி பிறந்தார்.
1929 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி முதலாவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றது.
No comments:
Post a Comment