இலக்கியம் - நந்திக் கலம்பகம் மற்றும் முக்கூடற்பள்ளு
1. கலம்பகம் என்பதனை பிரித்தெழுதுக - கலம் + பகம்
2. கலம்பகம் என்பது ---------------------------- ஒன்று - தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள்
3. பணை என்னும் சொல்லின் பொருள் ------------- - மூங்கில்
4. பகரா என்பதன் பொருள் - கொடுத்து
5. பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் ----------- எனப்படும் - கலம்பகம்
6. நந்திக் கலம்பகம் ------------- பெருமையைப் போற்றும் நூலாக திகழ்கிறது - நந்திவர்மனின்
7. பொருது என்பதன் பொருள் - மோதி
8. நிதி என்பதன் பொருள் - செல்வம்
9. நந்திக் கலம்பகம் நூலின் காலம்- கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
10. கலம்பக நூல்களில் --------------- முதல் நூல் என்பர் - நந்திக் கலம்பகம்
11. கவிகை என்பதன் பொருள்; - குடை
12. வானகம் என்பதன் பொருள்; - தேவருலகம்
13. நந்திக் கலம்பகம் நூலின் ஆசிரியர் - நூலை வழங்கியவரின் பெயரும் ஊரும் அறியப்பெறவில்லை
14. புயல் என்பதன் பொருள் - மேகம்
15. ------------------------ பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு படாப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது - பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப்
16. கலம் என்பது ------------------ - பன்னிரண்டு
17. பகம் என்பது ------------------ - ஆறு
18. ---------------- உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர் - பதினெட்டு
19. கலம்பகத்தின் பதினெட்டு உறுப்புகள் - புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம்
20. பள்ளு -------------------- ஒன்று - சிற்றிலக்கிய வகைகளுள்
21. முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் - யாரெனத் தெரியவில்லை
22. நீர் நிறைந்த பள்ளமான சேற்றுநிலத்தில் உழவுத்தொழில் செய்து வாழும் பாமர மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரித்துக் கூறுவதாக அமைந்த நூல் - பள்ளு
23. திருநெல்வேலிக்குச் சற்று வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதாண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் ----------------- - முக்கூடல்
24. முக்கூடல் ஊரிற்கு -------------- என்னும் பெயரும் உண்டு - ஆசூர் வடகரை
25. ஒன்பது மணிகள் - முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், இரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்
No comments:
Post a Comment