23-5-3016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்
பக்ருதின் அலி அகமது
♧ இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக பக்ருதின் அலி அகமது 1905 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை உத்திர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தின் அரசு உயர் நிலைப்பள்ளியில் தொடங்கினார். பின்னர் இங்கிலாந்து சென்ற இவர் 1923 ஆம் ஆண்டு புனித கேத்தரின் கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தார். கேம்பிரிச் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார்.
♧ 1925 ஆம் ஆண்டு இலண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றமைக்காக மூன்றை ஆண்டு காலம் சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு முறை அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
♧ நடுவண் அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர் குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை, கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை மற்றும் நிறுவன சட்டங்கள் போன்ற துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். 1967 ஆம் ஆண்டு அகில இந்திய மட்டைப்பந்துசங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29ஆம் தேதி இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பக்ருதின் அலி அகமது 1977ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார்.
தஞ்சாவூர் பாலசரஸ்வதி
இந்தியாவின் தலைசிறந்த பரதநாட்டியக் கலைஞரும், பாரம்பரிய நடனம், இசையில் புரட்சியை ஏற்படுத்தியவருமான தஞ்சாவூர் பாலசரஸ்வதி 1918 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி பிறந்தார். நடனக் கலைஞர்களுக்கு சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர் ஆவார். நாட்டின் 2வது உயரிய விருதான 'பத்ம விபூஷண்" விருது இவருக்கு கிடைத்தது. சென்னையில் உள்ள 'இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி" இவருக்கு சங்கீத கலாசிகாமணி விருதை வழங்கியது. சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார். இந்தியாவில் பரத நாட்டியக் கலைக்கு புத்துயிர் அளித்த பாலசரஸ்வதி தனது 66 வயதில் 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி மறைந்தார்.
டெல்லியில் செங்கோட்டை 1648 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது.
1967 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி ஜாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.
தமிழ் கவிஞர் தாராபாரதி 2000 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி மறைந்தார்.
தலைவர் மு. கருணாநிதி 2006 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.
No comments:
Post a Comment