ஸ்லோகம்
ஸ்ரீ பாலாம்பிகை
கர்ணாவிலம்பி மணிகுண்டல கண்டபாதே
கர்ணாந்த தீர்கநவனீ ரஜபத்ர நேத்ரே !
ஸ்வர்ணாயகாதி மணிமௌக்திக சோபிநாஸே !!
பாலாம்பிகே மயி நிதேஹி க்ருபாகாடஷம் !!!
விளக்கம்:
ரத்தின குண்டலங்களை அணிந்தவளே ! ஒளி பெருந்திய கன்னங்களை உடையவளே! காதுவரை நீண்ட தாமரைக் கண்கள் பெற்றவளே! இந்திர நீலக்கல் பதித்த மூக்குத்தியால் ஜொலிப்பவளே ! பாலாம்பிகையே ! கருணையுடன் என் மீது கடைக்கண் காட்டி அருள்புரிய வேண்டும்.
குறிப்பு :
நாம் பூஜிக்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி பூஜித்தால் அன்னை பாலாம்பிகையினால் நம் இல்லத்தில் குறைகள் ஏதும் இருக்காது
லட்சுமி ஸ்லோகம்
பொன்னரசி, நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனியழகுடையாள்
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிருபொற் றாளே சரண்புகுந்து வாழ்வோமே !
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸ{ரபூஜிதே !!
சங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !!!
விளக்கம்:
எல்லா சக்திகளையும் உடையவளே! செல்வங்களின் இருப்பிடமே! தேவர்களால் வழிபடப்படுவளே! உனக்கு நமஸ்காரம். சங்கையும், சக்கரத்தையும், கதையையும் கையில் கொண்டவளே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகிறேன்.
குறிப்பு :
தினமும் லட்சுமி தேவியின் ஸ்லோகத்தை சொல்லி வணங்கி வர தேவியின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைத்து செல்வநிலைக்கு பஞ்சம் ஏற்படாது.
அஸ்வினி நட்சத்திர தோஷம் நீங்க !
இந்த நட்சதிரத்தில் பிறந்தவர்கள் வஸ்திர தானம் செய்து கூத்தனூரில் எழுந்தருளியுள்ள கலைவாணியை வழிபட்டு வந்தால் எல்லா சிறப்புகளையும் பெறலாம்.
No comments:
Post a Comment