தேக்கு மரம்
தேக்கு மரம் :
உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாகும். இதன் அறிவியல் பெயர் டெக்டோனா கிரான்டிஸ் ஆகும்.
கிரேக்க மொழியில் டெக்டன் என்றால் தச்சருக்கு சம்பந்தப்பட்டது. கிராண்டிஸ் என்றால் பிரமாதமானது என அர்த்தமாகும். அதாவது இந்த மரம் தச்சர்களுக்கு உகந்த பிரமாதமான மரம் என்ற பொருளில் பெயரிடப்பட்டுள்ளது.
தட்பவெப்பநிலை :
இம்மரம் கடல் மட்டத்திலிருந்து 1200 மீ உயரம் வரையிலுள்ள நிலப்பகுதியல் நன்கு வளரும். ஆண்டு மழையளவு 750 மி.மீ முதல் 2500 மி.மீ.வரை மழை பெறும் இடங்களில் நன்கு வளர்கிறது.
தேக்கு வளர ஏற்ற மண் :
தேக்கு மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், மணல் கலந்த நிலங்கள், செம்மண் நிலங்கள், செம்புறை மண் நிலங்கள் மற்றும் மணல் கலந்த களி நிலங்களிலும் நன்கு வளரும்.
தேக்கு மரத்தின் சிறப்புகள் :
தேக்கு மரம் இலையுதிர்க்கும் மரவகையை சேர்ந்தது. நவம்பர் முதல் ஜனவரி வரை இலையுதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றியே காணப்படும். இம்மரம் நல்ல வலிமையுடையது.
இம்மரம் ஒளி விரும்பி ஆகும். நல்ல சூரிய ஒளி கிடைத்தால் தான் இம்மரம் நல்ல முறையில் வளரும்.
தேக்கு மரத்தில் டெக்டோல் எனும் பினால் சாறு உள்ளது. இது தண்டு அழுகல் மற்றும் கரையான் அரிப்பைத் தடுத்து விடுகிறது.
தேக்கின் அமைப்பு :
இதன் இலைகள் அகலமாகவும், கொத்து கொத்தான பூக்கள் மற்றும் காய்களை கொண்டதாகவும் விளங்குகிறது.
20 வயதுடைய மரத்திலிருந்து சராசரியாக ஒரு மரத்திற்கு 10 கிலோ தேக்கு விதைகள் கிடைக்கும். ஒரு கிலோவிற்கு சராசரியாக 1300 விதைகள் இருக்கும்.
தேக்கு மரத்தின் பயன்பாடு :
மரச்சாமான்கள் செய்தல், சன்னல், கதவுகள் செய்தல், கட்டில்கள் செய்தல், கப்பல் கட்டுமானம் மற்றும் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தேக்கு மரம் பயன்படுகிறது.
மரக்கட்டையின் கடினத்தன்மைக்காக தேக்கு மரம் மரங்களின் அரசன் என்று சிறப்பிக்கப்படுகிறது.
வாழையைப் போலவே உணவு சாப்பிடுவதற்கும் இதன் பெரிய இலைகளை பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது.
தேக்கின் மருத்துவப் பயன்கள் :
தேக்கு மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதன் மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது. இதில் காணப்படும் துவர்ப்பு சுவை ரத்தத்தை உறைய வைக்குத் தன்மை கொண்டதாக விளங்குகிறது. மூக்கில் வடியும் ரத்தம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு ஒரு சிறப்பான கூந்தல் தைலத்தை உருவாக்கலாம்.
தேக்கின் விதைகள் நுண் கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் பயன்படுகிறது.
சிறுநீரகப்பிரச்சனை, மார்புச்சளி, கல்லீரல் பிரச்சனை போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது.
No comments:
Post a Comment