தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்..!
உலகின் படைப்புகளெல்லாம் உழைப்பின் சிதறல்களே..!
உலகத்திலிருந்து உழைப்பை கழித்தால்
வெறும் மண்ணும் கல்லும் தான் மிச்சம்..!
அதனால், உழைப்பாளிகளை மதிப்போம்..! உலகத்தை காப்போம்.!
அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!
🎱🎱🎱🎱🎱🔔🔔🎱🎱
அவிட்டம் நட்சத்திரம்
27 நட்சத்திரங்களின் வரிசையில் 23வது இடத்தை பெறுவது அவிட்ட நட்சத்திரமாகும். இந்நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. அவிட்ட நட்சத்திரத்தின் 1 மற்றும் 2 ஆம் பாதங்கள் மகர ராசிக்கும், 3 மற்றும் 4 ஆம் பாதங்கள் கும்ப ராசிக்கும் சொந்தமானதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் க, கி, கு, கூ, ஞ, ஞா, கே ஆகியவை ஆகும்.
நட்சத்திரத்தின் பொது பலன்கள் :
அவிட்டம் செவ்வாய் பகவானுக்குரிய நட்சத்திரம் என்பதால் இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல கலைகளையும் கற்று வைத்திருப்பர். பிறருடைய முகத்தை நேருக்கு நேர்ப் பார்த்து பேசுவார்கள். மெதுவாக நடப்பார்கள், ஆடை ஆபரணங்கள் மீது அதிக விருப்பம் உடையவர்கள். தன் பேச்சாற்றலால் எதிரிகளை வெல்வார்கள். அழகும், அறிவும் நிறைந்தவர்கள். மற்றவர்களின் சொத்துக்கு ஆசைபட மாட்டார்கள். அடுத்தவர் தன்னைபற்றி விமர்சனம் செய்தால் பொருத்து கொள்ள மாட்டார்கள். உலகமே தலை கீழாக கவிழ்ந்தாலும் அஞ்சாமல் இருப்பார்கள். இவர்கள் அடுத்தவர்களின் உதவியை எதிர்ப்பார்க்க மாட்டார்கள். ஜாதி, இனம், மொழி மீது அதிக பற்று கொண்டவர்கள். மதியாதவர்களின் வாசற்படியை கூட மிதிக்க மாட்டார்கள். வலிய சண்டைக்கு போகாவிட்டாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள். அனாவசியமாக பிறருக்கு செலவு வைக்கவும் மாட்டார்கள், தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள். போராடி வெற்றி பெற கூடியவர்கள். அனுபவ அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அவிட்டத்தில் பிறந்தவர்கள் தவிட்டு பானையிலும் தங்கம் எடுப்பார் என்ற பழமொழியும் உண்டு.
நட்சத்திரத்தின் திசை பலன்கள் :
☆ அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் நட்சத்திரத்தின் அதிபதி என்பதால் முதல் திசையாக வரும் செவ்வாய் திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும், பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். சிறு வயது என்பதால் வெப்ப சம்மந்தபட்ட உடல் பாதிப்புகள் உண்டாகலாம்.
☆ இரண்டாவதாக வரும் ராகு திசை காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையும், பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும், பெற்றோர் சொல் கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்.
☆ மூன்றாவதாக வரும் குரு திசை காலங்களில் சற்று கல்வியில் உயர்வும் திருமண சுப காரியமும் நடைபெறும். மொத்தம் 16 வருடம் நடைபெறும் குரு திசை காலங்கள் ஏற்ற இறக்கமும் நிறைந்தாக இருக்கும்.
☆ நான்காவதாக வரும் சனி திசை காலங்களில் பல முன்னேற்றங்கள் பொருளாதார மேன்மைகள் உண்டாகும் என்றாலும், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், பணவரவுக்கு பஞ்சம் இருக்காது.
வழிபாட்டு ஸ்தலங்கள் :
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில்
கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்
கொடுமுடி மகுடேசுவரர் திருக்கோவில்
திருப்பூவனூர் புஷ்பவன நாதர் திருக்கோவில்
No comments:
Post a Comment