குளிர்ச்சி தரும் தர்பூசணி!
இது வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இதைப் பழமாகவும் பழச் சாறாகவும் சாப்பிடலாம். உடல் நலத்திற்கு ஊட்டச்சத்து வழங்கக் கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.
தர்பூசணி பழத்தில் உள்ள சத்துகள் :
♤ வைட்டமின் சி
♤ பேண்டோதெனிக் அமிலம்
♤ தாமிரம்
♤ பயோட்டின்
♤ பொட்டாசியம்
♤ வைட்டமின் ஏ
♤ வைட்டமின் பி
♤ உயிர்ச்சத்து பி
♤ மெக்னீசியம்
♤ மிகச்சிறந்த எவையஅin ஊ யும் எவையஅin யு இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு எவையஅin டீ6ம் எவையஅin டீ1 ம், கனியுப்புக்களான pழவயளளரைஅ யனெ அயபநௌரைஅ மும் உண்டு. மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.
♤ தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாகவும் இருப்பதால், இதனை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொண்டால் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
♤ தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரிசெய்ய முடியும். தர்பூசணியில் தமனி மற்றும் இரத்த நாளங்களை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.
♤ கட்டி, ஆஸ்துமா பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய், கீல்வாதம் போன்ற வற்றைத் தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.இதில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட் லிகோபீனின் போன்றவை இதய நோய்கள், புற்றுநோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை உடையவை. 100 கிராம் தர்பூசணியில் 90மூ தண்ணீர், 46 கலோரிகள், 7மூ மாவுச்சத்து உள்ளது.
♤ குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
♤ அனைவரும் உடலை குளிர்ச்சியுடனும், வறட்சியில்லாமலும் வைத்துக் கொள்ள முயற்சிப்போம். அதற்காக தண்ணீர் அதிகம் குடிப்பதுடன், நிறைய பழங்களையும் வாங்கி சாப்பிடுவோம்.
No comments:
Post a Comment