சூரியனைப் பற்றி ஆய்வு செய்துவருகின்ற நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மிகவும் அற்புதமான தகவல் ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளதாக இணையதளங்கள் பகிர்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆம், சூரியனிடமிருந்து சேகரித்த சில நுண்ணிய அதிர்வலைகளை நாசாஆய்ந்திடும்போது, ஓம் என்ற ஓசை அதாவது ஓம்/அம் போன்று ஒலிப்பதாக குறிப்பிட்டிருக்கின்றதாம்.நாசாவின் இந்தக் கண்டுபிடிப்பை, அதாவது சூரியன் எழுப்புகின்ற ஒலியினைப் பல இணையதளங்களும் வெளியிட்டிருக்கின்றன. சூரியனுடைய ஓசை பற்றி அறிந்திடும் நோக்கில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்ற விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வறிஞர்களின் மத்தியில்இவ்வரிய தகவலானது பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றிருப்பதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில், நாசாவின் கண்டுபிடிப்பாகிய ஓம்/அம் என்ற ஓசையானது இந்திய நாட்டின்புனித மந்திரமாகிய ஓம் என்ற சத்தத்துடன் ஒத்து இருப்பதையும் ஆய்வறிஞர்கள் மிகவும் வியப்புடன் குறிப்பிட்டிருக் கின்றனர். பழம் பெருமை வாய்ந்த நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு சுமார் 22-க்கும் மேற்பட்ட மொழிகள் இலங்குகின்ற நிலையில், வேறு நாடுகளில் கேள்வியுறாத மற்றும் கேட்டிறாத நம்முடைய புனித மந்திரங்களின் அடிப்படை மூலமே ஓம் என்பதாகும்.
அதாவது,இந்திய மரபில் எண்ணற்ற மந்திரங்கள் இருந்தாலும் அவற்றினில் எதை சொல்லுவதாக இருந்தாலும் - ஒன்று ஓமிலிருந்து துவக்கம் பெறும் அல்லது ஓமுடன் முடிவு பெறும்.பிறிதொரு நேரங்களில் சொல்லப்படும் கடவுள் மந்திரங்களானது ஓமுடன் துவக்கம் கொண்டு, ஓமுடன் முடிவுறும். இவற்றிற்கு எடுத்துக்காட்டாக, ஓம் நம சிவாய! சிவாய நமஓம்! ஓம் சக்தி ஓம்! போன்ற மந்திரங்களையே இங்கே சுட்டிக்காட்டிடலாம். இந்நிலையில், நாசாவின் விண்வெளி ஆய்வின் மூலம் சூரியனின் ஒலியானது ஓம்-ஐ தழுவியிருப்பதை உலகோர்முன் எடுத்துச் சொல்லிவிடும் போது அனைவரின் கவனமும் நம்புறத்தே திரும்புவது இயற்கைதானே!அனைத்து இறையம்சங்களுக்கும் தனித் தனியே வேத மந்திரங்களும், போற்றிகளும், வழிபாட்டு முறைகளும் உள்ளதைப் போலவே சூரியனுக்கும் இருக்கிறது. உதாரணத்திற்கு சூரிய காயத்ரி, சூரிய அக்ஷ்டகம் போன்றவற்றினைக் குறிப்பிட்டுச் சொல்லிவிடலாம். மேலும் சூரிய உபநிஷத்து, சூரிய சித்தாந்தம், சூரிய சதகம் போன்ற ஆய்வு நூல்களும் உள்ளன.மேற்கண்ட நிலையில்தான், சூரியனைப் பற்றியும் அதனிடமிருந்து கேட்கக்கூடிய ஒலி பற்றியும் நுணுகி ஆராய்ந்துப் பார்த்திடும் போது வியக்கத்தக்க வகையில் பற்பல செய்திகள் கிடைக்கின்றன.முதலில், நம்முடைய அண்டவெளி தோன்றிடுவதற்குக் காரணமாக விளங்கிட்ட பெருவெடிப்பின்போது ஒளியுடன் சேர்ந்து ஒலியும் ஏற்பட்டதை சாத்திர ஏடுகளும், உலகின் பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சியாளர்களும் ஆமோதித்துக் குறிப்பிடுவதையும் அறிவோம். எனவேதான், சூரிய மண்டலத்தில் நடு நாயகனாக விளங்கிடும் சூரியனே, பேரொளி நாயகனே, இன்று இப்பிரபஞ்த்தை ஆட்டுவிக்கிறான் போலும். இதனை உறுதிப்படுத்திடும் வகையில் ரிக் வேதமானது "சூரிய ஆத்ம ஜகதாஸ்தாஸ்து சாஸ்ச்ச' என்று குறிப்பிடுவதாக சான்றோர்பெருமக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், அதர்வண வேதத்தில் வரக்கூடிய சூரிய உபநிஷதத்திலும் மேற்கண்ட கூற்றினைக் குறிப்பிடுவதாக ஆய்வுச் செய்திகளில் காணப்படுகின்றன.எந்தவொரு நவீன தளங்களோ, கருவிகளோ இல்லாதவொரு காலத்தில் அண்டத்தின் ஒலியை இந்தியர்கள் எங்ஙனம் கண்டறிந்திருக்கக் கூடும்? இதையே சூரிய ஒலியின் ஆய்வினை மேற்கொண்டு வரும் ஆய்வறிஞர்களும் வினவுகின்றனராம். மேற்கண்ட நிலையில், ஒளி-ஒலி ஏற்பட்ட நிகழ்வு பற்றி குறிப்பிடும் "பிக்பேங் தியரி' எனப்படுகின்ற பெருவெடிப்பினைத் தொடர்ந்து நம்முடைய இறைஞானியர்கள் அண்டவெளியின் முதல் ஒலியானது ஓம் என்றும் அதனைப் பற்றி கிடைத்தற்கரிய தகவல்களை எல்லாம் சேகரித்து எதிர்காலத்தினருக்காக விட்டுச் சென்றுள்ளனர்.ஆகவே, அண்டத்தின் துவக்க ஓசையே ஓம் என்ற ஓங்கார நாதம்தான் என்று நம்முடைய இறைஞானிகள் பல நிலைகளில் குறிப்பிட்டு வலியுறுத்திடும்போது, இன்று சூரியனிடமிருந்து ஓம் ஒலி கேட்கப்படுகிறது என்ற கண்டுபிடிப்பில் யாதொரு வியப்புமில்லை என்று தோன்றுகிறதல்லவா?இதனைப் மெய்ப்பிக்கின்ற வகையில் காலஞ்சென்ற பத்மபூஷண் வை. கணபதி ஸ்தபதி, தம்முடைய ஆராய்ச்சியின் வாயிலாக அண்டவெளியில் தோன்றிய முதல் வெளிச்சத்தை ஓம் ஒளி(ஓம் லைட்) என்றும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட முதல் ஓசையை ஓம் ஒலி (ஓம் சவுண்ட்) என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி, அண்டத்தின் ஒலியே பிரம்மத்தின் நாதம் என்றும்,இதனை விண்ணின் மொழி என்று சொல்லி மயன்வழி வந்த பல அருமையான செய்யுள்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அச்செய்யுள்களிலிருந்து சிலவற்றை பயன் கருதி இங்கே வழங்கப்படுகிறது.விண்வெளித் தோன்றா முன்னர் மண்கரு வமையா முன்னர்விண்ணிலை அமையா முன்னர்பண்ணியல் தோன்றா முன்னர்எண்ணியல் இலங்கா முன்னர் ஏழிசைத் தோன்றா முன்னர் திண்ணிய ஓசையாலே ஓம்ஒலிஒலித்ததன்றே - மூலஸ்தம்பம்ஒளி முதற்கண்ட விண்ணொலி ஒசை,வெளிமொழி ஓம் என விளம்பற் பாற்றே - ஸ்தாபத்யம்நிறையொலி, நேரொலி, வெளியொலி, விண்மொழி, மறையொலி ஓமென வழுத்தற் பாற்றே - ஸ்தாபத்யம்சூரியன் என்ற இந்த நெருப்புக்கோளானது தகதகவென தகிக்கின்ற நெருப்பையே பிரதானமாக கொண்டுள்ள கிரகமாகும். நாசாவின் ஆய்வுக்கூடம் சூரியனுடைய மேற்பரப்பிலிருந்து வெளியே உமிழப்படுகின்ற நெருப்புப் பிழம்பிலிருந்து உண்டாகும் அலைகளைச் சிறுகச் சிறுக, அதாவது சுமார் 40 நாள்கள் வரை தொடர்ந்து சேகரித்து - பின்னர் அவற்றினை ரேடியோ அலைகளாக, காதால் கேட்கும் நிலைக்கு மாற்றிடும்போது அந்த அலைக்கற்றைகள் ஓம்/அம் என வரக்கூடிய ஓசையைப் புலப்படுத்தியிருக்கின்றன.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ள சூரிய ஒலியைக் கேட்ட ஆய்வாளர்களுக்கு அந்த ஓசை சூரிய பீஜ மந்திரத்துடன் சற்றே ஒத்துப்போவதைக் கண்டு திகைத்துப் போயினராம். மேலும், சூரியனிலிருந்துப் பெறப்பட்ட இந்த அலைக்கூறுகளின் வெளிப்பாடானதை உற்றாய்ந்திடும்போது, அவை ஒரு குறிப்பிட்ட தாளக்கட்டுக்குள் அடங்கியிருப்பதைக் கண்ட விஞ்ஞானிகள் வெகுவாக வியந்து போயினராம்.சூரியனின் மேற்பரப்பில் ஏற்படக்கூடிய நெருப்பின் கொந்தளிப்பு மற்றும் அதனால் விளைகின்ற அலையதிர்வுகளையும் பற்றி ஆய்வுகளைச் செய்கின்ற பிசிஸ்ட் டான் கெம்மட் தன்னுடைய வாயேஜர் 1 ஆய்வின்போது விண் ஏற்படுத்தக்கூடிய ஒலியினைக் கேட்கும் விதத்தில் முயற்சித்துப் பார்த்தால், கண்டிப்பாக அது வெளிப்படுத்துகின்ற ஒலியைக் கேட்க முடியும் என்று அவர் தம் கருத்தினை எதிர்காலத்தினருக்காகப் பதிவு செய்திருக்கின்றாராம்.சிற்பக் கலையில் ஓம் என்ற ஒலியின் வரிவடிவிற்கு அழகிய விளக்கம் ஒன்றினை மறைந்த வை. கணபதி ஸ்தபதியினுடைய சிற்ப செந்நூலில் காண முடிகிறது. அதாவது, அ + உ = ம என்பது ஓமினுடைய விரிவாக்கமாகும்.அவை முறையே அழித்தல், காத்தல் மற்றும் படைத்தல் என்ற ஆற்றல்களை வெளிப்படுத்தக் கூடியவை என்பதாகும். எனவே, கலைமொழியின் வாயிலாக ஓம் என்ற வரிவடிவிற்கு ஓங்கார வடிவமென விநாயகரின் வடிவத்தைக் கொணர்ந்து அதற்கான தகுந்த விளக்கங்களையும் அக்கலை நூலானது எடுத்துரைக் கின்றது. இதனால், மூலவொலிக்கு வரிவடிவம் கொடுத்திட்ட பழம்பெரும் மரபினைச் சேர்ந்தவர்களாகிறோம்தானே!நம் நாட்டின் முதுபெரும் ஞானியர்கள் ஓம் என்று அப்போதே குறிப்பிட்டு அதனைப் பிரணவ மந்திரமாக அன்றாட சமய வழிபாட்டில் கொண்டு சேர்த்திருப்பதை நினைக்கும்போது மெய்சிலிர்க்கின்றது. மேலும், அனைத்து மக்களையும் அன்றாட வாழ்வியலில் ஓம் என்ற திருமந்திரத்தை உச்சரித்து இயற்கையுடன் இயந்திட வைத்துள்ளதை என்னவென்று பாராட்டுவது?இன்னும் சொல்லப்போனால், இறையின் பல்வேறு அருள் நிலையங்களில் ஒரு சிலர் ஓம் என்றும், வேறு சிலர் ஆமென் என்றும் மற்றும் பலரோ ஆமீன் என்றும் தத்தம் மூதாதையர்கள் வழியைப் பின்பற்றி மந்திரங்களைச் சொல்லி வழிபடுவதை கருத்திற் கொள்ளவேண்டும்.இத்தகைய மந்திரச் சொல்லே விண்மொழியின் மூலநாதமாக கொண்டிலங்குகின்றது என்பது திண்ணமாகிறது. இன்னும் சொல்லப்போனால், ஓம் என்பதே ஒரு விஞ்ஞான நுட்பம்தான் என்கின்றனர்.ஆக, அண்டவெளியின் முதல் ஓசையே ஓம் என்று ஆய்வறிஞர்கள் உறுதிப்பட குறிப்பிடுகின்றநேரத்தில், சூரியனிலிருந்து உமிழப்படுகின்ற அலைக்கற்றைகளினால் வெளிப்படுகின்ற ஓசையும் ஓமுடன் ஒத்துப்போவதை கேள்வியுறும்போது அன்று நம்முடைய இறைஞானியர்கள் சூட்டிக்காட்டியுள்ள ஓம் என்ற விண் மொழிக்கு இதுவே மிகப் பெரிய சாட்சியமாகிறது
No comments:
Post a Comment