சனீஸ்வரபகவான் காகத்தின் வாகனத்தில் ஏன் வருகின்றார்?
ஒருவர் சனிதிசை நடக்கும் பொழுது நியாயம் தீர்க்கப்படுகின்றார்.. அந்த திசையில் ஒருவரிடம் மிக அதிகமாக தீயவை போராடும்.. அதில் முக்கியமானது நாக்கு.. வார்த்தைகளினால் சங்கடங்கள் நிறைய ஏற்படும்..இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்.. நிறைய பாவம் செய்துவிட்ட ஒருவர் எள்ளு பொட்டலத்தை வாங்கி தலையை சுற்றி அக்னியில் போட்டுவிட்டால்.. சனீஸ்வரன் மகிழ்ந்து உங்கள் பாவங்களை விலக்கிவிடுவாரா?பாவங்கள் அதிகரிப்பது முக்கியமாக 5 தீய குணங்கள் மூலம்தான் காமம்.. கோபம்..பேராசை..பற்று..அகங்காரம்.. இவையினுடைய போராட்டம் சனிதிசையில் அதிகமாக வரும் காரணம் பாவ கணக்கு ஏற்பட்டால்தான் அதை சீக்கிரம்அனுபவிக்கவும் வேண்டிய நிலை ஏற்படும்..சனி என்றால் இந்த 5 தீய குணங்களின் மொத்த உருவம்..ஈஸ்வரன் என்றால் பாதுகாக்ககூடியவர் என்று அர்த்தம்.. சனி ஈஸ்வரன் என்றால் தீய குணங்களில் இருந்து பாதுகாப்பளிப்பவர் என்று அர்த்தம்.. இந்த நேரத்தில் ஈஸ்வரனை நினைத்து மனதில் அவரை..ஒரு ஜோதியாக நினைக்க அந்த ஜோதியில் அணைத்து தீய குணங்களும் சாம்பலாகிவிடும்..இந்த தீய குணங்கள் ஒற்றுமையை குலைக்ககூடியது..எனவே மனதில் ஒற்றுமையில்லாமல்.. சமாதானம் இல்லாமல்..செய்பவை இந்த 5 பெரும் தீய குணங்கள்.. நம்மிடம் இருக்கும் இந்த 5 தீயவற்றையும்..5 எழுத்து நமசிவாயத்திடம் மனதில் உறுதி ஏற்றுக்கொண்டு ஒப்படைத்து விடவேண்டும்.சிவஜோதியில் இவை அனைத்தும் பஸ்பமாகிவிடும்..பிறகு மனதால் கூட இந்த தீய குணங்களை தொடமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்..இதனால் ஈஸ்வரன் மகிழ்ந்து சனியை உங்கள் வாழ்கையிலிருந்து சதா காலத்திற்கும் விலக்கிவிடுவார்.. இந்த தீய குணங்கள் முதலில் ஒற்றுமையை மனதில் குலைக்கும்.. அடுத்து உறவுகளிடம்..அடுத்து நட்பு,மேலும் சம்பந்தத்தில் வருபவர்களிடம் ஒட்டு மொத்தமாக ஒற்றுமையை குலைத்து நிம்மதி இழக்க செய்துவிடும்..எனவே, ஒற்றுமையை வலியுறுத்தி சனியை விலக்கும் ஈஸ்வர பகவான் அவருடைய வாகனமாக காக்கை போல் ஒற்றுமையாய் இருங்கள் அப்பொழுது தீயகுணங்கள் உங்களை ஒன்றும் செய்யாது என்று தன்னுடைய வாகனமாக காகத்தை காண்பித்து அறிவுறுத்துகின்றார்.. ஒற்றுமையே பலம்..ஒன்று கூடினால் உண்டு நன்மை..நீங்களும் ஈஸ்வரனுக்கு இந்த 5 தீய குணங்களையும் அர்ப்பணித்து சனியின் பிடியிலிருந்து விடுபட விரும்புகின்றீர்களா?! அருகில் உள்ள ஸ்ரீ சாஸ்தா(ஸ்ரீ சாஸ்தா சனிக்கு கிரஹ பதவி கிடைக்க காரணமானவர்) ஆலயத்திற்கு சென்று அவரை வணங்கி வழிப்பட்டு பயன் பெறுங்கள்.. வாழ்த்துக்கள். ஸ்வாமி சரணம்
No comments:
Post a Comment