கைப்பேசி பற்றி உங்களுக்காக ...!!!
இன்றைய நாட்களில் கைப்பேசி உபயோகிப்பவரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. இன்று எல்லோருடைய கைகளிலும் தவழ்கிறது இந்த கைபேசி. கைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்...? என்பதைப்பற்றி தெரிந்து கொள்வோம்!
★ கைப்பேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது.
★ சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுதல் கூடாது. அதுவே சைனா மொபைல் என்றால் ஆபத்து அருகில்.
★ மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும் போது பேசுவது கூடாது. ஏனென்றால் அப்போது தான் ரேடியேசன் அதிகம் இருக்கும். கதிர்வீச்சு பாதிப்பு மிகுதியாக இருக்கும்.
★ ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து விட்டு மொபைலில் பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும்.
★ மொபைலில் அழைப்பு வரும் போது தான் ரேடியேஷனும் இருக்கும். ரிங் ஒசையை விட வைப்ரேட் மோடில் வைத்து இருப்பது அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். சைலன்ட் மோடும் ஆபத்து விளைக்க கூடியது தான்.
★ நீங்கள் உபயோகிக்கும் மொபைலில் பேசும் போது காதின் பக்கம் சூடாகிக் கொண்டே அந்த மொபைலை தவிர்த்து விடுவது நல்லது.
★ சில ஸ்மார்ட் மொபைலில் ரேடியேஷன் குறைப்பதற்கான கருவிகள் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும்.
★ குழந்தைகளிடம் மொபைலை கொடுத்து அதிக நேரம் பேச வைக்கக் கூடாது.
★ எந்த நேரமும் மொபைலில் பேசி கொண்டே இருந்தால் நரம்பு மண்டலத்தை தாக்கும். தலைவலி அடிக்கடி வரும் வாய்ப்புகள் அதிகம்.
★ பெண்கள் மொபைலை தனியாக ஒரு உறையில் வைத்து கைப்பையில் வைத்துக் கொள்ளுதல் நல்லது.
★ குறிப்பிட்ட சுற்றளவில் ரேடியேஷன் அதிகமாக இருக்கும். டவர் அமைந்துள்ள வீட்டின் கீழேயும் ரேடியேஷன் அதிகமாக இருக்கும். கேன்சர் போன்ற நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.
★ வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசுவை தவிர்த்து விடவும்.
No comments:
Post a Comment