இலக்கணம் - இலக்கணக் குறிப்பறிதல் மற்றும் விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
1. இலக்கணக் குறிப்பறிக: அவன் இவன் - உம்மைத் தொகை
2. இலக்கணக் குறிப்பறிக: தேரா மன்னா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
3. இலக்கணக் குறிப்பறிக: வருக வருக - அடுக்குத் தொடர்
4. இலக்கணக் குறிப்பறிக: அவனும் இவனும் - எண்ணும்மை
5. இலக்கணக் குறிப்பறிக: விரல் பூ - உருவகம்
6. வள்ளுவரை அனைவரும் அறிவர் - வள்ளுவரை அறியாதார் யார்?
7. சாத்தனார் வள்ளுவர் வழி நிற்பவர் - சாத்தனார் எவர் வழி நிற்பவர்?
8. தமிழின் இனிமையை எவறும் மறுக்க மாட்டார் - தமிழின் இனிமையை மறுப்பவர் யாவர்?
9. பெரியபுராணம் சேக்கிழாரால் எழுதப்பட்டது - பெரியபுராணம் யாரால் எழுதப்பட்டது?
10. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை - தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
11. நம்பியாண்டார் நம்பி எழுதிய நூல் திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி எழுதிய நூல் எது?
12. திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளன - திருக்குறளில் எத்தனை பால்கள் உள்ளன?
13. முயன்றால் முடியாதது இல்லை - முயன்றால் முடியாதது உண்டோ?
14.காற்றை மாசுபடுத்துபவை தொழிற்சாலைகளும் போக்குவரத்து சாதனங்களும் ஆகும் - காற்றை மாசுபடுத்துபவை எவை?
15. சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களை கொண்டது - மூன்று காண்டங்கள் கொண்ட நூல் எது?
16. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் - கம்பரின் சிறப்பை அறிய உதவும் பழமொழி எது?
17. மணிமேகலை என்ற நூலிற்கு மணிமேகலை துறவு என்ற வேறு பெயரும் உண்டு - மணிமேகலை என்று நூலுக்கு வேறு பெயர் உண்டா?
18. அக்னிச் சிறகுகள் என்ற நூலை முன்னால் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதினார் - அக்னிச் சிறகுகள் என்ற நூலை எழுதியவர் யார்?
19. காந்தியடிகள் மகாத்மா என அழைக்கப்பட்டார் - யார் மகாத்மா என அழைக்கப்பட்டார்?
20. இல்வாழ்க்கை வளர்பிறைப் போல் வளர வேண்டும் - இல்வாழ்க்கை எவ்வாறு வளர வேண்டும்?
No comments:
Post a Comment