குழந்தைகளுக்கான நீரிழிவு நோய்க்கான சிகிச்சை வழிமுறைகள் !
1. உணவுக் கட்டுப்பாடு :
♦ ஒரு வயது குழந்தைக்குத் தினமும் 1000 கலோரி. அதன்பிறகு, ஒவ்வொரு வயது அதிகரிக்கும் போதும் தினமும் 100 கலோரி கூடுதலாகக் கொடுக்க வேண்டும்.
♦ 3 வயது குழந்தைக்கு 1,200 கலோரி. 10 வயது குழந்தைக்கு 1,900 கலோரி. இந்தக் கலோரி அளவை தினமும் ஐந்து வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும் (காலை, 11 மணி, மதியம், மாலை, இரவு) நேரடி சர்க்கரை மற்றும் கொழுப்பு உணவைக் குறைத்துக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
2. உடல் எடைக் கட்டுப்பாடு :
♦ முதல் வகை நீரிழிவு நோயில் குழந்தை ஒல்லியாக இருக்கும். எனவே, பிரச்சினை இல்லை.
♦ இரண்டாம் வகை நீரிழிவு நோயில் உடல் பருமன் அதிகம் இருக்கும்.
♦ உடல் எடை அடர்த்தியை 23-க்குள் பராமரிக்க வேண்டும்.
♦ இதைக் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம் (உடலின் எடை ஃ உயரம் (மீட்டரில்) இரண்டு மடங்கு)
மனதுக்கு ஆறுதல்
♦ சிறு குழந்தைகளுக்கு நோய், தினமும் ஊசி அல்லது மாத்திரை, உணவுக் கட்டுப்பாடு, அதிக உடல் எடை, அடிக்கடி மருத்துவப் பரிசோதனை போன்றவை உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கும். அவ்வப்போது கவுன்சலிங் தருவது அவசியம். பெற்றோர், உடன்பிறந்தோர், ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லோரும் நோயைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும்.
நீரிழிவு நோயைத் தடுக்க முடியுமா?
நோய் வரும் வாய்ப்புகளைக் குறைத்துக்கொள்ளக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் :
♦ பெண் குழந்தைகளுக்குப் புட்டாளம்மை தடுப்பு ஊசி போடுவது.
♦ ஆண், பெண் இரு பாலருக்கும் தாளம்மை தடுப்பு ஊசி போடுவது.
♦ உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது.
♦ ஆறு மாதம்வரை நிச்சயமாகத் தாய்ப்பால் கொடுத்து, இரண்டு வயதுவரை தொடர்வது.
♦ மாவுப் பால், மாட்டுப் பால் ஆகியவற்றைக் கூடியவரை தவிர்ப்பது.
♦ காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சிறு வயது முதலே கொடுத்துப் பழக்குவது.
♦ காட்சி ஊடகங்களைத் தவிர்ப்பது.
♦ தினமும் குழந்தை ஓடிஆடி விளையாடப் பழக்குவது.
♦ நொறுக்குத் தீனிகளின் அளவை வரையறுப்பது.
♦ நோய் வரும் குழந்தைகளுக்கு அடிக்கடி மருத்துவ ஆலோசனை.
விளைவுகள்
முதல் வகை
♦ சிறுநீரகப் பாதிப்பு, இதய நோய் போன்றவையும் சிறுவயதிலேயே தாக்கலாம்.
இரண்டாம் வகை
♦ நீரிழிவு ஏற்படும் வயதை பொறுத்து மாறுபடும்.
இறப்பு விகிதம்
முதல் வகை
♦ 15 வயதுக்குள் இறப்பு விகிதம் அதிகம். சர்க்கரை அளவு அதிகமாகி வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டு இறப்பு ஏற்படலாம்.
இரண்டாம் வகை
♦ நீரிழிவு நோயின் விளைவாக ஏற்படும் சிறுநீரக நோய், இதய நோய் போன்றவை இறப்பை ஏறப்படுத்தலாம்.
♦ முதல் வகை நீரிழிவு நோயைத் தடுப்பது கடினம். இரண்டாம் வகை நீரிழிவு நோயும் குழந்தைகளிடையே அதிகரித்துவருவது கவலைக்குரிய விஷயமே.
♦ இருப்பினும் உணவு ஒழுங்கு முறைகளை கடைபிடித்து நலமுடன் வாழ்வோம். முயன்றால் முடியாததல்ல. முயற்சிப்போம்.
No comments:
Post a Comment