4-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 4 ஆம் தேதி நினைவுகூறப்படுகிறது. முதலில் இத்தினம் ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு 1999 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஐந்து தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது இறப்பை நினைவுகூறும் வீதமாக உலகெங்கும் மே 4 ஆம் தேதி சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூகத்தையும், சூழலையும் பாதுகாக்க முற்படும் இவர்களது சேவைப் பரிமாணங்கள் உணர்த்தப்படுவதும், இவர்கள் கௌரவிக்கப்படுவதும் சமூகத்துக்காகவும், சூழலுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த தீயணைப்புப் பிடையினரை நினைவுகூறுவதே இத்தினத்தின் குறிக்கோளாகும்.
பியானோவைக் கண்டுபிடித்த பார்டோலோமியோ கிரிஸ்டோஃபோரி
இத்தாலிய இசைக் கருவிகள் வடிவமைப்பாளர் மற்றும் பியானோவைக் கண்டுபிடித்த பார்டிலோமியோ கிரிஸ்டோஃபோரி 1655 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பிறந்தார். இவரது பிறப்பு, இறப்புத் தகவல்கள் தவிர இவர் குறித்த வரலாற்று தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே இவரது வாழ்கை வரலாற்றை முழுமையாக ஆராய முடியவில்லை. 1680இல் தலை சிறந்த வயலின் வடிவமைப்பாளர் நிகோலோ அமாடி என்பவரிடம் பணிபுரிந்து வந்தார். 1688 ஆம் ஆண்டுக்குப் பின் இத்தாலி இளவரசரால் இசைக் கருவிகள் செய்யும் பணியில் அமர்த்தப்பட்டார். இளவரசரின் கீழ், இவர் பணியாற்றிய போது தான் பியானோவை கண்டுபிடித்தார். இவர் 1731 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி மறைந்தார்.
தியாகராஜ சுவாமிகள்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் தியாகராஜர் 1767 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார். ஆந்திரத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவரது முன்னோர்கள் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவாரூர் பகுதியில் குடியேறினார்கள். இவர் சிறுவனாக இருந்தபோதே தனது வீட்டின் சுவர்களிலேயே தனது முதல் பாடலை எழுதினார். ராமபிரான் மீது அளப்பரிய பக்தியும் ஈடுபாடும் கொண்டவராக வளர்ந்தார். பல கோயில்களுக்குப் பயணம்செய்த இவர் 14,000 கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். மேலும், பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் போன்ற இசை நாடகங்களை இயற்றியுள்ளார். இவர் 1847 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார்.
பிரபல அமெரிக்க நாவல் ஆசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணருமான ராபின் குக் 1940 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார்.
கிராமி அவார்ட்ஸ் என்பது அமெரிக்காவில் இசைக் கலைஞர்களுக்கு வழக்கப்படும் ஒரு உயரிய விருதாகும். இது முதன் முறையாக 1959 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி அன்று வழங்கப்பட்டது.
1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி அன்று நான்காம் மைசூர்ப் போரில் திப்பு சுல்தான் பிரிட்டிஷ் படையினரால் கொல்லப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது.
1924 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமானது.
1930 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி ஆங்கிலேய காவல்துறையினரால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment