தமிழர்களின் ஆரோக்கியம் தரும் அணிகலன்கள் - 2
மோதிரம் அணிதல் :
விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்~ன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளம் என்பவற்றுக்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. அதனால்தான், திருமண மோதிரம் கட்டாயமாக மோதிரவிரலில் அணிய கட்டயாப்படுத்தப்படுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணிதல் தடுக்கபடுகிறது ஏன் என்றால் இதய கோளாறுகள் ஏற்படும்.
மூக்குத்தி அணிதல் :
மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம். பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். பெண்களின் இடதுபுற மூக்கில் குத்தக்கூடிய மூக்குத்தி, வலது புற மூளையையும் வலது புற மூக்கில் குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளையையும் இயக்க கூடியதாக உள்ளது. இன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் தான் அணிய வேண்டும்.
காதணி அணிதல் :
தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களில் ஒரு சிலர் அணிவார்கள் காது குத்துதல் என்பது தமிழ் சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காது சோனையில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்துவதற்க்கு மட்டும்தான். வயிறு, கல்லீரல் செயல்பாட்டை தூண்டும். ஜீரணக்கோளாறு, கண்பார்வை கோளாறு சரியாகும்.
வளையல் அணிதல் :
வளையல் என்பது பாரம்பரிய அணிகலனாகும். வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைபாடுகளை களைவதாகும். பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன்களின் குறைப்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் இறுதிவரை வளையல் அணிதல் கட்டாயமாக்கப் பட்டு இருந்தது அக்காலத்தில். அதிலும் கர்ப்பமான பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் வளைகாப்பு சடங்கு முக்கியம் பெறுகிறது நமது பாரம்பரியத்தில். வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும். நன்றாக தூக்கம் வரும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கவும் உடல் சூடு தனியவும் இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
மேற்கண்ட தொகுப்பில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள் :
மோதிரம் -
வளையல் -
பழக்கம் -
தோடு -
ஆபரணம் -
No comments:
Post a Comment