மாமரம். மாமரம் :
மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிஃபெரா இண்டிகா என்பதாகும். பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாக மாம்பழம் கருதப்படுகிறது.
இந்தியாவின் வேதங்களில் மா பற்றிய குறிப்புகள், அதை கடவுள்களின் உணவாகக் குறிக்கின்றன. மேங்கோ என்ற ஆங்கிலப் பெயர் மாங்காய் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானதே ஆகும்.
மாமரத்தின் அமைப்பு :
மாமரம் 35 - 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும்.
மாமரத்தின் கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன.
பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன.
தட்பவெப்பநிலை :
நல்ல வடிகால் வசதியும், சற்றே அமிலத்தன்மையும் உள்ள எந்த மண்ணிலும் மாமரங்கள் நன்கு வளரும்.
உலர்ந்த அல்லது குளிர் தட்பவெப்பம், மாமரம் பூப்பதை தூண்டுகிறது. ஜனவரி - பிப்ரவரியில் மா மரங்கள் பூக்கத் தொடங்குகின்றன.
மாந்தளிரின் பயன்கள் :
நீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.
மாம்பூவின் பயன்கள் :
உலர்ந்த பூக்களில் டானின் என்கிற சத்து உள்ளது. மாம்பூவைக் குடிநீரில் இட்டுக் குடித்தால் வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய்கள் ஆகியன குணமாகும்.
மாம்பிஞ்சின் பயன்கள் :
மாம் பிஞ்சுகளை காயவைத்து, உப்பு நீரில் போட்டு வெயிலில் காயவைத்து உணவுடன் சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.
மாங்காயின் பயன்கள் :
பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவையும் ரத்த சோகையையும் நீக்கும்.
பாத வெடிப்புகளுக்கு மாங்காயின் சாற்றைப் பூசினால் குணமாகும்.
மாங்காயை நறுக்கி, வெயிலில் வைத்து மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் குறைபாடால் ஏற்படும் நோய் குணமாகும்.
காம்புகளின் பயன்கள் :
காம்பில் இருந்து வெளிப்படும் பால், படர்தாமரை மற்றும் சொறி சிரங்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.
மாம்பழத்தின் பயன்கள் :
மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் உள்ளது. கண் பார்வையைத் தெளிவாக்கும்.
மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும் தன்மை வாய்ந்தது.
கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாம்பழம் பப்பாளி இரண்டையும் வெட்டி தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலநோய் சரியாகும்.
மாங்கொட்டையின் பயன்கள் :
பருப்புப் பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து நீருடன் இரவில் உண்டு வந்தால் குடலில் உள்ள புழுக்கள் நீங்கும்.
வெட்டுக்காயம், தீக்காயம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பருப்பை அரைத்துப் பூசலாம்.
மாமர பிசின் பயன்கள் :
கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாமர பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
தேமல், படை உள்ளவர்கள் மாமர பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.
மாமரப்பட்டையின் பயன்கள் :
மாம்பட்டையை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயைப் பயன்படுத்தித் தலைக்குக் குளித்தால் வி~க்கடியால் ஏற்படும் வலி ஆகியன குணமாகும்.)
No comments:
Post a Comment