வில்வ மரம் :
வில்வமரத்தின் இலைகள் மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இந்த வில்வத்திலும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது.
வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். சிவம் உள்ள இடத்தில் ஜீவனும் இருக்கும். ஜீவ சக்தி கொண்டது தான் இந்த வில்வ மரம்.
இதனை சிவமூலிகைகளின் சிகரம் எனவும் அழைப்பர்.
வில்வ மரத்தின் சிறப்பு :
வில்வ இலையுடன் தண்ணீரை கலந்தால் அது புனித நீராக ஈஸ்வரன் கோயில்களில் பயன்படுத்தப்படுகிறது.
வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும்.
ஏழு ஜென்ம பாவத்தை போக்கக் கூடிய தன்மை ஒரு வில்வத்திற்கு உண்டு என்பது ஐதீகம்.
தட்பவெப்பம் :
வில்வ மரம் இந்தியாவில் முக்கியமாக சிவஸ்தலங்களில் வளர்க்கப் படுகின்றன. இது சுமார் 10 மீட்டர் அதாவது 30 அடி வரை வளரும். இதன் இலைப்பகுதிகளில் உள்ள பூக்கள் மாசி, பங்குனி மாதங்களில் பூக்கும். இதன் பூக்கள் பன்னீர் போன்ற வாசனை உடையதாக இருக்கும். பிறகு இது வில்வ பழமாக மாறும்.
வில்வ இலையின் பயன்கள் :
ஒரு வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும்.
வாத, பித்தத்தினால் உண்டாகும் நோய்களைக் வில்வ இலை குணப்படுத்தும்.
வில்வ இலை சாறு எடுத்து அதில் மிளகுத்தூள் சேர்த்து காமாலை நோய்களுக்குக் கொடுக்கலாம்.
வில்வ பூவின் பயன்கள் :
வில்வ மலரை உலர்த்திப் பொடித்து, நாள்தோறும் சிறிதளவு சாப்பிட பசிமந்தம் நீங்கும்.
வடை மாவில் இப்பூவை நறுக்கிப் போட்டு கலந்து வடை செய்து சாப்பிடலாம். குடல் வாயு குணமாகும்.
வில்வ பூவை உலர்த்தி பொடி செய்து நீர்விட்டு காய்ச்சி அருந்தினால் மாந்தம் நீங்கும்.
வில்வ காயின் பயன்கள் :
வில்வ காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்து மூலநோய் குணமாகும்.
வில்வ காயுடன் பசும் பாலை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் மண்டைச் சூடு, கண் எரிச்சல் நீங்கும்.
வில்வ பிஞ்சின் பயன்கள்:
வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை வில்வ பிஞ்சிற்கு உண்டு.
வில்வ பழத்தின் பயன்கள் :
வில்வப்பழம் அபிஷேகத்திற்கும் பயன்படுகிறது.
வில்வம் பழம் சாப்பிடுவதால் குடல் பலமாகும் குடலில் உள்ள தீமை செய்யும் கிருமிகள் வெளியாகும்.
வில்வ பழத்தின் சதையை உலர்த்தி பொடி செய்து அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி, பசியின்மை குணமாகும்.
வில்வ பிசினின் பயன்கள் :
வில்வ மரப் பிசினை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதை பசுவெண்ணெயுடன் இரு வேளையாக பத்து நாட்கள் உட்கொண்டால், நரம்பு மண்டலம் வலுவடையும்.
வில்வ வேரின் பயன்கள் :
வில்வ வேரை நசுக்கி அதை நீரில் ஊற வைத்து அதிகாலை அந்நீரைப் பருகினால் காய்ச்சல் குணமாகும்.
வில்வ வேரை தூளாக்கி பசும்பாலில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை பதினெட்டு நாட்கள் உட்கொண்டால் உடல் அழகும். சருமம் பளபளப்பாக இருக்கும்.
மேற்கண்ட தொகுப்பில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள் :
No comments:
Post a Comment