நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்!
பாரத திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைத்தனையால் பிணைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
ஜனவரி 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ் - பிரபாவதி தேதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டியது!
குருதியைக் கொடுங்கள். உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்! என்று இவர் உரக்கக் கூவியதன் விளைவாக இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள்.
மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதன் ஒரு பாராட்டு விழாவின்போது, போஸீக்கு நேதாஜி என்ற பட்டத்தை அளித்தார் தாகூர். நோதாஜி என்றால், மரியாதைக்குரிய தலைவர் என்பது அர்த்தம்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ் 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷிவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை புசநயவ நுளஉயிந என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்!
ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி. இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைகொள்கிறேன்! என்று ஹிட்லர் கை குலுக்க, வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்! என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி!
இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்! இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது.
1944-ல் ஆசாத் ஹிந்த் வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை, தேசப்பிதா என்று முதன்முதலில் அழைத்தார்.
தனது இந்திய தேசிய ராணுவத்திற்குத் தாரக மந்திரமாக ஜெய் ஹிந்த் அதாவது, வெல்க பாரதம் என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி.
பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல!
நேதாஜி இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர்.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கம், அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மமாகவே உள்ளது.!
நேதாஜி சுபாஷ் சந்திர போஸை வங்கம் தந்த சிங்கம் என்பார்கள். அவரைத் தந்தது வங்கம் என்றாலும், அவர் பாரதத்துக்கே சொந்தம்.
No comments:
Post a Comment