ஏர்னெஸ்ட் போர்லாக்
பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்படும் ஏர்னெஸ்ட் போர்லாக் 1914 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி பிறந்தார். இவர் அமெரிக்க வேளாண் அறிவியலார், மனிதத்துவவாதி மற்றும் 1970 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். விடுதலைக்கான அமெரிக்க தலைவர் பதக்கம் மற்றும் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருதையும் பெற்றுள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி இறந்தார்.
முதல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
உலகில் கைபேசிக்கு முன் மக்களிடையே பெரும் ஆதிக்கம் செய்தவை தொலைக்காட்சியாகும். உலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும், இன்றைய கைபேசிகள் கைக்குள் கொண்டு வருவது போல், 1990களில் அனைத்து நிகழ்வுகளையும் இல்லத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தவை தொலைக்காட்சி பெட்டிகளாகும். 1920லிருந்தே கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிகள் புழக்கத்தில் இருந்தது. அதன்பின் வண்ணத் தொலைகாட்சிகள் 1940களில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை அடுத்து 1950களில் தான் விற்பனைக்கு வந்தன. இந்த முதல் வண்ணத் தொலைக்காட்சி 1954 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி சுஊயு என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த முதல் வண்ணத் தொலைக்காட்சி விலை 1000 அமெரிக்க டாலர்களாகும்.
ஜெர்மனியை சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் அடால்ஃப் எங்லர் 1844 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி பிறந்தார்.
1954 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணையான பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்தார்.
1857 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் என்பவர் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.
மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் 1965 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி கருப்பின மக்களின் உரிமைக்காகவும், அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குள்ளான வியட் நாம் மக்களுக்காகவும் நடைப்பயணத்தை தொடங்கினார். நான்கு நாட்கள் நடைபெற இப்பயணம் மார்ச் 25 ஆம் தேதி மான்ட்கோமரி நகரில் முடிவடைந்தது.
No comments:
Post a Comment