அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்
அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில் சென்னை பெசன்ட் நகரில் உள்ளது. இக்கோவில் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு ஒப்பாக, கோபுரத்தின் நிழல் கீழே விழாத வண்ணம் நுணுக்கத்துடன் எழுப்பப்பட்ட கோவிலாகும். அஷ்டலட்சுமி என்பது ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி ஆகும். திருமகள் எட்டு வடிவங்களாக காட்சி தரும் ஒரே ஆலயம் அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவிலாகும்.
கோவில் வரலாறு :
காஞ்சிப் பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் கனவிலே தோன்றி தமக்கு இந்த இடத்தில் கோவில் ஏற்படுத்துமாறு மஹாலட்சுமி கூறியதனால் இக்கோவில் ஸ்தாபிக்கப்பட்டது. முக்கூர் ஸ்ரீநிவாஸ வரதாச்சாரியார் ஸ்வாமிகளின் பெருமுயற்சியால் இக்கோவில் 1976ல் கட்டப்பட்டது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோவிலாக மாறியது. சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலைப் போலவே இக்கோவில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் சிறப்பாகும். அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் உள்ள சுதை சிற்பங்கள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
கோவில் சிறப்புகள் :
கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக இத்திருக்கோவில் அமைந்துள்ளது. கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது. இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.
ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.
இங்கு அஷ்ட லட்சுமிகள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோவிலாகும்.
வழிபாடுகள் :
இங்குள்ள அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறும். தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பை பெற்றதாக உள்ளது.
ஆதிலட்சுமி - உடல்நலம்பெற
தான்யலட்சுமி - பசிப்பிணி நீங்க
தைரியலட்சுமி - மனதில் தைரியம் பெற
கஜலட்சுமி - சௌபாக்கியம் பெற
சந்தானலட்சுமி - குழந்தைவரம் கிடைக்க
விஜயலட்சுமி - காரியத்தில் வெற்றி கிடைக்க
வித்யாலட்சுமி - கல்வியும் ஞானமும் பெற
தனலட்சுமி - சகல ஐஸ்வரியங்களும் பெருக
வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் இத்தலத்தில் அபிஷேக ஆராதனைகள், லட்சுமி தேவிக்கு புடவை சாத்துதல் ஆகியவையும், பிரசாதம் செய்து விநியோகிப்பதும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடன்களாக உள்ளது.
திருவிழா:
புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் நடைபெறும். மேலும் தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
உங்கள் குறைகள் தீர..!
கல்வித்தடை பிரச்சனைகள் தீர பரிகார பூஜை...!
நீலசரஸ்வதி ஹயக்கிரிவர் தட்ஷிணாமூர்த்தி சிறப்பு ஹோம பரிகாரம் யந்திரம் வழங்கப்படும்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
ஸ்ரீ வித்யா உபாசகர்.
ஜோதிடர். புரோகிதர்.
மணிகண்ட ஷர்மா
Mobile 996225358
WhatsApp 9444226039
உங்கள் பிரச்சனை தீர அணுகவும்.
No comments:
Post a Comment