நாம் பயன்படுத்தும் பாலை பற்றி சில தகவல்கள்...!
நாம் அன்றாடம் பயன்படுத்துகிற திரவப் பொருள்களின் லிஸ்ட் எடுத்தால், அதில் பால் இல்லாமல் போகாது. டீ, காபி, மில்க்ஷ்க் என்பவற்றில் ஏதாவது ஒருவகையில் பால் இருந்தே விடுகிறது. தினசரி வீட்டு உபயோகத்திற்கு என வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளில் உறைகளின் மீதே எத்தனை நாட்களுக்கு உபயோகிக்கலாம் என்ற குறிப்புகள் இருக்கும். சில வகை பால் காலை முதல் மாலை வரை மட்டுமே பயன்பாட்டுக்கு உரியது. மறு நாள் வைத்திருந்து உபயோகிக்க முடியாது. சில வகை பால் மறு நாள் காலை வரை உபயோகிக்க ஏற்றதாக பால் கவர்களில் குறிப்பிடப்படுகிறது.
பாலைப் பொறுத்தவரை ஒரே நாளில் பயன்படுத்தித் தீர்ப்பது நல்லது. மிஞ்சிய பாலை உறைக்கு ஊத்தி தயிராகவோ, மோராகவோ பயன்படுத்தலாம். இரண்டு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது என்ற அறிவிப்புடன் சந்தைகளில் புழங்கும் பால் வகைகளைத் தவிர்ப்பது நல்லது. பாலின் இயல்பு ஒரே நாளில் கெட்டுப்போவதே. அதை மாற்றி இரண்டு நாட்கள் வரை கெடாமல் வைத்திருக்க அதனோடு சில வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. வா~pங் சோடா முதல் யூரியா வரை இந்த வேதிப் பொருட்கள் மாறுபடலாம். ஆனால், இவற்றின் பக்க விளைவுகள் மோசமானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாலில் கலக்கப்படும் கலப்படப் பொருட்கள் என்ன? மற்றும் நாம் பயன்படுத்தும் பால் தரமானதுதானா? என்பதை எளிமையாக எப்படி அறிவது? போன்றவற்றை பற்றி அறிந்துகொள்ள மற்றவை - குறிப்புகள் பகுதிக்குச் சென்று அறிந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment