உலக காசநோய் தினம்
காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதி, சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. டியூப்பர்குளோசிஸ் பாக்டீரியா நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும். இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியான இருமல், மார்பு வலி, மூச்சு வாங்குதல், மாலை வேளையில் காய்ச்சல், சளியில் ரத்தம், உடல் எடை குறைதல், உடல் பலவீனமடைதல், பசியின்மை ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும். நோய் பாதிக்கப்பட்டவர் இரும்புவதன் மூலம் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவுகிறது. ஆண்டுதோறும் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே காசநோய் உள்ளவர்களிடமிருந்து பரவுகின்றது. இந்நோயால் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் பலியாகின்றனர். இவர்களில் 30 லட்சம் பேர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் போய்விடுகின்றனர். இந்த 30 லட்சம் பேரைக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து, குணப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் உலக காச நோய் தினம் கொண்டாடப்படுகிறது.
முத்துஸ்வாமி தீட்சிதர்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துஸ்வாமி தீட்சிதர் 1775 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி திருவாரூரில் பிறந்தவர். வேதம், சாஸ்திரம், தர்க்கம், இலக்கணம், காவியம் ஆகிய அனைத்தையும் 16 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார். திருவாரூர் கோவிலில் உள்ள அனைத்து கடவுள்கள் மீது பாடல் இயற்றியுள்ளார். முருகப் பெருமான் மீதும் மிகுந்த பக்தி கொண்டவர். முருகனையே தன் குருவாக ஏற்றவர். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ஏறக்குறைய 500 பாடல்களை இயற்றியுள்ளார். இறைவனைப் பற்றி மட்டுமே பாடியுள்ளார். மன்னர்களையும் மனிதர்களையும் புகழ்ந்து பாடியதில்லை. 64வது நாயன்மார் மற்றும் 13வது ஆழ்வார் என்றெல்லாம் புகழப்பட்ட முத்துஸ்வாமி தீட்சிதர் 60 வயதில் 1835 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி இறைவன் திருவடியை அடைந்தார்.
டி. எம். சௌந்தரராஜன்(TMS)
TMS என்று அழைக்கப்படும் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் 1922ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி மதுரையில் பிறந்தார். 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றோருக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, பல பக்திப் பாடல்களையும் பாடிய டி.எம்.சௌந்தரராஜன் இதயக் கோளாறு காரணமாக 2013 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி சென்னையில் காலமானார்.
1947ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் ஆளுநரானார்.
அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரரான தி அண்டர்டேக்கர் 1965 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பிறந்தார்.
தமிழ் கர்நாடக இசைப் பாடகர் மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி மறைந்தார்.
1878 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி பிரிட்டி~; கப்பல் ர்ஆளு யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment