விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.சத்தியமூர்த்தி
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், காங்கிரஸ் தலைவருமான எஸ். சத்திய மூர்த்தி அவர்கள் 1887 ஆம் ஆண்டு ஆகஸ்டு 19 ஆம் தேதி இறந்தார். இவரது சீடர்களுள் மிக முக்கியமானவர் காமராசர். 1944 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி மேயரான போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போர் மூண்டிருந்த அந்த நேரத்தில் ஆங்கிலேய அரசுடன் போராடி பூண்டி நீர் தேக்கத்திற்கான வரைவு ஒப்புதலைப் பெற்று அடிக்கல் நாட்டினார். ஆனால், நீர்த்தேக்கம் கட்டி முடிக்கும் வரை அவர் உயிருடன் இல்லை. 1944 ஆம் ஆண்டு காமராசரின் ஆட்சிக் காலத்தில் இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டது. சத்திய மூர்த்தியின் நினைவாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு இவரது பெயரையே இட்டார், காமராசர். 1942 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு, 1943 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி சென்னை பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார்.
டி. கே. பட்டம்மாள்
டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. இவர் தனது 4வது வயதிலேயே பாடத் தொடங்கினார். பட்டம்மாள் முறையாக கர்நாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார். 1929 ஆம் ஆண்டு தனது 10 வது வயதில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகுதான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், 1932 இல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பின்னர் காங்கிரஸ் கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக்கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். சங்கீத நாடக அகாடெமி விருது, பத்மபூசன், இசைப்பேரறிஞர் விருது, சங்கீத கலாசிகாமணி விருது, சங்கீத கலாநிதி கலைமாமணி விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு மார்ச் ஜூலை 16 ஆம் தேதி மறைந்தார்.
1982 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி என்.டி.ராமாராவ் தலைமையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியானது தொடங்கப்பட்டது.
1802 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி அன்று ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1868 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி தாய் நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்தார்.
No comments:
Post a Comment