30-3-2016 உலக வரலாற்று சுவடுகள்.
ஆனந்தரங்கம் பிள்ளை
நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரும், பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளருமான ஆனந்தரங்கம் பிள்ளை 1709 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி சென்னையில் உள்ள பெரம்பூரில் பிறந்தார். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும், பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும், ஆவணமாகவும், இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர்.
1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவர் இந்தியாவின் பெப்பீசு எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகின்றார். இவரது நாட்குறிப்பு, அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. இவரின் நாட்குறிப்பு மூலம் 18 ஆம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன. இவர் தனது 51வது வயதில் 1761 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 10 ஆம் நாள் மறைந்தார்.
1492 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1822 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் உருவாக்கப்பட்டது.
1842 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி அறுவை சிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவின் மலையாள மொழியின் எழுத்தாளர் மட்டுமின்றி, பத்திரிக்கையாளராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் அறியப்படுகின்ற ஒ.வே.விஜயன் அவர்கள் 2005 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி இறந்தார்.
1858 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவர் பெற்றார்.
No comments:
Post a Comment