ஏழரைச் சனிக்கான பரிகார ஸ்தலங்கள் மற்றும் பரிகாரங்கள்
ஏழரைச் சனியானது ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில் இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் இல்லாமல் அனைவரையும் துவைத்துக் காயப்போட்டு விட்டும்.
ஒருவரது ராசிக் கட்டத்தில் லக்னத்திலிருந்து 12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சனி பகவான் சஞ்சாரித்தால் அது ஏழரை சனி ஆகும். ஒவ்வொருவருக்கும் அவரது வாழ்நாளில் 3 அல்லது 4 முறை ஏழரைச் சனி வரும்.
முதல் சுற்றுச் சனி : பிறந்த உடனேயே 15, 20 வருடங்களுக்குள் வரும் சனியை மங்கு சனி என்பார்கள். மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
இரண்டாம் சுற்றுச் சனி : 2வது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள்.
மூன்றாம் சுற்றுச் சனி : 3வது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள்.
ஏழரைச் சனியின் காலங்கள் மூன்று பகுதியாக பிரிக்கப்படுகிறது.
முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். இக்காலத்தில் பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால் போன்ற நஷ்டங்கள் உண்டாகும்.
இரண்டாம் பகுதியை ஜென்மச் சனி என்பார்கள். இந்தக் கால கட்டங்களில் மனப் போராட்டங்கள் அதிகமாக இருக்கும். மன உளைச்சல் ஏற்படும்.
மூன்றாம் பகுதியை கழிவுச் சனி என்பார்கள். இந்தக் காலகட்டம், கடந்து போன வருடங்களை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும்.
ஏழரைச் சனி பரிகார ஸ்தலங்கள் :
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்.
குச்சனூர் சனீஸ்வரன் கோவில்.
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில்.
திருவானைக்காவல் சனீஸ்வரர் கோவில்.
ஓமாம்புலியூர் சனீஸ்வரர் கோவில்.
ஏழரைச் சனி பரிகாரங்கள் :
தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கலாம்.
சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடலாம்.
கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
கோ தானம் செய்யலாம்.
ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்கினால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.
பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை மாலை சாத்தி வழிபடலாம்.
தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
செவ்வாய் தோஷம் நீங்க..!
நவகிரகத்தில் உள்ள செவ்வாய் கிரகத்துக்கு 27 செவ்வாய் கிழமைகள் நெய்விளக்கு போட்டு வந்தால் செவ்வாய் தோஷம் விலகும்.
No comments:
Post a Comment