உலக தண்ணீர் தினம்
பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றால் ஆனதுதான் இந்த பிரபஞ்சம். நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது. எனவே தண்ணீரின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் என கொண்டாடப்படுகிறது.
நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும். கடந்த 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள், சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரை தான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.
ஜெமினி கணேசன்
காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் அவர்கள் 1920 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி பிறந்தார். இவர் தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலக்கட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார்.
தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர், சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான "பத்ம ஸ்ரீ" விருது மற்றும் அவர் உருவம் பதித்த தபால் தலையையும் வெளியிட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடித்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி, தமிழ் திரையுலக ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த ஜெமினி கணேசன் 2005 ஆம் ஆண்டு மார்ச் மார்ச் 22 ஆம் தேதி இறந்தார்.
இயற்பியல் துறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் 1868 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி பிறந்தார்.
1457 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி உலகிலேயே முதன் முதலில் புத்தக வடிவில் பதிப்பிக்கப்பட்ட நூல் பைபிள் வெளியானது.
1993 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம்(pநவெரைஅ) உhip (80586) இனை அறிமுகம் செய்தது.
1997 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி ஹேல்-பொப்ன் என்ற வால்வெள்ளி பூமிக்குக் அருகில் வந்தது.
No comments:
Post a Comment