Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு
அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell
: 9600068631 - 9600068931
கசகசா
போஸ்தக்காயின் உள்ளேயுள்ள விதை கசகசா எனப்படும்.
இது குடற்புண்ணை ஆற்றும், உடலிற்கு வலிவு தரும்.
இதனைப் பசுவின் பால் விட்டு அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம். தூக்கமின்மை. வயிற்றில் கிருமி, தினவு,
சீதமும் ரத்தமும் கலந்த கடுப்பு, ஜலதோஷம் இவற்றில் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம்.
இகசகசா, வால்மிளகு, பாதாம்பருப்பு, கற்கண்டு வற்றைச் சம அளவு சேர்த்து
இடித்துத் தேன் நெய் போதுமான அளவு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடல் மழமழப்பும், வலிவும் பெறும். ஆண்மையை வளர்க்கும். பெண்கள் மாதவிடாய் காலத்திற்குமுன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட மாதவிடாய்
காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி குறையும்.
மூன்று முதல் ஐந்து பாதாம்பருப்பு மற்றும் அரை ஸ்பூன் கசகசாவையும் பசுவின் பாலில் அரைத்துக் காய்ச்சிச் சாப்பிடப் பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பால் பெருகும். பொதுவாக உடல் வலிவடையவும், பருக்கவும், சூடு தணியவும் ஏற்ற பானம். பருவத்திற்கு வரும் சிறு பெண்களின் வளர்ச்சிக்கும் உடல் புஷ்டி வலிவு பெறவும் ஏற்ற காலை உணவு இது.
கசகசாவை முதல் நாளிரவு ஊரவைத்துக் காலையில் அரைத்துத் தேங்காய்ப்பால், மோர், தயிர் வடித்த கஞ்சி காய்ச்சிய பால் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். பொலிவு, மழமழப்பு அதிகமாகும். இத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து உபயோகிக்கலாம்.
பாவப்ரகாசர் எனும் முனிவர் கசகசாவைப் பற்றிய வர்ணனையில் போஸ்தக்காயின் மேலோட்டுப் பகுதியை காயவைத்து நன்றாகப்பொடித்துத் தேன் குழைத்து சாப்பிட்டால் பேதியை நிற்குமென்றும், மார்பில் சளி சேர்ந்து ஏற்படும் இருமலை குணப்படுத்திவிடுமென்றும் குறிப்பிடுகிறார். மேலும் கசகசாவை ஒரு சிறிய அளவில் உணவுடன் சேர்த்து வருபவர்களுக்கு “வாக்விவர்த்தனம்” அதாவது சொல்வன்மை கூடுமென்றும் எடுத்துரைத்திருக்கிறார்.
நிகண்டுரத்னாகரம் எனும் ஆயுர்வேத அகராதியில் கசகசா குடலில் தேவையற்ற கிருமிகளை அழிக்கக் கூடியது, சோகை மற்றும் காசநோய்களுக்கு நல்லதொரு உணவாகவும் பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெண்மை, கருமை, மஞ்சள் மற்றும் பலவர்ணமென நான்கு வகையான வண்ணங்களையுடைய கசகசாவைப் பற்றிய செய்திக் குறிப்பில் வெண்மை நிறமுடைய கசகசாவானது உண்ட உணவை நன்றாக செரிக்கச் செய்யுமென்றும், கருமை நிறமுடையதை அதிக அளவில் உட்கொண்டால் மரணமேற்படுமென்றும், மஞ்சள் நிறமுடைய கசகசாவானது கிழத்தன்மையைப் போக்குமென்றும், இவற்றின் கலவையை ஒருங்கே கொண்ட வகையானது மலத்தை நன்றாக இளக்கி வெளியேற்றுமென்றும் காணப்படுகிறது.
தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு கசகசாவை நன்றாக அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறைந்து குழந்தை நன்றாகத் தூங்கும். பத்து கிராம் கசகசாவுடன், ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள், ஒரு பிடி வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகள் ஏற்பட்ட முகப்பகுதிகளில் பூசினால் தழும்புகள் மறையத் தொடங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் நிலையில் சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
குளிர்ச்சி தரும் கசகசாவை உணவில் ருசி சேர்ப்பதற்காக அரைத்துச் சேர்ப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இதனுடைய அளவு கூடுமேயானால் மயக்கத்தை ஏற்படுத்தும். கசகசாவிற்கு மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை இருப்பதால் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service
Price Rs-20, 6-Month
Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com.
No comments:
Post a Comment