Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு
அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell
: 9600068631 - 9600068931
வாயில் காணப்படும் பக்டீரியா குடற்புற்றுநோய்க்குக் காரணமாகலாம்
வாய்க்குழியுள்
வசிக்கும் ஏராளமான பக்டீரியா வகைகளுள் பொதுவாகக் காணப்படும் ஒருவகைப் பக்டீரியா,
குடற்புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணியாக விளங்கலாம் என்று
ஆராய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இரு வெவ்வேறு ஆய்வுகளில் இது சம்பந்தமாக
ஆராயப்பட்டுள்ளன.
பற்சுற்றி அழற்சி, முரசு
நோய்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய பியுசோபாக்டீரியம் நியுக்ளியட்டம் (Fusobacterium nucleatum)
எனும் உயிரியற் பெயருடைய இந்தப் பக்டீரியா, குடற்புற்றுநோய் உள்ளவர்களின் குடலில் கூடுதலாகக் காணப்படுவதாக உயிரியல்
அறிஞர்களால் கண்டறியப்பட்டது. ஒரு ஆரோக்கியமானவரின் குடலில் காணப்படும் பலவகையான
பக்டீரியா இனங்களின் வரிசையில் பியுசோபாக்டீரியா அடங்குவதில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
எனினும்
இற்றைவரையான தகவல்களில் இருந்து பியுசோபாக்டீரியா இழையங்களை
குடற்புற்றுநோய்க்கலங்களாக உருவாக்கின்றதா அல்லது புற்றுநோயின் விளைவாக
பியுசோபாக்டீரியா தோன்றுகின்றதா என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.
குடலில் ஏற்படும்
அசாதாரணமான உயிரணுக்களின் பெருக்கத்தை குடற்புற்றுநோய் என்கின்றோம். ஆண்டுதோறும்
உலகளாவியரீதியில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இதனால் பாதிப்படைகின்றனர்.
இந்நிலையில்,
கார்வார்ட் மற்றும் டானா- ஃபார்பர் புற்றுநோய்க் கல்விமையத்து (Harvard
and the Dana-Farber Cancer Institute) நிபுணர்கள் மேற்கொண்ட ஒரு
ஆய்வில், அடினோமா (adinoma) எனப்படும்
குடற்சுரப்பிகளில் ஏற்படும் கேடிலிக் கட்டிகளில் (Benign tumour) பியுசோபாக்டீரியா மிகையாகக் காணப்படுகின்றது என்பது அவதானிக்கப்பட்டது. கெடுதியற்ற
அடினோமா காலப்போக்கில் கெடுதி தரும் கேடுளிப் புற்றுநோய்க்கட்டிகளாக (Malignant
tumour) மாற்றமடையும் என்பது அறியத்தக்கது.
இசுட்ரெப்டோகொக்கசு
எனும் பக்டீரியாவும் குடற்புற்றுநோய் ஏற்படுத்தவல்லது என்று ஏற்கனவே கருதப்பட்ட
நிலையில், ஆய்வாளர்கள் பியுசோபாக்டீரியா மற்றும்
இசுட்ரெப்டோகொக்கசு போன்ற பாக்டீரியாக்களை எலிகளுக்குச் செலுத்திய ஆய்வுகூடப்
பரிசோதனையின் போது ஒப்பீட்டளவில் பியுசோபாக்டீரியா செலுத்தப்பட்ட எலியின்
குடற்கலங்களில் அபரிமிதமான புற்றுநோய் உயிரணு வளர்ச்சி ஏற்படுவதை அவதானித்தனர்.
வெஸ்டர்ன் ரிசேர்வ்
பல்கலைக்கழகத்தில் (Western Reserve University) நடாத்தப்பட்ட வேறொரு ஆய்வில் பியுசோபாக்டீரியாவின் மேற்பரப்பில்
காணப்படும் மூலக்கூறு ஒன்று புற்றுநோய்க்கலங்களுக்குள் பக்டீரியா உட்புகுவதற்கு
உதவுகின்றது என்று அறிந்தனர். FadA எனப்படும் இந்த மூலக்கூறு
பின்னர் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் மரபணுக்களில் தாக்கத்தை
ஏற்படுத்துவதுமூலம் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது. இந்த மூலக்கூறு மேலும்
அழற்சியைத் தூண்டுவதன் மூலம் புற்றுநோய்க் கட்டி உருவாகுவதை ஊக்குவிக்கின்றது.
FadAயைத் தடுக்கவல்ல
செயற்கை வேதியற்பொருள் இந்த நிகழ்வை நிறுத்துவதால் வருங்காலத்தில் சிகிச்சைக்கு
இந்தச் செயன்முறை உதவும் என்று நம்பப்படுகின்றது.
“FadAயை உடலில்
கண்டுபிடிப்பதன் மூலம் குடற்புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டு
அறுதியிட்டுக்கொள்ளமுடியும் (diagnosis) என்பதை இந்த ஆய்வு
தெளிவுபடுத்துகின்றது. மேலும் இதற்கான சிகிச்சையையும் புதிய மருந்துகளைக் கொண்டு
மெருகூட்டமுடியும்” என்று வெஸ்டர்ன் ரிசேர்வ் பல்மருத்துவப்
பல்கலைகழகத்தைச் சேர்ந்த இப்பிங் ஹான் (Yiping Han) கூறினார்.
ஆரோக்கியமான
மனிதர்களுடன் குடற்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒப்பிடுகையில் FadA
மிகையாக உள்ளதையும் ஆய்வில் அறிந்துகொண்டனர்.
நம் அனைவரதும் வாயுள்
இந்த புற்றுநோய் உண்டாக்கும் பக்டீரியா சிறிதளவேனும் இருக்கின்றது என்பது கசப்பான
ஆனால் உண்மையான விடயம். பியுசோபாக்டீரியாதான் புற்றுநோயை உருவாக்கிவிடுகின்றதா
என்பது இவ்வாய்வின் மூலம் தெளிவாக இல்லாவிடினும் புற்றுநோயின் வளர்ச்சியை
விரைவாக்குகின்றது என்பதை அறியக்கூடியதாக உள்ளது. எந்தச்சந்தர்ப்பத்திலும் வாய்ச்
சுகாதாரம் பேணப்படல் மிக மிக முக்கியமானது. இதுவரைக்கும் பல்நோய்கள் மற்றும் வேறு
சில நோய்கள் வாயின் நலம் பேணப்படல் குறைவால் ஏற்படுகின்றது என்று தெரிந்திருந்தது,
அவ்வரிசையில் இன்று புற்றுநோயும் சேர்ந்துகொண்டது.
ஒவ்வொரு நாளும்
இருதடவைகளாவது பல்துலக்குகின்றீர்களா
Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service
Price Rs-20, 6-Month
Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com
No comments:
Post a Comment