Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு
அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell
: 9600068631 - 9600068931
பாசிப்பயறு, பச்சப்பயறு
சமீதான்யம் எனப்படும் பருப்பினத்தைச் சார்ந்தவைகளில்
பயறு, உளுந்து, கடலை, துவரை,
மொச்சை முதலியவையடங்கும். புஞ்சைநிலத்தில் விளைபவை. பொதுவாக இவை இனிப்பாகவும், பின் சுவையாகத் துவர்ப்புள்ளதாகவும், குளிர்ச்சி
தருவதாகவும் ஆகும். தனித்து இவற்றை அரிசி – கோதுமை – அன்னம் போல் உணவாக ஏற்பதில்லை. வயிற்றில் அதிகம் வாயுவைச்
சேர்க்கும் தன்மையுள்ளவை; மலத்தையும், சிறுநீரையும் கட்டுபவை என்பதே இதற்குக் காரணம்.
இரைப்பை – குடலினுள் உள்ள எரிவையும் பிசுபிசுப்பு மிகுதியையும்
குறைக்கவல்லவை. நல்ல புஷ்டி தருபவை. அசதியை நீக்கி தசைகளுக்கு இறுக்கமும், வலிவும் தருபவை. அதனால் உணவின் துணைப்பொருளாக முக்கியத்துவம் இவற்றிற்கு உண்டு.
பயறு அநேக வகைகளில் உண்டு. 1. பாசிப்பயறு, 2. நரிப்பயிறு, 3. தட்டைப்பயிறு, 4. பயிற்றங்காய் இவை அதிகமாக வழக்கத்தில் உள்ளவை. பாசிப்பயிறு இவற்றில் கேடற்ற, குணமுள்ள உணவுப்பொருள்.
முத்கம், பச்சைப்பயறு, சிறுபயறு என்பர் இதனை. இதனை உடைத்துத் தோல் நீக்கி பருப்பாக்கி வேகவைத்து மற்ற உணவு வகைகளில் கலந்தும், தனித்து அன்னத்துடன் பிசைந்தும் உண்ணலாம். தனியே வேகவைத்து சுண்டலாக்கி கோடையிலும், மழைநாட்களிலும் உடல் வலிவை பாதுகாக்க உண்பது வழக்கம். இதனைப் பெருமளவில் கொண்ட பொங்கல் மார்கழி மாதத்துக்கேற்ற காலை உணவு. நோய் நீங்கிய பின் வலிவு பெற, இதனை லேசாக வறுத்து, இடித்து கஞ்சியாக்கி உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். அதிக அளவில் பயறு கலந்த உணவு சாப்பிட்டால் மலம் இளகி பேதியாகி விடும்.
இதன் மாவை வெல்லப்பாகில் பிசறிச் சுக்குத்தூள் சேர்த்து உருண்டையாக்கி (பொருள்விளங்காத உருண்டை – பொருளலங்கா உருண்டை) பட்சணமாகத் திண்பர். கடும்பசியை அடக்கவல்லது. வாயுவை ஏற்படுத்தும். நாவறட்சி தரும். அரிசி கோதுமை இவற்றுடன் கலந்து இதனை கஞ்சியாக்கி சாப்பிட நல்லது.
இதன் மாவைக் கிளறி மார்பில் வைத்துக் கட்ட பெண்களுக்கு பால்கட்டு குறையும். நெறி, கட்டி இவை மறையும். அரிப்பு, சொறி, கரப்பான் உள்ளவர் தோலின் எண்ணெய்பசை அகற்ற இதன் மாவைத் தேய்த்துக் குளிப்பர்.
நரிப்பயறு - கரப்பான், நீரிழிவு, கபக்கட்டு உள்ளவர்க்கு அதிகம் ஏற்றது. பாசிப்பயறுபோல் உதவக்கூடியது.
தட்டைப்பயறு – பசிமந்தம் ஏற்படுத்தும். கரப்பானையும், அரிப்பையும் அதிகமாக்கும். வலிவூட்டும். மூக்கில் சளியுடன் இரத்தம் வந்தால் இதனை தண்ணீருடன் காய்ச்சி சுண்டவைத்து சாப்பிடுவது நல்லது.
பயற்றங்காய் – இது காய்கறிவகையில் அடங்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். சூட்டைத் தனிக்கும். உடலைப் போசிக்கும். வயிற்றில் வாயுவை உண்டாக்கும்

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service
Price Rs-20, 6-Month
Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com
.
No comments:
Post a Comment