WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Sunday 26 January 2014

ஸ்தானங்களான 6-ஆம் வீடு, 8-ஆம் வீடு, 12-ஆம் வீடு தீமை செய்ய முடியாது.





2-ஜோதிட தொகுப்பு ஜோதிட புத்தகம் 
ஸ்தானங்களான 6-ஆம் வீடு, 8-ஆம் வீடு,  12-ஆம் வீடு ஆகிய இடங்களில் இவர்கள் இருந்தால் தீமை செய்ய முடியாது.

1. மேஷம் = குரு, சூரியன்
2. ரிஷபம் = சனி
3. மிதுனம் = சுக்கிரன்
4. கடகம் = குரு, செவ்வாய்
5. சிம்மம் = செவ்வாய்
6. கன்னி = சுக்கிரன்
7. துலாம் = சனி
8. விருச்சிகம் = குரு
9. தனுசு = செவ்வாய், சூரியன், குரு
10. மகரம் = சுக்கிரன்
11. கும்பம் = சுக்கிரன்
12. மீனம் = செவ்வாய், சந்திரன், குரு
முதல் பகுதியில் கூறியுள்ள அனைத்திற்கும்
நேர் எதிரரன பலன்களை இவைகள் செய்யும்.
ஆனால் பாதக ஸ்தானங்களான 6-ஆம் வீடு, 8-ஆம்
வீடு,
12-ஆம் வீடு

ஆகிய இடங்களில் இவர்கள் இருந்தால் தீமை செய்ய முடியாது.
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் மேன்மை என்றாகிவிடும்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று மகிழ்ச்சி அடையலாம்!
1. மேஷம் = சனி, புதன், சுக்கிரன்
2. ரிஷபம் = குரு, சந்திரன்,
3. மிதுனம் = செவ்வாய், குரு, சூரியன்
4. கடகம் = சுக்கிரன், புதன்
5. சிம்மம் = சனி, சுக்கிரன், புதன்
6. கன்னி = செவ்வாய், சந்திரன்
7. துலாம் = குரு, சூரியன், செவ்வாய்
8. விருச்சிகம் = புதன், சுக்கிரன்
9. தனுசு = சுக்கிரன்
10. மகரம் = செவ்வாய், சந்திரன், குரு
11. கும்பம் = சந்திரன், குரு
12. மீனம் = சூரியன், சனி, சுக்கிரன், புதன்
லக்கின அதிபதி லக்கினத்திலேயே இருந்தால் நன்று. உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினக்காரராக இருந்து அதன் அதிபதி செவ்வாய் மேஷத்திலேயே இருந்தால், அது
அவருக்குச் சொந்த வீடு. ஆட்சி வீடு. அது நன்மை பயக்கும். இல்லை அந்த வீட்டை விட்டு வேறு இடங்களில் அமர்ந்திருந்தால் அதன் பலன் மாறுபடும். அவர் சென்று அமரும் வீடு, அவருக்குப் பகை வீடு என்றால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.
அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம் வீடாகவோ அல்லது 8-அம் வீடாகவோ அல்லது 12-ஆம் வீடாகவோ இருந்தால் எதிர்மறையான பலன்களே கிடைக்கும். வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக இருக்கும். எதிர் நீச்சல் போட வேண்டியதிருக்கும்.
அப்படியிருந்தால், பார்த்துவிட்டுக் கவலைப் படாதீர்கள். கன்னத்தில் கையை முட்டுக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து விடாதீர்கள். அதற்கான நஷ்ட ஈடு வேறு இடங்களில்
வழங்கப்பெற்றிருக்கும்.
ஏனென்றால் யாராக இருந்தாலும் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.அதை நினைவில் வையுங்கள். லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு
கேந்திரம் அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர் அங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும்.
லக்கினத்தைப் பகைக் கிரகங்களோ அல்லது நீசக் கிரகங்களோ பார்க்காமலும் லக்கினத்தில் இல்லாமலும், லக்கினாதிபதியுடன் சேராமல் இருந்தாலும் நன்மை உடையதாக இருக்கும் அதேபோல
லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அதிக நன்மையான பலன்கள் கிடைக்கும். அதேபோல லக்கினம் சுபக் கிரகங்களின் பார்வையில் இருந்தாலும் நன்மைகள் உடையதாக இருக்கும்.
லக்கினத்தை வைத்துதான் ஒரு மனிதனின் குணத்தை, தோற்றத்தை, அவனுடைய ஆளூமையைச் சொல்ல முடியும். அழகான் தோற்றம், உடற்கட்டு, நல்ல குணம் குறிப்பாக அல்லது Villainனா என்பது போன்ற கணிப்புக்களை, பெண்ணாக இருந்தால் நாயகியா அல்லது வில்லியா என்று தெரிந்து கொள்வதற்கு லக்கினம்தான் ஆதாரம்! அறிவாளியா- முட்டாளா, திறமைசாலியா- சோம்பேறியா, நல்லவனா- வக்கிரம் பிடித்தவனா, அப்பாவியா கல்லுளிமங்கனா, சமூகத்தோடு ஒத்துப் போகக்கூடியவனா அல்லது விதண்டாவாதம் பேசி வீணாய்ப்போகிறவனா என்று சொவதற்கும், தோற்றத்தில் அரவிந்தசாமியா அல்லது பி.எஸ் வீரப்பாவா. ஓமக்குச்சி
நரசிம்மனா அல்லது பயில்வான் ரங்கநாதனா பெண்ணாக இருந்தால் நயன்தாராவா அல்லது

காந்திமதியா (அவரேதான் 16 வயதினில் படத்தில் மயிலின் அம்மாவாக வருவரே அதே காந்திமதிதான்) என்று சொல்வ தெல்லாம் லக்கினத்தை வைத்துத்தான்
1. லக்கினத்தில் மிகவும் முக்கியம் லக்கினநாதன் என்னும் அந்த வீட்டு அதிபதி  உதாரணம் சிம்ம லக்கினத்தின் அதிபதி சூரியன்.அவர் எங்கே போய் உட்கார்ந்திருக்கிறார் என்பது முக்கியம். அவருடைய சிறப்பான அமர்விடம் லக்கினத் திலிருந்து 5ம் வீடு அல்லது 9ம் வீடு (திரிகோண வீடுகள் எனப்படும்) அதுபோல 4ம் வீடும் 7-ம் வீடும் அல்லது 10-ம் வீடும் சிறப்பான வீடுகளே (கேந்திரம் எனப்படும் வீடுகள்)  2. ஏழாம் வீட்டிலிருந்து லக்கினாதிபதி லக்கினத்தைப் பார்த்தால் மிகவும் சிறப்பு.
180 பாகையிலிருந்து எல்லாகிரகஙகளும் எதிர்வீட்டைப் பார்க்கும்.
3. லக்கினாதிபதி லக்கினத்திலிருந்து 6-ம் வீடு, 8-ம் வீடு 12-ம் வீடு ஆகிய வீடுகளில் மறைந்து விடக்கூடாது! (தீய இடங்கள்) அப்படி
அமர்ந்தால் வாழ்க்கை போராட்டமாக அமையும். (உடனே ஜாதகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுக் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விடாதீர்கள்பல விதிவிலக்குகள் உள்ளன வரிசையாக அவைகளும் சொல்லித்தரப்படும்)
4. லக்கினாதிபதி 12-ல் அமர்ந்தால் (அதாவது விரைய ஸ்தானம் எனப்படும் – house of lossesல் அமர்ந்தால், ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப் பயன்படாது. அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு மட்டுமே பயன் படும்.
5. அதுபோல விரையாதிபதி that is the owner of the 12-th house லக்கினத்தில் வந்து அமர்ந்தால் -உதாரணம் சிம்ம லக்கினத்தில் அதற்குப் 12-ம் வீடான கடகத்தின் அதிபதி சந்திரன் வந்து அமர்ந்தால் ஜாதகன் வாழக்கை விரயமாகி விடும். அவனுடைய வாழக்கை யாருக்கும் பயன்படாது You should not jump to any conclusion by seeing a single rule. The houses are to be judged by various factors which will be taught one by one
6. லக்கினாதிபதியும், விரையாதிபதியும் ஒன்று சேர்ந்து ஜாதகத்தில் எங்கு அமர்ந்தாலும் அது ஜாதகனுக்குப் பயன் அளிக்காது. Both the owner of the first house and owner of the 12-th associated together in any place in the horoscope will not
confer any auspicious things to the native
7. லக்கினாதிபதி உச்சம் பெறுவது மிகவும் நல்லது. example – சிம்மலக்கின ஜாதகத்தில் சூரியன் மேஷத்தில் இருப்பது.
8. லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது. It is blessed horoscope
9. அதற்கு நேர் எதிர் லக்கினத்தில் சனி இருப்பது. நல்லதல்ல! இதற்கு மகர லக்கினமும், குமப லக்கினமும் விதிவிலக்கு ஏனென்றால் அந்த இரண்டு லக்கினங்களுக்கும் சனி அதிபதி.
10. லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலோ (7ம் பார்வை) அல்லது லக்கினத்தில் சந்திரன் இருந்தாலோ, ஜாதகன் அழகாக இருப்பான் பெண் என்றால் ஜாதகி அழகாக இருப்பாள்.
11. அதே போல சுக்கிரன் லக்கினத்தில் இருந்தாலும், அல்லது பார்த்தாலும் அழகான தோற்றத்தை கொடுப்பான் சினிமா நடிகைகளின் ஜாதகத்தில் இந்தக் combination இருக்கும்.
அதனால்தான் அவர்கள் அழகான தோற்றத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள் சரி பரிசோதனை செய்து பார்க்கலாம் என்றால் நடிகர்களின் ஜாதகங்கள் தாராளமாகக் கிடைக்கின்றன்.
நடிகைகளின் ஜாதகங்கள் கிடைப்பதில்லை! வெளியே வராது. வயது தெரிந்துபோய் விடுமே சாமி  நடிகைகள் என்றில்லை, பெண்களின் வயதையும் ஆண்களின் வருமானத்தையும்
கண்டுபிடிக்க முடியுமா அல்லது கேட்பதுதான் நியாயமா
12. அதே இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அல்லது பார்த்தால் அபரிதமான திறமையைக் கொடுப்பான்
13. எல்லா லக்கினங்களும் சமம். ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிகப்படியான சிறப்பு உண்டு. சிம்ம லக்கினம் Heroக்களின் லக்கினம். அந்த லக்கினக்காரர்கள் எல்லாம் நாயகர்கள்தான் (உதாரணம் கமல்ஹாசன், ரஜினிகாந்த ஆகிய இருவரின் ஜாதகங்கள்)
சிம்ம லக்கினம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நானும் சிம்ம லக்கினம்தான் திரைத்துறைக்குச் சென்றால்தான் ஹீரோவா  மனதளவில் நானும் ஹீரோதான்
14. மகர, கும்ப லக்கினக்காரர்கள் கடின உழைப்பாளிகள். சனீஸ்வரன் அந்த லக்கினங்களின் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையிலே கடும் உழைப்பாளிகள். எடுத்த காரியத்தை
முடிக்காமல் விட மாட்டார்கள்
15. கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் நல்லவர்கள். அவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்கலாம். அவர்கள் நிறைகுடம் போன்றவர்கள் அதனால்தான் கும்ப ராசியின்
சின்னமாகக் குடம் வழங்கப் பெற்றுள்ளது. பெண்களுக்கு கும்ப லக்கினம்தான் சிறந்த லக்கினம். கும்ப லக்கினப் பெண்களை மணந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
16.கன்னி லக்கினக்காரர்கள் மற்ற எல்லா லக்கினக்கார்களையும் சுலபமாக ஈர்த்து விடக்கூடியவர்கள். They will attract or mix with any people or any Society easily
17.மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் (உதாரணம் திரு.ஜெமினி கணேசன், செல்வி ஜெயலலிதா. திரு.ப. சிதம்பரம் போன்றவர்கள்)
18. கடக லக்கினக்காரர்கள் பெரும்பாலும் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள். உதாரணம் கலைஞர் மு.க, திருமதி இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றவர்கள். அரசியல் இல்லையென்றாலும் தலைமை தாங்கும் திறமையுடையவர்கள். நாட்டமையாக இருப்பவர்கள்
19. ரிஷபம், துலாம் லக்கினக்காரர்கள் கலைத்துறையில் பிரகாசிப்பார்கள் (அதிபதி சுக்கிரன்). அதுபோல வாழ்க்கையை இயற்கையாகவே அனுபவிக்கக் கூடியவர்கள். ரசனை உணர்வு
மிக்கவர்கள். மெல்லிய உணர்வு மிக்கவர்கள்
20. மேஷம், விருச்சிக லக்கினக்காரர்க்ள் செவ்வாய் அதிபதி அதனால் போராடிப் பார்க்கும் மனப்பான்மை உள்ளவர்கள். யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டர்கள். ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் பரிணமிப்பவர்கள் இவர்கள்தான்.
21. தனுசு, மீன் லக்கினக்காரர்கள் குரு அதிபதியானதால், இயற்கையாகவே சிறந்த அறிவுடையவர்களாக இருப்பார்கள் (Keen Intelligence) Finance, stock market, Banking, auditing, teaching, coaching போன்ற துறைகளில் இவர்கள் பரிணமிக்கும் வாய்ப்பு
இயற்கையாகவே இவர்களுக்கு இருக்கும்!
22. லக்கினாதிபதி சிறுவயது வாழ்க்கைக்கும், உடல் நலத்திற்கும் உரியவர், அவர் பலமாக இருந்தால் சிறுவயது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடல் நலமும் நன்றாக இருக்கும்
23. அவர் வலுவிழந்து இருந்தால் (உதாரணம் லக்கினாதிபதி சனி அல்லது ராகு அல்லது கேது  போன்ற தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும்.
24. தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஒன்றுக்கு மேற்பட்ட தீய கிரகமானால் வாழ்க்கை துன்பம் மிகுந்ததாகிவிடும் 25. கடவுள் கருணை மிக்கவர். ஜாதகத்தில் லக்கினத்தின் மூலம் உள்ள குறைகளுக்கு அவர் நிவர்த்தியையும் கொடுத்துதான் அத்தனை ஜீவ ராசிகளையும் பிறக்க வைக்கிறார். அதற்கு அதிரடியான சான்று ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் யாராக இருந்தாலும் 337தான்.
எல்லா லக்கினங்களுமே சமம் என்றாலும், சிம்ம லக்கினத்திற்கும் அதற்கு எதிர்வீடான கும்ப லக்கினத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதனால்தான் சிம்ம லக்கினத்திற்கு அடையாளமாகச் சிங்கத்தையும் கும்ப லக்கினத்திற்கு அடையாளமாக மாவிலை, தேங்காய்,சிறு செம்பு ஆகியவற்றின் கூடிய கும்பத்தையும் அடையாளமாகக் கொடுத்துள்ளார்கள் சிம்ம லக்கினத்தின் அதிபதி சூரியன். அதுபோல கும்ப லக்கினத்தின் அதிபதி சனி. ஒன்றுக்கு
ஒன்று எதிர்மறையான குணமுடைய லக்கினங்கள் சிம்ம லக்கினக் காரர்கள் சமூகத்தில் அல்லது அவர்கள் இருக்கும் துறையில் நாயகர்களாக இருப்பார்கள். (They will be Heroes) சிம்ம
லக்கினம் என்று மட்டுமில்லை சிம்ம ராசிக்காரர்களும் ஹீரோக்கள்தான்.
Top of Form

பெண்களாக இருந்தால் ஹீரோயினிகள்தான்.நல்ல உதாரணம் வேண்டு மென்றால்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சிம்மலக்கினக்காரர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்துடன் இருப்பார்கள் பலரையும் கவரக்கூடிய தோற்றமாக இருக்கும். ஆனால் சூரியன் ஜாதகத்தில் அடிபட்டுப்போயிருந்தாலோ அல்லது லக்கினத்தில் சனி அல்லது மாந்தி வந்து அமர்ந்திருந்தாலோ அப்படிப்பட்ட தோற்றம் அவர்களுக்கு இருக்காது. நவாம்சத்தில் சூரியன் கெட்டுப்போயிருந்தாலும் அதே பலன்தான் சூரியன் என்ன தயிர்சாதமா - கெட்டுப்போவதற்கு? என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். இங்கே கெட்டுப்போதல் என்னும் சொல். சூரியன் லக்கினத்தில் இருந்து ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டு ஆகிய இடங்களில் அமர்வதையும், அதேபோல் பகை அல்லது நீச வீடுகளில் சென்று அமர்ந்து விடுவதையும் அல்லது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து விடுவதையும் குறிக்கும். சிம்ம லக்கினக்காரர்கள் முன் கோபக்காரர்கள்.பிடிவாதக்காரர்கள் அவர்கள் நினைத்தால் நினைத்ததுதான். எந்த சக்தியாலும் அவர்களை மாற்ற முடியாது.
அவர்களுக்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களை யாரும் மடக்கிப் பிடித்துவிட முடியாது. அவர்களாக வந்தால்தான் உண்டு. சிங்கம் தனியாக இருப்பதுபோல தனியாகத்தான் இருப்பார்கள். யாருடனும் அதிகமான ஒட்டுதல் இருக்காது.வெளியில் ஒட்டியிருப்பதுபோல் தெரிந்தாலும் உள் குணத்தால் பட்டும் படாமல் இருப்பார்கள்.அது வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள் சிம்ம லக்கினத்தில், அதற்கு 4ம் வீட்டிற்கும், 9ம் வீட்டிற்கும் அதிபதியும் (அதாவது ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண வீட்டிற்கும் அதிபதியானவரும்) சிம்ம லக்கினத்திற்கு யோககாரனுமானமான செவ்வாய் கிரகம் வந்து அமர்ந்தால் அந்த ஜாதகன் திறமைசாலியாக இருப்பான்.அவனிடம் பன்முகத் திறமை இருக்கும். அதே பலன் லக்கினத்தில் வந்து அமராதபோதும் அந்த ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தாலும் கிடைக்கும். சிம்ம லக்கினத்திற்கு எதிர் வீடாகவும், முற்றிலும் மாறுதலான பலன்களைக் கொண்டதாகவும் கும்ப லக்கினம் இருக்கும்.


கும்ப லக்கினக்காரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் கடும் உழைப்பாளிகள்.பொறுமைசாலிகள். கும்ப லக்கினப் பெண் என்றால் உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவளாக இருப்பாள். அந்த லக்கினப் பெண் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை அசத்தலாக இருக்கும். கும்ப லக்கின அதிபதியான சனி உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது கேந்திர, திரிகோண வீடுகளில் இருந்தாலோ அந்த ஜாதகன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய சாதனையாளராக இருப்பார். அதேபோல கும்ப லக்கினத்திற்கு ஒரு இயற்கையான் கேடும் உள்ளது. கும்ப லக்கினத்திற்கு லக்கின அதிபதியும் சனிதான் அதேபோல அந்த வீட்டிற்குக் கீழ் வீடும், 12ம் வீடுமாகிய விரைய ஸ்தானத்திற்கு அதிபதியும் சனிதான். அதாவது கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் அவனே - விரையாதிபதியும் (Lord for the losses) அவனே! ஆகவே கும்ப லக்கினத்திற்கு - either great success or great failure என்கின்ற இரண்டு பலன்களில் ஒரு பலன் தான் வாழ்க்கையில் அமையும்!
முதல் வீடு எனப்படும் லக்கினத்தைப் பற்றி ஒரு அடிப்படை விதியை நீங்கள் அறிதல் அவசியம். ராசிகள் அட்டவனையைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று தெள்ளத் தெளிவாக விளங்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும் தலா ஒரு வீடுதான்.
மற்ற ஐந்து கிரகங்களுக்கும், அதாவது புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் இருக்கும். பலன்கள் பெரும்பாலும் அந்த கிரகங்களின் குணங்களையும் உள்ளடக்கியிருக்கும். உதாரணமாக மிதுனம், கன்னி ஆகிய லக்கினக்காரர்களுக்குப் புதன்தான் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள். அதேபோல சனி அதிபதியாக இருக்கும் மகரம், கும்பம் ஆகிய லக்கினத்தைச் சேர்ந்தவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.சுக்கிரன் அதிபதியாக இருப்பவர்கள்.கலைகளில் ஆர்வமுடையவர்களாகவும், குரு அதிபதியாக இருப்பவர்கள், மனிதநேயம், தர்மசிந்தனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இதெல்லாம் பொது விதி!.
1. லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் - அதாவது முன்னும், பின்னும் உள்ள வீடுகளில் - சுபக் கிரகங்கள் இருந்தால் ஜாதகன் ராஜயோகம் உடையவனாக இருப்பான். if Lagna is hemmed between benefic planets,the native will be fortunate.
2. அதேபோல் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக் கிரகங்கள் நின்றால் அல்லது இருந்தால் - ஜாதகன் அதிர்ஷ்டமில்லாதவன். தரித்திரயோகம். வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும் அவன் அல்லது அவள் எதையும் போராடித்தான் பெற வேண்டும்.
இரண்டு VIP வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால் எப்படி இருக்கும் என்றும் அல்லது இரண்டு பேட்டை தாதாக்களின் வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பாருங்கள், அப்போது உண்மை உங்களுக்குப் புலப்படும்.
இந்த விதி தலையான விதியாகும்.
இது லக்கினம் என்று மட்டுமில்லை, மற்ற எல்லா பாவங்களுக்குமே இது பொருந்தும். இதே பலன்தான் ஏழாம் வீடு எனப்படும் திருமண வீடாக இருந்தாலும் சரி, பத்தாம் வீடு எனப்படும் தொழில்/வேலை வீடாக இருந்தாலும் சரி, நான்காம் வீடு எனப்படும் தாய், கல்வி, சுகம் ஆகியவற்றிற்கான வீடாக இருந்தாலும் சரி அல்லது ஒன்பதாம் வீடு எனப்படும் தந்தை, முன்னோர் சொத்து, பாக்கியம் ஆகியவை சம்பந்தப்பட்ட வீடாக இருந்தாலும் சரி பலன் அதற்கு ஏற்றார் போலத்தான் இருக்கும்.
அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம
1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன் (10th Lord) பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும் நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது தொழில் செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில் இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.
2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன் (10th Lord) இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்வான்.
3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால் அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன் (10th Lord) அப்படியிருந்தாலும் ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால் விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.
4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன் (10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில் பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.
லக்கினமே பிரதானமானது. லக்கினத்திற்கு ஏழாம் இடம் அதற்கு அடுத்தபடியாகப் பிரதானமானது ஆகும். லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பதைவிட ஏழில் இருந்து லக்கினத்தைப் பார்க்கும் அமைப்பு உன்னதமானதாகும். சிறப்புடையதாகும். உச்சமாகும் கிரகம், தனது உச்ச ஸ்தானத்தில் இருந்து அதன் ஏழாம் இடத்தில் நீசமாகும். நீசத்திலிருந்து ஏழில் உச்சமாகும். பார்வையில் ஏழாம் பார்வை சிறப்புடையதாகும். இந்த அடிப்படையில்தான் லக்கினத்தின் ஏழாம் வீடு மனைவிக்கு உரிய, பெண்ணாக இருந்தால் கணவனுக்கு உரிய இடமாக வழங்கப்பெற்றிருக்கிறது லக்கினம் நன்றாக இருந்து, ஏழாம் வீடும் நன்றாக இருந்தால் தாம்பத்ய வாழ்க்கை அற்புதமாக இருக்கும். ஜோடிப்பொருத்தம் அருமையாக இருக்கும். மனைவி உங்களுக்காக உயிரையும் கொடுப்பவளாக இருப்பாள் இல்லையென்றால் உயிரை எடுப்பவளாக இருப்பாள். அதாவது உங்களுடைய எதிர்பார்ப்பிற்குச் சற்றும் ஏற்றவளாக இருக்க மாட்டாள். நல்ல மனைவியாக அமைந்து விட்டால், பார்ப்பவர்கள் Made for each other என்பார்கள்.

இப்போது ஏழாம் வீட்டிற்கும், குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம். குடும்ப வாழ்க்கை என்பது பிறப்பிலிருந்து இறப்பு வரை வருவது. 25 வருட காலம் பெற்றோர்களை வைத்துக் குடும்ப வாழ்க்கை. ஐம்பது வயதிற்கு மேல் குழந்தைகளை வைத்துக் குடும்ப வாழ்க்கை. அதைப் பற்றி முன் பதிவில் விவரமாக எழுதியுள்ளேன். மனைவியால் கிடைக்கும் குடும்ப வாழ்க்கை என்பது இடைச்செருகல் அவள் நன்றாக அமைந்தால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். இல்லையென்றால் மகிழ்ச்சி குறையும்.
ஆனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போகாது.
2ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீடு அதன் ஆறாம் இடமாகும் 7ஆம் வீட்டிலிருந்து 2ஆம் வீடு அதன் எட்டாம் இடமாகும் அதாவது 6/8 Position and 8/6 Position ஒன்றிற்கொன்று அஷ்ட சஷ்டம வீடுகள்.
என்னவொரு மோசமான அமைப்புப் பாருங்கள்
இறைவன் கருணை மிக்கவன். அதனால்தான் தாய், தந்தை, குடும்பம் ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் கொடுத்தனுப்பாமல் தனித்தனியாக பிரித்துக் கொடுத்திருக்கிறான். இரண்டாம் வீடு குடும்பம் என்றால், நான்காம் வீடு தாய்க்கு உரியது ஒன்பதாம் வீடு தந்தைக்கு உரியது. நிச்சயம் ஒவ்வொரு ஜாதகத்திலும் இந்த மூன்றில் ஒன்று நன்றாக இருக்கும். ஜாதகனின் இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்து, பிறக்கும்போது வறுமையான சூழ்நிலையில் பிறந்திருந்தாலும், அவனைக் கட்டியணைத்து வளர்க்க ஒரு நல்ல தாய் அமைந்திருப்பாள். அல்லது தந்தை அமைந்திருப்பார்
4காம் வீட்டிற்கு, அதிலிருந்து பதினொன்றாம் வீடு, குடும்ப ஸ்தானம். அதைக் கவனத்தில் கொள்ளுங்கள். நல்ல தாய் கிடைப்பதுதான் ஒரு மனிதனின் முதல் பாக்கியம். நல்ல தாய் கிடைத்துவிட்டால் சிறு வயது வாழ்க்கை எந்தவிதமான பொருளாதாரச் சூழ்நிலையிலும் நன்றாக இருக்கும். 4ஆம் வீட்டிற்கும் இரண்டாம் வீட்டிற்கும் ஒரு சிறப்பான தொடர்பு உண்டு. நான்கிற்கு 11 என்பது அதன் லாபஸ்தானம்.
இரண்டு, ஐந்து, பதினொன்று ஆகிய மூன்று வீடுகளும் சேர்ந்துதான் ஒரு ஜாதகனின் பணபலத்தை நிர்ணயம் செய்யும். இம்மூன்று வீடுகளும் பலமாக இருந்தால் ஜாதகனுக்கு நிறையப் பணம் வரும் செல்வந்தனாக உருவெடுப்பான். இல்லையென்றால் இல்லை
லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் சுறுசுறுப்பானவர். செந்நிற மேனி உடையவர். தேகம் எப்போதும் உஷ்ணமாக இருக்கும்.
இரண்டில் சூரியன் இருந்தால் கல்வி சுமாராக இருக்கும் நல்ல உழைப்பாளி. ஜாதகருக்குப் பொருள் சேரும்.
மூன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் Take it easy type அல்லது Don't care type. பகைவர்களை என்ன சேதி என்று கேட்கும் திறமை உடையவர்
நான்கில் சூரியன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு நன்மையல்ல ஜாதகருக்கு உறவினர்களுடன் பகை உண்டாகும். அரசியல் செல்வாக்கு இருக்கும்
ஐந்தில் சூரியன் இருந்தால், குடும்பம் அளவாக இருக்கும்; வாழ்க்கை வளமாக இருக்கும். தந்தைவழிச் சொத்துக்கள் இருக்காது ஜாதகர் தன் முயற்சியால் உயர்வடைவார்
ஆறில் சூரியன் இருந்தால் பகைவர்கள் பக்கத்தில் வரமாட்டார்கள் ஜாதகரின் குடும்பம் பெரியதாக இருக்கும்.
ஏழில் சூரியன் இருந்தால் ஜாதகர் கடன், நோய்கள், பிணிகள், வழக்குகள், விவகாரங்கள் இல்லாதவர். பலரது பராட்டுக்க்களைப் பெறுபவர் மனைவிக்கு அடங்கிப்போகக்கூடியவர். எதையும் சரிவரச் செய்யாதவர்.
எட்டில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர். எவருக்கும் பணிந்து போகாதவர் இரக்கமற்ற குணத்தை உடையவர் சிலருக்குக் கண்களில் குறைபாடுகள் இருக்கும்
ஒன்பதில் இருக்கும் சூரியனால் தந்தைக்கு இடையூறுகள் ஏற்படும் ஜாதகருக்குத் தீயவழிகளில் பொருள் சேரும் உறவினர்களுடன் விரோதம் ஏற்படும் சுய முற்சியால் செல்வம் சேரும்
பத்தில் சூரியன் இருந்தால் அது ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும் ஜாதகருக்கு நிரந்தத் தொழில் அல்லது வேலை இருக்கும் அரசு தொடர்பு அல்லது அரசியல் தொடர்பு இருக்கும் உடல் நலம் சீராக இருக்கும் தன் அறிவினால் சுயமுன்னேற்றம் அடையக்கூடியவர்
பதினொன்றில் சூரியன் இருந்தால், ஜாதகர் நீண்ட ஆயுளை உடையவர். பலரைவைத்து வேலைவாங்கும் திறமை உடையவர். நண்பர்களால் பல உதவிகள் கிடைக்கும்
பன்னிரெண்டில் சூரியன் இருந்தால் ஜாதகருக்குத் தன் தந்தையுடன் சுமூக உறவு இருக்காது. அதிகமான செலவுகள் ஏற்படும் ஜாதகர் ஊர் சுற்றி. அதிகமான பயணங்களை மேற்கொள்வார். சந்ததிக் குறைபாடுகள் இருக்கும். உழைத்து முன்னேற்றம் காண்பவர்.
லக்கினத்தில் சூரியனுடன், சந்திரன் இணைந்திருந்தால் ஜாதகர் எழுத்து, அல்லது ஓவியம், அல்லது பேச்சு ஆகியவற்றில் அதீதத் திறமை உடையவர். பெயர் புகழ் அவரைத் தேடிவரும். இந்த மைப்பு அமாவாசை யோகம் எனப்படும்.
லக்கினத்தில் சூரியனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகருக்கு அவருடைய தந்தையுடன் கருத்து வேறுபாடுகள், உரசல்கள் இருக்கும். தொழிலில் பல இன்னல்கள் ஏற்படும். இந்த அமைப்புள்ள சிலர் காவல்துறை, ராணுவம் ஆகியவற்றில் பணிபுரிந்து சிறப்படைவார்கள்
லக்கினத்தில் சூரியனும் புதனும் இணைந்திருந்தால், ஜாதகருக்கு நல்ல கல்வியும் அறிவாற்றலும் இருக்கும். சிலர் ஞானமாகவும் இருப்பார்கள் திட்டமிட்டபடி வாழக்கூடியவர்கள். இந்த அமைப்பிற்குப் புதஆதித்ய யோகம் என்று பெயர் ஜாதகர் பலதுறைகளிலும் நிபுணனாக இருப்பார்.
லக்கினத்தில் சூரியனுடன் குரு சேர்ந்திருந்தால், ஜாதகர் தானகவே எதையும் கற்றுக்கொண்டு செயலாற்றும் திறமை மிக்கவர். பதவியும்,. பாராட்டுக்களும் அவரைத் தேடிவரும். இரக்க சுபாவம் உடையவர். அதோடு முன்போபத்தையும் உடையவர்,
லக்கினத்தில் சூரியனுடன் சுக்கிரன் இருந்தால், ஜாதகருக்குக் கடத்தல் தொழிலில் ஈடுபாடு உண்டாகும். ரேஸ், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவார். ஆடம்பரத்தில் விருப்பம் உடையவர். சிலருக்குத் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்.
லக்கினத்தில் சூரியனுடன் சனி இருந்தால் ஜாதகருக்குத் தன் தந்தையுடன் இணக்கம் இருக்காது. ஜாதகருக்கு இரும்பு, எந்திரம், வாகனம் போன்றவற்றில் நல்ல அறிவு இருக்கும். அவை சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் ஜாதகர் சிறப்படைவார்.
லக்கினத்தில் சூரியனுடன் ராகு இணைந்தால் நல்லதல்ல. தீயவழிகளில் பணம் வரும் அல்லது ஜாதகர் தீயவழிகளில் பணத்தைச் சேர்ப்பார். சிலர் பாபகரமான தொழிலைச் செய்து பணம் சம்பாதிப்பார்கள்.
லக்கினத்தில் சூரியனுடன் கேது சேர்ந்தால், ஜாதகருக்கு ஜோதிடம், மாந்திரீகம், வைத்தியம் ஆகியவை கைவந்த கலையாக இருக்கும். அதில் ஈடுபடுபவர்கள் பெரும்பொருள் சேர்ப்பார்கள்
லக்கினத்துடன் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் போன்ற நன்மையளிக்கும் கிரகங்கள் சம்பந்தப் படும்போது மனிதன் பல நல்ல குணங்களைப் பெற்றவனாக இருப்பான். சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற தீய கிரகங்கள் சேரும்போது மன வக்கிரங்கள், உணர்வுச் சீரழிவுகள் கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.
1. மகரம் மற்றும் கும்ப லக்கினக்காரர்கள் கடும் உழைப்பாளிகள் சனி அதிபதி அதனால் கடும் உழைப்பு அவர்களிடம் இருக்கும். அதில் மகர லக்கினக்காரர்கள் கிடைத்தை மட்டும் கடுமையாக உழைத்து செயல் படுத்துவார்கள். ஆனால் கும்ப லக்கினக்காரர்கள் ஒருபடி மேலே சென்று, தேடிப் பிடித்தும் செய்வார்கள்.
2.ரிஷப லக்கினக்காரர்களை ஈஸியாக வளைத்துவிட முடியும். மென்மையானவர்கள். மெல்லிய உணர்வு படைத்தவர்கள். எதையும் அனுபவிக்கத் தயாராக இருப்பவர்கள்.(சுக்கிரன் அதிபதி) டேய் மாப்ளே, வாடா ரெண்டு பெக் அடித்துவிட்டு வரலாம்என்றால் வந்து விடுவார்கள். அதிலும் சிலர்,”டேய் நீ கூப்பிட்டதற்காக வந்தேன்.ஜஸ்ட் ஃபார் கிவிங் யூ கம்பெனி. நீ என்ன கருமத்தை வேண்டுமென்றாலும் குடி. எனக்கு பெப்ஸி மட்டும் போதும்என்று சொன்னாலும் சொல்வர்களேயன்றி மறுக்காமல் வந்து விடுவார்கள் அதிலும் ஒரு வித்தியாசம். துலா லக்கினத்திற்கும் அதே சுக்கிரன் அதிபதி என்றாலும், அவர்கள் இடம், கெளரவம் என்று யோசித்து விட்டுத்தான் வருவார்கள்.
3. கன்னி & மிதுன லக்கினக்காரர்கள் இயற்கையிலே புத்திசாலிகள் எல்லோருடனும் நெருங்கிப் பழகக்கூடியவர்கள். எவருடனும் ஜோடி சேரக்கூடியவர்கள். சீட்டாட்டத்தில் ஜோக்கரைப் போல! இந்த இரண்டில் கன்னி தராதரம் பார்க்காது. மிதுனம் பார்க்கும்
4.மேஷ லக்கினம் & விருச்சிக லக்கினம் பொதுவாக குடும்பத்தில் மூத்தவராக இருப்பார் அல்லது குடும்பத்தில் தலைமை தங்கும் வல்லமை பெற்றிருப்பார். சுறுசுறுப்பானவர். தற்பெருமை உடையவர். நாயகனுக்குள்ள தன்மைகளைப் பெற்றிருப்பார். நியாயமான காரணங்களுக்குச் சண்டைபோடும் மனப்பான்மை உடையவர். ஒரு இடத்தில் இருக்கும் தன்மை இல்லாதவர். பெண்களின் மேல் தனி விருப்பம் உடையவர். இந்த லக்கினக்காரகளின் வளர்ச்சி சீராக இருக்காது. உணர்ச்சிகளுக்கு வயப்பட்டவர்கள். முன் கோபக்காரர்கள். அதேபோல எளிதில் சமாதானமாகிவிடக் கூடியவர்கள். வேலை பார்க்கும் இடங்களில் நல்ல பெயரை எடுக்ககூடியவர்கள் 5
1. லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்: ஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக இருப்பான். யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான் தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான். ஜாதகன் தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான். சொத்துக்களை உடையவனாக இருப்பான். பெருமைகள், புகழை உடையவனாக வளர்வான். வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும். மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான். தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான். உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான். தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில் அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான். மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்
2. லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள் எல்லா இடங்களிலும் எடுபடும். தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான் தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருப்பான். செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான். மன அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,
3. லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான் சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள் ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.
4. லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான் அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும். அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான் ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான். நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக இருப்பான். ரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள், இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லாத வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான். தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான். தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான் சுகவாசியாக இருப்பான். வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான். இத்துடன், ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும் வலிமை பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
5. லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான். அதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான். அதோடு தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான். ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை உடையவனாகவும் இருப்பான். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் சிலருக்கு அரசியல் செல்வாக்கும், ஆட்சியாளர்களின் ஆதரவும் இருக்கும்
6. லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான். எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான். பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும் பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும் லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும் நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து சிறப்பைப் பெறுவார்கள் சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்
7. லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும். சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள். மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான். ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான். மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும். சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள். எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள் எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும்பொருள் ஈட்டி மகிழ்வுடன் வாழ்வான்.
8. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான். சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும். ஒழுக்கக் குறைவு ஏற்படும். சிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும், ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும். ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும். சிலருக்கு உடலில் அங்கக் குறைபாடுகள் இருக்கும் சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை எடுத்து வளர்க்க நேரிடும். இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம ஆயுளை உடையவன். வாழ்க்கையில் வறுமை ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும் சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர்
9. லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும். ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான். நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது. இது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக் கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும் ஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான் சிறந்த பக்திமானாக விளங்குவான். தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான், நேர்மையாளனாக இருப்பான். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள் எதுவும் இருக்காது.
10. லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான அமைப்பு இது. பத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான். நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான். தொழிலில் மேன்மை அடைவான். அதிகாரமும், பதவிகளும் தேடிவரும். அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும். சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள். நிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான வாழ்க்கை ஏற்படும்.
11. லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான தொழிலைச் செய்வான். நற்பெயரும், செல்வாக்கும் தேடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள். ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன் இந்த அமைப்பும் சேர்ந்து மேலும் பலவிதமான நன்மைகளைச் செய்யும் Gains; Gains: Gains - அவ்வளவுதான். ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே இல்லாத வாழ்க்கை அமையும். இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூறிய நன்மைகள் இருக்காது. ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்
12. லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும். வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான். அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும் வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும் சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்

Bottom of Form

2 comments:

  1. நீங்கள் கூறுவதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை

    ReplyDelete
  2. 6,8,12 கெட்டு இருந்தால் பரிகாரம் சொல்லவும்

    ReplyDelete