திருமண தகவல் மையத்தின் முக்கிய விதிமுறைகள்
1) ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஸ்ரீ வித்யா பீடம் திருமணத் தகவல் மையம் மூலம் வரன் பெற வயது வரம்பு குறைந்தபட்ச ஆணுக்கு 23 வயதும் பெண்ணுக்கு 21 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். (பெண்பார்க்க வரும்போது கட்டாயம் மாப்பிள்ளையுடன் வரவேண்டும். குறிப்பு: திருமணம் ஆகாத நண்பர்களை அழைத்து வருவதை தவிக்க வேண்டுகிறோம்.)
2) திருமணத்தகவலின் பதிவு செய்து கொள்வதற்காக உறுப்பினர்கள் நிர்வாக செலவிற்காகவும், ஜாதக பரிவர்த்தனைக் காகவும், ஆறுமாதத்திற்கு ரூ 750/- ஒராண்டிற்கு கட்டணம் ரூ 1500/- மட்டும் செலுத்தவேண்டும். website: சைட் உள்பட இத்தொகை எக்காரணத்தைக் கொண்டும்திருப்பித் தரப்படமாட்டாது. தாங்கள் காலக்கெடு நிர்ணையித்த படி திருமணம் முடிவாகவில்லை எனில் பதிவினை புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.
3) வரனின் பெற்றோர்கள் நேரடியாகவோ, அல்லது தபால், இமெயில், முலமாக காலக்கெடு நிர்ணயிக்காமல் பதிவு செய்யவேண்டும்., மனநலம் சரி இல்லாதவரை திருமணத் தகவல் மையத்தில் பதிவு செய்யக் முயற்ச்சிக்கக் கூடாது.
4) பெற்றோர்கள் வரமுடியாத நிலையில் இருந்தால் உறவினர் பாதுகாவலர் மூலம் பதிவு செய்ய விரும்பினால் பெற்றோர் ஒப்புதல் கடிதமும், பெற்றோர் இல்லையேல் வரனின் ஒப்புதலுடன் பதிவு ஏற்க்கப்படும்.
5) பதிவு செய்யும் போது வரனின் கலர் போட்டோ போஸ் கார்டு அளவு 3 முழு சைஸ் போட்டோ, குறைந்தது 2 போட்டோ ஜாதக குறிப்பும் பயோடேட்டா கொடுக்க வேண்டும்., தங்கள் தகுதிக்கேற்ப வாழ்க்கைத்துணையை நிர்ணயித்து விரைவில் வாழ்க்கைத் துணை அமைய அன்னை ஸ்ரீ பாலா திருபுரசுந்தரியின் பரிபுரன ஆசீர்வாதம் வேண்டுகிறோம்.
6) பதிவுக்கு பின் வரன், குடும்பம் மூலம் திருமணம் நிச்சயம் செய்தால் உடனே தகவல் மையத்திற்கு தெரிவிக்க வேண்டும். வேறு வரனை இணைக்கவோ முயற்ச்சிக்கவோ கூடாது.
7) வரன் வெளிநாட்டில் வசித்தாலோ, பணி செய்தாலோ உரிய வருமான சான்றிதழ்,விசா,பாஸ்போட் நகல் ஆகிய அனைத்து ஆவணங்களையும் எங்கள்திருமண தகவல் மையத்திற்குக் கொடுக்க வேண்டும்.
8) ஜாதகத்தில் நட்சத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம், பாவகிரகஅமைப்பு, தசாபுக்தி, கோட்சாரத்தினால் ஏற்படும் திருமணத்தடை போன்றவற்றில் ஏற்படும் காலதாமதத்திற்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்க இயலாது. இதனால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வாழ்க்கைத் துணையை ஏற்பாடு செய்து தருகிறோம் என உறுதியளிக்க இயலாது.
9) வரன் பற்றிய முழு விபரம், எங்களிடம் கொடுக்கப்பட்ட தகவலின்படியே உங்களிடம் கொடுக்கப்படுகிறது மேற்படி வரன் பற்றிய தகவல் சரி இல்லை என்றாலோ மாறிஇருந்தாலோ நாங்கள் பொறுப்பு ஏற்க்க முடியாது.
10) ஜாதகர் ஏற்கனவே திருமணமாகி இருப்பின் சட்டப்படி நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றுள்ள தீர்ப்பாணையம் நகல் கொடுக்க வேண்டும். கணவரை இழந்தவர். மனைவியை இழந்தவர் முழூ விபரம் கொடுக்க வேண்டும். உடல் ஊணம் முற்றோர். உடல் ஊணம்பற்றி முழு தகவல் தரவேண்டும்.
11) வரன் பற்றி முழு விபரம் மணமகன் மணமகள் ஜாதகம் குறிப்பு அல்லது பிறந்ததேதி, நேரம், பிறந்த ஊர், கொடுக்க வேண்டும். ( ஒரு ஜாதகம் பொருத்தம் பார்ப்பதற்கு தனியாக கட்டணம் ரூ 50/- ஐ செலுத்த வேண்டும்.) ஜாதகம் இல்லை என்றால் ஜாதக குறிப்பு கட்டணம் தணியாக ரூ 75/- ஐ செலுத்த வேண்டும். பதிவு கட்டணத்துடன் இனைக்ககூடாது.
12) மணமகன் மணமகள் பற்றி விசாரிப்பது பெற்றோர் கடமை இதற்கு நிறுவனம் பொறுப்பு ஏற்க்கமுடியாது., திருமண பொருத்தம், எதிர்பார்ப்பு மற்றும் தகுதிற்கேற்ப ஜாதகங்கள் இருந்தால் மட்டுமே பதிவு செய்த பிறகு நேரில், அஞ்சல், இமெயில் மூலம் தங்களுக்கு தெரிவிக்கப்படும்.
13) திருமணம் நிச்சயமானால், நிச்சயதாம்பூலம் நடைபெறும் அன்று தவறாமல் எங்கள் ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஸ்ரீ வித்யா பீடம் திருமணத் தகவல் மையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஸ்ரீ வித்யா பீடம்; வளச்சிக்கு (பதிவு கட்டணம், ஜாதகம்,போட்டோ.எக்காரணம் கொண்டு திரும்ப தரப்பட மாட்டாது)
எழுத்தால்......................மனப்பூர்வமாககொடுப்பேன்என்றுஉறுதிஅளிக்கிறேன். வீட்டுவிலாசம்.............................................................................................. மேற்படி பூர்த்தி செய்துள்ளவையாவும் உண்மை என்றும் சட்ட விதிமுறைபடி நடப்பேன் என்றும் மணப்பூர்வமாக சம்மதிக்கிறேன்.
கையெழுத்து இடது பெருவிரல் மை - பெற்றோர் உறவினர் காப்பாளர்
தேதி:....... / ......... / ...............
No comments:
Post a Comment