ஐயா வணக்கம்,
கேள்வி :
ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள்,குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட
பாவத்தை,கிரகத்தை குரு பார்வை செய்தால் தோஷ நிவர்த்தி என பாரம்பரிய
ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.இது எந்த அளவிற்கு சரி?
இதன் விதிவிலக்குகள் என்ன? விளக்கங்களை ஜோதிடதீபத்தில் எதிர்பார்க்கிறேன்.
பதில் :
ஒரு ஜாதகத்தில் பாதிக்க பட்ட ஒரு பாவகத்தை குரு பகவானின் பார்வை சரி செய்து நன்மையை வாரி வழங்கும் என்பதெல்லாம் உண்மையில்லை , குரு பார்வை தரும் தீமையை பற்றி அறியாதவர்கள் சொல்லும் வார்த்தையாகவே இதை எடுத்து கொள்ள முடியும் , தனுசு அல்லது மீன இலக்கின ஜாதகருக்கு முறையே மிதுனம் மற்றும் கன்னியில் ( நட்பு நிலை ) அமர்ந்து நேரெதிர் பார்வை செய்யும் குரு பகவான் தனது லக்கினத்தையே தானே 100 சதவிகிதம் கெடுத்து விடுவார் .
மேலும் தனுசு இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு மேஷத்தில் அமர்ந்து குரு பகவான் ( பகை நிலை )ஒன்பதாம் பார்வையாக தனது பாவகத்தை தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , இதே லக்கினத்தை சார்ந்தவருக்கு சிம்மத்தில் அமர்ந்த குரு பகவான் ( நட்பு நிலை ) ஐந்தாம் பார்வையாக தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , இதே போன்று மீன இலக்கின ஜாதகருக்கு கடகத்தில் அமர்ந்து குரு பகவான் ( உச்ச நிலை )ஒன்பதாம் பார்வையாக தனது பாவகத்தை தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும், இதே லக்கினத்தை சார்ந்தவருக்கு விருச்சகத்தில் அமர்ந்த குரு பகவான் ( பகை நிலை ) ஐந்தாம் பார்வையாக தானே பார்த்தால் 100 சதவிகித நன்மையை வாரி வழங்கும் , மேற்கண்ட அமைப்பில் தனது லக்கினத்திர்க்கே தனது பார்வையில் இரண்டுவிதமான பலன்களை தரும் குரு பகவான் , ஒரு பாவகத்தை பார்வை செய்தால் அந்த பாவகம் அணைத்தது தோஷங்களையும் , குறைகளை நிவர்த்தி செய்யும் என்பது எப்படி ? என்று எங்களுக்கு தெரியவில்லை .
சரி உங்களுக்காக ஒரு எளிய விதி முறை சொல்கிறோம் புரிகிறதா என்று பாருங்கள் , அதாவது ஒரு ஜாதகத்தில் குரு பகவான் கோண அதிபதியாக வந்து (லக்கினம் ஐந்து ஒன்பது ), கோண பலம் பெற்று ( தனது வீட்டிற்கு முதல் , ஐந்து , ஒன்பது ) அமர்ந்தால் குரு பகவானின் பார்வை 100 சதவிகித நன்மையை தரும் .
ஒரு ஜாதகத்தில் குரு பகவான் கேந்திர அதிபதியாக வந்து ( நான்கு , எழு , பத்து ) மறைவு பலம் பெற்றால் ( தனது வீட்டிற்கு 2,6,8,12 ல் அமர்ந்தால் ) நன்மை தருவார் கேந்திர பலம் பெற்று ( நான்கு, எழு, பத்து ) ஒரு பாவகத்தை பார்வை செய்தால் 200 சதவிகிதம் தீமையான பலனை தரும், இந்த அடிப்படை விஷயத்தை புரிந்து கொண்டால் நிச்சயம் குரு பகவானின் பார்வையின் தன்மையை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , மேலும் குரு பார்வையின் நன்மை தீமையை லக்கினத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயம் செய்ய வேண்டும் .
கேள்வி :
நீசமான குருவின் பார்வைக்கு பலம் உண்டா?
பதில் :
ஒரு கிரகம் எந்த நிலையில் இருந்தாலும் அதன் பார்வை , பார்க்கும் இடத்திற்கு உண்டான நன்மை தீமை பலன்களை எவ்வித தங்கு தடையும் இன்றி செய்யும் , ஆக குரு
நீச்சம் பெற்றாலும் சரி உச்சம் பெற்றாலும் சரி , பார்க்கும் பார்வை சம்பந்த பட்ட பாவகத்திர்க்கு நன்மை செய்கிறதா தீமை செய்கிறதா என்பதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் .
கேள்வி :
வக்ரமான குருவின் பார்வைக்கு பலம் உண்டா? அஸ்தமனமான குருவின் பார்வைக்கு பலம் உண்டா? ஆறு,எட்டு,12 ல் மறைந்த குருவின் பார்வைக்கு பலம் உண்டா?
பதில் :
நிச்சயம் உண்டு இதில் எவ்வித குழப்பமும் இல்லை . மேலும் குரு பகவான் வகிரகம், அஸ்தமனம்,மறைவு எந்த நிலை பெற்றாலும் சரி அதன் பார்வை
பலத்தில் எவ்வித வேறுபாடும் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை .
கேள்வி :
லக்னத்திற்கு பாதகாதிபதியாக வரும் குருவின் பார்வையால் நன்மை உண்டா?
பதில் :
இந்த விஷயத்தை சுய ஜாதகம் கொண்டு நிர்ணயம் செய்வதே சால சிறந்தது ,
கேள்வி :
குருவின் 3பார்வைகளில் வித்யாசம் உண்டா?சமம் தானா?
பதில் :
குரு பகவானின் 3 விதமான பார்வையில் எவ்வித வேறுபாடும் இருக்க வாய்ப்பு
என்பது சிறிதும் இல்லை .
கேள்வி :எந்த அமைப்பால் குருவின் பார்வையால் ஜாதகனுக்கு தீமை ஏற்படும்?
பதில் :
ஒரு ஜாதகத்தில் கேந்திரங்களுக்கு அதிபதியாக வரும் குருபகவான் , கேந்திர
பலம் பெற்று தனது வீட்டை தானே பார்வை செய்யும்பொழுது ஜாதகர் அடையும் இன்னல்களுக்கு
ஒரு அளவே இருக்காது , இந்த பலன் கோட்சார குருபகவானுக்கும் பொருந்தும் . ஆக குரு
பகவானின் பார்வையும் தீமை செய்யும் என்பதை ஜோதிடதீபம் இந்த பதிவின் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்த
விரும்புகிறது .
G.V.Manikanda Sharma
neelamatrimony
24-11-2012
No comments:
Post a Comment