G.V. மணிகண்ட ஷர்ம ஸ்ரீ வித்யா உபாசகர், Diploma
in Astrology
செல்:- +91 9444226039 - 9962225358
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஸ்ரீ வித்யா
பீடம்
1/157, ஜெ. ஜெ. நகர், முகப்பேர்
கிழக்கு, சென்னை - 600 037
ஜோதிடம், புரோகிதம், எண் கணிதம், ராசி, ரத்தினம் பார்க்க அணுகவும்
பெயர்
:............................................... தேதி:- 04 - 02 - 2010
காசி (வாரணாசி) யாத்திரை
ராமேஸ்வரம் சேதுயாத்திரை
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகாபுரி
த்வாராவதி சைவ ஸப்தைதே மோக்ஷதாயகர்: !!
ஆஸ்திக
மஹா ஜனங்களே,
மனித ஜன்மம் துர்லபம்.
அதிலும் ப்ராமண ஜன்மா சிறந்தது. இந்த ஜன்மாவை
அடைந்த நாம், நமக்குரிய கர்மாக்களை
சரியாகச் செய்ய வேண்டும்.
அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா - புரித்வாராகா என்ற ஏழு புண்ணிய க்ஷேத்திரங்கள். அதில் காசி
என்பது மிக முக்கியமான க்ஷேத்ரம். இது
மஹாப்ரளய காலத்தில் கூட அழியாதது என்று காசி காண்டம் சொல்கிறது. காசியில்
எந்த தர்மகார்யங்கள், பூஜைகள், பித்ருகார்யங்கள் செய்தாலும் அதிகபலனைக் கொடுக்கக் கூடிய க்ஷேத்திரம். முக்கியமான பித்ரு கார்யங்கள் செய்தால்
பித்ருக்களுக்கு மோக்ஷம் கிடைத்து
பித்ருகளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். கங்காஸ்நானம் செய்வதால்
நம் பாவங்கள் அனைத்தும் போய் விடும்
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ப்ரதி வருஷம் ஐப்பசி மாதம் தீபாவளியன்று காசியில் கங்கா ஸ்நானம்
செய்து. தங்க அன்ன பூரணி லட்டுத் தேர் தரிசனம் செய்து, காசி விஸ்வநாதர் விசாலாக்ஷியை வணங்கி வருவது மிகவும் உன்னத பலன் தரும்.
காசிக்கு நிகரான ராமேஸ்வரத்திலும்
தீர்த்த ஸ்நானங்கள், தர்ப்பணங்கள் பித்ரு கர்மாக்கள்
செய்து ராமநாத ஸ்வாமி தரிசனம்
செய்து சகல பாவங்களில்
இருந்து விடுப்பட்டு பித்ருகளை
மோட்சம் அடையசெய்து, நமக்கு ஏற்பட்ட
ஸர்ப்ப தோஷம் கிரக பீடை ஸ்தீரி,
கோ, பித்ரு, தேவ, சாபத்திலிருந்து விடுபட்டு நாமும்
மோட்சம் அடையலாம்.
கணபதி, நவக்கிரக
ஹோமங்கள், கிரஹப்பிரவேசம், ஸ்ரீ மஹா லக்ஷ்மி,
சுதர்ஸன ஹோமம் ருதுசாந்தி, நாமகரணம், மற்றும் அனைத்து விதமான பூஜை சுபகாரியங்கள்,
ஜாதகம் பார்க்க, திருமணப்பொருத்தம் பார்க்கப்படும் ஜாதகம் கணித்து தரப்படும். நாக, செவ்வாய், ராகு-கேது,
தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.
பாரத தேச புண்ணிய யாத்திரை
இந்த பாரதபுண்ய பூமியில் பலபிறவிகளில்
செய்த புண்ய பலனாக மானிடப் பிறவி கிடைத்திருக்கிறது. கிடைத்த இப்பிறப்பு
பயனுள்ளதாக இருக்க வேண்டும். இவ்வுலகில் புகழுடன் சுகமடைந்து மேலுலகிலும் நல்ல சௌக்கியத்துடன் வாழவேண்டும். அதற்கு
அனேக விதமான உபாயங்கள் சாஸ்திரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மங்களை
அனுஷ்டிப்பதால் ஐஹி காமுஷ்மிக
ஸூகங்களை அனுபவித்து பிறகு இந்த லோகத்தில் அனுபவிக்க
வேண்டிய பாக்கி உள்ள, பாவ, புண்ய கர்மங்களுடைய பலன்களை அனுபவிப்பதற்காக மஹனீயர்களுடைய வம்சங்களில்
பிறந்த நல்ல அழகு,
நன்னடத்தை, புத்திசாலித்தனம், தனகனக வாஹனாதி ஸம்பத்துகள், நல்ல காரியங்களில் ஈடுபாடு
போன்ற அனேக நன்மைகளை அடைகிறார்கள் என்று ஆபஸ்தம்ப மஹரிஷி கூறுகிறார்.
யாகங்கள் செய்வது, குளம் வெட்டுவது,
அன்னசத்திரம் கட்டுவது, கோவில்
நிர்மாணம் செய்வது, இந்த மாதிரியான
அனேக தர்மங்களில், தீர்த்த யாத்திரையை முக்கிய தர்மமாக சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.
கலியுகத்தில் தீர்த்த யாத்திரை முக்ய தர்மமாகும். அந்த தீர்த்த யாத்திரையை எப்படி செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
பாரததேசத்தில் (க்ஷேத்ரங்கள்) மோக்ஷ பலத்தை கொடுக்க வல்லமை உள்ள நகரங்கள்.
அயோத்யா- வடமதுரை- ஹரித்வாரம்- வாரணாஸி- காஞ்சி- அவந்திகா- துவாரகை- என்பதாகும். இவற்றுள் காசி முக்கிய மோக்ஷ புரி என்று கூறப்படுகிறது. விவாஹ காலங்களில் மாப்பிள்ளை விரதஸமாவர்த்தனை செய்துகொண்டு பரதேசக்கோலம் கிளம்பும் பொழுது பெண்ணுடைய
தகப்பனார் “என் பெண்ணை தங்களுக்கு கல்யாணம் செய்து கொடுக்கிறேன் காசியாத்திரை செல்லவேண்டாம். விவாஹம் செய்து கொண்டு
தர்மானுஷ்டானங்கள் செய்யவும்’’ என்று கூறுகிறார். இந்த இடத்தில் மற்ற க்ஷேத்ரங்களைக் குறிப்பிடவில்லை.
இதனால் காசியாத்திரை முக்கியமெனக் கருதப்படுகிறது. காசிக்கு வாரணாஸி என்று மற்றொரு பெயரும் கூறப்படுகிறது.
காசி க்ஷேத்ரம் மூவுலங்களுக்குள்
மிகச் சிறந்த புண்யஸ்தலமாக விளங்குகிறது. இது மனுஷ்ய லோகத்தை காட்டிலும் வெளியில் ஆகாசத்தில்
இருக்கிறது. காசி க்ஷேத்ரத்திற்கு ஐந்து கிலோ
மீட்டர் தூரத்திலேயே ப்ரம்மஹத்யாதி பாபங்கள் நெருங்குவது இல்லை. காசி க்ஷேத்ரத்தில் 28 கோடி சிவ லிங்கங்கள் பிரகாசிக்கின்றன.
காசியில மரணம் ஏற்படுவது
ரொம்ப உயர்ந்தது. நூற்றுக்கணக்கான ஜன்மாக்களில் த்யானம் முதலிய ஸத்கார்யங்களில் சம்பந்தப்பட்டவன் மோக்ஷ த்தை
அடைகிறானோ இல்லையோ, (சந்தேகம்) ஆனால்
காசியில் மரணத்தை அடைந்த காரணத்தால் ஓரே ஜன்மாவில் மோக்ஷத்தை அடைவான் என்பது உறுதி
என்று அறியவும்.
காசியில் மரணமடைந்தவர்களை தூஷணம்
செய்பவர்கள் அவனுடைய பாவங்களை அடைகிறார்கள். காசியில் மரணமடைந்தவர்களை புகழ்பவர் புண்யங்களை அடைகிறார்கள். பிறகு மோக்ஷத்தையும் அடைகிறார்கள். இவ்வுலகிலேயே ஜீவன் முக்தி நிலையையும்
அடைகிறார்கள் பலபுண்ய ஆத்மாக்கள். இந்த க்ஷேத்ரத்தில்
தென்பாகத்தில் அஸிநதியும் வடபாகத்தில்
வரணாநதியும் எல்லை போல் அமைந்து கங்காநதியில்
ஸங்கமமாகிறது. ஆகையால் இந்த இரண்டு ஆறுகளுக்கும்
இடையில் மத்தியில் விளங்கும் காசி க்ஷேத்ரத்திற்கு வாரணாஸி என்ற பெயர் ஏற்பட்டது.
புண்யகாலங்களில் புண்ணியநதிகளில்
ஸ்நானம் செய்து தேவதைகளை பூஜை செய்ய வேண்டும். முடிந்த அளவு தானம் செய்வது, இறைவன் புகழ் பாடுதல்,
அவற்றைக் கேட்டல், நல்லோர் சேர்க்கை, பாவத்தைக் கண்டு பயம், சிவ நாமஜபம், போன்ற
ஆத்ம குணங்களை வளர்த்துக்
கொண்டு காசியில் வசிக்க
வேண்டும். இப்படி இல்லாமல் மனம்போல் காசியில்
வசித்தால் அதிகமான பைரவருடை
தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
காசியில் கங்கா ஸ்நானம் செய்தவனுக்கு பத்து அச்வமேதயாகம் செய்த பலன் ஏற்படுகிறது.
ஆகையால் கங்கா ஸ்நானம் உயர்ந்தது. ஆகவே காசியில் வசிப்பவர்கள்
பாவம் செய்யாமல் இருந்தால் உயந்த பதவியான சொர்க்கம் அடைவார்கள்.
காசியில் செய்ய வேண்டிய புண்ய கார்யங்கள்
வேதா த்யானம் செய்த பிராமணனிடத்தில் கொஞ்சம் திரவியத்தை தானம் செய்தாலும் காசியில்
செய்யும் தானத்தால் நல்லகதியை அடைகிறான்.
அவனுடைய ஆத்மா அக்னிபோல் பிரகாசிக்கிறது.
காசியில் உபவாஸம் இருந்து
பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்து
அவர்களை தக்ஷிணாதானம் முதலியவைகளால் பூஜிக்கிறவன் ஸெளத்ராமணி
யாகம் செய்த பலத்தை
அடைகிறான். இதில் சந்தேகமில்லை.
வேறு க்ஷேத்ரங்களில் அனேக பிராமணர்களுக்கு
போஜனம் செய்வித்து எந்த பலனை அடைகிறானோ அந்த பலனை சந்தோஷத்துடன் காசியில்
ஓரு பிராமணனுக்குப் போஜனம்
செய்வித்தால் அடையலாம்.
காசியில் அவசியம் பித்ரு
கார்யங்களை செய்ய வேண்டும்
காசியில் அவசியம் சிரார்த்தம்
செய்ய வேண்டும். பிண்டதானம்
பித்ருக்களை உத்தேசித்து முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவை செய்தவர்கள் பித்ருக்களுக்கு ஸத்புத்திரர்கள் என்று மதிக்கப்படுகிறாகள். காசியில் செய்யும் சிரார்த்தம்,
பிண்டதானம் பித்ருக்களுக்கு விசேஷ சுகத்தைக் கொடுக்கிறது என்று அறியவும்.
காசியில் தரிசனம் செய்து பூஜிக்க வேண்டிய தேவதைகள்
விஸ்வநாதர் - பிந்துமாதவர் - டுண்டி கணபதி – தண்டபாணியான யக்ஷபதி. - பைரவர்
- காசிதேவதா - குஹை கங்கா - பார்வதி - மணிகர்ணிகா - இந்த தேவர்களை தரிசனம் செய்து பூஜிக்க வேண்டும். இன்னும் அனேக இடங்கள் தரிசிக்க வேண்டியது
இருக்கின்றன. (மேலும் தரிசிக்க
வேண்டிய இடங்கள் தெரிந்தால்
கூறவும்) இருந்தாலும் குறிப்பிட்ட தேவதைகள்
முக்கியமானது என்று அறியவும்.
காசி மாஹாத்ம்யம்
கேதாரேச்வர ஸந்நிதியில் ஓரு மாஹா தீர்த்தம் இருந்தது. அந்தத் தீர்த்தத்தில்
ஸ்நானம் செய்யப் பார்வதி தேவி வந்தாள். ஸ்நானம் செய்யும் பொழுது அம்பாளுடைய
காதணியிலிருந்து ஓரு ரத்னமணி வீழ்ந்தது. ஆகையால் கேதார கட்டத்திற்கு ஆதிமணி கர்ணிகை
என்ற பெயர் ஏற்பட்டது. ஆக காசி க்ஷேத்ரத்தில் இரண்டு மணிகர்ணிகைகள் இருக்கின்றன.
ஒன்று பழமையானது. அது கேதார்கட்டத்தில் உள்ள மணிகர்ணிகை மற்றொன்று விஸ்வேச்வர ஸந்நிதியில்
புதியது. அது நவீன மணிகர்ணிகை. இரண்டும் பக்தர்களுக்கு விசேஷ சுகபலன்களைக் கொடுக்கக்
கூடியது.
காசி க்ஷேத்ரத்தில் செய்ய வேண்டிய
வைதிக காரியங்கள்
முதல் நாள்: அனுக்கை
ஸங்கல்பம் ப்ராஜாத்ய க்ருச்சரம் பலதானம்.
ராமேச்வர க்ஷேத்திரத்தில் ஸ்நானம் செய்து ம்ருத்திகை (மணல்)
எடுத்துக் கொண்டு காசி யாத்திரை செய்ய வேண்டும். மணிகர்ணிகா வக்ர தீர்த்த ஸ்நானம், ஸ்நான ஸாத்குண்ய தக்ஷிணாதானம்
செய்யவும்.
இரண்டாம் நாள்: தீர்த்த ச்ரார்த்தம், தசதானம், தஞ்சதானம்,
இதரதானங்கள்
முன்றாவது நாள்: பஞ்ச
தீர்த்த ஸ்நானம், சிரார்த்தம்,
பிண்டதானம்.
நான்காவது நாள்: நித்ய யாத்திரை, வியாஸ காசி தரிசனம்.
ஐந்தாவது நாள்: கங்கா பூஜை, தம்பதி
பூஜை
காலபைரவ ஸமாராதனை விஸ்வநாத் அன்ன பூரணி- விசாலாக்ஷி அபிஷேகம், அர்ச்சனை ஆசார்ய பிருஹஸ்பதி
(குரு) ஸம்பாவானை. இவை காசியில் அவசியம் செய்ய வேண்டியவை.
கலி காலமானது ரொம்பவும்
கடுமையானது. இந்தக் கலியில் நியாயம் கிடையாது.
தர்மம் கெட்டுப் போன காலத்தில் இறைவனை நேரில் யாரால் பார்க்க முடியும். ஆகையால் காசி க்ஷேத்திரத்தை சரணாகதி அடையுங்கள்.
காசி விஸ்வநாதன் காப்பாற்றுவான். நிச்சயம்
என்று காசி மாஹாத்ம்யம் கூறுகிறது. சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. காசியை காட்டிலும் உயர்ந்த
க்ஷேத்ரம் கிடையாது. போய்பார்த்தால் அனுபவத்தில்
புலப்படும். (மேற்படி காசி புராணம்
முழுவதும் தெரிந்தவர்கள் அவசியம் எழுதி அனுப்பவும்.)
இயற்கை எய்தியவருடைய அஸ்திகளை
(எலும்புகளை) ஆட்டுத்தோல். கம்பளம்
அல்லது பட்டுத்துணி இவற்றால் இறுக்கக்கட்டி
தர்ப்பைக் கயிறாலும் கட்டி அகமர்ஷண ஸூக்தத்தால்
ஜலம், பால் கொண்டு அபிஷேகம் செய்து கங்கையில் அஸ்திகளைக் கரைக்க வேண்டும்.
எவ்வளவு வருடங்கள் கங்கையில் அஸ்திகள் இருக்கின்றனவோ அவ்வளவு காலம் பித்ருக்கள் புண்ய
உலகங்களில் வசிப்பர்கள் என்பது கருத்து.
அஸ்தி நிஷேப விஷயமாக காசி காண்டத்தில் ஒரு கதை தெரிவிக்கப்படுகிறது. கலிங்க
தேசத்தில் வாஹீகன் என்ற அந்தணன் இருந்தான்.
வேதம் படிக்கவில்லை. ஆசாரம்
கிடையாது. உப்பு- எண்ணை,
போன்ற விற்கக் கூடாதவற்றை விற்று
வாழ்ந்து கொண்டிருந்தான். சாஸ்திரத்தில் செய்யாதே என்று மறுக்கப்பட்ட
செயல்களைச் செய்வான். பரமபாபியானவன்
அவன் காட்டிற்கு சென்றிருந்த பொழுது ஒரு சமயம்
புலியால் அடிக்கப்பட்டு இறந்தான். அவன் மாமிசத்தை கழுகுகள்
தின்றுவிட்டு கால் கணுக்கால்
எலும்பை அலகினால் கொத்தி
எடுத்துக் சென்றது. காசியில் கங்கையை
கடந்து செல்லும் பொழுது
வேறு கழுகுகளுக்கும் இதற்கும்
சண்டை ஏற்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில் வாஹீகன் தன் தண்டனை அனுபவித்து
கொண்டிருந்தான். அச்சமயம் கங்கையில்
எலும்பு விழுந்ததால் பரிஹாரம்
ஆனபடியால் தர்மராஜன் சித்ரகுப்தனைக் கூப்பிட்டு, வாஹீகனுடைய எலும்பு
கங்கையில் வீழ்ந்தது. ஆகையால்
இவனுடைய பாவங்கள ; விலகிவிட்டன. இவனை விமானத்தில்
ஏற்றி சுவர்க்கத்திற்கு அனுப்புவாயாக ” என்று உத்தரவு செய்தார். இந்தக் கதையிலிருந்து காசியில்
கங்கையில் தெரிந்தோ அல்லது
தெரியாமலோ அஸ்தி போடப்பட்டால்
பாவம் விலகுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆசாரத்துடன் விஷயம் தெரிந்து சாத்திரப்படி
பிள்ளைகளும் மற்றோரும் தாய், தந்தையரின் அஸ்தியைக் கரைத்தால் அந்த ஜீவர்களுக்கு புண்யலோகம்
கிடைக்கும் என்று சொல்லவும் வேண்டும்.
கங்கை வெளுப்பு நிறமாக
இருப்பதால் ஸிதாசப்தத்தால் கங்கை குறிப்பிடப்படுகிறது. யமுனை கருப்பாக
பிரகாசிக்கிறாள். அஸிதா எனப்படும்.
இந்த இரண்டு நதி எங்கு ஸங்கமம்
ஆகிறதோ அந்த சங்கம தீர்த்தத்தில்
ஸ்நானம் செய்தவன் தேவலோகத்தை
அடைகிறான். எந்த தீரர்கள்
சரீரத்தை அந்த சங்கம தீர்த்தத்தில் தியாகம் செய்கிறார்களோ அவர்கள்
மோக்ஷத்தை அடைகிறார்கள். அந்தர்வாஹினியாக
ஸரஸ்வதி நதியும் கங்கா, யமுனாவுடன் சங்கமமாகிறது
என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஆகையால் இந்த இடத்திற்கு த்ரிவேணீ என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது.
பாரதத்தில் பாவம் செய்தவர்கள்
பாவத்தை போக்கி கொள்ள வேண்டும் என்று
நினைப்பவர்கள் பிரயாணம் செல்ல வேண்டும். எல்லாப்
பாவங்களும் ப்ரயாகையை தரிசித்தால்
விலகிவிடும். ப்ரயாகை போகவேண்டும்
என்ற எண்ணம் ஏற்பட்டல், பிறர்
தடுத்தாலும் அந்த எண்ணத்தை
மாற்றி கொள்ள வேண்டாம்.
ப்ரயாணம் சென்றால் கண்டிப்பாக எல்லா
நலனும் உண்டாகும் என்று மனப்பூர்வமாக இருக்க வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் முடி இறக்குவது கூடாது. ஆகையால் கூந்தலை மூன்று பாகங்களாகப் பிரித்து பின்னல் பின்னிப் பூச்சூட வேண்டும்.
இதற்கு திரிவேணீ என்பதாகும். அந்த பின்னலின்
நுனிபாகத்தில் இரண்டு அங்குலம் துண்டித்து கொள்ள வேண்டும் என்பது முறையாகும்.
தற்போது மொட்டை அடித்துக் கொள்கிறார்கள்.
ஸ்திரீகள் சேதானம் செய்யும் முறையை குறிப்பிடுகிறார்கள். தலை மயிரை
விரித்து கொண்டு கேசச்சேதனம் செய்வது
முறையாகாது. பின்னிப் பூச்சூட்டிக் கொண்டு
கணவனை நமஸ்கரித்து அவருடைய அனுமதியின் பேரில் வேணீச் சேதானம்
செய்து கொள்ள வேண்டும்.
த்ரிவேணி க்ஷேத்திரமான ப்ரயாகையில். நான் வேணிதானம் செய்கிறேன். என்னுடைய
பாபங்கள் விலகட்டும், ஜன்மாந்திரங்களிலும்
எனக்கு எல்லா நலங்களும்
கிட்டட்டும் என்று மந்திரம் சொல்லி மங்கலப்
பொருட்களை ஒரு பாத்திரத்தில் வைத்து நிறைய
தட்சணை கொடுத்து வேணியுடன் (பின்னல்
துண்டு) தானம் செய்ய வேண்டும். மேல் விபரங்களை அங்குள்ள
வேதியரிடம் தெரிந்து கொள்ளவும்.
ப்ரயாகை க்ஷேத்ரத்தில் செய்யப்பட்ட கன்யாதானம், பூமிதானம், சுவர்ணதானம் முதலிய தானங்கள் குறைவாக
இருந்தாலும் ஷேத்ர மஹிமையால்
எல்லா உலகையும் திருப்தி
செய்ய கூடிய புண்ணியம்
கிடைக்கும். எந்த புண்ணியவான் ப்ரயாகையில்
அன்னதானம் செய்கிறானோ அவன் கோடி அந்தணருக்கு உணவளித்தப் புண்ணியத்தை அடைகிறான். தில ஹோமம்
செய்தால் கோடி ஹோமம் செய்த புண்ணியம்
கிடைக்கிறது. கங்கா, யமுனா சேரும்
புண்ய தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்வது ஏழு
தலை முறையில் உள்ள பித்ருக்களை திருப்தி செய்வித்து காப்பாற்று கிறார்கள். காரணம் ப்ரயாகைக்கு மஹாதேவர்
அதிபதியாவர். அவர் ஜகத்திற்கு நியந்தாவாக
சாஸ்திரம் கூறுகிறது. ஆகையால் யார் எந்த தர்மத்தை செய்தாலும் அதைப் பெருக்கி நிறைய
பலத்தை கொடுக்கிறார் என்று அறியவும்.
ப்ரயாகை க்ஷேத்ரத்தை தரிசித்துப்
பூஜிக்க வேண்டியவர்களை
குறிப்பிடுகிறோம். த்ரிவேணீ கங்கா, யமுனா, ஸரஸ்வதி ழூன்று
தீர்த்தங்களும் சேர்ந்த தேவதை, மாதவர், ஸோமன், பார்வதியுடன் கூடிய பரமேச்வரன், பரத்வாஜ மஹரிஷி, வாஸூகி என்ற நாகதேவதை, அக்ஷய வடம், ஆல வ்ருக்ஷம் ஸ்தல வ்ருக்ஷம், ஆதிசேஷன், தீர்த்த ராஜாவான ப்ரயாகை தேவதை, இவர்களை ப்ரயாகை க்ஷேத்ரம் போனவர்கள் தரிசித்து பூஜிக்க வேண்டும். இந்த மாதிரி அனேக விஷயங்கள் புராணங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.
கயா மஹாத்ம்யம்
கயா க்ஷேத்ரமானது பித்ருக்களுடைய
ஷேமங்களை உத்தேசித்து பகவானால் சிருஷ்டிக்
கப்பட்ட க்ஷேத்ரமாகும். மாதாபிதா ஜீவிக்கும்போழுது அவர்களை
ரக்ஷிப்பது. அவர்களால்
தெரிவிக்கப்பட்ட தர்ம கார்யங்களை
நடத்திக் கொடுப்பது. போன்றவற்றைச் செய்ய வேண்டும். பிறகு அவர்கள் இறந்த பிறகு
வருடா வருடம் நிறைய அன்னம் அளித்து தக்ஷிணை கொடுத்து
ச்ரார்த்தம் செய்த பிறகு யாகம் செய்து
அனேக பிராமணர்களுக்துப் போஜனம் செய்விப்பது. என்பதாகும்
இதற்கு இஷ்டபங்க்தி என்று கூறுகிறார்கள். மூன்றாவதாகச் சொல்லப்படும் காரியம் கயா க்ஷேத்ரம் சென்று
பித்ருக்களை உத்தேசித்து சிரார்த்தம், பிண்டதானம் அவை செய்ய வேண்டும். இந்த மூன்றும் செய்தால் முன்னோர்கள்
புத் என்ற நகரத்திலிருந்து கரையேறுவார்கள். எனவேதான் மகனை புத்திரன் என்கிறோம்
என்றெல்லாம் கயாயின் பெருமை
கூறப்படுகிறது.
கயாசுரன் தன் சரீரத்தை எல்லாத் தீர்த்தங்களை காட்டிலும் பவித்ரமாகச் செய்யத்தவம் செய்வதாகச் சொன்னான். பகவான் வாஸூதேவன் அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தார்
. இந்த விஷயத்தை கேட்டு ஜீவர்கள் எல்லோரும் கயாஸீரனுடைய சரீரத்தை ஸ்பர்சித்து (தொட்டு)
பாவத்தை போக்கிக் கொண்டார்கள். யமலோகம்
காலியகிவிட்டது. யமன் முதலிய தேவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இதை பிரும்மாவிடம்
முறையிட்டார்கள் பெரிய பாவங்கள் செய்தவர்கள் கயாஸூரனை
தொட்டுவிட்டு பாவத்தை போக்கிக்கொள்ளுகிறார்கள். பிராயச்சித்த சாஸ்திரங்களுக்கு தேவையின்றிப் போய்விட்டது
என்றும் சொன்னார்கள். பிரம்மா விஷ்ணுவிடம் தெரிவித்தார். பகவான் ‘பிரம்மாவே நீர் கயா
ஸூரனை அணுகி உன் உடலை
எனக்கு அர்ப்பணம்
செய்” என்று கேட்க வேண்டும் என்று சொன்னார்.
‘பிரம்மா, பகரானுடைய அனுக்ரஹத்தால் உனக்கு
பரம பவித்ரமான உடல் ஏற்பட்டிருக்கிறது.
அதை எனக்கு யக்ஞம் (தானம்) செய்ய ஸ்தலமாக கொடுக்க வேண்டும்” என்று கேட்டார்.
கோலாஹல பருவத்தில் நிருதி
முலையில் வடக்கில் தலைவைத்துக்
கொண்டு தெற்கு திக்கில் பாதங்களை நீட்டி
படுத்து கொண்டிருந்தான். பிறகு பிரம்மா அவன் சரீரத்தில் யக்ஞம்
செய்தார். (தானம் பெற்றார்) அந்த சமயம்
கயாசுரனுடைய தலை அசைந்தது.
அதன் சலனத்தை அடக்க எமனை கூப்பிட்டு
கயாஸூரனின் தலையில் இந்த சிலையை வைக்கவும் என்று சொன்னார் அப்படி சிலை வைத்தும்
கூட தலையினுடைய சலனத்தை (அசைவு) அடக்க
முடியவில்லை. யக்ஞம் செய்வது (தானம் பெற)
சிரமமாக ஆகிவிட்டது. எல்லாத் தேவர்களாலும கயா அசுரனுடைய
தலை அசைவதைக் கட்டுபடுத்த முடியவில்லை. பிறகு விஷ்ணு தன்னுடைய கதாதர மூர்த்தத்தை (தோடு) அனுப்பினார். அந்த விக்ரஹத்தை சிரஸ்ஸில் பிரதிஷ்டை செய்தார்கள். உடனே கயாஸூரனுடைய தலையில் சலனம் (அசைவு) அடங்கிற்று.
யக்ஞம் பூர்ணமாக (நன்றாக)
நடந்தது. மாஹாவிஷ்ணுவின் ஆனுக்ஞையால் துர்கா
ஸரஸ்வதீ லக்ஷிமீ எல்லோரும் வந்தார்கள். கயாஸூரனுடைய பிரார்த்தனையால்
இந்த க்ஷேத்ரத்திற்கு கயா என்று பெயர் ஏற்பட்டு
இந்த க்ஷேத்ரத்தில் சிரார்த்தம் செய்தால் பித்ருக்களுக்கு விசேஷ திருப்தி ஏற்படுகிறது. பரமபாபியாக
இருந்து மரித்தவனை உத்தேசித்து சிரார்த்தம் செய்தால் கூட
பாவம் விலகிப் புண்யலோக பலத்தை அடைகிறான். கயாஸூரன்
பெரிய பாக்யசாலியாகக் கருதப்படுகிறான்.
இந்த கயா க்ஷேத்ரம் ஐந்து க்ரோச தூரம் உள்ளது. கயாஸூரனுடைய தலைப்பகுதி உள்ள இடம்
ஒருக்ரோச தூரம் உள்ளது. கயா க்ஷேத்ரத்தின் நடுவில்
சகலதீர்த்தங்களும் இருக்கின்றன. மூன்று உலகங்களிலும்
எவ்வளவு தீர்த்தங்கள் உள்ளனவோ அவ்வளவு
தீர்த்தங்களும் இருகின்றன என்பது
உண்மை.
பரம புண்ய க்ஷேத்ரமான
கயாவை அடைந்து மகன் கண்டிப்பாக
ச்ரார்த்தம், பிண்டதானம், பொன்றவற்றை ச்ரத்தையுடம் செய்யவேண்டும். கயாவை
அடைந்து பிண்டதானம் செய்தால்
பித்ருக்களுடைய கடன் (ருணம்) மானிடர்க்கு நீங்குகிறது. கயா செல்வதற்குச்
சக்தி உள்ளவன் கயா க்ஷேத்ரம் செல்லாமல் பித்ருக்களை
உத்தேசித்து எந்த கார்யங்கள் செய்தாலும் பித்ருக்களுக்கு திருப்தி ஏற்படுவது இல்லை.
இந்த கயா க்ஷேத்திரத்தில் விஷ்ணுபாதம்,
ருத்ரபாதம், பிரம்மபாதம், கச்யபபாதம், ஆகிய ஐந்தும் அக்னிதேவர்களுடைய பாதங்கள். இந்திரபாதம்
மஹரிஷியினுடைய பாதம். இந்த மாதிரி அனேக தேவர்களுடைய பாதங்கள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமாக
விஷ்ணு பாதத்தில் பிண்டம் போடுகிறார்கள்.
பீஷ்மர் விஷ்ணு பாதத்தில் ச்ரார்த்தம் செய்து விட்டு பிண்டதானத்தை உத்தேசித்து பித்ருக்கள்
மந்திரத்தினால் ஆவாஹனம் செய்தார். பீஷ்மருடைய
பிதாவான சந்தனு மஹாராஜாவானர் நேரில்
கையிலேயே பிண்டத்தை வாங்கிக்கொள்வதற்கு இரண்டு
கைகளையும் நீட்டினார். ஆனால் பீஷ்மர் பிதாவினுடைய கைகளை விலக்கி விஷ்ணு
பாதத்தில் பிண்டப்ரதானம் செய்தார்.
சந்தனுமஹாராஜா சந்தோஷப்பட்டார். பூமியில்
பிண்டதானம் கொடுக்கச் சொல்லியிருக்கிறது.
‘பீஷ்மா நீ அதன்படி விஷ்ணு பாதத்தில் பிண்டதானம்
செய்தாய். ஆகையால் சாஸ்த்திரத்தில் தீர்மானபுத்தி உள்ளவன். உனக்கு திவ்யக்ஞானம் ஏற்படட்டும். கடைசி
காலத்தில் விஷ்ணு
உனக்குத் துணையாக இருப்பார்.”
என்று ஆசீர்வதித்தார்.
பத்மபுராணத்தில் ஸ்ரீராமன் சீதையுடன் கயா க்ஷேத்ரம் சென்று ச்ரார்த்தம் (திதி) செய்தார். என்று கூறப்படுகிறது.
ஸ்ரீராமன் ச்ரத்தையுடன் ச்ரார்த்தம்
செய்யும்பொழுது (சிரத்தையுடன் செய்யப்படுவதாலேயே
அதற்கு சிரார்த்தம் என்ற பெயர்) போஜனம் செய்யும்
பிராமண சரீரத்தில் தசரதமஹாராஜா. அவருடைய
பிதா அஜமஹாராஜா அவருடைய பிதா ரகுமஹாராஜா
இவர்களை சீதாதேவி பார்த்தாள்.
மரியாதை நிமித்தமாக ராமனை விட்டு விலகி நின்றாள். பிறகு ஸ்ரீராமன் ஏன் விலகி நிற்கிறாய் என்று கேட்கும் பொழுது நாதா போஜனம் செய்யும்
பிராமணர்களுடைய சரீரத்தில் தங்களுடைய
பிதா, பிதாமஹர், ப்ரபிதாமாஹர். (தந்தை, பாட்டன்,
முப்பாட்டன்) இவர்களை பார்த்தேன் அதனால் விலகி நின்று கொண்டிருந்தேன் என்று சொன்னாள். ஆகையால்
ஸ்ரீராமச்சந்திரபிரபு கயாவில் ச்ரார்த்தம்
செய்தார் என்று தெரிகிறது. (திதியின் முக்கியம் அறிந்து அதன்
படி முன்னோர்களுக்கு தன் வசதிக்கேற்ற தான தருமம் செய்து முன்னோர்களுடைய ஆசீர்வாதம்
பெறுங்கள்.)
பல்குனீ நதி தீர்த்தம் விஷ்ணுபாத சமீபத்தில் ஓடுகிறது. அந்த தீர்த்தம்
பகவத் விஸ்வரூபமானது. அந்த தீர்த்தத்தில் ஸ்நானம்
செய்து தர்ப்பணம் ச்ராத்தம் செய்தால்
பித்ருக்களுக்கு விஷ்ணு பரமபதம் கிடைக்குமென்பது பொருள். கயா க்ஷேத்ரத்தில் விஷ்ணு
பாதச்ரார்த்தம் அக்ஷய வடச்ரார்த்தம். பல்குனீ
தீர்த்தம் ச்ரார்த்தம் ஆக மூன்று ச்ரார்த்தங்கள் மிக முக்கியமானது. இன்னும் அனேக இடங்களில்
வசதியுள்ளவர்கள் ச்ரார்த்தம் செய்யலாம்.
கயா க்ஷேத்ரவாஸிகளான பிராமணர்களை மட்டும் சிரார்தத்தில் பித்ருக்களாக வரித்து (நினைத்து)
போஜனம் செய்விக்கவேண்டும். இவர்கள் பரமாத்மாவினால் அந்த க்ஷேத்ரத்தில்
உண்டாக்கப் பட்டவர்கள். ஆகையால் அவர்கள் தங்களை விஷ்ணு புத்திரர்கள் என்று சொல்வார்கள்.
அவர்கள் சந்தோஷப்பட்டால் பித்ருக்கள்
திருப்தி அடைவார்கள் என்பது பகவானுடைய ஸங்கல்பம். வேறு பிராமணர்களை அழைத்துச்
சென்று சிரார்த்தம் செய்கிறேன் என்பது கூடாது.
கயா க்ஷேத்ரத்தில் பிராமணர்களுககு வஸ்திரம்,
சந்தனம், புஷ்பம் இவற்றால்
பூஜை செய்து பிறகு சாஸ்த்திரங்களில் சொல்லப்பட்ட
பதினாறு (16வகை) தானங்கள்
செய்வது உத்தமம். கயா ச்ரார்த்தம் செய்த
பிறகு சம்ஸார வாழ்க்கையில் ஏற்படுகிற காம, க்ரோத, லோப மோஹங்களை தீர்மானமாக இதில் ஒன்றை
விலக்க வேண்டும். அதற்கு சாதனமாக ஒரு இலை, ஒரு பழம், ஒரு சாகம் (காறிகாய்) ஆகியவற்றை
விலக்குகிறார்கள். நம் தாய் தந்தை விடுத்த
இலை,காய்,பழம் பற்றித் தெரிந்து வைத்திருந்து நாமும் அவற்றையே விலக்கினால் பிறகு திவசம்
(திதி) செய்யும் போது அவற்றைச் சேர்க்காமல்
சமைக்க எளிதாக இருக்கும். இன்னும் அனேக விஷயங்கள் அங்கு உள்ளவர்களிடம் தெரிந்து கொள்ளவும்.
(இதை படிக்கும் அன்பர்களுக்கு மேற்கன்ட
முழு விபரம் அறிந்தவர்கள்
எழுதி அனுப்பவும்) சுருக்கமாக தர்மங்களை தெரிவித்தோம்.
காசி க்ஷேத்ரத்தில்
யாத்திரையை உத்தேசித்து தங்கி வைதிக காரியங்களை அனுஷ்டிக்க உகந்த இடங்கள்
1. ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி சங்கராசார்ய
ஸ்வாமிகள் சுகதேவர் மடம் (சங்கரமடம்), ஹநுமான்காட்.
2. ஜகத்குரு சிருங்கேரி சங்கராசார்யஸ்வாமிகள்
மடம் கேதார கட்டம்.
3. சுவாமிமலை விஸ்வனாத சாஸ்த்ரிகள் மடம்.
4. கல்லிடைக்குறிச்சி விஸ்வனாத வாத்யார்
மடம்
5. பாலக்காடு ராமக்ருஷ்ணவாத்யார் மடம்.
6. ராமகிருஷ்ண சாஸ்திரிகள் பஜனை மடம்.
7. அரியூர் சுப்ரமண்ய கனபாடிகள் மடம்.
8. சிவமடம் பிரயாகை வெங்கடேச
சாஸ்திரிகள் நடேச சாஸ்திரிகள் காட்ரேஜ்
கயாவில் யாத்திரையை உத்தேசித்து
தங்குமிடம்
நாராயணஜோஷீ
- கிருஷ்ணத்வாரகா கயா ராமப்ரஸாத் - லக்ஷ்மணப்ரஸாத் -
விஷ்ணு
பாதரோட் கயா.
ப்ரயாகையில் செய்ய வேண்டிய
வைதிக கார்யங்கள்:
1. மஹாஸங்கல்ப்பம்
2. வேணீ தானம்
3. த்ரிவேணீ சங்கம ஸ்நானம்
4. கங்கை எடுத்து கொள்வது
5. தீர்த்தச்ராத்தம்
6. கங்கா பூஜை
7. தம்பதி பூஜை
8. ஸமாராதனை
9. ஆசார்ய ஸம்பாவனை (தக்ஷிணை)
10. தேவாலய தரிசனங்கள்
காசி க்ஷேத்திரத்தில் செய்ய வேண்டிய வைதிக கார்யங்கள்.
1.
அனுக்கை 2.
கணபதி பூஜை 3. மஹாப்ராயச்த்த ஸங்கல்ப்பம் 4. நவக்ரஹ ப்ரீதி தானம் 5.
மணிகர்ணிகா ஸ்நானம். வபனம்
சக்ரதீர்த்த ஸ்நானம்
6. விச்வேச்வர, விசாலாக்ஷி, அன்ன பூரணி, பிந்துமாதவ தர்சனம் 7.
தீர்த்த ச்ரார்த்தம் ஹிரண்யருபமாயும்
பாவனருபமாயும் செய்யலாம் 8.
பஞ்ச கங்க தீர்த்தங்களில் ஸங்கல்பம்
ஸ்நானம்
ஹிரண்ய ச்ரார்த்தம் பிண்டதானம் திலதர்ப்பணம்.
9. கங்கா பூஜை
10. தம்பதி பூஜை
11. காலபைரவ சமாராதனை 12.
ஸ்தல
தேவாலய தரிசம்,
விஸ்வேச்வரருக்கு பால் அபிஷேகம்,
ஸப்தரிஷி பூஜை, விஸ்வேச்ரருடைய உச்சிக்கால தரிசனம், அர்த்தஜாம
பூஜை. 13.
வியாஸ தரிசனம். வியாஸ காசியில்
ராம் காட்டில்
மஹா ராஜதரிசனம் காசியில் எல்லாவிரதங்களுடைய உத்யாபனம்
முதலியவற்றைச் செய்வது முழுப் பலனைத் தரும். 14. ஆசார்ய ஸம்பாவனை. மேலும் அனேகவித பூஜைகள் செய்து அனேகவிதமான தானங்கள் போஜனம் செய்து
வந்தால் உன்னத பலன்தரும்.
கயா க்ஷேத்ரத்தில் செய்ய வேண்டிய வைதிக கார்யங்கள்.
1. ஸங்கல்பம்
2. பல்குனீ தீர்த்த ஸ்நானம். 3. பல்குனீ தீர்த்த ச்ரார்த்தம்,
நதிகரையில் பிண்டதானம். 4.
விஷ்ணு பாதச்ரார்த்தம், விஷ்ணு
பாதத்தில் பிண்டதானம். இரவில்
விஷ்ணு பாதத்திற்கு சந்தன அலங்காரம், துளசியினால் ஸஹஸ்ர நாமார்ச்சனை, தீபாராதனை.
5. அக்ஷைய வடச்ரார்த்தம். பிண்டதானம். 6. கயேச்வரீ கதாதரர், ஸாக்ஷிகோபாலர், அக்கரையில்
ஸீதாதேவி மூலமாக தசரதர் கையில் பிண்டம் வாங்கிக் கொள்வது ப்ரபிதாம ஹேச்வரர் ஈசானாதி
தேவதைகள் புத்தகயா. இவை பார்க்க வேண்டிய ஸ்தலங்கள். கயா பிராமணர்கள் திருப்தி
திருப்தி திருப்தி என்று சொன்ன பிறகு
காய், பழம், இலை இவற்றைத் தியாகம் செய்ய வேண்டும். முன்பு கூறியது போல் இவை ஓர் அடையாளமே. உட்கருத்து
என்னவென்றால் காசி சென்று வந்தவர் காம, குரோத,
லோப, மோஹம் இல்லாதவராகி அதாவது காமத்தை
ஒழித்து கோபத்தைக் கைவிட்டு பிறரைப் பற்றிப் புறம் (தூஷணை) பேசாது எப்பொருளை பற்றியும் ஆசையின்றியும் பிறருக்கு
முன்மாதியாக நடந்து கொள்ள வேண்டும். பின் 10 நாள்கள் தங்கி அஷ்டகயையில் 45 இடத்தில் ச்ரார்த்தங்கள் செய்ய வேண்டும். பிறகு ஆசார்ய ஸம்பாவனை
செய்ய வேண்டும். என்று சாஸ்திரத்தில்
குறிப்பிடுகின்றன.
அலஹாபாத்தில் செய்ய வேண்டியவை.
1.
அனுக்கை 2. கணபதி பூஜை
3. க்ரஹ ப்ரீதி தானம் 4.
வேணீ தானம்
5. த்ரிவேணீ ஸங்கம ஸ்நானம் 6.
ஹிரன்ய சிரார்த்தம்
7.
பிண்டப்ரதானம் 8.
க்ஷேத்ர பிண்ட தானம்
9.
தில தர்பணம் 10 ப்ருஹ்ம யக்ஞம்
11. வேணீ மாதவர் தரிசனம் 12.
வட வ்ருக்ஷ தரிசனம் 13. த்ரிவேணீ ஸங்கமத்தில் சுத்த கங்கை நீர் எடுத்துக் கொள்ளுதல்
ராமேஸ்வரத்தில்
செய்ய வேண்டியவை
1. அனுக்ஞை 2. ஸ்நான மஹா ஸங்கல்பம் 3. அக்னி தீர்த்த ஸ்நானம் 4.
22
புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் 5. ஹிரண்ய சிராத்தம் (அல்லது) பார்வண சிராத்தம்
6. பிண்டப்ரதானம் 7.
க்ஷேத்ரபிண்ட தானம்
8. தில தர்பணம் 9. ராமனாத ஸ்வாமி கோவிலில் தரிசனம் 10. நவபாஷாணம் தரிசனம் 11.
தர்பஸயனம் தரிசனம்
12. தனுஷ்கோடி தரிசனம்.
G.V. Manikanda Sharma Sri Vidhya Upasakar - Diploma in Astrology 1/267,J.J, Nagar, Mugappair
East - Chennai -
600 037
Cell: +91 9962225358
Prohitham,Horoscope,Numerology,Gemology E-mail:srividhya96balapeedam@gmail.com Website: www.sribalasrividhya.in
உரிமம் : G.M. NEELAVATHI, G.V.
MANIKANDA SHARMA 02
- 11 - 2012
கோ ஸம்ரக்ஷணம்
‘சதுஸ்ஸாகர பர்யந்தம் கோப்ராஹ்மணேப்யஸ்சுபம்
பவது”
என்று வேதங்களும் சாஸ்திரங்களும் ஆசீர்வதிக்கின்றன. மேலும் எந்ததேசத்தில்
வேதா தர்மத்தில் வாழும் ப்ராஹ்மணர்களும், பசுமாடுகளும் கௌரவிக்கப்பட்டு ஆரததிக்கப்படுமோ,
அந்த தேசம் தெய்வ அனுக்கிரஹம் பெற்ற தேசமாக கருதப்படுகிறது. மற்ற எந்த உயிரினத்திற்கும்
இல்லாத சிறப்பு பசுவிடத்தில் மட்டுமே உள்ளது. அதற்குக் காரணம்
‘‘கவாம் அங்கேஷு திஷ்டந்தி புவனானி
சதுர்தச”
என்ற மந்திரத்தில் அனைத்து தேவதைகளும் 14 உலகங்களும் அடக்கம் என்று வேதங்கள்
கூறுகின்றன. அது நிதர்சனமான உண்மையாகும். அதற்கு கண்கூடான காரணம் விஞ்ஞானத்தாலும் ஆயுர்வேத
மருத்துவரீத்யாலும், அங்கீகரிக்கப்பட்டது ஒன்றே போதுமானது. அப்படி அங்கீகரிக்க என்ன
காரணம் என்றால் பசு மாட்டிலிருந்து நாம் பெரும் கோமூத்திரம், கோசாணம், பால், தயிர்,
நெய் அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்ததாக உள்ளது. அதுமட்டுமின்றி அவைகள் மற்ற வஸ்துக்களை
சுத்தம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்தது. ஆகவே பசுவை தவிர வேறு எந்த உயிரினத்திற்கும் அத்தகைய சிறப்பு கிடையாது. மேலும் தினசரி அதிதி
போஜனம் (தினம் ஒரு ப்ராஹ்மணனுக்கு நாம் சாப்பிடும் முன் போஜனம் செய்ப்பது) செய்வித்த
பின்புதான் நாம் போஜனம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் கட்டளை இடுகிறது. தற்போது உள்ள
சூழநிலையில் அதையும் பின்பற்ற முடியாமல் நாம் இருக்கிறோம். ஆகையால் கோ ஸம்ரக்ஷணம்
(பசு காப்பகம்) செய்யும் இடங்களுக்கு நம் குல குருவை (ஆத்து வாத்தியாரை) கலந்து ஆலோசித்து
நாம் நமது குடும்பங்களில் நடக்கவிக்கும் வைதீக கர்மாக்களில் சொல்லப்பட்டிருக்கும் முக்கியமான
உத்க்ராந்தி – வைதரணீ கோதானத்திற்காக (கோதானம் நெய்யமுடியாதவர்கள்) கோ ஸம்ரக்ஷணத்திற்க்கு
பசுவின் உணவான புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, தவிடு, வைக்கோல், புல், அகத்திக்கீரை போன்ற
உணவுகளாக வழங்க நாம் கடமைப்படுள்ளோம். இதை கர்மாக்களில் அல்லாமல் மற்ற நாட்களிலும்
தாங்களே நேரில் வந்து செய்யலாம். ஆகவே வேத ஸம்ரக்ஷணத்திற்கும், கோ ஸம்ரக்ஷணத்திற்கும்
நிறைய உதவிகளையும், தர்மங்களையும் செய்து வேதமாதா, கோமாதா இருதெய்வங்களின் ஆசீவாதங்களையும்,
அனுக்ஹைத்தையும் நாம் பெறுவோமாக.
No comments:
Post a Comment