ஸௌந்தரிய
லஹரி
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது.
91.
தனலாபம்,
பூமிலாபம்
பெற பீஜம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்- ஓம் ஹ்ரீம்
ஸ்ரீம் -ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்
பதந்யாஸ-க்ரீடா-பரிசய-மிவாரப்து-மநஸ:
ஸ்கலந்தஸ்-தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் ஸிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர-ரணித-
ச்சலா-தாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே
ஸ்கலந்தஸ்-தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் ஸிக்ஷாம் ஸுபகமணி-மஞ்ஜீர-ரணித-
ச்சலா-தாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே
நடையழகு-தனலாபம்
(தமிழ்)
நாடி உனது அற்புத நடைத் தொழில் படிக்கும்
பேடை மட அன்னமொடு பேத நடைகூறும்
ஆடக மணிப்பரி புரத்து அரவம் அம்மே
ஏடவிழ் மலர்ப்பதம் இரைக்கும் அறைபோலும்.
பேடை மட அன்னமொடு பேத நடைகூறும்
ஆடக மணிப்பரி புரத்து அரவம் அம்மே
ஏடவிழ் மலர்ப்பதம் இரைக்கும் அறைபோலும்.
பொருள்: புண்ணியம் மிகுந்த சரித்திரத்தை உடைய தாயே! உன்
புனிதமிக்க அரண்மனைத் தடாகத்திலுள்ள அன்னப் பறவைகள் தத்தித் தத்தி நடந்து உனது நடையழகைப் பயிலும்
நோக்கத்துடன் தொடர்ந்து துள்ளிக் குதித்து உன் அழகு நடையைத் தொடர்ந்து பயில்கின்றன. அதற்கேற்ப
உன் திருவடிகளில் அணிந்துள்ள ரத்தினக் கற்களால் இழைக்கப்
பெற்ற சலங்கைகளின் ஒலியின் மூலமாக அப்பறவைகளுக்கு நடைப் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போலவே உன் திருவடிக் கமலங்கள் திகழ்கின்றன.
ஜபமுறையும் பலனும்
25 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால், எதிர்பாராத வகையில் தனலாபமும், பூமி பாலமும் ஏற்படும்
92.
உயர்ந்த
பதவிகள்
பெற. ராஜபோகப்ராப்தி ஸகல ஸௌபாக்யம்
ஸர்வசத்ருவ்ருத்தி
பீஜம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம்
கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி-ருத்ரேஸ்வர-ப்ருத:
ஸிவ: ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-ப்ரச்சதபட:
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலந-ராகாருணதயா
ஸரீரீ ஸ்ருங்காரோ ரஸ இவ த்ருஸாம் தோக்தி குதுகம்
ஸிவ: ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-ப்ரச்சதபட:
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலந-ராகாருணதயா
ஸரீரீ ஸ்ருங்காரோ ரஸ இவ த்ருஸாம் தோக்தி குதுகம்
தேவியின்
இருக்கை-ஆளுத்திறமை
(தமிழ்)
மூவர் மகேசன் முடிகொளு மஞ்சத்து எழிலாயும்
மேவிய படிகத் தனது ஒளி வெளிசூழ் திரையாயும்
ஒவறு செங்கேழ் விம்பம தின்பத்துரு வாயும்
பாவை நின் அகலா இறையொடு நின்னைப் பணிவாமே.
மேவிய படிகத் தனது ஒளி வெளிசூழ் திரையாயும்
ஒவறு செங்கேழ் விம்பம தின்பத்துரு வாயும்
பாவை நின் அகலா இறையொடு நின்னைப் பணிவாமே.
பொருள்: தாயே! பிரம்மா,
விஷ்ணு, ருத்ரன்,
ஈஸ்வரன் ஆகிய நால்வரும் வேதத்தின் வடிவமாகிய உன் கட்டிலில் நான்கு கால்களாக நின்று உன்னைச் சேவிக்கிறார்கள். உன் கணவரான சதாசிவனோ, தூய
வெண்மையான அங்கவஸ்திரத்தைத் தரித்த கோலத்துடன் உன் மேனியின் சிவந்த ஒளிவெள்ளம் பிரதிபலிப்பதால் தாமும் சிவப் பாகத் தோற்றமளிப்பதைக் கண்டுவிட்டு சிருங்கார ரஸமே உருவெடுத்தவரைப் போல் கண்களுக்கு மகிழ்ச்சி தந்தருள்கிறார்.
ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 4000 தடவை ஜபித்து வந்தால், அலுவலகங்களில் உயர்ந்த பதவி, மந்திரி பதவி போன்ற உயர்ந்த பதவி, மந்திரி பதவி போன்ற உயர்ந்த பதவிகளெல்லாம் கிடைக்கும்
93.
எண்ணிய
எண்ணங்கள்
நிறைவேற பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரீம் க்லீம்
அராலா கேஸேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே
ஸிரீஷாபா சித்தே த்ருஷதுபலஸோபா குசதடே
ப்ருஸம் தந்வீ மத்யே ப்ருது-ருரஸிஜாரோஹ-விஷயே
ஜகத் த்ராதும் ஸம்போர்-ஜயதி கருணா காசிதருணா
ஸிரீஷாபா சித்தே த்ருஷதுபலஸோபா குசதடே
ப்ருஸம் தந்வீ மத்யே ப்ருது-ருரஸிஜாரோஹ-விஷயே
ஜகத் த்ராதும் ஸம்போர்-ஜயதி கருணா காசிதருணா
உறுப்புகளின்
மேல்
உண்டாகிய
உள்ளன்பு
(தமிழ்)
ஓதி இருள் மூரல்ஒளி உற்ற குழைவாக
மோதும் முலை அற்ப இடை முற்றி முனி தம்பம்
ஆதி பரனின்னருள் திரண்டருண மாகும்
மாது நின் மலர்ப்பதம் மனத்தெழுதி வைத்தேன்.
மோதும் முலை அற்ப இடை முற்றி முனி தம்பம்
ஆதி பரனின்னருள் திரண்டருண மாகும்
மாது நின் மலர்ப்பதம் மனத்தெழுதி வைத்தேன்.
பொருள்: தாயே! மனதுக்கும்
வாக்கிற்கும் எட்டாததும், சிவப்பு வர்ணமுள்ளதுமான பரமசிவனின் கருணாசக்தியே நீ. அந்த
சக்தியே சுருட்டை மயிரும், இயற்கையான
புன்முறுவலும், காட்டு வாகைப் பூப்போல் மெத்தென்ற மனமும், கல்லுக்குள்ளே இருக்கும் மணிக்கல்லின் காந்தியுள்ள ஸ்தனப்ரதேசமும், மிகவும் இளைத்த இடுப்பும், பருமனான
ஸ்தனங்களும், பின்தட்டுகளும் தாங்கிய உருவத்துடன் உலகத்தை ரட்சிக்கின்றாய்.
ஜபமுறையும் பலனும்
25 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால், எண்ணிய எண்ண ங்களெல்லாம் நிறைவேறும்
94.
பிறரால்
போற்றப்பட .இஷ்டகாம்யார்த்த ஸித்திப்ரதம்
பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம்
கலங்க: கஸ்தூரீ-ரஜநிகர-பிம்பம் ஜலமயம்
கலாபி: கர்ப்பூரைர்-மரகதகரண்டம் நிபிடிதம்
அதஸ்-த்வத்போகேந ப்ரதிதிந-மிதம் ரிக்தகுஹரம்
விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூதம் தவ க்ருதே
கலாபி: கர்ப்பூரைர்-மரகதகரண்டம் நிபிடிதம்
அதஸ்-த்வத்போகேந ப்ரதிதிந-மிதம் ரிக்தகுஹரம்
விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூதம் தவ க்ருதே
தேவியும்
தூய
மதியும்
(தமிழ்)
தூயமதி மரகதச் செப்பு ஒளிர் கலையும் களங்கமும் நேர் சொல்லும் காலைக்
காயுமதி தவள கருப்பூர சகலத்தோடு கத்தூரி போலும் நீ அருந்த அருந்த அவை குறைதொறு அவ்விரண்டும் அயன் நிறைத்தல் போலும் தேயுமது வளருமது திங்கள் எளிதோ உனது செல்வமம்மே!
காயுமதி தவள கருப்பூர சகலத்தோடு கத்தூரி போலும் நீ அருந்த அருந்த அவை குறைதொறு அவ்விரண்டும் அயன் நிறைத்தல் போலும் தேயுமது வளருமது திங்கள் எளிதோ உனது செல்வமம்மே!
பொருள்: தாயே! மரகத
ரத்தினத்தால் செய்யப்பட்ட பாத்திரம் போலுள்ள சந்திர மண்டலத்தில் நீ நீராடுகிறாய். அந்த பாத்திரத்தில் சந்திரனின் மத்தியில் காணப்படும் கள ங்கமே கஸ்தூரியாகவும், சந்திரனே நிர்மலமான ஜலமாகவும், அவன்
கிரணங்களே பச்சைக் கற்பூரப் பொடிகளாகவும் உள்ளன. தினந்தோறும்
நீ ஸ்நானம் செய்த பின் காலியாக உள்ள அந்த பாத்திரத்தை மெல்ல மெல்ல பிரம்மதேவன் நிரப்புகிறான்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், மற்றவர்களால் நன்கு புகழப் பெறுவார்கள்
95.
தீராத
ரணங்கள்,
புண்கள்
ஆற
வ்யாதி நிவர்த்தி பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
புராராதே-ரந்த:புரமஸி ததஸ-த்வச்சரணயோ:
ஸபர்யா-மர்யாதா தரலகரணாநா-மஸுலபா
ததா ஹ்யேதே நீதா: ஸதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யாபி-ரமரா:
ஸபர்யா-மர்யாதா தரலகரணாநா-மஸுலபா
ததா ஹ்யேதே நீதா: ஸதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யாபி-ரமரா:
தேவி
இல்லம் (தமிழ்)
தேவி உன் இல்லம் சிவனுறை அந்தப்புர மானால்
யாவர் உனைக்கண்டு எய்துவர் இமையோர் முதலானோர்
ஆவல் கொடு எய்த்துன் வாயிலில் அணி மாதிகளாலே
மேவிய சித்திப் பேறொடு மீள்வாரானாரே.
யாவர் உனைக்கண்டு எய்துவர் இமையோர் முதலானோர்
ஆவல் கொடு எய்த்துன் வாயிலில் அணி மாதிகளாலே
மேவிய சித்திப் பேறொடு மீள்வாரானாரே.
பொருள்: திரிபுரங்களை எரித்த பரமசிவனின் பட்டத்தரசியாய் விளங்கும் பகவதித் தாயே! உன்னுடைய
திருவடிக் கமலங்களை நெருங்கி அவற்றுக்கு பூஜை செய்யும் தகுதி, புலன்களை
வெல்ல இயலாதவர்களால் அடையக்கூடியதன்று. இதன் காரணமாகத்தான் இந்திரன் முதலான தேவர்கள் கூட அந்தப் பாக்கியம் தமக்குக் கிட்டாததால் உன் வாயிற் படியில் அணிமா முதலிய துவாரபாலகிகளை மட்டுமே வணங்கி அணிமா முதலிய எண்வகைச் சித்திகளை மட்டுமே பெற்றுத் திரும்பி விட்டார்கள்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை ஜபித்து வந்தால், தீராத ரணங்கள், புண்கள் ஆறிவிடும்.
இதற்கான யந்த்ரத்தைத் தகட்டில் எழுதி, எண்ணெயில் வைத்து ஜபித்து, அந்த எண்ணெயைப் பூசினால் விரைவில் குணமாகும்
96.
நல்ல
அறிவு
பெற கல்வி தத்துவம் ஏற்பட பீஜம் ஓம் ஐம்
க்லீம் க்லீம் க்லீம் ஐம் சௌ
கலத்ரம் வைதாத்ரம் கதி கதி பஜந்தே ந கவய:
ஸ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீநா-மசரமே
குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப:
ஸ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீநா-மசரமே
குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப:
கற்புடைமை
(தமிழ்)
கலைமகளும் பொதுமடந்தை கமலையுமற்றவளே
மலைமகள் நீ கற்புடைய வனிதையென பகருங்
குல மறைகள் எதிர்கொடு நின்குரவினையும் அணையா
முலை குழையப் புணர்வது நின் முதல்வரலது இலையால்.
மலைமகள் நீ கற்புடைய வனிதையென பகருங்
குல மறைகள் எதிர்கொடு நின்குரவினையும் அணையா
முலை குழையப் புணர்வது நின் முதல்வரலது இலையால்.
பொருள்: பதிவிரதா சிரோன்மணியாகிய பார்வதித் தாயே! பிரம்மாவின் துணைவியான சரஸ்வதி தேவியைத் தொழுது அவளுடைய அருளை எத்தனையோ கவிஞர்கள் பெறவில்லையா
அதைப்போல ஏதோ ஒரு வகையான செல்வத்தைப் பெற்றுவிட்டு ஒருவன் லட்சுமிபதி என்ற பெயருக்குரியவனாக விளங்கவில்லையா உன்னுடைய தனங்களின்
சேர்க்கையானது, மகாதேவனை மட்டுமேயன்றி உன் அருகிலிருக்கும் மருதோன்றி மரத்திற்குக் கூடக் கிடைப்பதில்லையே! நீயல்லவோ சிறந்த பதிவிரதை!
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், நல்ல அறிவைப் பெறலாம். மற்றும் சித்திரங்கள் தீட்டும் கலைஞர்கள் ஜபித்தால், அக்கலையில் வல்லமையும் புகழும் பெறுவார்கள்
97.
வாக்கு
சித்தி, உடல்
நலம்
பெற.தாது வ்ருத்தி சரீர புஷ்டி பெற பீஜம் ஓம்
ஐம் ஹ்ரீம் ஐம் சௌ
கிராமாஹுர்-தேவீம் த்ருஹிணக்ருஹிணீ-மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரிதநயாம்
துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம-மஹிமா
மஹாமாயா விஸ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரிதநயாம்
துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம-மஹிமா
மஹாமாயா விஸ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி
வடிவெல்லாம்
சக்தி
வடிவே (தமிழ்)
வேதியர்கள் அயன் நாவில் விஞ்சை மகளென்றும்
சீதரன்தன் மணிமார்பில் செழுங்கமலை யென்றும்
நாதரிடத்தரிவை யென்றும் நாட்டுவ ரெண்ணடங்கா
ஆதிபரன் மூலபரை யாமளை உன் மயக்கால்.
சீதரன்தன் மணிமார்பில் செழுங்கமலை யென்றும்
நாதரிடத்தரிவை யென்றும் நாட்டுவ ரெண்ணடங்கா
ஆதிபரன் மூலபரை யாமளை உன் மயக்கால்.
பொருள்: பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள், உன்னை நீயே பிரம்மனின் பத்தினியாகிய சரஸ்வதி என்றும், நீயே
விஷ்ணுவின் பத்தினியாகிய லக்ஷ்மி என்றும், நீயே சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவாறாகக் கூறுகிறார்கள். நீயோ மனத்திற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்ட மகிமையுள்ள நான்காவது தத்துவம். அளவில்லாமல்
சிரமப்பட்டும் அடைய முடியாத மஹாத்மியமுள்ள மஹாமாயையாக நீ இருந்து கொண்டு இவ்வுலகை ஆட்டி வைத்து, பிரமிக்க
வைத்துக் கொண்டிருக்கிறாய்.
ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், சொன்ன வார்த்தை பலி த்தலாகிய வாக்கு சித்தியுண்டாகும். உடல் நலம் பெருகும்
98.
கர்ப்பம்
நிலைத்து
குழந்தை
செல்வம்
பெற பீஜம் ஓம் ஓம் ஐம் ஐம் ஹ்ரீம் ஹ்ரீம்
கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-நிர்ணேஜந-ஜலம்
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா-காரணதயா
கதா தத்தே வாணீ-முககமல-தாம்பூல-ரஸதாம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-நிர்ணேஜந-ஜலம்
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா-காரணதயா
கதா தத்தே வாணீ-முககமல-தாம்பூல-ரஸதாம்
செம்பஞ்சுக்
குழம்பு-வாக்கு
சித்தி
செய்ய பஞ்சு குழம் பெழும் புனல் செல்வி நின்பதம் நல்கவே
துய்ய பங்கய வாணி தம்பல ஊறல் உய்த்த சொல் வாணர்போல்
மையல் நெஞ்சுறும் ஊமருங்கவி வாணராகி மலிந்ததால்
மெய்யடங்கலு மூழ்க முன்கவி வீறு நாவிலடங்குமோ.
துய்ய பங்கய வாணி தம்பல ஊறல் உய்த்த சொல் வாணர்போல்
மையல் நெஞ்சுறும் ஊமருங்கவி வாணராகி மலிந்ததால்
மெய்யடங்கலு மூழ்க முன்கவி வீறு நாவிலடங்குமோ.
பொருள்: தாயே! மருதோன்றிக்
குழம்பின் பூச்சுடன் கலந்து வருவதும் உன் திருவடிகளை அலம்பி வருவதுமான தீர்த்தத்தை, வித்தைகள்
பலவற்றிலும் சிறந்து விளங்க விரும்பும்
நான், எப்பொழுது
பருகப் போகிறேன் கூறியருள்வாயாக. இயல்பாகவே ஊமைகளுக்கும் கூட, கவிதை
இயற்றும் ஆற்றலைத் தரவல்லது அந்தத் தீர்த்தம் என்பதால்,
சரஸ்வதி தேவியின் திருவாயால் மெல்லப்பட்ட தாம்பூலச் சாற்றினையொத்த அந்தத் தீர்த்தத்தை நான் என் வாயில் எப்பொழுது அடையப்போகிறேன்
ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், கர்ப்பம் தரிக்காத பெண்கள் கர்ப்பம் தரிப்பார்கள். ஸ்த்ரீ சுகம் பெறமுடியாத ஆண்களுக்கு அச்சுகம் கிடைக்கும்
99.
வீரத்வம் சூரத்வம் ஆரோக்யமும்,
சகல
சுகமும்
பெற பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் கரீம்
ஹ்ரீம் ஸ்ரீம்
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி-ஸபத்நோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் ஸிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித-பஸுபாஸ-வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்-பஜநவாந்
ரதே: பாதிவ்ரத்யம் ஸிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித-பஸுபாஸ-வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்-பஜநவாந்
இம்மை
மறுமைப்
பயன்
பெற்றிட
(தமிழ்)
சுந்தரி நின் தொண்டர் தமைத் தோய்வதற்கு நாமகளும்
இந்திரையும் மலரயன் மால் இடருழப்ப இரதியின் கண்
அந்தமில் பேரழகொடு கற்பழித்து நெடு நாள் கழியச்
சிந்தையுறு பாசம் போய்ச் சிவமயத்தைச் சேர்குவரால்.
இந்திரையும் மலரயன் மால் இடருழப்ப இரதியின் கண்
அந்தமில் பேரழகொடு கற்பழித்து நெடு நாள் கழியச்
சிந்தையுறு பாசம் போய்ச் சிவமயத்தைச் சேர்குவரால்.
பொருள்: தாயே! உன்னை
பூஜிப்பவன் பிரம்மாவும், விஷ்ணுவும் கூடப் பொறாமைப்படக்கூடிய அளவில் நிறைந்த ஞானத்துடனும், செல்வத்துடனும் எல்லையில்லா இன்பத்தை அடைகிறான். மன்மதனைப் போன்ற மேனி எழிலைப் பெற்று ரதிதேவியின் பதிவிரதைத் தன்மையைமும் கலங்கச் செய்கிறான். சம்சார பந்தம் எனும் இகவாழ்வின்
கட்டுகளெல்லாம் நீங்கியவனாக பிரசித்தமான பேரானந்தம் எனும் இன்ப ரசத்தைப் பெற்று சிரஞ்சீவியாக வாழ்கிறாள்.
ஜபமுறையும் பலனும்
15 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், உடல் வலியும், சகல சுகமும் உண்டாகும்
100.
சகல
காரிய
சித்தி
பெற
பீஜம் பீஜம் ஓம் ஓம் ஐம் ஐம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜந விதி:
ஸுதாஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசநா
ஸ்வகீயை-ரம்போபி: ஸலிலநிதி-ஸெளஹித்ய கரணம்
த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்
ஸுதாஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசநா
ஸ்வகீயை-ரம்போபி: ஸலிலநிதி-ஸெளஹித்ய கரணம்
த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்
தேவி
அளித்த
சக்தியால்
தேவியைப்
பாடியது
(தமிழ்)
ஆதவனுக்கு அவன் கிரணத் தங்கியைக் கொண்டு ஆலாத்தி சுழற்ற லென்கோ சீதமதிக்கு அவன் நிலவின் ஒழுகு சிலைப்புனல் கொடு உபசரிப்பதென்கோ மோதியமைக் கடல் வேந்தை அவன் புனலால் முழுக்காட்டும் முறைமை யென்கோ நீ தரு சொற் கவிகொடுனைப் பாடி உனது அருள் பெறும் என் !
பொருள்: வாக்கிற்கதிபதியான தேவியே! தீவட்டியின்
ஜ்வாலையைக் கொண்டே சூரியனுக்கு ஆரத்தி செய்வதைப் போலவும், சந்திரகாந்தக் கல்லிலிருந்து பெருகும் அமுத
கிரணங்களாகிய நீரைக் கொண்டே சந்திரனுக்கு அர்க்யம் தருவது போலவும், சமுத்திர
ஜலத்தைக் கொண்டே சமுத்திரத்தை திருப்தி செய்வது போலவும், உன்னுடைய அருளால் உருவான வாக்குகளைக் கொண்டே இந்த ஸ்தோத்திரம் அமைந்துள்ளது. இதை உனக்கு மகிழ்வுடன் அர்ப்பணம் செய்கிறேன்.
ஜபமுறையும் பலனும்
16 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், சகல காரியங்களிலும் சித்தி உண்டாகும்
இவ்வாறு ஸ்ரீமத் பரமஹம்ஸ
பரிவ்ராஜகாசார்யர்களும் ஸ்ரீகோவிந்த பகவத் பூஜ்யபாதர்களின் சிஷ்யர்களுமான ஸ்ரீமத்
பாவத்பாதர் அவர்களால் சொல்லப்பட்ட ஸௌந்தர்யரஹரீ மற்றிற்று.
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது. இது
91 முதல் 100 வரை உள்ளது. இதன் தொடர்ச்சி பார்க்கவும்.
புரோகிதர், ஜோதிடர். G.V.
மணிகண்ட ஷர்மா - மேற்படி விபரம் திருத்தம் வேண்டும் என்றால் உங்கள்
கருத்துக்களை எழுதவும்.
No comments:
Post a Comment