சௌந்தரிய லஹரி
சவுந்தரிய
லஹரி
ஆதிசங்கரர்
அருளியது
21.
பகைமை
நீங்கி
வெற்றி
உண்டாக,
வீரம் உண்டாக பீஜம் ஓம் ஐம் ஹ்ரீம் ஹ்ரீம்
ஹ்ரீம்
தடில்லேகா-தந்வீம் தபந-ஸஸி-வைஸ்வாநர-மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி கமலாநாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேந மநஸா
மஹாந்த: பஸ்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்
நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி கமலாநாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேந மநஸா
மஹாந்த: பஸ்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்
தேவியின்
தோற்றம்-சமாதியும்,
நிட்டையும்
உடையோர்
தரிசிப்பது
(தமிழ்) ஆன மின் கொடி போலும் என் முண்டகம் ஆறின் மண்டல மூவகையின் கண் ஓர் பானு அம்புலி தீயின், நிறம் கிளர் பான்மை கொண்டு இதழ் ஆயிர கஞ்சம் நீள் கானில் உன் களிஞானம் உறும் கலை காழ் மலங்களின் மூவகை பொன்றியே போன சிந்தையின் மாயை ஒழித்தவர் போதம் இன்புறும் ஆதியோடு அந்தமே.
பொருள்: அன்னையே! ஆறு கமலங்களுக்கு மேலுள்ள ஸஹஸ்ரார கமலத்தில் அமர்ந்ததும், சூரியன், சந்திரன், அக்னி என்னும் உருவில் உள்ளதும், மின்னற்கொடி போன்றதுமான உன் கலையை, காமம் முதலிய அழுக்குகளும், அவித்யை முதலிய மயக்கங்களும் நீங்கப்பெற்ற தூய்மையான மனத்தினால் கண்டு தியானம் செய்யும் மகான்கள், அலையலையாகப் பொங்கியெழும் பேரானந்தத்தை அடைவார்கள்.
ஜபமுறையும் பலனும்
11 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் எல்லோரும் மரியாதை செலுத்துவர். மற்றவர்கள் காரணமில்லாமல் தன் மீது பகைமை பாராட்டுதல் நீங்கும். எந்த விஷயத்திலும் தைரியமும் வெற்றியும் உண்டாகும்
22.
இஹலோக
ஸுகம்
பெற ஸாம்ராஜ்யம் ப்ராத்தம் பீஜம் ஐம் க்லீத் சௌ : சௌ க்லீம் ஐம்
பவாநி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவாநி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திஸஸி நிஜ-ஸாயுஜ்ய-பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட-மகுட-நீராஜித-பதாம்
இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவாநி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திஸஸி நிஜ-ஸாயுஜ்ய-பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட-மகுட-நீராஜித-பதாம்
தேவி
விரைந்து
வரம்
கொடுத்தல்
(தமிழ்)
பேர் உறும் கயிலாசன் மகன் பெறு பேரன் அன்புறு பேரன் எனும் சொலால்
வாரம் அன்பொடு பார்வை வழங்கென வாய் திறந்திட ஓடி வழங்கினாய்
வேரி முண்டகன் மால் மகுடங்களின் வீசரும் ப்ரபை தீபம் உவந்ததாள்
சேரு நன் பெரு வாழ்வும் வழங்குவை தேடரும் சிவமாய மதங்கியே!
வாரம் அன்பொடு பார்வை வழங்கென வாய் திறந்திட ஓடி வழங்கினாய்
வேரி முண்டகன் மால் மகுடங்களின் வீசரும் ப்ரபை தீபம் உவந்ததாள்
சேரு நன் பெரு வாழ்வும் வழங்குவை தேடரும் சிவமாய மதங்கியே!
பொருள்: பவானி என்ற பெயருடையவளும் பரமசிவனின் பத்தினியுமான தேவியே! உன் அடிமையாகிய என்னை கருணையுடன் கூடிய உன் கடைக்கண்ணால் பார்ப் பாயாக என்று கேட்க நினைக்கும் ஒருவன், பவானி! நீ என்று சொல்லத் தொடங்கி, முடிக்கும் முன்பே, அவனுக்கு விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோரின் கிரீட ங்களால் மங்கள ஆரத்தி செய்யப்பெற்ற திருவடிகளையுடைய உனது மேலான ஸாயுஜ்ய பதவியையே அளித்து விடுகிறாய்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் அரச பதவி, மந்திரி பதவி போன்ற உயர் பதவிகள் ஏற்படும். தேர்வுகளில் வெற்றியுண்டாகும். கோயில் அல்லது நதிக்கரையில் ஜபிக்க வேண்டும். இம்மைப் பயன்களெல்லாம் சித்திக்கும்
23.
வியாதி, கடன்
தொல்லை
நீங்க (ருண, ரோகம்
நீங்க)
பீஜம் ஓம் ஸ்ரம் ஸ்ரீம்
த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேந மநஸா
ஸரீரார்த்தம் ஸம்போ-ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல-மருணாபம் த்ரிநயநம்
குசாப்யா-மாநம்ரம் குடில-ஸஸி-சூடால-மகுடம்
ஸரீரார்த்தம் ஸம்போ-ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல-மருணாபம் த்ரிநயநம்
குசாப்யா-மாநம்ரம் குடில-ஸஸி-சூடால-மகுடம்
சக்தியிடம்
சிவாம்சம்
அடக்கம்
(தமிழ்)
ஆதி சங்கரர் பாதி உடம்பு இனிது ஆளும் அம்பிகை பாதியும் விஞ்சுமோ
நீதி அன்று என, நாயகர் பங்கையும் நீ கவர்ந்தனையால் அவர் எங்குளர்
சோதி செங்கதிர் மேனி நிறைந்தது தூய கண்களும் மூவகை கொங்கையோ
ஈது இரண்டு உடல் கூனும் இளம்பிறை ஏர் பொழிந்தது நீள் முடி எங்குமே.
நீதி அன்று என, நாயகர் பங்கையும் நீ கவர்ந்தனையால் அவர் எங்குளர்
சோதி செங்கதிர் மேனி நிறைந்தது தூய கண்களும் மூவகை கொங்கையோ
ஈது இரண்டு உடல் கூனும் இளம்பிறை ஏர் பொழிந்தது நீள் முடி எங்குமே.
பொருள்: அம்பிகையே! என்
இதயத்தில் குடிகொண்டு பிரகாசிக்கும் உன் வடிவம் முழுவதும் சிவந்த ஒளியுடனும், முக்கண்களுடனும்,
இரு தனங்களால் சற்று வளைந்தும் பிறைச்சந்திரனைச் சூடிய திருமுடியுடனும் விளங்குவதால், நீ
பரமசிவனின் இடது பாகத்தை அபகரித்துக் கொண்டு, மனம்
திருப்தியடையாமல் அவருடைய மற்றொரு பாதியையும் அபகரித்துக் கொண்டாயோ என்று சந்தேகம் கொள்கிறேன்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தீராத வியாதிகள், கடன் தொல்லைகள் நீங்கும். பல வழிகளில் பணம், பொருள் வந்து சேரும்
24.
பேய், பூதம்
முதலியவை
நீங்க, செய்வினை தோஷம் நீங்கி வழா. பீஜம் சிவ
அஷ்டமாசித்தி மந்த்ரம் ஜெபிக்கவும்
ஜகத்ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி வபு-ரீஸஸ்-திரயதி
ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-மநுக்ருஹ்ணாதி ச ஸிவஸ்
தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-லதிக-யோ:
திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி வபு-ரீஸஸ்-திரயதி
ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-மநுக்ருஹ்ணாதி ச ஸிவஸ்
தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-லதிக-யோ:
தேவி
புருவத்தினால்
ஏவும்
ஏவலை
வியந்தது
(தமிழ்)
ஆதி முண்டகன், மால், சிவன், அண்டர்ம மகேசன், அந்த சதாசிவன், ஐந்து பேர் மேதகும் தொழில் போல, வனைந்து அருள் வீறும் அங்கு அதன் ஊறலும் உண்டென யாதும் இன்றியும், மேனியொடு எங்கணும் மாயை தந்ததும் ஞானம் இரங்கு மோர் நீதியும், திருவே! புருவங் கொடு நீ சொல் இங்கித ஏவலை புரிந்ததே.
பொருள்: பராசக்தி அன்னையே! பிரம்மா இவ்வுலகைப் படைக்கிறார். விஷ்ணு
காக்கிறார். ருத்ரன்
உரிய காலத்தில் அழிக்கிறார். இவர்களுக்கு
மேற்பட்ட மகேசுவரன் இம்மூவரையுமே தம் சொரூபத்தில் மறையுமாறு செய்து தம் உடலையும் மறைத்துக் கொள்கிறார். ஸதா
என்ற அடைமொழியை முன்னால் கொண்ட ஸதாசிவன், கொடி
போன்ற புருவங்களை நீ சற்று அசைத்தால், அதை
ஆதாரமான கட்டளையாய் ஏற்று கொண்டு மறுபடியும் பிரம்மன், விஷ்ணு,
ருத்திரன், ஈசுவரன்
என்னும் நான்கு தத்துவங்களையும் படைக்கிறான்.
ஜபமுறையும் பலனும்
20 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் பேய், பிசாசு முதலியவைகள் ஓடிவிடும். அடிக்கடி வரும் சிறிய நோய்கள் நிவர்த்தியாகும்
25.
உயர்
பதவி
கிடைக்க
கௌரவம் ஜகல ஸம்பத்து.
பீஜம் ஓம் ஐம் க்லீம் சௌ:
த்ரயாணாம் தேவாநாம் த்ரிகுண-ஜநிதாநாம் தவ ஸிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹந மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந்-முகுலித-கரோத்தம்ஸ-மகுடா:
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹந மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந்-முகுலித-கரோத்தம்ஸ-மகுடா:
தேவியின்
பாத
பூஜை
சிறப்பு
(தமிழ்)
மூவருக்கு முதற் பிறப்பு நின் முக்குணக் கடல் என்று, முன் சேவடிக்கண் இருப்பர், சென்னி குவித்த செங்கை பிரிக்கிலார்; பூ எடுத்து அவர் சென்னி வைத்திடு போதம் உற்றவர், அம்மை! நின் கா அலர்ப் பொதி தாளில் வைக்கவும் மூவர் சென்னி களிக்குமே.
பொருள்: சிவனின் பத்தினியான அன்னையே! உன்
திருவடிகளில் செய்யப்படும் பூஜை ஸத்வம், ரஜஸ்,
தமஸ் என்னும் உன் முக்குணங்களால் தோன்றிய பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்
ஆகிய மும்மூர்த்திகளுக்கும் செய்யும் பூஜையாகும். ஏனென்றால் உன் திருவடித் தாமரைகளைத் தாங்கும் ரத்ன பீடத்தின் அருகில் கிரீடங்களின் மீது கைகளைக்கூப்பிக் கொண்டே நின்று கொண்டிருப்பதால், உன் திருவடிகளைப் பூஜித்தாலே அவர்களையெல்லாம் பூஜித்ததாக ஆகிவிடுமன்றோ!
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் முறைப்படி கிடைக்க வேண்டிய உயர்பதவி கிடைக்கும். அரசியல் செல்வாக்கு உண்டாகும்
26.
பகைமை
நீங்க. சத்ரு பாதா நிவ்ருத்தி ஸர்வத் ரஜயம்
பீஜம் ஓம் க்லீம் க்ரீம்
த்ரவிரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்
விநாஸம் கீநாஸோ பஜதி தநதோ யாதி நிதநம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருஸா
மஹா-ஸம்ஹாரேசஸ்மிந் விஹரதி ஸதி த்வத்பதி-ரஸெள
விநாஸம் கீநாஸோ பஜதி தநதோ யாதி நிதநம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருஸா
மஹா-ஸம்ஹாரேசஸ்மிந் விஹரதி ஸதி த்வத்பதி-ரஸெள
தேவியின்
மங்கல
நாண்
சிறப்பு
(தமிழ்)
வேத ரஞ்சகன், மால்,
புரந்தரன், வேக
சண்ட குபேரனோடு
ஆதி எண் திசை பாலர் பொன்றவும் ஆதி அந்த மிலாத தோர்
நாதர், பொன்றிலர், ஏது உன் மங்கல நாண் உறும் திறம்! ஆதலால்,
நீ தழைந்தது யோகம் அம்பிகை, நீலி என்பது பாவமே!
ஆதி எண் திசை பாலர் பொன்றவும் ஆதி அந்த மிலாத தோர்
நாதர், பொன்றிலர், ஏது உன் மங்கல நாண் உறும் திறம்! ஆதலால்,
நீ தழைந்தது யோகம் அம்பிகை, நீலி என்பது பாவமே!
பொருள்: பதிவிரதையான தாயே! மகாப் பிரளய காலத்தில் பிரம்மா, விஷ்ணு,
யமன், குபேரன்,
இந்திரர்கள் 14 பேர் ஆகிய எல்லோருமே அழிவை அடைகிறார்கள். ஆனால்
உனது நாயகனான சதாசிவன் மட்டுமே உன் பதிவிரதா தன்மையால் அந்தப் பிரளய காலத்திலும் அழியாமல் உன்னுடன் இருந்து விளையாடுகிறார். (பிரளய
காலத்திலும் கூட சிவனும் சக்தியும் அழிவற்று நிலைத்து நிற்பார்கள்.)
ஜபமுறையும் பலனும்
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை அன்று (6 அமாவாசை தினங்களில்) தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தம் மீது பகைமை பாராட்டுபவர்கள் பகைமை நீங்கி வசமாவார்கள்
27.
ஸகல மந்த்ர தந்த்ர ஸித்தி, ஆத்ம ஞானம் உண்டாக.
பீஜம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மஸநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருஸா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மஸநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருஸா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்
தேவியிடம்
தன்னையே
அர்பணித்துக்
கொள்ளுதல்
(தமிழ்) மொழிவது உன் செப முத்திரை பாணியின் முயல்வது, எங்கு நடப்பன கோயில் சூழ்தொழில்,
அருந்துவ முற்றும் உன் ஆகுதி, துயில் வணங்கல், களிப்பன யாவும் நீ, ஒழிவு
அறும் களி, என் செயல் யாவையும் உனது நன்செய் பரிச் செயலாகவே அழிவு அறும் பதம் வைத்தருள், பேரொளி!
அளி விளைந்து களிப்பெழு நாதமே.
பொருள்: அம்பிகையே! எல்லாமே
உனக்கு அர்ப்பணம் என்று ஆத்ம சமர்ப்பண பாவனையுடன் நான் பேசும் வெற்றுப் பேச்சு ஜபமாகவும், என்
உடல் அசைவுகள் உன் முத்திரைகளின் விளக்கமாகவும், நடையெல்லாம் உனக்குச் செய்யும் பிரதட்சிணமாகவும், நான் புசிப்பதெல்லாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும், நான்
படுப்பது உனக்குச்
செய்யும் நமஸ்காரமாகவும், இம்மாதிரி என் சுகத்திற்காக நான் செய்யும் மற்ற செயல்களும் உனக்குச் செய்யும் பூஜையாக நிறைவேறட்டும்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தன்னிலை அறிதலாகிய ஆத்ம ஞானம் உண்டாகிப் பேரின்ப வழி திறக்கும்
28.
மரண
பயம்
நீங்க.அபம்ருத்யு தோஷம் நீங்க, தீர்காயுள்
வளர ஸகல வித விஷ உபாத்தைகள் வீங்கி சிறப்புடன் வாழ. பீஜம் ஓம் டம் டம் டம் டஹ டஹ டஹ
ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலநா
ந ஸம்போஸ் தந் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா
விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலநா
ந ஸம்போஸ் தந் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா
தேவியின்
தோடுகளின்
சிறப்பு
(தமிழ்)
பிரமன், இந்திரன்,
முன்பிற தேவர்கள், ஊண் எல்லாம்,
நரை பெருந்திரை அற்றநல் ஆரமுதே கொலாம்,
ஒருவர் தங்கிலர்! நின் சிவன் ஊண்விடம் வாழ்வன்! மாது!
இரு பெருங்கழைஇட்ட பொன்னோலையின் வாசியே!
நரை பெருந்திரை அற்றநல் ஆரமுதே கொலாம்,
ஒருவர் தங்கிலர்! நின் சிவன் ஊண்விடம் வாழ்வன்! மாது!
இரு பெருங்கழைஇட்ட பொன்னோலையின் வாசியே!
பொருள்: தாயே! பயங்கரமான
மூப்பு, மரணம்
ஆகியவற்றை போக்கக்கூடிய அமிர்தத்தைப் பருகியும் பிரம்மா, இந்திரன்
முதலிய தேவர்களெல்லாம் பிரளய காலத்தில் அழிந்து விடுகிறார்கள். ஆனால் மிகக் கொடிய நஞ்சைப் பருகியும் சிவன் அழியாதிருக்கிறார். அவருக்கு மட்டும் காலத்தின் முடிவு இல்லையென்றாலும் அதற்குக் காரணம்
உன் செவிகளில் அணிந்திருக்கும் தாடங்கம் என்னும் காதணியின் மகிமைதான்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தாம் தொடங்கிய எல்லாக் காரியங்களிலும் வெற்றியுண்டாகும். விஷ வ்யாதி பயங்கள் அகலும்
29.
முரட்டுத்தனம்
நீங்க. ஸுகப்ரஸவம் ஸத் ஸந்தான லாபம் துஷ்டஜம்
வச்யம் உண்டாக. பீஜம் ஓம் க்லீம் க்ரீம் க்ரீம் கூம் கூம் பட்
கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயாதஸ்ய பவநம்
பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயாதஸ்ய பவநம்
பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே
தேவிக்கு
ஏவல்
செய்வோர்
சொல்லும்
மங்கல
மொழி (தமிழ்)
முது மறை சொல் இளவனிதை, அயனோடு,
அரி, குலிசன்
உனை முறை பணியும் நெறியின் இடையே பதறி, உனது அருகு வரும் அரனை, எதிர் கொள உனது பரிசனம், உன்
அடிவளமையால், இதுபிரமன்மகுடம்,
அரிமகுடம்இது, குலிசன்முடி
இது கடினம், இடறும் இருதாள் கதி அமர அமர வழி விலகி வரவர, எமது
கடவுள் எனும் மொழி தழைகவே!
பொருள்: தாயே! உன்னை
பிரம்மா, விஷ்ணு,
இந்திரன் ஆகியோர் நாள்தோறும் வணங்க வரும்போது எதிரிலுள்ள பிரம்மாவின் கிரீடத்தை விட்டு விலகி வாருங்கள். விஷ்ணுவின்
கிரீடத்தில் தவறிப் போய் இடறிக் கொள்ளாதீர்கள். இந்திரனின் கிரீடத்தை ஒதுக்கிவிட்டு வாருங்கள் என்றெல்லாம் உன்னுடைய பணிப்பெண்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, உன் மாளிகைக்கு பரமசிவன் வருவதையறிந்து நீ எழுந்து சென்று எதிர்கொண்டு வரவேற்பது சிறப்பாயுள்ளது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் வீட்டில் பிள்ளை, பெண் முதலியவர்களின் முரட்டுத்தனம் நீங்கும். வீட்டில் பிரசவம் ஆக வேண்டியவர்களுக்கு சுகப்பிரசவம் உண்டாகும்
30.
பரகாயப்ரவேச வித்தை அணிமா
முதலண அஷ்ட சித்தி
பெற பீஜம்
ஓம் ஐம் ஸ்ரீம்
ஸ்வதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-ரணிமாத்யாபி-ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயந-ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்
நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயந-ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்
தேவியின்
மேனியை
தன்
மேனியாக
சிந்தித்தல்
(தமிழ்)
அம்மே நின் மெய்ப் பிரிவாம் அணிமாதி தொழும் அழியா
இம்மேனி தம்மேனி எனத் தெளிந்து பாவிப்பார்
செம்மேனி அரன் வாழ்வுஞ் சிதைவது எனப் புறக்கணித்து
வெம்மேனி ஊழி அனல் தீபமிட விளங்குவார்.
இம்மேனி தம்மேனி எனத் தெளிந்து பாவிப்பார்
செம்மேனி அரன் வாழ்வுஞ் சிதைவது எனப் புறக்கணித்து
வெம்மேனி ஊழி அனல் தீபமிட விளங்குவார்.
பொருள்: ஆதியும் அந்தமும் இல்லாத நிலையான பரம்பொருளான தாயே! உன் உடலிலிருந்து தோன்றிய அணிமா முதலிய எண்வகைச் சித்திகளாகிய தேவதைகளால் சூழப்பெற்றவளே! எவன்,
உன்னைத் தன் ஆத்மா என்றெண்ணி எப்போதும் சிந்திக்கிறானோ அவனுக்கு சிவசாயுஜ்யமெனும் செல்வத்தைக் கூடப் பெரிதாகக் கருதாத அவனுக்கு, பிரளய
காலத்தில் எழும் ஊழித் தீ கூட, மங்கள
ஆரத்தி செய்யும் என்பதில் என்ன வியப்பு?
ஜபமுறையும் பலனும்
96 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் அணிமாதி அஷ்ட சித்திகள் உண்டாகும். எந் தக் காரியத்தைத் தொடங்குவதிலும் அதைரியம் நீங்கி தைரியம் உண்டாகும். கூடுவிட்டுக் கூடுபாய்தலென்னும் பரகாய ப்ரவேச சக்தியும் சித்திக்கும்
சவுந்தரிய
லஹரி
ஆதிசங்கரர்
அருளியது. இது 21 முதல் 30 வரை உள்ளது. இதன் தொடர்ச்சி பார்க்கவும்.
புரோகிதர், ஜோதிடர். G.V.
மணிகண்ட ஷர்மா - மேற்படி விபரம் திருத்தம் வேண்டும் என்றால் உங்கள்
கருத்துக்களை எழுதவும்.
No comments:
Post a Comment