ஸௌந்தரிய
லஹரி
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது.
81.
நெருப்பு
சுடாமலிருக்கும்
சக்தி பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம்
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே!
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய-மஸேஷாம் வஸுமதீம்
நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச
நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே!
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய-மஸேஷாம் வஸுமதீம்
நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச
நிதம்ப
வர்ணனை (தமிழ்)
கொத்து விரியலர் சோலை இமய வெற்பரசன் மெய்க்குல மலைப் பக்கமென வாழ் அத்தனை விரிந்த வகலத்தொடு பெரும் பாரம் அடைய உன் நிதம்ப விடையே எத்தனை பெரும்புவனம் இற்றாலும் அழிவிலை இதற்கெனச் சேம நிதிபோல் வைத்தது பரந்திடங் கொண்டுலகையிட மற வருத்தவோ மதுர அமுதே.
பொருள்: அன்னை பார்வதி தேவியே! மலையரசனான
உன் தந்தை கனமானதும் விசாலமானதுமான மலை அடிவாரத்தின் தன்மையை எடுத்து உனக்கு சீதனமாகக் கொடுத்து விட்டார் போலும். அதன்
காரணமாகத்தான் பருத்தும் விசாலமாகவும் காணப்படும் உன் பின்பக்கப் பகுதி இப்பூவுலகனைத்தையும் மறைக்கும் வகையில் தோன்றுகிறது. அதை லகுவாகவும் ஆக்கி விடுகிறது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில் தென்கிழக்கு முகமாக அமர்ந்து இந்த ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், அக்னி ஸ்தம்பன சக்தி (நெருப்பு சுடாமலிரு க்கும் சக்தி) உண்டாகும்
82.
ஜலத்தில்
நடக்கும்
சக்தி
பெற பீஜம் ஓம் ஹ்ரீம் ஹம் ஸ்ரீம்
கரீந்த்ராணாம் ஸுண்டாந் கநககதலீ-காண்டபடலீம்
உபாப்யா-மூருப்யா-முபயமபி நிர்ஜித்ய பவதீ
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி-கடிநாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி
உபாப்யா-மூருப்யா-முபயமபி நிர்ஜித்ய பவதீ
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி-கடிநாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி
தொடையின்
முழந்தாளின்
வர்ணனை-பெரும்
பதவி (தமிழ்)
பொற்கதலி புறங்காட்டும் குறங்கால் வேழப்புழைக்கை தடிந்துஞ் சிவனைப் பணிந்து தேய்ந்த வற்கடின முழந்தாளிற் கும்பஞ் சாய்த்து மணி மருப்பைக் கன தனத்தால் வளைத்து மம்மே நிற்கடின கோபம் அமராமை கண்டோ நித்தரதன் தொக்குரித்த துடுத்த நேயம் பிற்சுருதி யிவளுறுப்போ டுவமை வீறு பெற்றதிது என்னு மிந்தப் பெருமை கண்டோ.
பொருள்: பார்வதித் தாயே! பகவதி என்ற திருநாமம் கொண்டவளே! வலிமைமிக்க சிறந்த யானைகளின் துதிக்கைகளையும், பொன் வாழை மரங்களையும் உன் இரு தொடைகளால்
வெற்றி கொண்டவளாய், பரமசிவனை அடிக்கடி பணிந்து வணங்கும் வழக்கத்தால், கடினமாகவும்
நன்கு உருண்டு திரண்டும் உள்ள முழங்கால் முட்டிகளால்
இந்திரனின் யானையான ஐராவதத்தின் தலையிலுள்ள இரு கும்பங்களையும் வென்றிருக்கிறாய்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், ஜலஸ்தம்பனம் (நீர் மேல் சுலபமாக நடத்தல்) செய்வதற்கான சக்தியுண்டாகும்
83.
பஜ துர ஸைன்ய சேனையை அசையாமல் நிறுத்த
பீஜம் ஓம் ஸூம் ஓம்
பராஜேதும் ருத்ரம் த்விகுணஸரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஸிகோ பாட-மக்ருத
யதக்ரே த்ருஸ்யந்தே தஸஸர-பலா: பாதயுகலீ-
நகாக்ரச்சத்மாந: ஸுர-மகுட-ஸாணைக-நிஸிதா:
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஸிகோ பாட-மக்ருத
யதக்ரே த்ருஸ்யந்தே தஸஸர-பலா: பாதயுகலீ-
நகாக்ரச்சத்மாந: ஸுர-மகுட-ஸாணைக-நிஸிதா:
கணைக்கால்
வர்ணணை (தமிழ்)
உம்பர் தொழுந்தொறும் மகுடச் சாணை தீட்டி ஒளிரும் நகநுனைக் கணையோர் ஐந்தும் ஐந்தும் செம் பொன்மணிக் கனைக்காலாம் இணைப் பொற்றூணி சேர்த்தன்றோசிவன் பகைவேள் தீருகின்றான்
அம்பொருபத்து அளித்தனை யின்றன்று போல ஐங்கணை தொட்டழியினதுபழுதென்றன்றோ வம்பமருங் கனதனப் பொற்றிருவே உன்றன் மனவிரகின் செயலொருவர் மதிப்பதன்றே.
அம்பொருபத்து அளித்தனை யின்றன்று போல ஐங்கணை தொட்டழியினதுபழுதென்றன்றோ வம்பமருங் கனதனப் பொற்றிருவே உன்றன் மனவிரகின் செயலொருவர் மதிப்பதன்றே.
பொருள்: அம்பிகையே! பரமேசுவரனை
வெல்வதற்கு பஞ்சபாணன் எனப்படும் மன்மதன் அவை போதாதலால், உன் முழங்காலுக்குக் கீழேயுள்ள பாகங்களாகிய இரு அம்பறாத்
தூணிகளில் பத்து பாணங்களை நிரப்பி வைத்திருக்கிறான். அந்தப் பாணங்கள் எவையெனில் உன் திருவடிகளிலுள்ள பத்து விரல்களேயாகும். அந்த
விரல்களின் நகங்கள் பாணத்தின் இரும்பு முனைகளைப் போல உள்ளன. மேலும்
அவை உன்னை வணங்கும் தேவர்களின் கிரீடங்களாகிய சாணைக்கற்களால் நன்கு தீட்டப்பெற்றவையாயும் காணப்படுகின்றன.
ஜபமுறையும்
பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், யானைப்படை, குதிரைப் படை முதலியவைகளுடன் கூடிய பெரிய சேனையை அசையாமல் நிறுத்தும் ஸ்தம்பன வித்யை சித்திக்கும்
84.
கூடுவிட்டு
கூடுபாயும்
சக்திபெற பீஜம் ஓம் ஹ்ரீம் க்லீம் பீஜம் 2
ஸம் ஜீம் வம் நிம் ஹும் பட் ஸ்வாஹா
ஸ்ருதீநாம் மூர்த்தாநோ தததி தவ யௌ ஸேகரதயா
மமாப்யேதௌ மாத: ஸிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பஸுபதி-ஜடாஜூட-தடிநீ
யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண-ஹரிசூடாமணி-ருசி:
மமாப்யேதௌ மாத: ஸிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பஸுபதி-ஜடாஜூட-தடிநீ
யயோர்-லாக்ஷா-லக்ஷ்மீ-ரருண-ஹரிசூடாமணி-ருசி:
பாதார
விந்தம்-ஜீவன்
முக்தி (தமிழ்)
உளமகிழ் மகிழ்நர் சென்னி உறுநதி விளக்க மாயோன்
கிளர் முடிப்பதும ராகக் கேழொளி செம்பஞ்சு ஏய்க்கும்
முளரி நின் பதங்கள் வேத முடியுறப் பதித்த தவ்வாறு
எளிய என் தலைமேல் வைக்க இரங்கு வதென்று தாயே.
கிளர் முடிப்பதும ராகக் கேழொளி செம்பஞ்சு ஏய்க்கும்
முளரி நின் பதங்கள் வேத முடியுறப் பதித்த தவ்வாறு
எளிய என் தலைமேல் வைக்க இரங்கு வதென்று தாயே.
பொருள்: தாயே! உன்
திருவடிகளை வேதங்களின் தலைபோன்ற உபநிஷத்துக்கள் தம் தலைகளில் அணிகளாக அணிந்து கொள்கின்றன. அந்தத்
திருவடிகளை எளியே னாகிய எனது தலையிலும் வைத்தருள்வாயாக! ஏனெனில் அந்தத் திருவடிகள் சிவபிரானின் ஜடாமகுடத்திலுள்ள கங்கை நீரால் கழுவப்படுகின்றனவன்றோ அந்தத் தி ருவடிகளில் பூசப்பட்டுள்ள மருதோன்றியின் சிவந்த ஒளி, விஷ்ணுவின் தலையை அலங்கரிக்கும் மாணிக்கமோ என எண்ணும்படி இருக்கிறது.
ஜபமுறையும் பலனும்
ஒரு வருடம் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், கூடுவிட்டுக் கூடுபாய் தலென்னும் பரகாயப் பிரவேச வித்தை சித்தியாகும்
85.
பூத, ப்ரேத, பிசாசங்களை
அகற்ற தற்காப்பு
பீஜம் ஓம் ரம் ரம் ரம் ரம் ரம் ரம்
நமோவாகம்-ப்ரூமோ நயந-ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே
அஸூயத்யத்யந்தம் யதபிஹநநாய ஸ்ப்ருஹயதே
பஸூநா-மீஸாந: ப்ரமதவந-கங்கேலி-தரவே
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே
அஸூயத்யத்யந்தம் யதபிஹநநாய ஸ்ப்ருஹயதே
பஸூநா-மீஸாந: ப்ரமதவந-கங்கேலி-தரவே
பாதமலர்கள்-பிசாசு
பய
நீக்கம்
அரியமென் காவில் நீபுக்கு அசோகினிற் பாத மேற்ற
உரிய நம் பதத்தை ஈதோ உறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கும் இயல்பினைக் கேட்டும் யானுன்
வரிமலர்ப் பாதம் போற்றும் வளமினிது இனிது மாதே.
உரிய நம் பதத்தை ஈதோ உறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கும் இயல்பினைக் கேட்டும் யானுன்
வரிமலர்ப் பாதம் போற்றும் வளமினிது இனிது மாதே.
பொருள்: தாயே! கண்களுக்கு
மகிழ்ச்சி தரக்கூடியவையாயும், பிரகாசம் பொருந்தியவையாயும், ஈரமரு தோன்றியால் பூசப்பட்ட செம்பஞ்சுக் குழம்பின் சிவந்த ஒளி மின்னுவதாயும் உள்ள உன் திருவடிகளுக்கு நமஸ்காரம் செய்கிறோம். இத்தகைய சிறப்பு மிகுந்த உன் திருவடிகளினால் உதைக்கப்பட வேண்டுமென நந்தவனத்தில் உள்ள
அசோக மரங்கள் காத்துக் கிடப்பதையறிந்து பசுபதியான பரமசிவன் பொறாமைப்படுகிறார். உயர் ஜாதிப் பெண்கள் தம் கால்களால் அசோக மரத்தை உதைத்தால் அது புஷ்பிக்கும் என்பது மரபு.
ஜபமுறையும்
பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், பூதம், ப்ரேதம்,
பிசாசு முதலி யவைகளை ஓட்டவும் மாரணம் செய்யவும் சக்தியுண்டாகும்
86.
பிசாசுகளை
ஓட்ட பீஜம் ஓம் யம் யம் யம் ஸ்ரீம்
ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலந-மத வைலக்ஷ்யநமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராதந்த: ஸல்யம் தஹநக்ருத-முந்மூலிதவதா
துலாகோடிக்வாணை; கிலிகிலித-மீஸாந-ரிபுணா
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராதந்த: ஸல்யம் தஹநக்ருத-முந்மூலிதவதா
துலாகோடிக்வாணை; கிலிகிலித-மீஸாந-ரிபுணா
மன்மதன்
வெற்றி-பகைவர்
தோல்வி
மறு மடந்தையை மொழிய நின்பத மலர் வெகுண்டு அரன் நுதலிலோர்
முறையறைந்திட விழியிலும் பட முது பழம் பகை கருதிவேள்
இறையை வென்றனன் விழியை வென்றனன் என முழங்கிய குரலெனாது
அறை சிலம் பெழும் அரவமென்பதென் அருண மங்கல கமலையே.
முறையறைந்திட விழியிலும் பட முது பழம் பகை கருதிவேள்
இறையை வென்றனன் விழியை வென்றனன் என முழங்கிய குரலெனாது
அறை சிலம் பெழும் அரவமென்பதென் அருண மங்கல கமலையே.
பொருள்: பார்வதித் தாயே! உன் திருவடிகளால் உதைபட வேண்டுமென்ற ஆசையால் பரமசிவன், தான் வேறொரு பெண்ணைக் காதலிப்பது போல் நடித்து, அவள் பெய ரால் உன்னை அழைத்து, பிறகு
உன்னிடம் பயந்தவர்போல் உன்னை வணங்குகிறார். நீ கோபத்தால் அவர் நெற்றிக்கண்ணில் உதைத்தாய். இதைக்
கண்ணுற்ற மன்மதன், நெற்றிக் கண்ணால் தன்னை எரித்த வெகுநாளைய கோபத்தை விட்டு, உன்
கால் தண்டையின் கிலி கிலி ஒலியால், ஜெயித்தேன்,
ஜெயித்தேன் என்று வெற்றியொலி எழுப்புகிறான் போலும்!
ஜபமுறையும் பலனும்
21 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எந்தவிதமான பிசாசாக இ ருந்தாலும் ஓட்டி விடலாம் என்பது நம்பிக்கை. கும்ப ஜலத்தில் ஜபித்து முழுக்காட்டவும்.
87.
பாம்பு
முதலான பயம்
நீங்க. மனமத ஜயம் குபேர அனுக்ரஹம் பெற பீஜம் ஓம்
ஐம் ஹ்ரீம் ஸர்ப ஸார்ப மம்
ஹிமாநீ ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சதுரௌ
நிஸாயாம் நித்ராணம் நிஸி சரமபாகே ச விஸதௌ
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரிய-மதிஸ்ருஜந்தௌ ஸமயிநாம்
ஸரோஜம் த்வத்பாதௌ ஜநநி ஜயதஸ்-சித்ரமிஹ கிம்
நிஸாயாம் நித்ராணம் நிஸி சரமபாகே ச விஸதௌ
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரிய-மதிஸ்ருஜந்தௌ ஸமயிநாம்
ஸரோஜம் த்வத்பாதௌ ஜநநி ஜயதஸ்-சித்ரமிஹ கிம்
பாதத்தாமரை-பாம்பு
வசியம் (தமிழ்)
இம நெடுங்கிரி உலவியுங் கவின் எழும் நிரந்தர மலரு மேல்
அமர் பெருந் திரு அருளும் நின்பத அருண முண்டக மனையதோர்
கமல மென்பது பனியில் வெந்திதழ் கரிய கங்குலின் முகுளமாய்
விமலையன் திரு மனை யெனும் பெயர் விளைவது ஒன்றல முதல்வியே.
அமர் பெருந் திரு அருளும் நின்பத அருண முண்டக மனையதோர்
கமல மென்பது பனியில் வெந்திதழ் கரிய கங்குலின் முகுளமாய்
விமலையன் திரு மனை யெனும் பெயர் விளைவது ஒன்றல முதல்வியே.
பொருள்: அம்பிகையே! தாமரை
மலர்கள் பனியில் கருகிவிடக் கூடியவை. ஆனால் உன் திருவடிகளாகிய தாமரை மலர்களோ பனிமலையான இமாசலத்திலேயே காலையிலும் மாலையிலும் சற்றும் சுருங்காமல் மலர்ச்சியுடன் காணப்படுபவை. தாமரை
இரவு நேரங்களில் உறங்குபவை போல இதழ்களை மூடக் கொள்பவை. உன்
திருவடிகள் இரவிலும், இரவு முடிந்த பின்னரும் கூட எப்போதும் மலர்ந்து காணப்படுகின்றன. தாமரை திருமகளான லக்ஷ்மி வாசம் செய்யும் இருப்பிடம். ஆனால் உன் திருவடிகளாகிய தாமரைகளோ வழிபடும் அடியவர்கட்கெல்லாம் அளவற்ற செல்வத்தை (லக்ஷ்மியையே) அள்ளித்
தருபவை. எனவே
உன் பாத கமலங்கள் தாமரை மலர்களை வென்று விட்டன என்பதில் என்ன அதிசயம்?
ஜபமுறையும் பலனும்
16 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், பாம்புகளால் ஏற்படும் பயம் நீங்கும்
88.
மிருகங்களை
ஆகர்ஷிக்க பீஜம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம்
பதம் தே கீர்த்தீநாம் ப்ரபத மபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடிந-கமடீ-கர்ப்பர-துலாம்
கதம் வா பாஹுப்யா-முபயமநகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா
கதம் நீதம் ஸத்பி: கடிந-கமடீ-கர்ப்பர-துலாம்
கதம் வா பாஹுப்யா-முபயமநகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா
பாதங்களின்
மென்மை-கொடிய
மிருகங்களின்
வசியம் (தமிழ்)
பஞ்சழுத்தினும் வாடும் நின்பத பங்கயத்தினை ஒப்பெனா
விஞ்சை கற்றவர் வன் புறக்கமடத்தை வீணில் வியப்பராம்
அஞ்சனப் புயல் தங்கை நின்வரர் அம்மி மீதிலும் வைப்பராம்
வஞ்சகக் கொடு நெஞ்சரத்தனை வல்லரல்லர் நினைக்கினே.
விஞ்சை கற்றவர் வன் புறக்கமடத்தை வீணில் வியப்பராம்
அஞ்சனப் புயல் தங்கை நின்வரர் அம்மி மீதிலும் வைப்பராம்
வஞ்சகக் கொடு நெஞ்சரத்தனை வல்லரல்லர் நினைக்கினே.
பொருள்: தேவியே! உன்
திருவடிகளின் நுனி அடியவர்களைக் காப்பதெனும் புகழுக்கு உறைவிடமாயுள்ளது. அடியவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குச் சிறிதும் இடமளிக்காமல் காப்பவை. கருணையின் பிறப்பிடமான மென்மையான இத்தகை உன் திருவடிகளை கவிகள் சிலர் எப்படித்தான் ஆமையின் கடினமான முது÷ காட்டிற்குச் சமமானவை என வர்ணித்தார்களோஅவை சிவபிரான் உன்னைத் திருமணம் புரிந்த நேரத்தில் தன் இனிய கரங்களால் மெதுவாக எடுத்து அம்மிக்கல்லின் மீது வைத்த மெத்தென்ற மெல்லிய பாதங்கள் ஆயிற்றே.
ஜபமுறையும் பலனும்
6 மாதங்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், சிம்மம், புலி போன்ற கொடிய மிருகங்களையும் வசமாக்கி அடக்கியாளலாம்
89.
தீராத
வியாதிகள்
நீங்க பீஜம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஸஸிபி:
தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
பலாநி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய-கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ஸ்ரியமநிஸ-மஹ்நாய தததௌ
தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
பலாநி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய-கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ஸ்ரியமநிஸ-மஹ்நாய தததௌ
கால்
நகங்கள்-வியாதிகள்
நீங்க
அற்றவர்க்கருள் செய்யும் அம்மை! நின் அற்புதப்பதம் அம்பொன் நாடு
உற்றவர்க்கருள் பொன் தருத்தர ஊடறிந்திலம் என்னவே
முற்று பொற்பர மாதர் கைத்தலம் உண்ட கங்குவி வெண்ணிலா
நற்றிறத் தொடு நாடி நாடி நகைக்க வாளுகி ரென்பரே.
உற்றவர்க்கருள் பொன் தருத்தர ஊடறிந்திலம் என்னவே
முற்று பொற்பர மாதர் கைத்தலம் உண்ட கங்குவி வெண்ணிலா
நற்றிறத் தொடு நாடி நாடி நகைக்க வாளுகி ரென்பரே.
பொருள்: சண்டிகா தேவி என்னும் பெயர் கொண்ட தாயே! தேவலோகத்திலுள்ள கற்பக மரங்கள், தம்
தளிர்க்கரங்களால், சொர்க்கவாசிகளான தேவர்களுக்கு அவர்கள் விரும்பும்
பலன்களை அளிப்பவை. ஆனால் உன் திருவடிகளோ, ஏழை
எளியவர்களுக்கும் கூட, அவர்கள்
கோரிய கணத்தில் நிறைந்த செல்வத்தை வாரி வழங்குபவை. உன் கால்களின் நகங்கள் தேவ கன்னிகைகளின் கைகளாகிய தாமரை மலர்களையே மூடிக்கொள்ள செய்யும் சந்திரர்களைப் போன்றவை. எனவே
கற்பகத் தருக்கள் தம் கைகளால்
கொடுப்பனவற்றை நீ உன் திருவடிகளின் நகங்களாலேயே அளிக்கிறாயே!
ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், தீராத வியாதிகளெல்லாம் நீ ங்கிச் சுகமுண்டாகும்
90.
பில்லி, சூன்யம்,
ஏவல்
நீங்க. ஸர்வவித க்ஷுத்ர ப்ரயோக நிவ்ருத்தி
ஸர்வகார்ய ஜயமடைய பீஜம் ஓம் க்ஷாம் க்ஷாம் க்ஷீய க்ஷீய ஹ்ரீம் க்ஷும் ஓம்
ததாநே தீநேப்ய: ஸ்ரியமநிஸ-மாஸாநுஸத்ருஸீம்
அமந்தம் ஸெளந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி
தவாஸ்மிந் மந்தார-ஸ்தப-ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜந்-மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்
அமந்தம் ஸெளந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி
தவாஸ்மிந் மந்தார-ஸ்தப-ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜந்-மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்
பாதங்கள்-துர்மந்திர
சேதனம்
அன்பினர் இரப்பதின் இரட்டியருள் செய்யும்
நின்பத தருத்துணர் நிறைந்தொளிர் வனப்பாம்
இன்பமுறு தேன் முழுகும் என் இதய வண்டின்
தன்புளக மெய்க்களி தழைக்க அருள் தாயே.
நின்பத தருத்துணர் நிறைந்தொளிர் வனப்பாம்
இன்பமுறு தேன் முழுகும் என் இதய வண்டின்
தன்புளக மெய்க்களி தழைக்க அருள் தாயே.
பொருள்: தேவி! உன்
பாதக்கமலங்கள் எப்போதும் ஏழை, எளியவர்க்கெல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்ப அளவற்ற செல்வத்தைத் தந்தருள்பவை. அதிகமான
அழகிய மகரந்தத் தேனைப் பெருகியோடச் செய்பவை. கற்பகத்
தருவின் பூங்கொத்துப் போலுள்ளவை. இத்தகைய
உன் பாதக்கமலங்களில், ஐம்புலன்கள், மனம்
ஆகிய ஆறு
கால்களுடன் புகுந்து உறையும் வண்டின் தன்மையை என் ஜீவன் அடைவதாக!
ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், பில்லி, சூன்யம், ஏவல் முத லியவைகள் எல்லாம் நீங்கி விடும்
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது. இது
81 முதல் 90 வரை உள்ளது. இதன் தொடர்ச்சி பார்க்கவும்.
புரோகிதர், ஜோதிடர். G.V.
மணிகண்ட ஷர்மா - மேற்படி விபரம் திருத்தம் வேண்டும் என்றால் உங்கள்
கருத்துக்களை எழுதவும்.
No comments:
Post a Comment