ஸௌந்தரிய லஹரி
சவுந்தரிய
லஹரி
ஆதிசங்கரர்
அருளியது.
51.
புகழ்
பெற, ஸர்வஜன வச்யம் ஸர்வ காமபலப்ரதம்
பீஜம் ஓம் ஐம் க்லீம் க்லீம் க்லீம் ஸ்ரீம்
ஸிவே ஸ்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா
ஸரோஷா கங்காயாம் கிரிஸநயநே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ-ஸௌபாக்யஜநநீ
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜநநி த்ருஷ்டி: ஸகருணா
ஸரோஷா கங்காயாம் கிரிஸநயநே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ-ஸௌபாக்யஜநநீ
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜநநி த்ருஷ்டி: ஸகருணா
தேவியின்
பார்வையில்
எண்
ரசங்கள்-மக்கள்
வசியம்
அடைய (தமிழ்)
அரனிடத்தில் பேரின்பம் அருளும், அவனல்லார்
பால்
அருவருக்கும், அவன் முடிமேல், அணி நதியைச் சீறும்
பரவு நுதல் விழியழல் முன் பார்த்தில போல் அதிசயிக்கும்,
பணியான பணிவெகுளப் பயந்தன போல் ஒடுங்கும்
விரைமுளரிப் பகைதடிந்து வீராதம் படைக்கும்
வினவு துணைச் சேடியர்க்கு விருந்து நகை விளைக்கும்
இரவு பகல் அடிபரவும் எளியனைக் கண்டு அருள் புரியும்
இத்தனையோ படித்தன உன் இணை விழிகள் தாயே.
அருவருக்கும், அவன் முடிமேல், அணி நதியைச் சீறும்
பரவு நுதல் விழியழல் முன் பார்த்தில போல் அதிசயிக்கும்,
பணியான பணிவெகுளப் பயந்தன போல் ஒடுங்கும்
விரைமுளரிப் பகைதடிந்து வீராதம் படைக்கும்
வினவு துணைச் சேடியர்க்கு விருந்து நகை விளைக்கும்
இரவு பகல் அடிபரவும் எளியனைக் கண்டு அருள் புரியும்
இத்தனையோ படித்தன உன் இணை விழிகள் தாயே.
பொருள்: தாயே! உன்னுடைய
பார்வையில் எண்வகை ரஸங்களும் பொதிந்துள்ளன. அதாவது,
சிவபிரானிடம் மட்டும் உன் பார்வை சிருங்கார ரஸத்தைப் பிரதிபலிப் பதாகவும், அவரைத் தவிர மற்றவர்களிடம் வெறுப்பைக் காட்டுவதாகவும், கங்கா தேவியிடம் கோபமுடையதாகவும், சிவனின் திருவிளையாடல்களில் வியப்புடைய தாகவும், சிவன் அணிந்துள்ள பாம்புகளிடம் பயமுடையதாகவும், தாமரை மலரை விடச் சிவந்தும், வீர ரஸம் ததும்புவதாகவும், தோழிகளிடம் இனிய நகைச்சுவை உடையதாகவும்
என்னிடம் கருணை நிரம்பியதாகவும் விளங்குகிறது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், நல்ல புகழ் உண்டாகும். (சந் தனத்தின் மீது நீண்ட சதுரம் எழுதி, அதன் நடுவில் க்லீம் என்ற மூன்று முறை எழுதி, பொட்டு இட்டுக் கொண்டு உடலில் பூசிக் கொள்ளவும்.) சர்வஜன வசியம் உண்டாகும்
52.
கண்
நோய், காது
நோய்
நீங்க பீஜம் ஓம் ரம் ஸ்ரீம்
கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம் பேத்துஸ்-சித்தப்ரஸம-ரஸ-வித்ராவண-பலே
இமே நேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட-ஸ்மரஸர-விலாஸம் கலயத:
புராம் பேத்துஸ்-சித்தப்ரஸம-ரஸ-வித்ராவண-பலே
இமே நேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட-ஸ்மரஸர-விலாஸம் கலயத:
மன்மத
பாணங்களைப்
போன்ற
கண்கள்-காமம்
வெல்ல, காது, கண்களின்
நோய்கள்
நீங்க (தமிழ்)
இகல் பொரக் குழையை முட்டும் இமைமயிர் ஒழுங்கிற்றூவல்
நிகராறு நித்தர் யோகம் நீக்கி வெம் போகம் நல்கும்
சிகர வெற்பரசன் தொல்லைத் திருமரபு என்னும் தெய்வம்
மகுட மாமணி நின் கண்கள் வயமதன் வாளி தானே.
நிகராறு நித்தர் யோகம் நீக்கி வெம் போகம் நல்கும்
சிகர வெற்பரசன் தொல்லைத் திருமரபு என்னும் தெய்வம்
மகுட மாமணி நின் கண்கள் வயமதன் வாளி தானே.
பொருள்: அம்பிகையே! மலையரசனின்
குலவிளக்கே! உன்
திருவிழிகள் இரண்டும் காதுகள் வரை நீண்டிருப்பதாலும், பாணங்களின் இருபுறமும் கட்டப்படும் இறகுகளைப்
போன்ற இமை உரோமங்களைக் கொண்டிருப்பதாலும், முப்புரங்களையும் எரித்த சிவபிரானின் மனத்தில் சாந்தியை விலக்கி, சிருங்கார நினைவைத் ÷ தாற்றுவிப்பதை நோக்கமாய்க் கொண்டு காது வரை இழுக்கப்பட்ட மன்மத பாணத்தையும் நினைவுபடுத்துபவை போல உள்ளன.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், கண்களின் பார்வை ம ங்குதல், எரிச்சல், காதுகளில் சீழ் வடிதல், குத்துதல் போன்ற நோய்களெல்லாம் நீங்கும்
53.
சகல
காரியங்களும்
வெற்றி
பெற. தீபம் ஏற்றி நல்லது கெட்டது தெரிய
ப்லகாச மாக தீபம் எரிந்தால் நல்லது இல்லாவிடில் விபரீதம் மாக நடக்கும் என்று அறிக.
- பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்ஜந-தயா
விபாதி த்வந்நேத்ர-த்ரிதய-மித-மீஸாந-தயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண ஹரி-ருத்ரா-நுபரதாந்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரய்மிவ
விபாதி த்வந்நேத்ர-த்ரிதய-மித-மீஸாந-தயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண ஹரி-ருத்ரா-நுபரதாந்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரய்மிவ
முக்குணங்கள்
படைத்த
கண்கள்-தேவி
தோன்ற, உலகையாள
(தமிழ்)
வரிவிழிச் செம்மை வெண்மை வனப்புறு கருமை மூன்றும்
எரிதெறு கற்ப காலத்து இறந்த முப்பொருளும் தோன்றும்
கருஎனக் குணங்கள் மூன்றின் காரணம் என்னப் பெற்றால்
அரு மறைப் பொருளே உன்றன் அருளலாது உலகம் உண்டோ.
எரிதெறு கற்ப காலத்து இறந்த முப்பொருளும் தோன்றும்
கருஎனக் குணங்கள் மூன்றின் காரணம் என்னப் பெற்றால்
அரு மறைப் பொருளே உன்றன் அருளலாது உலகம் உண்டோ.
பொருள்: பரமேசுவரனின் அன்புக்குரியவளே, நீ விளையாட்டிற்காகக் கண்களில் மையைத் தீட்டியிருக்கிறாய். எனவே,
உன்னுடைய மூன்று கண்களும் சிவப்பு, வெளு ப்பு, கருப்பு என்னும் மூன்றும் வர்ணங்களைக் கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்தால், பிரளய காலத்தில் உன்னில் அடங்குகிற பிரம்மா, விஷ்ணு,
ருத்திரன் என்னும் ÷ தவர்களை மறுபடியும் படைப்பதற்காக முறையே ரஜோகுணம், ஸத்வகுணம்,
தமோகுணம் என்பவைகளை உன் கண்கள் தாங்குகின்றனவா என்று எண்ணத் ÷ தான்றுகிறது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், தேவியின் அருள் கிடைக்கும். குத்து விளக்கேற்றி அதனடியில் ஜபம் செய்ய வேண்டும். சகல காரியங்களும் அனுகூலமாகும்
54. துஷ்ட
ரோகங்கள்
நீங்க. யோனி ரோகம் நிவாரணம் பெற
( மர்ம ஸ்தான வியாதி நிவர்த்தியாக.) பீஜம் ஓம்
ஸாம் ஸாம் ஸ்ரீம்
பவித்ரீ-கர்த்தும் ந: பஸுபதி-பராதீந-ஹ்ருதயே
தயாமித்ரைர்-நேத்ரை-ரருண-தவல-ஸ்யாம ருசிபி:
நத: ஸோணோ கங்கா தபந-தநயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்த்தாநா-முபநயஸி ஸம்பேத-மநகம்
தயாமித்ரைர்-நேத்ரை-ரருண-தவல-ஸ்யாம ருசிபி:
நத: ஸோணோ கங்கா தபந-தநயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்த்தாநா-முபநயஸி ஸம்பேத-மநகம்
கண்களின்
வர்ணனை-உலக
பீடை
நீங்க (தமிழ்)
அம்மை நின்கருணை பொங்கி அலையெறி நயன வேலை
மும்மணி கெழும் உன் தொண்டர் மும்மலம் களைய மூழ்கச்
செம்மை தன் சோணையாறு தெளிகங்கை யமுனை மூன்றும்
தம்மயத் தொடும் வந்துற்ற தன்மை ஈதென்பர் மிக்கோர்.
மும்மணி கெழும் உன் தொண்டர் மும்மலம் களைய மூழ்கச்
செம்மை தன் சோணையாறு தெளிகங்கை யமுனை மூன்றும்
தம்மயத் தொடும் வந்துற்ற தன்மை ஈதென்பர் மிக்கோர்.
பொருள்: பரமசிவனிடம் உள்ளத்தை அர்ப்பணித்த தாயே! உன்னுடைய கண்களில் சிவப்பு, வெளுப்பு,
கருப்பு என்னும் மூன்றுவிதமான ரேகைகள் வெவ்வேறு வழியாகச் செல்கின்றன. அவைகள்
மேற்கு நோக்கிச் செல்லும் சிவப்பு வர்ணமுள்ள சோணா நதி, கிழக்கு
நோக்கிச் செல்லும் வெளுப்பான கங்கை, கிழக்கு நோக்கிச் செல்லும் கருப்பு வர்ணமுள்ள யமுனை இவைகளின் சங்கமத்தை எங்களைப் புனிதம் செய்வதற்காக அமைத்திருக்கிறாய் என்றே எண்ணுகிறேன்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் சூதக நோய் முதலிய கொடிய நோய்களெல்லாம் நீங்கும்
55.
எதிரிகளின்
பயம்
நீங்க, சத்ரு மரணமடைய, அண்டரோக நிவாரணம் பெற பீஜம் ஓம் ப்ளும் ப்ளும்
நிமேஷோந் மேஷாப்யாம் ப்ரலய-முதயம் யாதி ஜகதீ
தவேத்யாஹுஸ் ஸந்தோ தரணிதர-ராஜந்ய-தநயே
த்வதுந்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மஸேஷம் ப்ரலயத:
பரித்ராதும் ஸங்கே பரிஹ்ருத-நிமேஷாஸ்-தவ த்ருஸ:
தவேத்யாஹுஸ் ஸந்தோ தரணிதர-ராஜந்ய-தநயே
த்வதுந்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மஸேஷம் ப்ரலயத:
பரித்ராதும் ஸங்கே பரிஹ்ருத-நிமேஷாஸ்-தவ த்ருஸ:
கண்கள்
இமையாது
இருக்கும்
காரணம்-அருள்
பாலிக்கும்
சக்தி, எல்லா
வியாதிகள்
அகல (தமிழ்)
இணைவிழி இமையா நாட்டம் எய்தியது அலரத் தோன்றும்
பணை நெடும் புவனம் இந்தப் பார்வை சற்று இமைக்குமாயில்
துணையிழந்து அழிவதெண்ணித் துணிந்த நின் கருணை என்றால்
கணையினும் கொடியது என்னக் கடவதோ கடவுள்மாதே.
பணை நெடும் புவனம் இந்தப் பார்வை சற்று இமைக்குமாயில்
துணையிழந்து அழிவதெண்ணித் துணிந்த நின் கருணை என்றால்
கணையினும் கொடியது என்னக் கடவதோ கடவுள்மாதே.
பொருள்: மலையரசனின் மகளே! உன் கண்ணின் இமைகளை மூடுவதாலும், திறப்பதாலும் உலகம் அழிவதும், மீண்டும்
தோன்றுவதும் நிகழ்வதாகச் சான்றோர் கூறுகிறார்கள்.
உன் கண்கள் திறப்பதால் தோன்றும் இந்த உலகம் முழுவதையும், அழியாமல்
காப்பதற்காகவே உன் கண்கள் இரண்டும் இமைக்காமலே இருக்கின்றனவா என நான் எண்ணுகிறேன்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2500 தடவை ஜபித்து வந்தால், நம்மை அழிக்க நினைக்கும் பகைவன் அழிவான். விரைவாதம் முதலான அண்ட நோய்களும் நீங்கும்
56.
நல்ல
நண்பர்கள்
கிடைக்க. காராக்ரஹவாஸம் சுலபமாக நீங்க
விலங்குகள் விலக கதவு சங்கிலி தானே தெரிக்கவும். பீஜம் ஓம் யம் யம் யம் இம்
தவாபர்ணே கர்ணே-ஜப-நயந-பைஸுந்ய-சகிதா
நிலீயந்தே தோயே நியத-மநிமேஷா: ஸபரிகா:
இயஞ் ச ஸ்ரீர்-பத்தச்சத-புட-கவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிஸி ச விகடய்ய ப்ரவிஸதி
நிலீயந்தே தோயே நியத-மநிமேஷா: ஸபரிகா:
இயஞ் ச ஸ்ரீர்-பத்தச்சத-புட-கவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிஸி ச விகடய்ய ப்ரவிஸதி
அழகினால்
வெல்லும்
கண்கள்-விடுதலை
பெற, கண்
நோய்
நீங்க
இடம் படர் கொடியே நின்கண் இருசெவிக்கு உரைப்பது ஏதென்று
அடர்ந்து எழு கயலின் கண்கள் அடைப்பில பயப்பட்டு அம்மா
கடும்பகல் கமலவீடும் கங்குல் வாய் நெய்தல் வீடும்
அடைந்தனள் கமலை ஒன்றொன்று அடைப்பன கண்டு கொண்டாய்.
அடர்ந்து எழு கயலின் கண்கள் அடைப்பில பயப்பட்டு அம்மா
கடும்பகல் கமலவீடும் கங்குல் வாய் நெய்தல் வீடும்
அடைந்தனள் கமலை ஒன்றொன்று அடைப்பன கண்டு கொண்டாய்.
பொருள்: அபருணா எனப் பெயர் பெற்ற தாயே! உன்
கண்கள் உன் காதுகளின் அருகில் சென்று கோள் செய்கின்றனவோ என்ற பயத்தால் உன்னைப் போல் இமைக்கொட்டாத மீன்கள் தண்ணீரில் மறைந்து விடுகின்றன. இந்த
உன் கண்களிலுள்ள ஒளியாகிய லக்ஷ்மி விடியற்காலையில் இதழ்களாகிய கதவுகளால் மூடப்பெறும் கருநெய்தல்
புஷ்பத்தை விட்டு அகல்வதைப் போலவும், மறுபடியும் இரவில் அந்த இதழ்களைத் திறந்து கொண்டு உள்ளே புகுவதைப் போலவும் தோன்றுகிறது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 20,000 தடவை ஜபித்து வந்தால், தடைகள் விலகும். பந்த விமோசனம் உண்டாகும்
57.
ஸகல சுபிட்சம்
ஏற்பட
பீஜம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
த்ருஸா த்ராகீயஸ்யா தரதலித-நீலோத்பல-ருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநி-ரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர:
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநி-ரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர:
நிலவென
பொழியும்
அருள்-எல்லா
நன்மையுடைய
(தமிழ்)
நெடிய கண் கரிய நெய்தல் நிறையருள் சலதி எய்தாக்
கொடியனேன் பிறவித்துன்பக் குறைகடல் கடந்து மூழ்க
விடின் அதின் குறைவதுண்டோ மெத்தவர்க்கு ஒழிந்துறாதோ
கடிநகர் நிலவு காட்டிற் காயுமே கருணை வாழ்வே.
கொடியனேன் பிறவித்துன்பக் குறைகடல் கடந்து மூழ்க
விடின் அதின் குறைவதுண்டோ மெத்தவர்க்கு ஒழிந்துறாதோ
கடிநகர் நிலவு காட்டிற் காயுமே கருணை வாழ்வே.
பொருள்: சகல மங்களங்களையும் அளிப்பவளே! உன்
கடைக்கண் பார்வை சற்றே மலர்ந்த கருநெய்தல் புஷ்பம் போல் விளங்குகின்றது. காது வரை நீண்டுள்ளது. உன்னை
நெருங்காமல் உள்ள இந்த ஏழையை அந்தப் பார்வையால் தயவு செய்து ஸ்நானம் செய்துவை. அதனால் நான் புண்ணியமும் செல்வமும் பெறுவேன். இதனால்
உனக்கு எந்தக் குறையும் இல்லை. சந்திரன்;
காட்டிலும், அரண்மனையிலும் பாரபட்சமின்றி ஒரே விதமாகத்தானே காய்கின்றான்
ஜபமுறையும் பலனும்
6 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 25,000 தடவை ஜபித்து வந்தால், ஒவ்வொருவருக்கும் வீடு, வாகனம், மனை,
மனைவி முதலான ஸகல சுகங்களும் உண்டாகும். நாட்டில் சுபிட்சம் ஏற்படும்
58.
புகழ்
பெறவும்,
நோய்
நீங்கவும்
பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம்
அராலம் தே பாலீயுகல-மகராஜந்யதநயே
ந கேஷா-மாதத்தே குஸுமஸர-கோதண்ட-குதுகம்
திரஸ்சீநோ யத்ர ஸ்ரவணபத-முல்லங்க்ய விலஸந்
அபாங்க-வ்யாஸங்கோ திஸதி சரஸந்தாந-திஷணாம்
ந கேஷா-மாதத்தே குஸுமஸர-கோதண்ட-குதுகம்
திரஸ்சீநோ யத்ர ஸ்ரவணபத-முல்லங்க்ய விலஸந்
அபாங்க-வ்யாஸங்கோ திஸதி சரஸந்தாந-திஷணாம்
கடைக்கண்
பார்வை-காமனை
வெல்ல, நோய்
நீங்க (தமிழ்)
கருங்குழல் நுதற்கட் பின்னற் கவின் கடைக் கபோலந் தாழ்ந்த
அருங்குழை கடந்த கண்ணின் அயிற்கடை அனங்கசாப
நெருங்குறத் தொடுத்த ஏவின் நிமிர்தலை ஏய்க்கும் என்றால்
மருங்கில் பொற்றிருவே யாருன் மதர்விழி பரவ வல்லார்.
அருங்குழை கடந்த கண்ணின் அயிற்கடை அனங்கசாப
நெருங்குறத் தொடுத்த ஏவின் நிமிர்தலை ஏய்க்கும் என்றால்
மருங்கில் பொற்றிருவே யாருன் மதர்விழி பரவ வல்லார்.
பொருள்: பர்வதராஜனின் புத்திரியே! வளைந்த கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட இரு பகுதிகளையும் பார்த்தால், மலர்ப்
பாணங்களையுடைய மன்மதனின் வில் போன்ற தோற்றத்தை யாருக்குத்தான் ஏற்படுத்தாது உண்மையில் குறுக்காகச் செல்லும் உன் கடைக்கண் பார்வை, காதுகளின்
வழியே ஊடுருவிப் பாய்வது, மன்மதன்
பாணங்களைப் பயன்படுத்துவதைப் போன்றுதானே உள்ளது (அம்பிகையின்
கடைக்கண் பார்வை சகல நலன்களையும் நல்கக்கூடியது.)
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எங்கும் செல்வாக்கும், புகழும் உண்டாகும். சகல நோய்களும் நீங்கும்
59.
மனைவியின்
அன்பைப்
பெற. ஸர்வஜன , ஸ்த்ரீ புருஷர்கள் வச்யம்
பீஜம் ஐம் க்லீம் சௌ:
ஸ்புரத்கண்டாபோக-ப்ரதிபலித-தாடங்க-யுகளம்
சதுஸ்சக்ரம் மந்யே தவமுகமிதம் மந்மதரதம்
யமாருஹ்ய த்ருஹ்யத்-யவநிரத-மர்கேந்து-சரணம்
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே
சதுஸ்சக்ரம் மந்யே தவமுகமிதம் மந்மதரதம்
யமாருஹ்ய த்ருஹ்யத்-யவநிரத-மர்கேந்து-சரணம்
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே
ரதம்
போன்ற
முகம்-சர்வ
ஜன
வசியம் (தமிழ்)
தோகை நின் கபோலம் சார்ந்த துணைநிழல் சுவடும் தோடும்
ஆக இவ்வுருளை நான்கின் ஆனன விரதம் வாய்த்தோ
ஏக நன் புடவி வட்டத்து இரு சுடராழித் திண்தேர்ப்
பாகரைப்பொருது மாரன் பழம்பகை தீரப்பெற்றான்.
ஆக இவ்வுருளை நான்கின் ஆனன விரதம் வாய்த்தோ
ஏக நன் புடவி வட்டத்து இரு சுடராழித் திண்தேர்ப்
பாகரைப்பொருது மாரன் பழம்பகை தீரப்பெற்றான்.
பொருள்: ஹே தேவி! உன்னுடைய தாடகங்கள் என்னும் ஸ்ரீசக்ர ரூபமான வைரத் தோடுகள் உன் கன்னங்களில் பிரதிபலிக்கின்றன. அவைகளுடன் கூடிய உன் தி ருமுகத்தை நான்கு சக்கரங்களுடன் கூடிய மன்மதனின் ரதமெனக் கருதுகிறேன். இந்த ரதத்தில் ஏறிக் கொண்டுதான் மன்மதன் சூரியனையும் சந்திரனையும் சக்கரங்களாகக் கொண்ட பூமியாகிய ரதத்தில் ஏறி, திரிபுரங்களை அழித்த பரமசிவனை எதிர்த்துப் போரிடுகிறானோ
ஜபமுறையும் பலனும்
33 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 25,000 தடவை ஜபித்து வந்தால், மனைவியின் அன்பைப் பெறலாம், சிறந்த பதவியும் கிடைக்கும்
60. வாக்ஸித்தி ஸகல
கல்வி
அறிவு
பெற - பீஜம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸரஸ்வத்யா: ஸூக்தீ-ரம்ருத-லஹரீ-கௌஸலஹரீ:
பிபந்த்யா: ஸர்வாணி ஸ்ரவண-சுலுகாப்யா-மவிரலம்
சமத்கார-ஸ்லாகாசலித ஸிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ்-தாரை: ப்ரதிவசந-மாசஷ்ட இவ தே
பிபந்த்யா: ஸர்வாணி ஸ்ரவண-சுலுகாப்யா-மவிரலம்
சமத்கார-ஸ்லாகாசலித ஸிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ்-தாரை: ப்ரதிவசந-மாசஷ்ட இவ தே
சொல்லின்
இனிமை-வாக்கு
பலிதம், ஊமை
பேச (தமிழ்)
வேரி நாள் மலர்க்குள் வாணி விலையில் பாடல் அமுதெலாம்
சேர மாமடந்தை நின் செவிக்குணா வருத்தவே
ஆரமாலை முடியசைப்ப ஆடியெற்று குண்டலம்
பூரை பூரை யென்ற சொல் பொலிந்த ஓசை பெற்றதே.
சேர மாமடந்தை நின் செவிக்குணா வருத்தவே
ஆரமாலை முடியசைப்ப ஆடியெற்று குண்டலம்
பூரை பூரை யென்ற சொல் பொலிந்த ஓசை பெற்றதே.
பொருள்: பரமேஸ்வரனின் பத்தினியே! அமுதப் பெருக்கின் இனிமையையும் வெல்லும் வல்லமை மிக்கது உன் இனிய சொல்லமுதம். அதை
இடைவிடாது தன் காதுகளாகிய பாத்திரங்களால் பருகிக் கொண்டிருப்பவரும், அதைப் பாராட்டும் வகையில் அடிக்கடி தலையை அசைத்துக் கொண்டிருப் பவருமான சரசுவதி தேவி, தன்
காதணிகளாகிய குண்டலங்களை அசைத்து ஜணத்ஜணத் என்ற உயர்ந்த ஒலி கேட்பது, உன் சொல்லினிமையை ஆம் ஆம் என்று பாராட்டுவதைப் போல் தெரிகிறது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், ஸகலகலா ஞானமும், சென்றவிடமெல்லாம் செல்வாக்கும் உண்டாகும்
சவுந்தரிய
லஹரி
ஆதிசங்கரர்
அருளியது. இது 51
முதல்
60 வரை
உள்ளது. இதன் தொடர்ச்சி பார்க்கவும்.
புரோகிதர், ஜோதிடர். G.V.
மணிகண்ட ஷர்மா - மேற்படி விபரம் திருத்தம் வேண்டும் என்றால் உங்கள்
கருத்துக்களை எழுதவும்.
No comments:
Post a Comment