யஜுர்வேதம் - Yagur Vetham
யஜுர்
வேதத்தின்
தலை
சிறந்த
பகுதி
ஸ்ரீருத்ரம்,
யஜுர்வேத
தைத்திரீய
ஸம்ஹிதை
காண்டங்கள்
ஏழினுள், நான்காவதில்,
நடுநாயகமாக
உள்ளது
இது. பாதாதி
கேச
வர்ணனையில்,
முக்கால்
பகுதியில்
ஹ்ருதயம்
அமைவது
போல, 11
அனுவாகங்களைக்
கொண்ட
ருத்ர
ப்ரச்னத்தில்
எட்டாவது
அனுவாகத்தில்,
இருதய
ஸ்தானத்தில்,
இருப்பது
சிவ
பஞ்சாக்ஷர
மந்திரம்
மேலும்
மஹா
ம்ருத்யுஞ்ஜய
மந்திரம்
ஸ்ரீருத்ரத்தின்
11-வது அனுவாகத்தில் அமைந்துள்ளது.
இக்காரணங்களினால்,
நித்திய
பூஜையிலும்,
ஜபத்திலும்,
ஹோமத்திலும்
தொன்றுதொட்டு
ஆஸ்திகர்களால்
ஸ்ரீருத்ரம்
கையாளப்பட்டு
வருகிறது.
ஸம்ஸாரத்தளைகளை
நீக்கி
முக்திக்கு
வழிகாட்டுவதால்
இதனை
ருத்ரோபனிஷத்
என்றும்
அழைப்பர். 101
யஜுர்வேத
சாகைகளிலும்,
வேறு
பல
சாகைகளிலும்,
ஸ்ரீருத்ரம்
படிக்கப்படுவதாலும்,
நூற்றுக்கணக்கான
வடிவங்களில்
ஸ்ரீருத்ரமூர்த்தி
இங்கு
போற்றப்படுவதாலும்,
இது
சதருத்ரீயம்
என்று
சிறப்புப்
பெயர்
பெற்றுள்ளது.
மரத்தின்
வேரில்
ஊற்றும்
நீரினால்
கிளைகள்
செழிப்பதுபோல்,
ஸ்ரீருத்ர
ஜபத்தால்
எல்லா
தேவதைகளும்
திருப்தி
அடைவர்
என்கிறது
ஸூத
ஸம்ஹிதை. ஸ்ரீருத்ரஜபமே
பாவங்களுக்குச்
சிறந்த
ப்ராயச்சித்தமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
தன்
கட்டளையை
மீறி
நடந்தவர்களிடம்
கோபம்
கொண்ட
ஈச்வரன், நம்
முன்
ப்ரஸன்னராக
வேண்டும்
என்ற
ப்ரார்த்தனை
ஸ்ரீருத்ரத்தின்
முதல்
அனுவாகத்திலும்,
அவரது
ஸர்வேச்வரத்வம்,
ஸர்வசரீரத்வம்,
ஸர்வந்தர்யாமித்வம்
முதலியவற்றைக்
குறிக்கும்
நாமங்களாலான
போற்றிகள் 2 முதல் 9 வரையிலான
அனுவாகங்களிலும்,
ப்ரஸன்னரான
ஈச்வரனிடம்
இஷ்டப்
பிராப்தி
மற்றும்
அனிஷ்ட
நிவ்ருத்திக்கான
ப்ரார்த்தனை
10-லும், ருத்ரகணங்களுக்கு
நமஸ்காரம்
11-ஆம் அனுவாகத்திலும் கூறப்படுகின்றன.
சமகம்
என்பது
வரங்களை
வேண்டிச்
செய்யப்படும்
ப்ரார்த்தனையாகும்.
ஸ்ரீருத்ர
பாராயணம்
சமக
பாராயணத்துடன்
கூடித்தான்
பரிபூரண
பலனை
அளிக்கின்றது
என்பது
பெரியோர்கள்
கூற்று.
அனைத்து விபரம்
ஸ்ரீ ஸூக்தம் என்ற தலைப்பில் பார்க்கவும்.
No comments:
Post a Comment