பஞ்ச குண சிவ மூர்த்திகள்
பஞ்ச குணம்சாந்தம், ஆனந்தம், ருத்திரம், வசீகரம், கருணை என ஐந்து குணங்களையும் பஞ்ச குணம் என்கிறோம். மனிதர்களுக்கு இருப்பதைப் போல இந்தக் குணங்களை இறைவனுக்கும் பொருத்திப் பார்த்து மகிழந்தார்கள் சைவர்கள். நாமும் அந்த பஞ்ச வடிவ குண மூர்த்திகளை ரசிப்போம்.
ஆனந்த மூர்த்தி
ஆனந்தம். உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் உரியது. சிவன் தன்னுடைய ஆனந்தத்தினை வெளிபடுத்த நடனமாடும் வடவம் நடராஜர். எல்லையில்லா பெருமைகளை உடைய இந்த வடிவத்தில், சிவ ஆனந்தத்தையும், சிவ தத்துவத்தையும் ஒரு சேர உணர முடியும்.
காலமூர்த்தி
மக்களைக் காக்கும் பொறுப்பு கடவுடையது. அந்த மக்களைக் காக்கும் பொருட்டு ஈசன் எடுத்த வடிவமே கால பைரவர். அழகிய கோலத்துடன் காவலுக்கான மிருகம் நாயை வாகணமாகக் கொண்ட அற்புதக் கோலம். முழு சிவ வடிவத்தினை கால பைரவர் என்று வாழ்த்தி வணங்குகின்றனர்.
வசீகர மூர்த்தி
பிச்சாண்டவர் கோலம் வசீகரத்தின் சிகரம். தருகாவனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவம் அடக்க, அழகே உருவாய் முனிபத்தினிகளை பித்துபிடிக்க வைத்த வடிவம். பிக்ஷாடணர், பிச்சாண்டவர், பிச்சாண்டி, பிச்சை தேவன் என்றெல்லாம் அழைக்கப்படும் வடிவம் இது.
கருணா மூர்த்தி
உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் காட்சி அளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி. இறைவன் ஒரு இனிய அன்பான கணவனாய், பாசமிக்க தந்தையாய் இருக்கும் உருவம். குடும்ப உறவுகளின் மேன்மையை உலகிற்கு உணர்த்துவதற்கான ஈசன் எடுத்த வடிவம்.
சாந்த மூர்த்தி
தட்சணாமூர்த்தி வடிவத்தை குரு என்று சைவர்கள் வணங்குகிறார்கள். தென் திசையை நோக்கி ஞான வடிவினில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பது இந்த வடிவின் சிறப்பு. முனிவர்களுக்கும், மக்களுக்கும் ஞான அறிவை போதிக்கும் போதகராக ஈசன் இருக்கிறார்.
PROGITHAM
, JATHAGAM PARKA, THIRUMANA PORUTHAM ,
JATHAGAM
KANIKKA, NUMEROLOGY, GEMOLOGY
G.V.
MANIKANDA SHARMA
1/267,
MMDA Colony, J J Negar Mogappair East
Chennai
– 600 037 , Tamil
Nadu – India
Cell
: +91 9962225358 9444226039
E-mail
: gmneelamatrimony@gmail.com
No comments:
Post a Comment