WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Monday 16 May 2016

திருநெல்வேலியை சுற்றியுள்ள கோவில்கள்



திருநெல்வேலியை  சுற்றியுள்ள  கோவில்கள்  பற்றிய  விவரங்கள்
தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.
அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.
 
1.
காந்திமதி நெல்லையப்பர் கோவில்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்
இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
 
2.
சபை சிவாலயங்கள்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* சித்ர சபை - திருக்குற்றாலம்
* தாமிர சபை- திருநெல்வேலி
3. முப்பீட தலங்கள்
* அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்
* ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
* வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
4. பஞ்ச ஆசன தலங்கள்
* ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
* களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
* நான்குநேரி - திருநாகேஷ்வரர்
திருக்கோயில்
* விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
* செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்
* தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்
* சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
* கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
* தாருகாபுரம் - நீர் தலம்
* தென்மலை- காற்று தலம்
* தேவதானம் - ஆகாய தலம்
5. காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்
* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
* ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
* கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
* திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
* பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்
6. இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்
* களக்காடு- சத்யவாகீசர்
*
பத்தை - குலசேகரநாதம்
*
பதுமனேரி - நெல்லையப்பர்
*
தேவநல்லூர் - சோமநாதம்
*
சிங்கிகுளம் - கைலாசநாதம்
7. நவ சமுத்திர தலங்கள்
* அம்பாசமுத்திரம்
*
ரவணசமுத்திரம்
*
வீராசமுத்திரம்
*
அரங்கசமுத்திரம்
*
தளபதிசமுத்திரம்
*
வாலசமுத்திரம்
*
கோபாலசமுத்திரம்
*
வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
*
ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
8. பஞ்ச பீட தலங்கள்
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
* கூர்ம பீடம் - பிரம்மதேசம்
*
சக்ர பீடம் - குற்றாலம்
*
பத்ம பீடம் - தென்காசி
*
காந்தி பீடம் - திருநெல்வேலி
*
குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
9. சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)
* பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
*
அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
*
திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
*
கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
*
முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
*
தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
*
சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
*
கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
*
தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)
*
சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
*
வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
*
கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்
*
சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்
*
மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
*
ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
*
தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்
*
அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்
*
காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
*
திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)
10. வாலி வழிபட்டத் தலங்கள்
* திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
*
கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
*
தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்
*
பாபநாசம் - சூரியன்
*
சேரன்மகாதேவி - சந்திரன்
*
கோடகநல்லூர் - செவ்வாய்
*
குன்னத்தூர் - இராகு
*
முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
*
ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
*
தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
*
ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
*
சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)


11. வேறு சில ஆலயங்கள்
* இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
* நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.
* நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.
* சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.
 ஓம் நமசிவாய ஓம்  


No comments:

Post a Comment