WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 13 May 2016

ருத்ராட்சம் அணிவது பற்றி


ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும்,எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான்.

ருத்ராட்சத்தை அணிபவனும்,வழிபடுபவனும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு,தொடரவிருக்கும் அனேக கோடி பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான்.

ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும்,உடையும் தருபவனும், ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவனும் அனைத்துப்பாவங்களிலிருந்தும் விடுபட்டு, சிவலோகத்தை அடைகிறான்.

நம்பிக்கையோடும், நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்துகொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான். ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.

அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன்  மூலமும்,விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை, ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.

ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில், அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.
சண்டாளனாகப் பிறந்தவனும், ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வானாயின் அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும்.
கள் உண்பவனும், மாமிசம் உண்பவனுமாகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும்.
ருத்ராட்சமாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும், உபநிடதங்களையும் கற்றறிந்தவனைவிட சிறப்பு பெறுவான்.அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன.பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.

ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில்,அவன் இறந்தபின் ருத்ர லோகத்தை அடைகிறான்.
பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ; உண்ணக்கூடாததை உண்பவனோ யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில் அவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான்.காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கழுத்தில் அணிபவன் நூறுகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.
ருத்ராட்சத்தை அணிந்தவாறு , வேத நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில் அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது;
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத்தளை களிலிருந்து விடுபடுகிறான்.

ருத்ராட்சத்தை உடலில் அணியாவிட்டாலும்,அதைப் பூஜிப்பவனும் கூட சிவலோகம் சென்றடைந்து சிவனைப் போலவே வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.

ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில்,ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின், அது கங்கையில் நீராடியதைவிட அதிகப்புண்ணியப் பலன்களைத் தரும்.
மனிதன் மட்டுமல்ல; ஓரறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால், அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.பல்வேறு யுகங்களில் நாயும்,கழுதையும், கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.மறு ஜன்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாகப் பிறந்தன

No comments:

Post a Comment