தந்தேஸ் எனப்படும் தனத்திரயோதசி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்ய வீட்டில் செல்வ வளம் பெருகும். அக்ஷய திரிதியை நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இதே போல ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் திரயோதசி தனத்திரயோதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் பொருட்களும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 25, 2019 வெள்ளிக்கிழமை தந்தேரஸ் எனப்படும் தனத்திரயோதசி கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் இரவு 7.08 மணி முதல் 8.15 மணி வரை நல்ல நேரமாகும்.
Ad
வீட்டில் வரவு செலவு கணக்கை முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும்.
தனதிரயோதசி நாளில் தங்கம், வெள்ளி, வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள், ஆடைகள் வாங்கலாம். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும். பங்குச்சந்தைகளிலும் முதலீடுகள் செய்யலாம். பாற்கடலில் இருந்து அமிர்தம் வேண்டி கடைந்த போது அனைத்து செல்வங்களுடன் லட்சுமி தேவி அவதரித்தார்.
சிரிக்கும் குபேரன்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்று சொல்வது உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார்.
செல்வத்திற்கு அதிபதி
வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்கிறார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.
தாமரையும் சங்கும்
குபேரன் அருளாட்சி நடத்த அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். செல்வம் தரும் குபேரன் இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.
சிவன் கொடுத்த செல்வம்
குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கி அவரிடம் இருந்து யந்திரத்தை பெற்று அந்த யந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்ததால் நல்லது நடந்தது. சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார். வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
லட்சுமி கொடுத்த நிதிகள்
மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன.
குபேர பூஜை செய்ய நல்ல நாள்
பொதுவாக வெள்ளிக்கிழமைகளிலும், பூச நட்சத்திரம் வரும் நாளிலும் லட்சுமி குபேர பூஜை செய்யலாம். வளர்பிறை திரிதியை, அட்சய திருதியை நாளிலும் குபேர பூஜை செய்ய ஏற்ற நாள். அதே போல தன திரயோதசி எனப்படும் தந்தேரஸ் நாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் கணக்கின்றி செல்வம் பெருகும்.
என்ன வாங்குவது
அக்டோபர் 25, 2019 தந்தேரஸ் லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நாள். இந்த ஆண்டு லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நாள் தன திரயோதசி அக்டோபர் 25, 2019 வெள்ளிக்கிழமை இரவு 7.08 மணி முதல் 8.15 மணி வரை நல்ல நேரமாகும். இந்த நாளில் தங்கம் வெள்ளி வாங்குவது சிறப்பு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்க முடியாதவர்கள் கல் உப்பு, மஞ்சள், பச்சரிசி, சர்க்கரை, கஸ்தூரி மஞ்சள் நவதானியங்கள் வாங்க வேண்டும். அரிசி அல்லது நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை போன்ற நவதானியங்களை வாங்கலாம்.
வீட்டு உபயோகப் பொருட்கள்
வெள்ளிப்பாத்திரம் வாங்க முடியாதவர்கள் எவர்சில்வர் பாத்திரம் வாங்கலாம், லட்சுமி குபேர பூஜைக்கு தேவையான பச்சை குங்குமம், பச்சை கயிறு லட்சுமி குபேரர் காசுகள், லட்சுமி குபேரர் சிலை அல்லது படம் வாங்கலாம். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும். தனத்திரயோதசி நாளில் கஸ்தூரி மஞ்சள் வைத்து பூஜை செய்து வழிபட்டு தீபாவளி நாளில் மகாலட்சுமி பூஜை செய்து அந்த மஞ்சளில் நமது பணம் வைத்து புழங்கும் பீரோவில் வைக்க செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment