,எல்லோரும் அர்ச்சகர் ஆகலாமா?
ஒரு வேளை பின்னாளில் சமுதாய பார்வை மாறி எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம்.அப்படி இறைப்பணி செய்ய பேரவா கொண்ட வருங்கால அர்ச்சகர்களுக்கு சில கேள்விகள்:
1) அர்ச்சகம் என்பது தொழில் அல்ல. முள் மேல் நடக்கும் வேதனை. முள் குத்தும். வலியால் துடிப்பீர்கள். ஆனால் சிரித்து கொண்டே நடக்க வேண்டும். தயாரா? எந்த விதமான அரசின் சலுகைகள் கிடையாது, தினமும் பணி, ஒய்வூதியம்( சம்பளமே இல்லை ஒய்வூதியமாம்)அந்த லோன் இந்த லோன் என எந்த சலுகைகளும் இல்லை..அரசு தரும் சம்பளம் நீங்க கற்பனை கூட செய்ய முடியாது அவ்வளவு குறைவான சம்பளம்..ஆனாலும் விடுப்பு இல்லாமல் பணி....நீங்க தயாரா? அர்ச்சகர் பணி என்பது வருமானம் வரும் பெரும் கோவில்கள் மட்டுமல்ல ஆளே வராத ஆனால் நாங்கள் பூஜை நடத்தும் கோவில்களும் தான்...இங்கு அவர் நீங்க தயாரா?
2) நீங்கள் மட்டும் அர்ச்சகர் ஆகவில்லை. உங்கள் குடும்பமே அர்ச்சகர் தான்! ஆம். நான் திருவிழாகாலங்களில் சராசரியாக காலை 4 மணி முதல் இரவு 2 மணி வரை உழைக்க வேண்டும். என் குடும்பத்தினரும் என்னோடு எழுந்து என்னோடு துயல வேண்டும் -பலன் எதிர்பாராது. அப்படி இருக்க உம் குடும்பத்தினர் தயாரா?
3) பெரும்பாலான ஆலயங்களின் பல கோடி பெறுமான வைரம் தங்கம் பஞ்சலோக சிலைகள் அத்தனையும் அர்ச்சகரை நம்பியே ஒப்படைக்கப்படும். சிலை கடத்தல் மன்னன் போன்றோர் இவற்றை அபகரித்தால் போலீசில் அடி வாங்கும் முதல் நபர் அர்ச்சகர் தான். போலீஸ் அடி தாங்காமல் சிறு வயதிலேயே செவி திறனை நிரந்தரமாக இழந்த என் தந்தை போன்று நீங்கள் உங்கள் உறுப்புகளையும் உயிரையும் இழக்க தயாரா?
4) அப்படி கோவில் திருட்டு நடந்து எந்த காவாளிப்பயலோ தூக்கி கொண்டு போனாலும் அப்பவே நினைச்சேன்டா இந்த அய்யர் இதெல்லாம் செஞ்சு இருப்பான்னு என்கிற பேச்சுகளையும் கேட்டு கொண்டு அதே ஊரில் அதே தெய்வத்துக்கு தொண்டு செய்ய வேண்டும். தயாரா?
5) தெருவில் போகும்போது நீங்கள் புனிதமாய் நினைக்கும் பூணூல் அறுக்கப்படும். புகார் கொடுத்தால் கொடுத்த நாமே தாக்கபடுவோமே என்று வேறு பூணூல் மாற்றி கொண்ட அர்ச்சகர்களின் கதை எனக்கு தெரியும். அத்தகைய நிலைக்கு நீங்கள் தயாரா?
6) திருவானைக்காவில் அர்ச்சகர் புடைவை கட்டி கொண்டு தான் பூஜை செய்ய வேண்டும். ஒரு நாள் ஒரு மணி நேரம் நீங்கள் புடவை கட்டி கொண்டு வெளியில் வந்து பாருங்கள். அவர்கள் படும் அவமானங்கள் உங்களுக்கு புரியம். குடுமியும் கடுக்கணும் போட்டு கொண்டு பெண்ணினம் கலந்த ஆண் என்கிற எகத்தாள பேச்சுக்களை கேட்டு கொண்டே இறைப்பணி செய்ய தயாரா?
7) கோவிலில் திருட்டு நடந்தால் உங்களுக்கு உடல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்த காவலர்களையும் கோவிலுக்கு வந்தால், நல் உயர் பதவி பெற்று மென்மேலும் என்னை அடிக்க வகை செய்வீரே என்று இறைவனை மனதார ஆசீர்வாதம் செய்ய வைக்க வேண்டும்.முடியுமா?
8) ஒரு டிப்ளமா 3 வருஷம். இன்ஜினியரிங் 5 வருஷம். டாக்டர் படிக்க 5 வருஷம். ஒரு சர்ஜன் ஆக 7 வருஷம். ஆனால் முழு அர்ச்சகர் தகுதி பெற 14 வருஷம் பயில வேண்டும். மேலே சொன்ன டிப்ளமா எஞ்சினீர் மருத்துவர் சர்ஜனுக்கு கிடைக்கும் படிச்ச மனுஷன் என்கிற மரியாதை அர்ச்சகருக்கு உண்டா?
9) 7 வருஷ படிப்பு முடித்து சர்ஜன் ஆனவருக்கு சமபளம் ஒரு மணிக்கு ஒரு லக்ஷம். 14 வருஷம் வேதம் படித்தவனுக்கு சம்பளம் மாதம் 50 ரூபாய். அதுவும் பாக்கி வைத்துள்ளது அரசு..அதிலும் எங்களுக்கு தினப்படி உணவுக்கு கடினப்பட்டாலும், இறைவனுக்கு எப்பாடாகிலும் நிவேதனம் செய்யத் தவறாத மனப்பான்மையை கொண்ட அர்ச்சகரகளை அறிந்தது உண்டா நீங்கள்?
10) குழாயும் சட்டையும் அணிந்து கொண்டு மாதம் 5000 ரூபாய் சம்பளத்தில் அர்ச்சகத்தை விட்டு தப்பித்த அர்ச்சகர் வீட்டு பிள்ளைக்கு பெண் கொடுக்க எங்கள் ஜாதி பெற்றோர் தயார்.
25000 வருமானம் இருந்தாலும் குடுமி வைத்து இருப்பதாலும் நிரந்த வருமானம் இல்லை என்பதாலும் யாரும் பெண் கொடுப்பதில்லை. அர்ச்சகன் ஆகி விட்டதால் கல்யாணமே ஆகாமலே 50வயத்தை தாண்டிய என் அர்ச்சக சகோதரர்களுக்கு என்ன வடிகால் ? சமுதாயம் அர்ச்சகர்களை கடைசி வரை பிச்சை எடுத்து ஜீவிக்க வைத்து இருப்பது தானே இந்த இழி நிலைக்கு காரணம்?
11) எல்லா துறைகளும் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டி போராட்டம் ஆர்ப்பாட்டம் சாலைமறியல் வேலை நிறுத்தம் நடத்தியதை கேள்விபட்டு இருப்பீர்கள்...தங்கள் கோரிக்கை என்ன என முணு முணுக்க கூட தெரியாத, தமிழகத்தில் வேலை நிறுத்தம் என்ற ஒன்ற ஒன்றை மறந்து கூட அறிவிக்காத ஒரே பணி அர்ச்சகர் பணி என்பது தெரியுமா?
சுவாமியே இல்லை என்று கூறும் கயவர் கூட்டம், அந்தணர்களாகிய அர்ச்சர்களிடம் ஏன் இந்த போட்டி?
------இப்படிக்கு ஒரு ஏழை கிராமபுற ஏழை அர்ச்சகர்-------
நன்றி
No comments:
Post a Comment