அன்னையே சமயபுரத்தாயே ஆதி சக்தியே,,
உங்களை அம்மனாக, காளிதேவியாக அகிலம் அறியும். ஆனால் நீங்கள் அதிஅற்புத மருத்துவச்சி என்பதனை கடையன் அறிவேன் அம்மா. உங்களுக்கு தெறியாத மருத்துவமா இல்லை மருந்தா..??
ஏன் தாயே மௌனம் காக்கின்றீர்கள்,, மனிதர்களை பார்க்க கூட மனமில்லையா உங்களுக்கு,,
உயிர்களுக்காக பச்சைபட்டினி இருக்கும் பரமசிவன் பத்தினியாரே, பாரில் மக்கள் படும் துன்பங்கள் தெறியலயோ,,
அங்கே பெற்ற பிள்ளையையும், கருவுற்ற மனைவியையும் மருத்துவன் எட்டிநின்று பார்த்த ககைசீ தருணங்கள் ஈரக்குலை நடுங்குதம்மா,,
இன்னல் தீர்க்கும் மகமாயியே,, மயில்வாகனன் தாயாரே,, மக்களுக்கெல்லாம் நீயே தாயம்மா,,
உன்பிள்ளைகளை காவந்துசெய்வது உன் பொறுப்பல்லவா தாயே,,
பிள்ளைகள் கதறல் பெற்றவளுக்கு கேட்களயோ, வேப்பிழையின் மகிமையும் மஞ்சளின் மகிமையும் வெளிப்படும் நேரமன்றோ,,
போதும் போதும் பொறுத்தது போதும், அங்கம் நடுங்க, ஆகாசம் நடுங்க, சிங்க வாகனமேறி எழுந்துவாருமம்மா, ஆதி சக்தியே, அகிலத்தின் தாயே,, கண்ணபுர நாயகியே, அரங்கன் தமையாளே, ஆதிசிவனின் சரிபாதியே...!!!
No comments:
Post a Comment