உத்தராயண புண்யகாலம் - 2019
விளம்பி ஆண்டு - (2018-2019)
மகாசங்கராந்தி புருஷர்
(பாலவா) நாமகரணம்
துவாரங்கிசி என்ற பெயரில்
(பாலவா) ஆண்புலி வாகன பலன்கள்.
பொங்கல் திருநாள் காலை
மணி விளம்பி ஆண்டு தை திங்கள் 01-ம் நாள் 15. 01. 2019
செவ்வாய் கிழமை பொங்கள் வைக்க காலை 08. 00 மணி முதல் 09. 00 மணிக்குள்
இந்த விளம்பி ஆண்டு மார்கழி
திங்கள் 30-ம் நாள் (14-01-2019) திங்கட்கிழமை சுக்லபஷம், நவமி, அசுவனி நட்சத்திரம் 1-ம் பாதம், சித்த நாமயோகம், பாலவ நாம கரணம், குரு ஓரையில் சித்த நாமயோகம் கூடிய சுபநன் நாளில் இரவு மணி 10.43-க்கு கன்னியா லக்கினத்தில் ரிஷப சுக்கிர நவாம்சையில் சித்த யோகம் நல்ல நேரத்தில் லாப ஸ்தானத்தில் கடக
ராகு ராஜயோகம் பெற்று இருப்பதும், தேவகுரு அசுர சுக்கிரன் யோகபலம்
பெற்று ஸ்ரீ சூரிய பகவான் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.
பொங்கல் திருநாள் காலை மணி
விளம்பி ஆண்டு தை திங்கள் 01-ம் நாள் 15. 01. 2019 செவ்வாய் கிழமை பொங்கள்
திருநாள், காலை 08. 00 மணி முதல் 09. 00 மணிக்குள் சுக்கிரன் ஓரையில் கும்ப
லக்கினத்தில் புது பானை அல்லது பாத்திரம் வைத்து பொங்கல் செய்யவும். இந்த ஆண்டு
சித்தயோகத்தில் ஸ்ரீ சூரியபகவான் பிரவே
சிப்பதால் எங்கும் சுபீட்ஷம் ஏற்படும். ஐயப்ப கோவில்கள் கட்டி
குடமுழுக்கு விழா நடத்த நேரும். இவ்வாண்டு வருஷ தேவதை காமதேனு வருவதால் பால்
உற்பத்தி அளவுக்கு அதிகமாக உற்பத்தி ஆகும். கால்நடைகளுக்கு நல்ல யோகம் உண்டு.
இவ்வாண்டு சூரிய பகவான் இராஜாக
வருவதால் எங்கும் சுபீட்ஷம் ஏற்படும். வெய்யில் கொடுமை அதிக மாக இருக்கும். உலக ஜெகத் ஜாகதத்திற்கு அஷ்டம குரு நடப்பதால் ஆவணி
மாதம் நற்பலனும், இவ்வாண்டு ஏற்படும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. சந்திர
கிரகணம் மட்டும் தெரியும். மலைகளில் நல்ல மழை பொழியும். வனத்தில் உள்ள
ஜீவராசிக்களுக்கு தக்க நேரத்தில் உணவு கிடைக்கும். அரசியல் கட்சி
தொடர்புடையவர்களுக்கு மற்றும் பழம்பெரும் கட்சித் தலைவர் மற்றும் தலைவிகளுக்கு
பெருத்த ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. நடிப்புத் துறையில் உள்ள கலைஞர்கள் சிலர்
புதிய கட்சி தொடங்கி அரசியலில் களம் இறங்க நேரும். மகர சங்கராந்தி புருஷர் அசுவனி
நட்ஷத்திரத்தில் வருவதால் தனம் நாசம் ஏற்படும். பணத்திற்கு தீ பயம் உண்டாகும்.
கள்ளர் பயம் உண்டாகும். விலைவாசிகள் தீடீர் என்று குறையும். ஷேர் மார்க்கெட்
தீடீர் என சரிய நேரும். பல முக்கிய மலைகளில் தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
விவசாயம் இந்த ஆண்டு நன்றாக இருக்கும். சில முக்கிய கடல்களில் நீர் உள்வாங்குதலும், சுனாமி எச்சரிக்கை ஏற்பட
வாய்ப்பு உள்ளது. சென்னை, மகாபலிபுரம், பாண்டி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கன்னியாகுமரி, நாகர்கோவில், இலங்கை, அந்தமான் போன்ற இடங்களில்
கடுமையான சூழல்காற்று மற்றும் புயல் வீசும். மழை நன்றாக பொழியும்.
பசும் சாணத்தில் சிறிய மேடை
அல்லது கோலம் போட்டு, செம்மண் குங்குமம் இட்டு, பசும் சாணத்தில் இரு
பிள்ளையார் செய்து, மேடையில் வைத்து சிவப்பு புஷ்பம், சிவப்பு பூசணிப்பூ, அருகம்புல், அலரி பூ இவைகளால்
பிள்ளையாரை அலங்கரித்து அவர் எதிரில் சாணம் பள்ளம் அமைத்து , பால், தயிர், நெய், வாழைப்பழம், தேன் விட்டு அமைத்து
கரும்பு,
மஞ்சள்செடி கொத்து, சிவப்பு பூசணி துண்டு, கிழங்கு வகைகள், மொச்சை, அவரை, பழவகைகள் வைத்து ஸ்ரீ
சூரியபகவான் கோலமிட்டு, புதிய செம்மண் இட்டு, இரு குத்துவிளக்கு ஏற்றி காலை 07. 00 - 08. 00 - க்குள் ஸ்ரீ சூரியபகவானுக்கு பூஜை
செய்து ஆதித்திய ஹ{ருதய ஸ்தோத்திரம் படித்து, கற்பூர தீபாராதனை செய்து, சாம்பிராணி தூபமிட்டு, பலவகை நைவேத்தியம் வைத்து
மூன்று தடவை பிரதஷிண ஷாஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்து பொங்கலோ பொங்கல் என்று 3 தடவை பயபக்தியுடன்
கூறவும்.
புஷ்பம் அச்சதை கையில்
எடுத்து 3-தடவை பிரதிஷிண ஷாஷ்டாங்க நமஸ்காரங்கள் செய்து இரு சாணத்திலான பிள்ளையார்
பேரில் அட்சதை போடவும். பூஜை முடிந்தவுடன் (கோ) பசுவுக்கு
(அல்லது) ரிஷபம் எருதுக்கு இவ்வாண்டு முதலில் வாழை இலையில் பொங்கல் பிரசாதம்
வைத்து சாப்பிட கொடுத்து நமஸ்கரித்து அட்சதை போட்டு தன் குலதேவதை, தன் முன்னோர்கள் இவர்களை
நினைத்து காகத்திற்கு பிரசாதம் கொடுத்த பின் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து பின்
போஜனம் செய்ய உத்தமம்.
மகர சங்கராந்தி புருஷர்:
ஸ்திரி ரூபமாய் 3- முகங்கள், 2- கால்கள், நேர் புருவமும், செம்பட்டை முடியும், 3- வாய்களும், 8- கைகளும், 2- கால்களும் நிதான
ஆலோசனையுடன் கருப்பு சரீரத்துடன் துவாங்கிசி என்ற பெயரில் திடகாத்திர சரிரத்துடன் வேப்பங்குச்சி
பல்துலக்கி பன்னீர் சுத்த ஜலத்தில் வாய் கொப்பளித்து கடலில் ஸ்நானம் செய்து அலரி
புஷ்பம் நித்திய மல்லி சாம்மந்தி பூ அணிந்து உடலுக்கு ஜவ்வாது, புனுகு, திரவியம் சந்தனம் பன்னீர்
கஸ்தூரி கோரோஜனம் உடலுக்கு பூசிக்கொண்டு குங்கும பூ சுத்த காற்றை சுவாசித்து
நெற்றியில் சந்தனம் குங்குமம் அட்சதை வைத்துக்
கொண்டு செம்பு பாத்திரத்தில் பால் பாயாசம் பூசித்து சர்க்கரை பொங்கல்
சாப்பிட்டு இலுப்பை பழம் தின்று வெள்ளை வஸ்திரம் அணிந்து வெள்ளி ஆபரணம்
ருத்திராட்சம் மாலை அணிந்து கிழிந்த மயில் குடை பிடித்து அனைத்து மதம் புடை சூழ
மங்கள வாத்தியம் வாசித்து ஞாபகதத்துடன் வேத மந்திரங்கள் முழங்க வடக்கு திசை நோக்கி
ஆண் புலி வாகனத்தில் சாமரசம் வீசி புன்சிரிப்பு முகத்துடன் ஒரு கையில் ஆயுதம் மறு
கையில் துலா கோள் பிடித்து சுமங்கலிகளுடன் திக்கில் அமருகிறார். இவ்வாண்டு பொங்கல்
பால் வடக்கே பொங்கும். கவனிக்க....
விசேஷ பலன்கள் :
இந்த ஆண்டு : தமோமேகம் பதக்கு -1 மரக்கால் மழை வருவதால்
அனைத்து இடங்களில் நல்ல மழை பொழியும். எங்கும் சுபீட்ஷம், விமான விபத்துக்கள்
(சாலையில்) அதிகரிக்கும்.
வாரம்:
பயிர் வகை மற்றும்
நவதானியங்கள் நன்கு விளைந்து பருப்பு விலை வீழ்ச்சி அடையும். வெல்லம் விலை
உயர்ந்து குறையும். சந்நியாசிகளுக்கு, பூம் பூம் மாடு வைத்திருப் பவருக்கு நல்ல யோகம். ஏழை மக்கள் அவதி பட நேரும். தனவந்தர்களுக்கு
பலவகையில் தொந்தரவு கள் ஏற்படும்.
ஜீவராசிகளுக்கு புல் நன்றாக கிடைத்து (கால்நடைகள்) நோய் இன்றி நன்றாக வாழும். திதி : உத்தரயாணத்தில் ஆலங்கட்டி மழையும்,தட்ஷிணாயத்தில் நல்ல
மழையும்,
முட்டை -பூச்சி - பாம்பு – பூரான்
அழிதலும், சைவ உணவு அதிகரிக்கும். அசைவ வகை களுக்கு கெடு பலனும், எங்கும் பணம் பற்றாக்குறை ஏற்படும்.
அயல் நாட்டில் அதிகமான சூறாவளி
காற்றால் கடுமையாக பாதிக்கும். அயல்நாட்டில் பூகம்பம் பாதிப்பு ஏற்பட
வாய்ப்புண்டு. இலங்கையில் அரசியலில் ஈடுபாடு உள்ள தலைவர்களுக்கு கெண்டாதி கெண்டம்
உண்டாகும்.
நட்சத்திரம்:
மூலம் வருவதால் அனைத்து
ஜாதியினருக்கு நல்ல யோகம் உண்டாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பு புதிய ரக விமானங்களை
அரசாங்கம் வாங்க நேரும். தீடீர் என ஆகாயத்தில் மேக மூட்டம், மூடுபனி உற்பத்தி ஆகும்.
யோகம்:
ஏழை மக்கள் சுகம் அடைவர்.
எங்கும் சுபநிகழ்ச்சி அதிகமும், யுத்த பீதி உண்டாகும்.
இந்தியாவிற்கு எந்த வித பாதிப்பு இராது. புதிய புழுக்கள் அதிகம் உற்பத்தி ஆகும்.
வனங்கள் நன்றாக செழித்து இருக்கும்.
கரணம் :
துவாங்கிசி நாமகரணம்
ஆண்புலி வந்தால் வைசீயர் களுக்கு பீடை, வனத்தில் தீடீர் தீ பயம் உண்டாகும்.
லக்கினம், ராசி, நவாம்சம், தசாபுக்தி பலன் :
பூர்விக தேவாலயங்களுக்கு
புனர்பிரதிஷ்டை செய்து அரசாங்கமே கும்பாபிஷேகம் செய்ய நேரும். மலைப் பிரதே சங்கள் நிலச்சரிவால்
பாதிப்பு உண்டாகும். இடி மின்னல் களால், மேக கர்ஜனை, இடிகளால் விமானம் பாதிப்பு
அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஸ்நானம் - ஆபரணம் - பொட்டு - பாத்திரங்கள் -
பூசித்தல் - வாகனம் எங்கும் சுபசெய்தி, வடக்கு திக்கான வாரணாசி
(உத்திரபிரதேசம்) (மத்தியபிரதேசம்) (கயா) கடும் பாதிப்பு மழையால் உண்டாகும்.
கர்நாடகா, கேரளா நிலநடுக்கம் பாதிப்பு உண்டாகும். பெண்களுக்கு அரசாங்கம்
பாதுகாப்பு அளிக்கும். பறவையினம் - விலங்கினம் இனவிருத்தி அதி கமாக காணப்படும். காகம், சிட்டுக்குருவி இனப்பெருக்கம்
அதிகமாக நேரும். ஆலங்கட்டி மழை பொழியும். வானத்தில் மின்காந்த அலைகள் ஏற்பட்டு சில நாடுகளில் வாழும் மக்களுக்கு
ரத்தம் புற்றுநோய் சம்மந்தப்பட்ட வியாதி உண்டாகும்.
மகரசங்கராந்தி பொங்கல் பண்டிகை ஜென்ம நட்சத்திர பலன்கள்
ரேவதி, அசுவனி, பரணி ஆக 3 நஷத்திரங்கள் தன நாசம், கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனாபூசம், பூசம் ஆகிய 6 நஷத்திரங்கள் தனலாபம், ஆயில்யம், மகம், பூரம் ஆகிய 3 நஷத்திரங்கள் ஸ்தான சலனம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம் ஆகிய 6 நஷத்திரங்கள் ஸ்தன லாபம், கேட்டை, மூலம், பூராடம், ஆகிய 3 நஷத்திரங்கள் இராஜ யோகம். உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 6
நஷத்திரங்கள் இராஜ வெகுமானம். இவ்வாண்டு மகரசங்கராந்தி புருஷர் அசுவனி நஷத்திரத்தில் வருவதால்
வங்கிகளில் தனநாசம் ஏற்படும். லாக்கரில் உள்ள முக்கிய பொருள்கள் யாவும் அரசின்
கண்காணிப்பில் வரும். யாரும் அரசாங்கத்தை ஏமாற்ற முடியாமல் தவிக்க நேரும்.
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
ஜாதகம் பார்க்க, ஜாதகம் கணிக்க, திருமண பொருத்தம், எண்கணிதம், ராசிரத்தினம் பார்க்க, பிரசன்னம், பெயர் ராசி பார்க்க
அணுகவும். ராகு, கேது, சுக்கிரன், செவ்வாய், சனி தோஷ நிவர்த்தி செய்து
தரப்படும். திருமணத்தடை, புத்திர பாக்கியம் இன்மை, உத்தியோக தடை, கல்வித் தடை, கடன் தொல்லை, சொந்த வீடு அமையாமை பூமி
தோஷம் மற்றும் பல பிரச்சனைகள் நிவர்த்தி செய்து தரப்படும்.
வாக்கிய கணித பிரசன்ன ஜோதிடர்,
புரோகிதர், Diploma in Astrology
G.V. மணிகண்ட ஷர்மா.
ஸ்ரீ வித்யா உபாசகர்
ஸ்ரீ வித்யா உபாசகர்
Website: - www.neelajothidam.blogspot.in
No comments:
Post a Comment