WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Thursday, 9 August 2018

ஆடி அமாவாசையின் அற்புத ரகசியங்கள்-

*ஆடி அமாவாசையின் அற்புத ரகசியங்கள்-1*

*(ஆடி அமாவாசை பற்றிய அபூர்வ தகவல்கள் , வழிபாட்டு முறைகள் , அறிவியல் உண்மைகள் முழுமையாக உங்கள் பார்வைக்கு......)*

அமாவாசை என்பது *சூரியனும் சந்திரனும்* ஒன்றாக இணையும் காலம் எனப்படும்..

ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

இந் நிகழ்வு *இவ் வருடம் 11.8.2018 சனிக்கிழமை* அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது.

வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.

பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன. அத்துடன் தன்னைத் தானே சுற்றும் பூமி, சூரியனையும் சுற்றி வருவதானது நாமும் உறுண்டு கொண்டு ஆலயத்தைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போன்ற நிகழ்வாகும். சந்திரன் பூமியை வலம் வருவதோடு பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வருவருகின்றமையால் பூமியில் திதிகள் தோன்றுகின்றன. பூமி தனது அச்சில் 23 ½ பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன.

சில இரவுகளில் பூமியில் உள்ளோருக்கு சந்திரனைக் காண முடிவதில்லை. காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் வருகின்றது. அப்போது பூமியில் உள்ளோருக்கு சந்திரன் தெரிவதில்லை.

வேறு விதமாக கூறுவதாயின் சந்திரன் தானாக ஒளிர்வதில்லை சூரியனின் ஒளியைப் பெற்று பிரதிபலிப்பதனால் ஒளிர்வது போல் தோற்றமளிக்கின்றது.

அதனால் பூமிப்பக்கம் இருக்கும் சந்திரனின் சூரிய ஒளி படது இருப்பதனால் எம்மால் சந்திரனைப் பார்க்க முடிவதில்லை. அன்றைய தினமே அமாவாசை திதி என அழைக்கப்பெறுகின்றது.
ஆனால் சில இரவுகளில் சந்திரனின் முழுத் தோற்றத்தையும் பூமியில் உள்ளோரால் பார்க்க முடிகிறது.

காரணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சஞ்சரித்த சந்திரன் சுமார் 15 நாட்களில் பூமியின் மறுபக்கத்திற்கு சென்று விடுகின்றது,

அதாவது; சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருகின்றது. இப்போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. அதனால் சந்திரன் பூமியில் உள்ளோருக்கு பிரகாசமாகத் தோற்றமளிக்கின்றது.

இந்நாளை பூரணை அல்லது பௌர்ணமி திதி என்று அழைக்கப்பெறுகின்றது.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் நமக்குத் தரவல்லவர். சந்திரன் நமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.

சூரியனைப் “பிதுர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் நமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்..

இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடிகின்றனர்.

*அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும்* வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.

அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் *தைமாதத்திலும், ஆடி மாதத்தில்* வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் *உத்தராயண காலம்* என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் *தட்சணாயன காலம்* என்றும் அழைப்பர்.

தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

அதேபோல், சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் தொடக்க மாதமாக தை மாதம் அமைவதால், அந்த மாதத்தில் வரும் அமாவாசைத் திதியும் பிதுர் வழிபாட்டிற்கு சிறப்பானது எனக் கொள்ளப்படுகிறது.

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருப்பதனால், அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரனகிய சூரியனும் இந்து கலாச்சாரத்தில் வணங்ககூடியவர்கள்.. சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய் வழி உறவினர்கள்.

சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்..இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற , தடைகள் அகல , பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.

அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது..

அமாவாசை அன்று மட்டும் அல்ல , தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும்.. அமாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்..

திருமணத்தடை , குழந்தை பிறப்பு தாமதம் , வறுமை , நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.. நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவாசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும் என்பது நம்பிக்கை
இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு , நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அமாவாசை போன்ற காலங்களில் வணங்குவது சாலசிறந்தது..

இயற்கையாக முறையில் இறக்காமல் துர் மரணம் மூலமாக இறந்து ஆன்மா சாந்தியடையாமல் இருக்கும் ஆன்மாக்களை சரியான பித்ருபூஜைகள் மூலம் சாந்தம் கொண்டு அந்த வம்சத்திற்கு ஆசிகள் வழங்கும் என்பதால் அன்றைய தினத்தில் பித்ருபூஜை செய்வது சாலசிறந்தது
பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல..காய்கறிகள் தானமாக தரவேண்டும் , குறிப்பாக பூசணிக்காய்..

ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.. பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும்..அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள்..

முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

முன்னோரை கஷ்டப்படுத்தினால் இறைவன் கூட நம்மை கண்டுகொள்ள மாட்டார்.. எனவே சிரமம் பார்க்காமல் ஆடி அமாவாசை அன்று மறக்காமல் முன்னோருக்கு உங்களால் முடிந்த எளிய தர்ப்பணம் செய்து அவர்கள் அருளை பெறுங்கள்.. அதன் மூலம் தடைப்பட்ட பல காரியங்கள் எளிதாக முடிவதை காணலாம்..

ராமேஸ்வரம் , பவானி , திருச்செந்தூர் திருவையாறு போன்ற நீர் நிலைக்கு சென்று *பித்ருதர்ப்பணம்* செய்ய முடியாதவர்கள் *ஆதரவற்ற முதியோருக்கு* உணவிட்டு ஏதேனும் காணிக்கை தந்து அவர்களை மகிழ்ச்சியடைய செய்தால் உள்ளம் குளிர்ந்து அவர்கள் நம்மை வாயார மனதார வாழ்த்தினால் போதும்..

*ஆடி அமாவாசையில் அற்புத ரகசியங்கள்-2*

*அமாவாசையும் நமது முன்னோர்களும்*

பழைய காலத்திலிருந்தே அமாவாசையை மாதாமாதம் சிறந்த முறையில் கொண்டாடியதாகச் சரித்திரம் கூறுகிறது. குறிப்பாக அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு *காந்த சக்தி* ஏற்படுகிறது.

அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

ஜோதிட ரீதியாக அமாவாசை *நிறைந்த நாள்* எனக் கூறுகின்றனா். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் *சுழுமுனை* என்னும் *நெற்றிக்கண்* பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் *மந்திர ஜெபம்* ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

அமாவாசையன்று *ஜீவ சமாதிகள்* புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் *அமாவாசை!* இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் *இரத்த சம்பந்தமுடைய* வீடுகளுக்கு வரும். நம்மை யாராவது எண்ணுகிறார்களா? நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

நாமெல்லாம் இறந்த முன்னோர்களின் இரத்த சம்பந்தமான கொடி வழியைச் சோ்ந்தவா்கள்.  அமாவாசையன்று *முன்னோர்களை நினைக்க* நேரமில்லை. ஆனால் டி.வியில் *கிரிக்கெட்* பார்க்க நேரம் இருக்கிறது. பசியால் அமாவாசையன்று வந்த *பிதுா்கள்* என்னும் நம் *முன்னோர் ஆவிகள்* நமக்குச் சாபம் இட்டுச் செல்லும்.

இப்படிப் பிதுர்கள் என்னும் ஆவிகள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும். பின்னா் நம் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும். இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை ஆகியவை உண்டாகும். இதனை மந்திர யந்திர தந்திர சாதனங்களால் தீா்க்க முடியாது. *அன்னதானம்* செய்வதால் மட்டுமே தீா்க்கக் கூடியது.

வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம். வள்ளலார் வலியுறுத்தும் *ஜீவகாருண்யம்* இதுதான்!

அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் *குல தெய்வம்* இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் *இஷ்ட தெய்வம்* இருக்கும் இடத்தில் செய்யலாம்.
வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

நமக்கு அன்னம் இடுபவள் *அன்னபூரணி!* ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் *ஸ்வதா தேவி!* நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் *12 ஆண்டுகளாக* அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.

நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் *எள்ளு சட்னி* அல்லது *எள் உருண்டை* கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் *ஒரு பசு* மாட்டிற்கு *ஒன்பது வாழைப்பழங்கள்* அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும். மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

*ஆடி அமாவாசையில் அற்புத ரகசியங்கள்-3*

*இந்துக்களின் நம்பிக்கை:*

பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன.

இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.

இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போஜனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.

இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற் பொருட்டும், பிதுர்களாக நம்மைச் சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசி பெறவும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். பிதுர்கள் மகிழ்வுற்றால் அம்'மனை (வீடு) சிறக்கும் என்பது ஐதீகம்.

யாழ்ப்பாணத்தில் சிறப்பான நாட்கள் (கனத்த நாட்கள்) என அழைக்கப்படும் விளக்கீடு, தீபாவளி போன்ற தினங்களில் “வீட்டுக்குப் படைத்தல்” என்னும் நிகழ்வு வழக்கத்தில் உள்ளது. அண்மையில் யாரவது அந்த வீட்டில் இறந்திருந்தால் தவறாது வீட்டுக்குப் படைத்து பிதுர்களை மகிழ்விப்பர்.

சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.

அவரவர் தந்தை, தாயார் இறந்த திதிகளைத் தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும், சித்திரைப் பெளர்ணமி தினத்தில் தாயின் பொருட்டும் சிரார்த்தம், தர்ப்பணம், பிண்டதானம் என்பவற்றைச் செய்வர்.

யாழ்ப்பாணத்தில் மக்கள் புரதான காலம் தொடங்கி *கீரிமலை நகுலேஸ்வரத்திலும்* (கீரிமலைக் கேணி, கடல்), திருவடிநிலை தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும்;
மட்டக்களப்பு வாழ் மக்கள் *மாமாங்கப் பிள்ளையார்* கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடியும்; திருகோணமலை வாழ் மக்கள் *கோணேஸ்வரர் ஆலயத்தில்* தீர்த்தமாடியும்; மன்னார் வவுனியா மக்கள் *திருக்கேதீஸ்வரம் பாலாவியில் தீர்த்தமாடியும்;* கொழும்பு வாழ் மக்கள் *மோதர-முகத்துவாரம்- கடலில் தீர்த்தமாடியும்*  தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பிதுர் கடன் செலுத்தி வருகின்றனர்.

இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் *திதி தோஷம்* பெறுவதில்லை.

இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விஷயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.

எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

சங்க காலத்திலும் இதுபோன்ற விஷயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.

மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.

ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க *வாரிசுகள்* நடத்தும் ஒரு விழாவாக அமாவாசை, பௌர்ணமியை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வரலாம்.

திருவள்ளுவர் திருக்குறளில், தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்
தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்கிறார் திருவள்ளுவர்.
*“தென்புலத்தாராகிய முன்னோர், கடவுள், விருந்தினர், உறவினர், தன் குடும்பம் ஆகிய ஐந்து பேரையும் இல்லறத்தில் இருப்பவர் காப்பாற்ற வேண்டும்…’* என்பது இதன் பொருள்.

இதில், முதலிடத்தை முன்னோருக்கு தருகிறார் வள்ளுவர். இதிலிருந்தே நம் முன்னோருக்கு *வாரிசுகள்* செய்ய வேண்டிய *கடமை* தெளிவாகிறது.

அவ்வகையில், தை அமாவாசையையும், ஆடி அமாவாசையையும் *“முன்னோர் திருநாள்"* என்றே அழைக்கலாம்.

ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள்தான்.

இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று *(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்)* குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்கள் நிவர்த்தியாகின்றன.

இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.

அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமாக அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.
திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.
அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணியகாலத்தைத் தரும்.

மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால், அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்ககூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால், அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத் தரும்.

அன்று நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் மாசி மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் *பதினாயிரம் ஆண்டுகள்* பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.

மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வந்து, அப்போது அந்தநன்னாளில் சிரார்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என *விஷ்ணுபுராணம்* கூறுகிறது.
மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்யவேண்டும்..

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள்.

இவைகளில் 14 மன்வாதி நாட்கள்,
யுகாதி நாட்கள் 4,
மாதப்பிறப்பு நாட்கள் 12,
அமாவாசை 12, மஹாளய பட்சம் 16,
வ்யதீபாதம் 12, வைத்ருதி 12,
அஷ்டகா 4, அன்வஷ்டகா 4,
பூர்வேத்யு 4 நாட்கள்.

இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

  
*ஆடி அமாவாசையில் அற்புத ரகசியங்கள்-4*

*பிதுர் தர்ப்பணத்தின் முக்கியத்துவம்:*

வருகின்ற ஆகஸ்ட் 11-ம் தேதி சனிக்கிழமை ஆடி அமாவாசை ஆகும். அமாவாசை என்பது இந்துக்கள் இறந்து போன முன்னோருக்கு (பித்ருக்களுக்கு) பூஜை செய்யும் நாளாகும். அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது.

பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

அமாவாசையில் ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. ஆடி மாதமும், தை மாதமும் அம்மனுக்கு உகந்த மாதங்களாக கருதப்படுவதால் அப்போது பித்ருக்களுக்கு பூஜை செய்வதன் மூலம் அம்மன் அருளும், பித்ருக்கள் அருளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் சிறப்பானவையாக கருதப்படுகின்றன.

ஆடி, அமாவாசையன்று, `பித்ரு' எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவை செய்யப்பட வேண்டும். ஆடி அமாவாசை அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைகின்றனர்.

விளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர்.
காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்' எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும்.
யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும். இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்' செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார்.

இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும்.

கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப்பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர்.

அந்தப் பெண் இந்த புடவையை பயன்படுத்திக்கொள்வான் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும். எனவே, ஆடி அமாவாசையன்று மறக்காமல் உங்கள் மூதாதையருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்யுங்கள் மறைந்த மூதாதையர்களின் ஆசி, உங்களுக்கு நிரம்பகிடைக்கட்டும்.

*ஆடி அமாவாசையில் அற்புத ரகசியங்கள்-5*

*தர்ப்பணம் செய்வது எப்படி!*

மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிஷம் மற்றும் மகம் நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது. காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.

*புனித தீர்த்தங்கள்:*
************************

காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக்கட்டம், பவானி முக்கூடல், பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.

நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை. தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் திருப்பூந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற தலம் தான்.

*பாவம் நீங்கும்:*
*******************

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.

*ராமேசுவரத்தில் நீராடுவது?*
*******************************

ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம், ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்தால் முழு பலன் கிடைக்கும். ஆனால் அங்கு புனித நீராட சில ஐதீகங்கள் உள்ளன. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மொத்தம் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன.
பக்தர்கள் அந்த தீர்த்தங்களில் புனித நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இப்புனித தீர்த்தங்களில் ஒன்று அக்னி தீர்த்தம். இலங்கையில் ராவணன் பிடியிலிருந்து சீதை மீட்கப்பட்ட பின்பு தனது கற்பு திறனை நிரூபிக்க தீக்குளித்தாள்.

ராமேசுவரத்தில் கோவிலை ஒட்டியிருக்கும் கடற்கரை அருகேதான் சீதை தீக்குளித்தாள் என்றும் அந்த இடம் அக்னி என்று அழைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

தீக்குளித்த பின்பு சீதை நீராடிய இடமே அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே மற்ற புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்ய வேண்டும்.
இந்த நன்னாளில், நம் முன்னோரை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

*ஆடி அமாவாசையில் அற்புத ரகசியங்கள்-6*

*தர்ப்பணம் ஏன்?*
*திவசத்தின்போது பிண்டம் கொடுப்பது ஏன்?* மற்றும்

*சங்கமேஸ்வரர் வழிபாடு:*
********************************

அமாவாசை நாளில், பித்ருக்களுக்குக் காரியம் செய்து வணங்கினால், கூடுதல் பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம். அதிலும், தெற்கு நோக்கிச் செல்லும் புண்ணிய நதியான காவிரி நதியுடன் மேலும் இரண்டு நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் நீராடி, பித்ருக்களுக்கான காரியங்களைச் செய்து ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

அதன் மூலம் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் குடிகொள்ளும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுபோன்ற பித்ரு வழிபாட்டு தினங்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றுவதுடன் ஸ்ரீசங்கமேஸ்வரை
யும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

*21 பிண்டங்கள்:*
********************

பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் செய்யப்படும் வழிபாட்டைச் சடங்குகளில், நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச் செய்வார்கள். ராமேஸ்வரம் தலத்தில் 21 பிண்டர்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள்.
பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்வது குறிப்பிடத்தக்கது.

*லவ-குச குளத்தில் நீராடுங்கள்:*
*********************************

கோயம்பேடு தலத்தில் லவனும் குசனும் சிவ வழிபாடு செய்துவந்தபோது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். சிவனாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார். அவரின் திருவருளால் லவ-குசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது ஸ்தலபுராணம்.

ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும்; மனச் சஞ்சலம் நீங்கும்; பித்ருக்களின் அசீர்வாதம் கிடைக்கும். ஆடி அமாவாசை நாளில், குச-லவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

*முன்னோர் வழிபாடு:*
**************************

ஆடி அமாவாசை தினம் நம்மை விட்டு நீங்கியவர்களை நினைவு கூறும் நன்னாள். அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் இழைத்திருக்கக்கூடிய பிழைகளுக்கு பேசியிருக்கக்கூடிய தீச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு வழியாகவும் நாம் இந்த நல்நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் வழியாகவும் அமாவாசையன்றும் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்கிறோம்.

பொதுவாகவே இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அவ்வாறு மேற்கொள்ள இயலவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது சிறந்தது என்பார்கள்.

*பிதுர் தர்ப்பணத்தின் முக்கியத்துவம்:*

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை பாகத்தைக் குறிப்பிடும் ஒரு சொல். அமா என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (குவிந்தது-அடுத்தது) என்று பொருள். ஓர் ராசியில் சூரியன் சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும் வாசியான நாள் அமாவாசி எனப்படும். வான மண்டலத்தில் தமது அளப்பு வேலையைச் சிருட்டியின் ஆரம்ப காலத்திலிருந்தே தொடங்கிய இருவரும் அமாவாசை நாளன்று தான் ஒருங்கு கூடுகின்றனர்.

சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசைத் திதி உண்டாகும். இத்தகைய சூரிய சந்திரர் இருவரும் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள். உயிர்களின் சுகபோகமாகிய மாறுதலையுணர்த்தும் நாள். சகல தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாவர்.

அன்று நோன்பு நோற்றல், விரதங்காத்தல், சிறந்ததும் இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், பெருமை தருவதுமான நன்னாளாகும். ஒருவர் இறக்கும் போது தூலசரீரம் அழிந்துபோகும். சூக்கும சரீரம் அழிவதில்லை.
அவை சர்வசங்கார காலத்திலே அல்லது முக்தி நிலையிலாவது அழியும். ஓர் உயிர் தூலசரீரத்தை விட்டு நீங்கும்போது சூக்கும சரீரத்தோடு செல்லும்.
அங்ஙனம் சென்ற உயிர், பூமியில் தான் புரிந்த வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைச் சொர்க்க, நரகத்தில் அனுபவிக்கும்.

சொர்க்கத்திலே இன்பங்களை அனுபவிக்கும்போது அச்சூக்கும சரீரம் அதற்கென்ற ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றது. உயிர் பிதுர் பூஜை என்னும் கிரியையினாலே சிவலோகத்தை அடையும். அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இருக்கும்.

பாட்டனுடைய உயிர், சண்டபதத்திலே சண்ட சொரூபமாக இருக்கும். முப்பாட்டனுடைய உயிர் கணாதீச பதத்திலே கணாத சொரூபமாக இருக்கும். இவர்களுக்குத் தலைவர்களாக ஸ்கந்த, சண்ட, காணாதீசர் என்னும் மூவர் அதிதெய்வங்களாக விளங்குவர். இவர்கள்தான் பிதுர் தேவதைகள் என அழைக்கப்படுவர். இவர்களைப் பிரீதி செய்து வழிபடுவதுதான் சிரார்த்தம் எனப்படும்.

இறந்து போன உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப சொர்க்க நரகங்களையடையவனவும் முத்தியடைவனவுமன்றிச் சில உயிர்கள் உடனே ஒரு தூல தேகத்தை எடுப்பனவுமாகவும் இருக்கும். அன்றி, அவை இறக்கின்ற கால நேரங்களைப் பொறுத்தாக, உயிர்களை நற்பதவியடையச் செய்தலுக்கு சிரார்த்தம் இன்றியமையாததாகும்.

சூரியனும் சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு நேரே நேர்படும் சமயமே இதற்கு மிகவும் சிறந்தது. ஒவ்வொரு அமாவாசையும் பிதுர்கருமத்திற்கு விசேஷமானது. எனினும் ஆடி அமாவாசை மிகவும் புனிதமும் விசேஷமானதாகும்.

ஏனெனில், சூரிய மண்டலத்துக்கு அப்பாலுள்ள பிதுர்களுக்குரிய இடமாகும்.
இது பிதுர் லோகம் எனப்படும். வடக்கு நோக்கிச் சஞ்சரிக்கும் ஆரம்ப காலம் ஆடிமாசமாகும். ஆகவே ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணத்திற்கு மிகவும் சிறந்த காலமாகும்.

அமாவாசை, பெளர்ணமி நாட்களில் கடல் தீர்த்தமாடுதல் மிகவும் நல்லது. கடல்நீரை, நமது பாவத்தை கழுவும் பரிசுத்த நீராகவும், இறைவனது அருள் நீராகவும் நினைத்து காலம் சென்ற பிதுரர்களை எண்ணி, அவர்களது பாவத்தைப் போக்கி அவர்களுக்கு முத்தியளிக்கும் வண்ணம் இறைவனை வேண்டி நீராடல் வேண்டும்.

*தர்ப்பணம் ஏன்?*
*திவசத்தின்போது பிண்டம் கொடுப்பது ஏன்?*

திவசத்தின்போது இறந்த பெற்றோர், பாட்டனார் மற்றும் முப்பாட்டனார் ஆகிய மூவரின் பெயர்களைச் சொல்லி அழைத்து அவர்களுக்கு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது. ஏன் தெரியுமா? குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள் ஆணிடமுள்ள சுக்கிலம் எனப்படும் தாதுவாகும். இந்தத் தாதுவில் *84 அம்சங்கள்* உள்ளன.

அதில் *இருபத்து எட்டு(28) அம்சங்கள்* அந்த மனிதன் *உட்கொள்ளும் உணவு மற்றும் அருந்தும் நீர்* முதலியவற்றால் உண்டானவை.

*பெற்றோரிடமிருந்து இருபத்தியொரு(21) அம்சமும், பாட்டனாரிடமிருந்து பதினைந்து(15) அம்சமும், முப்பாட்டனாரிடமிருந்து பத்து(10) அம்சமும், நான்காம் மூதாதையிடமிருந்து ஆறு(6) அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று(3) அம்சமும், ஆறாம் மூதாதையிடமிருந்து ஒரு(1) அம்சமும் என ஆறு தலைமுறையினரின் ஐம்பத்தியாறு (56)அம்சங்கள் ஏழாம் தலைமுறை மனிதனின் சுக்கிலத்தோடு(28) அம்சங்கள் தொடர்பு கொண்டவை.*

இதில் அதிகமாக தங்கள் அம்சத்தை தங்கள் வாரிசுகளுக்குத் தருபவர்கள், பெற்றோர், பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே. அதனால்தான், திவசத்தின்போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது.
கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

No comments:

Post a Comment