ஸ்ரீ வித்யா உபாசகர்
WHATS APP
Monday, 31 December 2018
உத்தராயண புண்யகாலம் - 2019
ஸ்ரீ வித்யா உபாசகர்
Thursday, 27 December 2018
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!
'உங்களால் மறக்க முடியாத மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து விடுங்கள்.. உங்களால் மன்னிக்க முடியாத மற்றவர்களின் குற்றங்களை மறந்து விடுங்கள்..!"
கெப்ளர்
ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளரும், வானியலாளருமான ஜோகன்னஸ் கெப்ளர் 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் பிறந்தார்.
இவர் வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் 'மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்" என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இந்நூல் 1596ஆம் ஆண்டு வெளிவந்த பிறகு, திறன் வாய்ந்த வானியலாளராக அங்கீகாரம் பெற்றார்.
இவர் 'அஸ்ட்ரோநோமியா நோவா", 'ஹார்மோனிஸ் முன்டி" ஆகிய நூல்களில் கோள்களின் இயக்க விதிகள் தொடர்பாக கூறிய கருத்துகள் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றன.
கோள்களின் இயக்கம் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 3 விதிகளைக் கண்டறிந்தார். கண்களால் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதற்கு சரியான விளக்கம் தந்து, இவர் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கான கண்ணாடிகளை கண்டறிந்தார். 'எபிடோமி அஸ்ட்ரோநோமியா" என்ற புகழ்பெற்ற நூலை 1621ஆம் ஆண்டு வெளியிட்டார்.
இவர்தான் முதன்முதலில் 'சாட்டிலைட்" என்ற வார்த்தையை உருவாக்கினார். பன்முகப் பரிமாணம் கொண்ட ஜோகன்னஸ் கெப்ளர் 58-வது வயதில் (1630) மறைந்தார். கோள்களைக் கண்டறியும் நாசாவின் தொலைநோக்கிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
லூயி பாஸ்டர்
நோய்க் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகள் மூலம் மனித குல நன்மைக்காகப் பாடுபட்ட பிரான்ஸ் விஞ்ஞானி லூயி பாஸ்டர் 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
இவர் 1856ஆம் ஆண்டு தன்னுடைய நண்பரான ஒயின் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஒயினை புளிக்கச்செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார்.
தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. இது அவரது பெயரால் 'பாஸ்ச்சரைசேஷன்" என்று அழைக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதை தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயிர்க்கொல்லி என்று கருதப்பட்ட காசநோய்க்கும் மருந்து கிடைத்தது. மேலும் கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்தை கண்டறிந்தார்.
ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்து பல சோதனைகளை மேற்கொண்டு அதற்கான தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார். இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விண்ணில் உள்ள சில கோள்கள் மற்றும் நிலவிலுள்ள பள்ளங்களுக்கும் இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் இறுதிவரை மனித குல நன்மைக்காக உழைத்த விஞ்ஞானி லூயி பாஸ்டர் 72-வது வயதில் (1895) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1956ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1911ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி இந்தியாவின் தேசிய கீதம் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் இசைக்கப்பட்டது.
வணக்கம் நண்பர்களே
🌹🙏🌹
கருடபுராணம் சொல்லும் நன்மைகள்.!
*#கருடபுராணம்_சொல்லும்_நன்மைகள்*
*1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.*
*2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்*
*3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு*
*4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்*
*5 தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்*
*6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்*
*7 இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்*
*8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்*
*9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு*
*14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்*
*10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்*
*11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்*
*12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை*
*13 நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்*
*14 தீர்த்த யாத்திரை புரிகின்றனர் சத்தியலோக வாசம் கிட்டுகிறது*
*15 ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்*
*16 பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்*
*17 பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்*
*18 நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்*
*19 பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்*
*20 புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்*
*21 தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.*
*22 பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.*
*23 தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்*
*24 சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்*
*25 ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்*
*26 அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்*
*27 விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்*
*28 சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்*
*29 ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.*
*30 இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.