WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday, 2 August 2016

மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள். 2016-2017



மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள். 2016-2017

வாக்கிய பஞ்சாங்கம் படி
02-08-2016 முதல் 02-09-2017 வரை குரு பெயர்ச்சி பலன்கள்.
உத்திராடம் 2, 3, 4-ம் பாதம் வரை, திருவோணம், அவிட்டம் 1, 2-ம் பாதம் வரை.  ராசிபலன்.  ஆக்கும் சக்தியும், அழிவதை தடுக்கும் சக்தியும் கொண்ட மகர ராசி நேயர்களே!
போ, , ஜி, ஜூ, ஜே, ஜோ, கா, க, கீ,
BO, JAA, JEE, JU, JAY, JO, GHA, GAA, GEE,
பெயர் எழுத்து கொண்டவர்கள் (மகர ராசி) ராசி பலன்கள்
தை மாதம் 3-ஆம் தேதி 16.01.2017 வக்ரம் அடைந்து
மாசி மாதம் 26-ஆம் தேதி 10.03.2017 வக்ரம் நிவர்த்தி அடைகிறார்.

குரு மூல மந்திர ஜபம்:

"ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ",

4
8 நாட்களில் 36000 முறை சொல்ல வேண்டும்.

மகர ராசியின் பொதுப்படையான ஜோதிடக் கருத்துக்கள்

நீண்ட உடல் அமைப்பையும், கல்வியில் தேர்ச்சியும் பெற்று விளங்குவார்கள். தெய்விக வழிபாடுகளில் பற்றுதல் இருக்கும். பொதுவாக இவர்கள் அதிக சுகந்திர மனப் போக்கு கொண்டவர்கள், அதனால் தான் யாரையும் லட்சியம் செய்யாமல் தனது இஷ்டம் போலக் காரியங்களைச் செய்து அதில் வெற்றியும் பெறுவார்கள். புத்திர சந்தானங்களுக்குக் குறைவு இருக்காது. மனைவியின் போக்கின் படியே நடந்து கொள்வார்கள். இந்த ராசியில் பிறந்த சிலர் தனக்கு நிகர் யாரும் கிடையாது என்ற எண்ணத்துடனும் இருப்பார்கள். இது ஆயுள் காரகரான சனி பகவானின் வீடு என்பதால் இவர்களுக்கு 77-வயது வரை ஆயுள் பலம் (சுப கிரக பார்வை இருப்பின்) சொல்லப்படுகிறது. மகர ராசியில் பிறந்தவர்கள் பிறக்கும் போது செல்வந்த குடும்பத்திலயே பிறந்து இருந்தாலும், நடுத்தர வயதில் பல சிரமத்தை சந்தித்து பிற்காலத்தில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது ஜோதிட விதி. சேவைத் துறைகள் எதுவாயினும் இவர்களுக்கு வெற்றியைத் தரும்.

மகர ராசிக்காரர்களுக்கான குரு பகவானின் சஞ்சார நிலையும் அதனால் ஏற்படப் போகும் பலன்களும் (முதலில் ரத்தினச் சுருக்கமாகக் காண்போம்) :-

11.08.2016 முதல் 05.02.2017 வரையில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் இடத்தில் அதாவது பித்ரு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் பல நன்மைகள் உண்டு.

06.02.2017 முதல் 08.06.2017 வரையில் குரு பகவான் வக்கிரம் பெறுகிறார் இக்கால கட்டத்தில் மட்டும் உடல் நிலையில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் சமயத்தில் மித வேகம் மிக நன்று என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

09.06.2017 முதல் 10.09.2017 வரையில் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து மீண்டும் 9 ஆம் இடத்தில் வலுவாக சஞ்சாரம் செய்கிறார். இதனால் உடல் நிலை தேறும். புதிய வாய்ப்புகள் உண்டு.

11.09.2017 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இனி ஓராண்டு காலங்களுக்கு பதவியை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் வீண் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

திருக்கணித அடிப்படையில் 11.8.2016 முதல் 10.9.2017 வரையிலான மிக விரிவான குருப் பெயர்ச்சிப் பலன்களை இனி காண்போமாக :-

அன்பார்ந்த மகர ராசி அன்பர்களே இது வரையில் 8 ஆம் இடத்தில் அமர்ந்து பல சோதனைகளை கொடுத்து வந்த குரு பகவான் 11.08.2016 முதல் உங்கள் ராசிக்கு           9-ஆம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். இத்துடன் உங்களது சோதனைக் காலங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் எனில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு பலன் வந்து சேரும் நேரமாக இந்தக் காலத்தைக் கருதலாம். எல்லா வகையிலும் உங்களுக்கு ஏற்றத்தை தரப் போகிற குருப் பெயர்ச்சியாக இந்தக் குருப் பெயர்ச்சி திகழுகிறது. இனிமேல் கைக்கு எட்டுவது அனைத்தும் உங்கள் வாய்க்கும் எட்டும். கவலை வேண்டாம். அது மட்டும் அல்லாமல் இப்போது உங்களது ராசிக்கு குரு பலம் வந்து விட்டதால் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் நடைபெறும் காலம் இது. திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப காரியப் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் வெற்றியைத் தரும். 9 ஆம் இடத்தில் இருக்கும் குரு தனது பார்வையை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிக்கிறார். இதனால் இது வரையில் உடல் ரீதியாக இருந்து வந்த வியாதிகள் தீரும். அதனால் மருத்துவச் செலவுகள் பல மகர ராசி அன்பர்களுக்கு முடிவடையும். இளைய உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டு. சிலர் மேற்படிப்பு தொடர முயற்சி செய்து அதில் வெற்றியும் அடைவார்கள். இன்னும் பலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். புகழ், பெருமை எல்லாம் கூடும். மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி மகர ராசி அன்பர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு :

இது வரையில் நீங்கள் எதிர்பார்த்தும் கிடைத்திடாத பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்தும் இனி வரும் காலங்களில் வந்து சேரும். வாழ்க்கை வசதிகள் உயரும். மேலதிகாரிகளுடன் நெருக்கம் கூடும். அலுவலகத்தில் உங்கள் மீது மிகப் பெரிய மரியாதை கூடும். சக ஊழியர்கள் கூட உங்களுக்குப் பல விதங்களில் உதவ தானாக முன்வருவார்கள். சிலருக்கு விரும்பிய இடத்தில் இட மாற்றம் கிடைக்கும். மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி உங்களது சோதனைகள் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கும் படியாக அமையும்.

வியாபாரிகள் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு :

வியாபாரத்தை விரிவு படுத்துகின்ற காலம் இது. போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய யுத்திகளை கையாண்டு அதில் வெற்றியும் பெறுவீர்கள். புது முயற்ச்சிகள் அனைத்தும் சாதகமாக ஆகும். கணிசமான லாபத்தை பெறுவீர்கள். எனினும் 06.02.2017 முதல் 08.06.2017 வரையில் குரு பகவான் வக்கிரம் பெறுகிறார் இக்கால கட்டத்தில் மட்டும் உடல் நிலையில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் சமயத்தில் மித வேகம் மிக நன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

அனுகூலமான பலன்கள் ஏற்படும் கால கட்டம் இது. எதிரிகள் விலகிச் செல்வார்கள். பேச்சினால் பலவற்றை சாதித்து விடுவீர்கள். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சமூக வட்டாரத்தில் மதிப்பு உயரும். மொத்தத்தில் உங்களுக்கு அனைத்து விதங்களிலும் யோகமான பலன்களை இந்தக் குருப் பெயர்ச்சி ஏற்படுத்தும்.

கலைஞர்களுக்கு :

புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் காலம் இது. நல்ல வருமானத்தையும் பெயர் புகழையும் கூட நீங்கள் பெறுவீர்கள். அரசு ஆதரவு உண்டு. அதனால் விருதுகள் கூட தேடி வரும். கடன்கள் அடையும். சாப்பிடக் கூட நேரம் இல்லாதபடி புதிய வாய்ப்புகள் உங்கள் வீட்டு வாயிலை தட்டி நிற்கும். வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளுங்கள். மொத்தத்தில் அற்புதமான நேரம் இது.

மாணவர்களுக்கு :

இந்த ஆண்டு நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து படித்தால் போதும் மிகப் பெரிய வெற்றியை அடைவீர்கள் என்பது திண்ணம். நேரம், காலம் என அனைத்தும் உங்களுக்கு கைகொடுக்கும் விதத்தில் உள்ளது. வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளத் தவற விட்டு விடாதீர்கள். படித்து முடித்து கல்லூரியில் நீங்கள் விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும். கவலை வேண்டாம். சிலர் வெளிநாடு சென்று கூட படிக்கும் வாய்ப்பு உண்டாகும். மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி அனைத்து விதத்திலும் உங்களுக்கு நன்மையை செய்யும்.

விவசாயிகளுக்கு :

உங்களுக்கு நேரம் மிக அற்புதமாக அமையும் காலம் வந்து விட்டது. அரசு ஆதரவு உண்டு. நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் போதும் கடன் சுமை கண்டிப்பாகக் குறைந்து விடும். விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி வெற்றி காண்பீர்கள். அனைத்து விதத்திலும் நன்மைகள் பெருகும்.

பெண்களுக்கு :

தொட்டது அனைத்தும் துலங்கும். உங்கள் பொருளாதராம் உயர அற்புதமானதொரு வழி பிறக்கும். அதனால் புதிய நகை, ஆடைகள் என வாங்கி மகிழ்வீர்கள். திருமணம் ஆகாத பெண்களுக்கு முன்பே சொன்ன மாதிரி திருமணம் இந்தக் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு கைகூடும். அதே போலத் திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். அனைத்து விதத்திலும் யோக பலன்கள் உண்டு. கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். 06.02.2017 முதல் 08.06.2017 வரையில் குரு பகவான் வக்கிரம் பெறுகிறார் இக்கால கட்டத்தில் மட்டும் உடல் நிலையில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் சமயத்தில் மித வேகம் மிக நன்று.

பரிகாரம் :

குரு பகவான் வக்கிரம் அடையும் காலங்களில் மட்டும் இறை வழிபாட்டை அதிகம் செய்து வரவும். இந்தக் குருப் பெயர்ச்சியில் மேலும், மேலும் நல்ல பலன்களைப் பெற முடிந்தால் திருச்செந்தூர் சென்று அர்ச்சனை செய்து கொள்ளவும். வியாழக் கிழமைகளில் உங்களுக்கு பிடித்த மகான்களின் (சாய் பாபா போன்ற மகான்கள்) சந்நிதிக்கு சென்று வணங்கி வந்தால் வக்கிர குருவின் காலத்தில் கூட மகிழ்ச்சியாக இருக்கலாம்.

 பெயரின் முதல் எழுத்துக்கள் :

Bho, Jaa, Jee, Khee, Khoo, Khe, Kho, Gaa, Gee

அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் :

கருநீலம்

ராசியான எண்கள் அல்லது தேதிகள் :

6,15,24

வணங்க வேண்டிய தெய்வம் :

மகாலட்சுமி (தாயார் )

ராசியான நிறம் :

நல்ல வெள்ளை

ராசியான திக்கு :

தென்கிழக்கு

ஆகாத நிறம் :

சிவப்பு

பின் குறிப்பு

இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது தான். ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி அல்லது திசை மோசமாக இருந்தால் அல்லது தசா புத்திப் பலன்கள் நன்றாக இருந்தால் அதனைப் பொறுத்து மேற்கண்ட நல்ல பலன்கள் அல்லது கெட்ட பலன்கள் கூடவோ,  குறையவோ இடம் முண்டு. மொத்தத்தில் மேற்சொன்னவை யாவும் ஒரு, ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள் அல்லது விவரங்கள் கிடைக்கப் பெரும்.

கீழ கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகம் தேவைக்கேற்ப்ப உபயோகப்படுத்திக் கொள்ளவும்.! அனைத்து ராசிக்கும் இது பொருந்தும் 
.
தமிழில்,

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்!
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!!

வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.

நோன்பு நாள்: வியாழன்.
 
பூஜை ருத்ரா அபிஷேகம் 

ருத்ராட்சம்:  5 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

ஸ்ரீ குரு ஸ்தோத்திரம்
தேவானாம்ச ரிஷீணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்  
புத்திபூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி பிரஹஸ் பதிம்
தினம் 16 முறை பாராயணம் செய்யவும்.  

ஸ்ரீ குரு காயத்திரி மந்திரம்.
விருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய  தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.
தினம் 27 அல்லது 36 முறை பாராயணம் செய்யவும். 

ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்

ஸ்ரீ குரு தியானம்
குருர் ப்ரஹ்ம் : குருர் விஷ்ணுர் : குருர் தேவோ மஹேஸ்வரஹ: குருஸ் ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
 


தட்சிணாமூர்த்தி மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா.
தட்சிணாமூர்த்தி காயத்ரீ மந்திரம்:
ஓம் தட்சிணாமூர்த்தயே ச வித்மஹே
த்யா நஸ்த்தாய தீமஹி
தந்நோ தீச ப்ரசோதயாத்.
தட்சிணாமூர்த்தி போற்றி

ஓம் தென்திசை நோக்கியிருப்பவனே போற்றி
ஓம் தேசப்பளிங்கின் திரனே போற்றி
ஓம் மன்னிய திருவருள்மலையே போற்றி
ஓம் சென்னையில் வைத்த சேவகா போற்றி
ஓம் என்னையு மொருவனாக்கி யிருகழற் போற்றி
ஓம் முழுவது மறிந்த முதல்வா போற்றி
ஓம் சீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
ஓம் தீயமை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
ஓம் இன்றெனக் காரமுது ஆனாய் போற்றி
ஓம் கன்னாகுரித்த கனியே போற்றி
ஓம் காவாய் என்றனக்கு அருள்வாய் போற்றி
ஓம் இடரினைக் களையும் எந்தாய் போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் அற்புதா போற்றி
ஓம் அருந்தவா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் ஆதி போற்றி
ஓம் ஆண்டவா போற்றி
ஓம் இன்பா போற்றி
ஓம் இறைவா போற்றி
ஓம் ஈசா போற்றி
ஓம் உடையாய் போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் எழுத்தே போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் சுடரே போற்றி
ஓம் நெறியே போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் வேதியா போற்றி
ஓம் விமலா போற்றி
ஓம் வானோர்க்கு அறிய மருந்தே போற்றி
ஓம் விரிகடல் உலகின் வினைவே போற்றி
ஓம் அழிவது மாவதும் கடந்தாய் போற்றி
ஓம் அருமையில் எளிய அழகே போற்றி
ஓம் அருமுகிலாகிய கண்ணே போற்றி
ஓம் கருணையே இருக்கை ஆக்கினாய் போற்றி
ஓம் கண்டத்தில் நஞ்சை வைத்தாய் போற்றி
ஓம் கனவிலும் கண்ணாமுதக் கடலே போற்றி
ஓம் அண்ணாமலையெம் அண்ணா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் கோகழி மேவிய கோவே போற்றி
ஓம் கடம்பூர் மேவிய கடம்பா போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
ஓம் பாகம் ஒரு பெண் ஆனாய் போற்றி
ஓம் சிராப்பள்ளி சிவனே போற்றி
ஓம் தாயாகி வந்தமர்ந்தா போற்றி
ஓம் மருத்துவம் பார்த்தமருந்தே போற்றி
ஓம் மகிமையுனக்கே யுகந்தாய் போற்றி
ஓம் மயான துர்க்காவாய் ஆனாய் போற்றி
ஓம் மயிலையின் மஞ்சமும் நீயானாய் போற்றி
ஓம் மக்கள் குறைகளை களைவாய் போற்றி
ஓம் மந்திரமும் தந்திரமும் நீயே போற்றி
ஓம் மங்கையைச் சடையில் வைத்தாய் போற்றி
ஓம் சந்திரனையும் ஆட்கொண்டாய் போற்றி
ஓம் சந்தான பாக்கியம் அருள்வாய் போற்றி
ஓம் மண்சுமந்து மன்னன் அடிபெற்றாய் போற்றி
ஓம் அகார உகார மகாரம் ஆனாய் போற்றி
ஓம் பரம்பரஞ்சோதிபரனே போற்றி
ஓம் பரகதி பாண்டியர்க்கு அருளினாய் போற்றி
ஓம் ஆராவமுதே அருளே போற்றி
ஓம் பேராயிரமுடைய பெம்மான் போற்றி
ஓம் ஓராயிரம்பேர் உனக்கே போற்றி
ஓம் கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
ஓம் குவைப்பதிமலிந்த கோவே போற்றி
ஓம் திருக்கழுக் குன்றச் செல்வா போற்றி
ஓம் பொறுப்பவர் பூவணத்தானே போற்றி
ஓம் தெறவரிதாகிய தெளிவே போற்றி
ஓம் தோளாமுக்கம் சுடரே போற்றி
ஓம் கருங்குருவிக்கன்று அருளினை போற்றி
ஓம் காலனை வென்ற கங்காளனே போற்றி
ஓம் காராம் பசும்பாலைக் கரந்தனை போற்றி
ஓம் கற்பக மரத்தடி அமர்ந்தனை போற்றி
ஓம் வேராகி விண்ணனாகி நின்றாய் போற்றி
ஓம் மீளாத யென்னை ஆட்கொண்டாய் போற்றி
ஓம் ஊற்றாகி உள்ளே ஒளிந்தாய் போற்றி
ஓம் ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஓம் ஆற்றாராகியங்கே அமர்ந்தோய் போற்றி
ஓம் ஆரங்க நால்வேதமானாய் போற்றி
ஓம் காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி
ஓம் பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
ஓம் பிறவி அறுக்கும் பிரானே போற்றி
ஓம் வைச்சாடனன்று முகந்தாய் போற்றி
ஓம் மறுவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
ஓம் உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி
ஓம் தேச பேரவப்படு வாய் போற்றி
ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி
ஓம் ஓங்கி யழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் தேத்தை வார்த்த தெளிவே போற்றி
ஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
ஓம் பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
ஓம் என் சிந்தை நீங்காத இறைவா போற்றி
ஓம் கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
ஓம் கதிர்ஒளிச்சுடர் காட்சி அளித்தாய் போற்றி
ஓம் கல்லுயுராகி நின்ற கனலே போற்றி
ஓம் கானத்தை மெச்சி ஆடினாய் போற்றி
ஓம் ஊழி ஏழான ஒருவா போற்றி
ஓம் ஓங்காரத்தின் பொருளை உகந்தனை போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் யாவருக்கும் மேலாகி நின்றாய் போற்றி
ஓம் நெடிய விசும்பொரு கண்ணே போற்றி
ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி
ஓம் என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.
தமிழ் அர்ச்சனை செய்து தூப தீப நெய்வேத்யம் செய்யவும்.
சக்கரை பொங்கல், சுண்டல், வெண்பெங்கள்.

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஓங்காரஸிம்ஹே ஸர்வேந்த்ராய நமஹ
ஓம் ஓங்காரோத்யாநகோகிலாய நமஹ
ஓம் ஓங்கார நீடஸுகராஜே நமஹ
ஓம் ஓங்காராரண்யகுஞ்ஜராய நமஹ
ஓம் நகராஜஸுதாஜாநயே நமஹ
ஓம் நகராஜநிஜாலயாய நமஹ
ஓம் நவமாணிக்யமாலாட்யாய நமஹ
ஓம் நவசந்த்ரஸிகாமணயே நமஹ
ஓம் நந்திதாஸேஷமெனநீந்த் நமஹ
ஓம் நந்தீஸாதிமதேஸிகாய நமஹ
ஓம் மோஹநலஸுதாஸாராய நமஹ
ஓம் மோஹாம்புஜஸுதாகராய நமஹ
ஓம் மோஹாம்புஜஸுதாகராய நமஹ
ஓம் மோஹாந்தகாரதரணயே நமஹ
ஓம் மோஹோத்பலநபோமணய நமஹ
ஓம் பக்தஜ்ஞாநாப்திஸீதாம்ஸலே நமஹ
ஓம் பக்தஜ்ஞாநத்ருணாநலாய நமஹ
ஓம் பக்தாம்போஜஸஹஸ்ராம் நமஹ
ஓம் பக்தகேசிகநாகநாய நமஹ
ஓம் பக்தகைரவராகேத்தவே நமஹ
ஓம் பக்தகோக திவாகராய நமஹ
ஓம் கஜாநநாதி ஸம்பூஜ்யாய நமஹ
ஓம் கஜசர் மோஜ்ஜ வலாக்ருதயே நமஹ
ஓம் கஜகாதவளதிவ்யாங்காய நமஹ
ஓம் கங்காதவளதிவ்யாங்காய நமஹ
ஓம் கங்காபங்கலஸஜ்ஜடாய நமஹ
ஓம் ககநாம்பரஸம்வீதாய நமஹ
ஓம் ககநாமுக்தமூர்தஜாய நமஹ
ஓம் வதநாப்ஜஜிதாப்ஜஸ்ரியே நமஹ
ஓம் வதநேந்துஸ்புரந்தீஸாய நமஹ
ஓம் வரவீணோஜ்ஜவலத்கராய நமஹ
ஓம் வனவாஸஸமுல்லாஸாய நமஹ
ஓம் வனவீரைகலோலுபாய நமஹ
ஓம் தேஜ: புஞ்ஜகனாகாராய நமஹ
ஓம் தேஜஸாமபி பாஸகாய நமஹ
ஓம் விநேயானாம் தேஜ ப்ரதாய நமஹ
ஓம் தேஜோமயநிஜாஸ்ரமாய நமஹ
ஓம் தமிதாநங்கஸங்க்ராமாய நமஹ
ஓம் தரஹாஸஜிதாங்கநாய நமஹ
ஓம் தாயரஸ ஸுதாஸிந்தவே நமஹ
ஓம் தரித்ரதநஸேவதயே நமஹ
ஓம் ஷீரேந்து ஸ்படிகாகாராய நமஹ
ஓம் க்ஷீரேந்துமுகுடோஜ்ஜ்வலாய நமஹ
ஓம் க்ஷீரோபஹாரரஸிகாய நமஹ
ஓம் க்ஷிப்ரைஸ்வர்ய பலப்ரதாய நமஹ
ஓம் நானாபரணமுக்தாங்காய நமஹ
ஓம் நாரீஸம்மோஹநாக்ருதயே நமஹ
ஓம் நாதப்ரஹ்மரஸாஸ்வாதிநே நமஹ
ஓம் நாகபூஷண பூஷிதாய நமஹ
ஓம் மூர்த்திநிந்தி தகந்தர்பாய நமஹ
ஓம் மூர்த்தா மூர்த்தஜகத்வபுஷே நமஹ
ஓம் மூகாஜ்ஞாநதமோபானவே நமஹ
ஓம் மூர்த்திமத்கல்பபாதபாய நமஹ
ஓம் தருணாதித்ய ஸங்காஸாய நமஹ
ஓம் தந்த்ரீவரதநதத்பராய நமஹ
ஓம் தருமூலைகநிலயாய நமஹ
ஓம் தப்தஜாம்பூநதப்ரபய நமஹ
ஓம் தத்வபுஸ்தோல்லஸத் பாணயே நமஹ
ஓம் தபநோடுபலோசநாய நமஹ
ஓம் யமஸந்துதஸத்கீர்த்தயே நமஹ
ஓம் யதிரூபதராய மௌநினே நமஹ
ஓம் யதீந்ரோ பாஸ்யவிக்ரஹாய நமஹ
ஓம் மந்தாரஹாரருசிராய நமஹ
ஓம் மதநாயுதஸுந்தராய நமஹ
ஓம் மந்தஸ்மிதலஸத்வக்த்ராய நமஹ
ஓம் மதுராதரபல்லவாய நமஹ
ஓம் மஞ்ஜீரமஞ்ஜுபாதாப்ஜாய நமஹ
ஓம் மணிபட்டோல்லஸத்கடயே நமஹ
ஓம் ஹஸ்தாங்குரிதசிந்முத்ராய நமஹ
ஓம் ஹடயோகபரோத்தமாய நமஹ
ஓம் ஹம்ஸஜப்யாக்ஷமாலாட்யாய நமஹ
ஓம் ஹம்ஸேந்த்ராராத்யபாதுகாய நமஹ
ஓம் மேருஸ்ருங்கதடோல்லாஸாய நமஹ
ஓம் மேகஸ்யாமமநோஹராய நமஹ
ஓம் மேதாங்குராவாலாக் ரயாய நமஹ
ஓம் மேதாபக்வபலத்ருமாய நமஹ
ஓம் தார்மிகாந்தர் குஹாவாஸாய நமஹ
ஓம் தர்மமார்க ப்ரவர்த்தகாய நமஹ
ஓம் தாமத்ரயநிஜாராமாய நமஹ
ஓம் தர்மோத்தம மனோரதாய நமஹ
ஓம் ப்ரகஞாசந்த்ரஸிலாசந்த்ராய நமஹ
ஓம் ப்ரக்ஞாமணிவராகராய நமஹ
ஓம் க்ஞாந்தராந்தர பாஸாத்மநே நமஹ
ஓம் க்ஞாத்ருக்ஞாதி விதூரகாய நமஹ
ஓம் க்ஞானக்ஞாத்வைத திவ்யாங்காய நமஹ
ஓம் க்ஞாத்ருக்ஞாதி குலாகதாய நமஹ
ஓம் ப்ரப்ந்நபாரிஜாதாக்ரயாய நமஹ
ஓம் ப்ரணதார்த்யப்திபாடபாய நமஹ
ஓம் பூதாநாம் ப்ரமாண பூதாய நமஹ
ஓம் ப்ரபஞ்சவீதகாரகாய நமஹ
ஓம் யத்தத்வமஸி ஸம்வேத்யாய நமஹ
ஓம் யக்ஷகேயா த்மவைபவாய நமஹ
ஓம் யக்ஞாதி தேவதாமூர்த்தயே நமஹ
ஓம் யஜமாநவபுர்தராய நமஹ
ஓம் சத்ராதிபதி விஸ்வேஸாய நமஹ
ஓம் சத்ரசாமரஸேவிதாய நமஹ
ஓம் சந்தஸ்ஸாஸ்த்ராதி நிபுணாய நமஹ
ஓம் சலஜாத்யாதிதூரகாய நமஹ
ஓம் ஸ்வாபாவிக ஸுகைகாத்மநே நமஹ
ஓம் ஸ்வாநுபூதிஸெளததயே நமஹ
ஓம் ஸ்வாராஜ்யம்ஸபதத்யக்ஷ்ய நமஹ
ஓம் ஸ்வாத்மாராமஹாமதயே நமஹ
ஓம் ஹாடகாப ஜடாஜூடாய நமஹ
ஓம் ஹாஸோதஸ்தாரிமண்டலாய நமஹ
ஓம் ஹாலாஹலோஜ்ஜ்வலகளாய நமஹ
ஓம் ஹாராயுத மநோஹராய நமஹ
நானாவிதை பரிமள பத்ரானி பூஷ்பானி சமர்ப்பயாமி.


ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்திர சத நாமாவளி
ஓம் வித்யா ரூபிணே நமஹ
ஓம் மஹா யோகினே நமஹ
ஓம் ஸுத்த ஞானினே நமஹ
ஓம் பினாகத்ருதே நமஹ
ஓம் ரத்னாலங்க்ருத ஸர்வாங்கினே நமஹ
ஓம் ரத்ன மாலினே நமஹ
ஓம் ஜடா தாரிணே நமஹ
ஓம் கங்கா தராய நமஹ
ஓம் அஜல வாஸினே நமஹ
ஓம் ஸர்வ ஞானினே நமஹ
ஓம் மஹா ஞானினே நமஹ
ஓம் ஸமாதி கிருதே நமஹ
ஓம் அப்ரமேயாய நமஹ
ஓம் யோக நிதயே நமஹ
ஓம் தாரகாய நமஹ
ஓம் ப்ரம்ம ரூபிணே நமஹ
ஓம் பக்த வத்ஸலாய நமஹ
ஓம் ஜகத் வ்யாபினே நமஹ
ஓம் விஷ்ணு மூர்த்தயே நமஹ
ஓம் புராந்தகாய நமஹ
ஓம் விருஷப வாஹநாய நமஹ
ஓம் சர்ம வாஸாய நமஹ
ஓம் பீதாம்பர தராய நமஹ
ஓம் மோக்ஷ நிதயே நமஹ
ஓம் அந்தகாரயே நமஹ
ஓம் ஜகத் பதயே நமஹ
ஓம் வித்யா தாரிணே நமஹ
ஓம் சுக்ல தனுவே நமஹ
ஓம் வித்யா தாயிணே நமஹ
ஓம் கணாதிபாய நமஹ
ஓம் பதாபஸ்மார ஸம்ஹர்த்ரே நமஹ
ஓம் சசி மௌனயே நமஹ
ஓம் மஹாஸ்வராய நமஹ
ஓம் ஸாம வேத ப்ரியாய நமஹ
ஓம் அவ்யயாய நமஹ
ஓம் ஸாதவே நமஹ
ஓம் ஸமஸ்த தேவநாரலங்கிருதாய நமஹ
ஓம் ஹஸ்த வன்ஹி தராய நமஹ
ஓம் ஸ்ரீமதே நமஹ
ஓம் மிருக தாரிணே நமஹ
ஓம் சங்கராய நமஹ
ஓம் யக்ஞ நாதாய நமஹ
ஓம் யமாந்தகாய நமஹ
ஓம் பக்தானுக்ரஹ காரகாய நமஹ
ஓம் பக்த ஸேவிதாய நமஹ
ஓம் விருஷப த்வஜாய நமஹ
ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நமஹ
ஓம் அக்ஷமாலா தராய மஹதே நமஹ
ஓம் த்ரிமூர்த்தயே நமஹ
ஓம் பரப்பிரும்மனே நமஹ
ஓம் நாகராஜ அலங்கிகுதாய நமஹ
ஓம் சாந்தஸ்வரூபிணே நமஹ
ஓம் மஹா ரூபிணே நமஹ
ஓம் அர்த்த நாரீஸ்வராய நமஹ
ஓம் தேவாய நமஹ
ஓம் முனி ஸேவ்யாய நமஹ
ஓம் ஸுரரோத்தமாய நமஹ
ஓம் வ்யாக்யான தேவாய நமஹ
ஓம் பகவதே நமஹ
ஓம் ரவி சந்திராக்னி லோசனாய நமஹ
ஓம் ஜகத் ஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் ஜகத் ஹேதவே நமஹ
ஓம் ஜகத் வாஸினே நமஹ
ஓம் த்ரிலோசநாய நமஹ
ஓம் ஜகத் குரவே நமஹ
ஓம் மஹா தேவாய நமஹ
ஓம் மஹாநந்த பராயணாய நமஹ
ஓம் ஜடாதாரிணே நமஹ
ஓம் மஹா யோகினே நமஹ
ஓம் மஹா மோஹினே நமஹ
ஓம் ஞான தீபைரலங்க்ருதாய நமஹ
ஓம் வ்யோம கங்காஜலஸ்னா தாய நமஹ
ஓம் ஸித்த சங்க ஸமர்ச்சிதாய நமஹ
ஓம் தத்வ மூர்த்தயே நமஹ
ஓம் மஹா ஸாரஸவதப்ரதாய நமஹ
ஓம் யோக மூர்த்தயே நமஹ
ஓம் பக்தானாம் இஷ்ட பலப்ரதாய நமஹ
ஓம் பர மூர்த்தயே நமஹ
ஓம் சித் ஸ்வரரூபிணே நமஹ
ஓம் தேஜோ மூர்த்தயே நமஹ
ஓம் அனாமயாய நமஹ
ஓம் வேத வேதாந்த தத்வார்த்தாய நமஹ
ஓம் சதுஷ் ஷஷ்டி கலாநிதயே நமஹ
ஓம் பவரோக பயத்வம்ஸினே நமஹ
ஓம் பக்தானாம் அபயப் ரதாய நமஹ
ஓம் நீலக்ரீவாய நமஹ
ஓம் லலாடாக்ஷ்ய நமஹ
ஓம் கஜசர்மிணே நமஹ
ஓம் ஞானதாய நமஹ
ஓம் அரோஹிணே நமஹ
ஓம் காம தஹனாய நமஹ
ஓம் தபஸ்வினே நமஹ
ஓம் விஷ்ணு வல்லபாய நமஹ
ஓம் பிரும்சாரிணே நமஹ
ஓம் ஸன்யாசினே நமஹ
ஓம் கிருஹஸ்தாஸ்ரம காரணாய நமஹ
ஓம் தாந்தாஸ்ரம வதாம் ஸ்ரேஷ்டாய நமஹ
ஓம் ஸத்ய ரூபாய நமஹ
ஓம் தயா நிதயே நமஹ
ஓம் யோக பட்டரபிரமாய நமஹ
ஓம் வீணா தாரிணே நமஹ
ஓம் விசேதனாய நமஹ
ஓம் மதிப்ரக்ஞா ஸுதாதாரிணே நமஹ
ஓம் முத்ராபுஸ்தக தாரணாய நமஹ
ஓம் பேதாளாதி பிசாசௌக வினாசநாய நமஹ
ஓம் ராஜலக்ஷ்மாதி ரோகாணாம் விநிர்ஹந்த்ரே நமஹ
ஓம் ஸுரேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீமேதா தக்ஷிணா மூர்த்தயே நமஹ


சித்தர்களின் மரபியல் குரு, 
 
சிஷ்ய பாரம்பரியத்தின் மீது கட்டமைக்கப்  பட்டது. இங்கே 
குருவே எல்லா வற்றுக்கும் மேலானவராகவும், இறை 
நிலைக்கு  இனையானவராகவும் வைத்துப் போற்றப் 
படுகின்றனர். குருவை வணங்குவதும் அவர் வழி   
நிற்றலுமே மேன்மையாக போற்றப் பட்டிருக்கிறது. 
இத்தனை மகத்துவம் வாய்ந்த  இந்த பாரம்பர்யத்தை  
அறிந்து தெளிய நினைக்கும் எவரும் குரு வழிபாட்டினைப் 
 பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
 
சித்தர்களின் எந்த ஒரு  செயலும், முயற்சியும் 
 தங்களின் குருவினை முன் வைத்தே   
துவங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு சீடரும் தன் 
குருவினை தியானிக்கவும்,  வணங்கிடவும் 
தனித்துவமான சூட்சும மூல மந்திரங்களை 
பயன் படுத்தினர். இதன்  பின்னால் இருக்கும் 
மகத்துவம் நமக்கு பிடிபடாவிடினும் இதன் 
காரண காரியங்களை குருமுகமாக நிச்சயம் பெற இயலும்.
 
இந்த பதிவில் மகிமை வாய்ந்த சித்தர்களின் 
மூல மந்திரத்தினை பகிர்ந்து கொள்கிறேன்.
இவை மிகவும் முக்கியமானவை.
 
நந்தீசர் மூல மந்திரம்...
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!
திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம்  ருணம் ஸ்ரீ இடைக்காட்டு  சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
 
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம்  லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"
 
ஒவ்வொன்றும் 100000 ஒரு லட்சத்திற்கு மேல் 
ஜெபம் செய்யும் போது சித்தர்கள் தரிசனம் கிடைக்கும். 
ஒருமனையில் நல்ல கலர் கோளம் போட்டு நல்ல 
பஷ்பத்தால் அலங்கரித்து நெய்தீபம் ஏற்றி பூஜை தொடங்கவும். 
இந்த மந்திரங்களை எவ்வாறு பயன் படுத்துவது?
 
ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்

சாந்தி மந்திரம்

ஓம் யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை |
தம் ஹ தேவம் ஆத்மபுத்தி ப்ரகாசம்
முமுக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே ||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

ஸ்தோத்திரம்

விச்வம் தர்ப்பண த்ருச்யமான
நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பச்யன் ஆத்மனி மாயயா பஹிரிவோத்-
பூதம் யதா நித்ரயா |
ய: சாக்ஷீ குருதே ப்ரபோத ஸமயே
ஸ்வாத்மானமேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம
இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 1 ||

பீஜஸ்யாந்தரிவாங்குரோ ஜகதிதம்
ப்ராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேச கால கலனா
வைசித்ர்ய சித்ரீக்ருதம் |
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி
மஹாயோகீவ ய: ஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம
இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 2 ||

யஸ்யைவ ஸ்ஃபுரணம் ஸதாத்மகம்
அஸத்கல்பார்த்தகம் பாஸதே
ஸாக்ஷாத் தத்வமஸீதி வேத வசஸா
யோ போதயத்யாச்ரிதான் |
யத் ஸாக்ஷாத்கரணாத் பவேன்ன
புனராவ்ருத்திர் பவாம்போநிதௌ
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம
இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 3 ||

நானா சித்ர கடோதர ஸ்தித
மஹாதீப ப்ரபா பாஸ்வரம்
ஜ்ஞானம் யஸ்ய து சக்ஷூராதி கரண
த்வாரா பஹி: ஸ்பந்ததே |
ஜானாமீதி ததேவ பாந்தமனுபாதி
ஏதத்ஸமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம
இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 4 ||

தேஹம் ப்ராணமபீந்த்ரியாண்யபி
சலாம் புத்திம் ச சூன்யம் விது:
ஸ்த்ரீ பாலாந்த ஜடோபமாஸ்த்வஹமிதி
ப்ராந்த்யா ப்ருசம்வாதின: |
மாயாசக்தி விலாஸ கல்பித
மஹா வ்யாமோஹ ஸம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம
இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 5 ||

ராஹூ க்ரஸ்த திவாகரேந்து ஸத்ருசோ
மாயா ஸமாச்சாதனாத்
ஸன்மாத்ர: கரணோபஸம்ஹரணதோ
யோSபூத் ஸூஷூப்த: புமான் |
ப்ராகஸ்வாப்ஸமிதி ப்ரபோத ஸமயே
ய: ப்ரத்யபிஜ்ஞாயதே
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம
இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 6 ||

பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷூ ததா
ஸர்வாஸ்வவஸ்தாஸ்வபி
வ்யாவ்ருத்தாஸூ அனுவர்த்தமானம்
அஹமித்யந்த: ஸ்ஃபுரந்தம் ஸதா |
ஸ்வாத்மானம் ப்ரகடீ கரோதி பஜதாம்
யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம
இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 7 ||

விச்வம் பச்யதி கார்ய காரணதயா
ஸ்வஸ்வாமி ஸம்பந்தத:
சிஷ்யாசார்யதயா ததைவ
பித்ரு புத்ராத்யாத்மனா பேதத: |
ஸ்வப்னே ஜாக்ரதி வா ய ஏஷ
புருஷோ மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம
இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 8 ||

பூரம்பாம்ஸ்யனலோனிலோ -
S
ம்பரமஹர்நாதோ ஹிமாம்சு: புமான்
இத்யாபாதி சராசராத்மகமிதம்
யஸ்யைவ மூர்த்த்யஷ்டகம்
நான்யத் கிஞ்சன வித்யதே விம்ருசதாம்
யஸ்மாத் பரஸ்மாத் விபோ:
தஸ்மை ஸ்ரீகுருமூர்த்தயே நம
இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே || 9 ||

ஸர்வாத்மத்வமிதி ஸ்ஃபுடீக்ருதமிதம்
யஸ்மாதமுஷ்மிம்ஸ்தவே
தேனாஸ்ய ச்ரவணாத் ததார்த்த மனனாத்
த்யானாச்ச ஸங்கீர்த்தனாத் |
ஸர்வாத்மத்வ மஹாவிபூதி ஸஹிதம்
ஸ்யாதீச்வரத்வம் ஸ்வத:
ஸித்த்யேத் தத் புனரஷ்டதா பரிணதம்
சைச்வர்யமவ்யாஹதம் || 10 ||

ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் மகிமை கூறும் பின்வரும் ஐந்து சுலோகங்களும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்துடன் ஓதப்படுகின்றன.

வட விடபி ஸமீபே பூமிபாகே நிஷண்ணம்
ஸகல முனிஜனானாம் ஜ்ஞான தாதாரமாராத் |
த்ரிபுவன குருமீசம் தக்ஷிணாமூர்த்தி தேவம்
ஜனன மரண து:கச்சேத தக்ஷம் நமாமி || 11 ||

சித்ரம் வடதரோர்மூலே
வ்ருத்தா: சிஷ்யா குருர்யுவா |
குரோஸ்து மௌனம் வ்யாக்யானம்
சிஷ்யாஸ்து சின்ன ஸம்சயா: || 12 ||

ஓம் நம: ப்ரணவார்த்தாய சுத்த ஜ்ஞானைக மூர்த்தயே |
நிர்மலாய ப்ரசாந்தாய தக்ஷிணாமூர்த்தயே நம: || 13 ||

நிதயே ஸர்வ வித்யானாம்
பிஷஜே பவ ரோகிணாம் |
குரவே ஸர்வ லோகானாம்
தக்ஷிணாமூர்த்தயே நம: || 14 ||

மௌன வ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்ம தத்வம் யுவானம்
வர்ஷிஷ்டாந்தேவ ஸத்ரிஷிகணைராவ்ருதம் ப்ரஹ்மநிஷ்டை:
ஆசார்யேந்த்ரம் கரகலித சின்முத்ரமானந்த ரூபம்
ஸ்வாத்மாராமம் முதித வதனம் தக்ஷிணாமூர்த்திமீடே || 15 ||

கேசுவரமூர்த்தங்கள் 1425 தட்சிணாமூர்த்தி
யார் இந்த தட்சிணாமூர்த்தி
Ø  பல இடங்களில் கோஷ்டத்தில் இருக்கும்  தட்சிணாமூர்த்தியும்,  நவகிரக சன்னதிகளில் இருக்கும் குரு பகவானும் ஒன்றாகவே கருதப்படுகிறது. என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இரண்டும் வேறு வேறானவை.

வடிவம்(பொது)


Ø  தட்சிணம் என்றால் தெற்கு, த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் சேர்ந்து தட்சிணா மூர்த்தி

Ø   பஞ்சகுண சிவமூர்த்திகளில் சாந்த மூர்த்தி

Ø  பிரம்மாவின் குமார்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகியவர்களுக்கு குரு

Ø  நான்கு கைகள்

Ø  இருப்பிடம் - ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி

Ø  திருமேனி - பளிங்கு போன்ற வெண்ணிறம் - தூய்மை

Ø  வலதுகால் கீழ் - 'அபஸ்மரா' (அறியாமையை / இருளை ) என்ற அரக்கனை(முயலகன்) மிதித்த நிலையில் - அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை

Ø  ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலை(36 அல்லது 96 தத்துவங்கள்) / ஒரு பாம்பு

Ø  அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பு

Ø  கீழ் இடது கையில் தர்பைப் புல் / ஓலைச்சுவடி(சிவஞான போதம்) / அமிர்தகலசம் - அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்

Ø   கீழ் வலது கையில் ஞான முத்திரை (மும்மலங்களை விலக்கி இறைவன் திருவடி அடைதல்)

Ø  ஆடை - புலித்தோல் - தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்

Ø  தாமரை மலர்மீது அமர்ந்த கோலம் - இதயதாமரையில் வீற்றிருத்தல்(ஓங்காரம்)

Ø  நெற்றிக்கண் - காமனை எரித்தல்; புலனடக்கம் உடையராதல் - துறவின் சிறப்பு

Ø  ஆலமரமும் அதன் நிழலும் - மாயையும் அதன் காரியமாகிய உலகம்

Ø  அணிந்துள்ள பாம்பு - குண்டலினி சக்தி

Ø  வெள்விடை - தருமம்

Ø  சூழ்ந்துள்ள விலங்குகள் - பசுபதித்தன்மை

Ø  த்யான ரூபம்

Ø  ஆசனம் - மகாராஜலீலாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், உத்குடிக்காசனம்

வேறு பெயர்கள்

Ø  தெக்கினான்

Ø  ஆலமர் செல்வன்

Ø  தெற்கு நோக்கி இருப்பதால் தென் திசைக் கடவுள்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

Ø  புளியறை, செங்கோட்டை வட்டம்,  திருநெல்வேலி மாவட்டம்
Ø   பட்டமங்கலம் - சிவகங்கை மாவட்டம்
Ø  ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (கும்பகோணம்)
Ø  சிவதட்சிணாமூர்த்தி - காசி விஸ்வநாதர் கோயில், மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட்

Ø  திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் - சனகாதி முனிவர்களுக்கு பதில் பிரம்மா அமர்ந்த கோலம்
Ø   ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கிய கோலம் - திருகன்னீஸ்வரர் கோயில், திருக்கண்டலம், சென்னை ரெட்ஹில்ஸ் - பெரியபாளையம் சாலை
Ø  பள்ளிகொண்டீஸ்வரர் - தட்சிணாமூர்த்தி மனைவி தாராவுடன், சுருட்டப்பள்ளி
Ø  சிவபுரி எனும் திருநெல்வாயை (திருக்கழிப்பாலை), சிதம்பரம்
Ø  திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில், ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன்
Ø   தாயுமான சுவாமி கோயில், திருச்சி மலைக்கோட்டை (தர்ப்பாசனம்)
Ø   பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் (கிழக்கு நோக்கி), திருப்புத்தூர், சிவகங்கை மாவட்டம்
Ø  திருலோக்கி, திருப்பனந்தாள் (அஞ்சலி முத்திரை)
Ø  புஷ்பவனநாதர் திருக்கோயில், (காl maaRRi vadivam), தென்திருபுவனம், திருநெல்வேலி
Ø  பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்,ஓமாப்புலியூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் (சேலை அணிந்து)
Ø  ஐயாறப்பன் கோயில்,திருவையாறு (கபாலமும் சூலமும் ஏந்திய வடிவம்)
Ø  திடியன் மலை கைலாசநாதர் கோயில், மதுரை - பதினான்கு சித்தர்களுடன். நந்தியின் மீது அமர்ந்த கோலம்
Ø  ஆதிரத்தினேஸ்வரர் கோயில், திருவாடனை - வீராசன கோலம்
Ø  நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி - மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
Ø  திரிசூலம் கோயில், சென்னை - வீராசன கோலம்
Ø   தியாகராஜர் கோயில் (வெளியில்), திருவொற்றியூர்
Ø  தக்கோலம் (சாந்த தட்சிணாமூர்த்தி)- உத்கடி ஆசனம்
Ø  வீணாதர தட்சிணாமூர்த்தி கோலம் - நாகலாபுரம் வேதநாராயணர் கோயில், திருப்பூந்துருத்தி, நஞ்சன்கூடு, காஞ்சிபுரம் கைலாசநாதர், தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயில்
Ø  கல்யாணசுந்த ரேஸ்வரர், நல்லூர்,  தஞ்சை பாபநாசம் - இரட்டை தட்சிணாமூர்த்தி
Ø  ஆத்மநாதசுவாமி கோயில்,சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடதிசை - யோகநிலை
Ø  ஹேமாவதி, அனந்தப்பூர், ஆந்திரா - யோக மூர்த்தி
Ø  சுகபுரம், கேரளா மாநிலம்


இதரக் குறிப்புகள்

நூல்கள்
ஞான சூத்திரம்,
ஞானச் சுருக்கம்,
ஞான பஞ்சாட்சரம்,
அகஸ்த்திய சகலாதிகாரம்,
சாரஸ்வதீயசித்ரகர்மமசாஸ்த்திரம்,
சில்பரத்தினம்,
சிரிதத்துவநிதி,
காரணாகமம்,
அம்சுமத்பேதாகமம்,
லிங்கபுராணம்

ஆதிசங்கரர் இயற்றியது தட்சிணாமூர்த்தி அஷ்டகம்.

பல திருவுருவங்கள்

ஞான தட்சிணாமூர்த்தி,
வியாக்யான தட்சிணாமூர்த்தி,
சக்தி தட்சிணாமூர்த்தி,
மேதா தட்சிணாமூர்த்தி,
யோக தட்சிணாமூர்த்தி,
வீர தட்சிணாமூர்த்தி,
லட்சுமி தட்சிணாமூர்த்தி,
ராஜ தட்சிணாமூர்த்தி,
பிரம்ம தட்சிணாமூர்த்தி,
சுத்த தட்சிணாமூர்த்தி
 
தட்சிணாமூர்த்தி அஷ்டகம்"

வ்ருஷ தேவர் அருளியது
1-அகணித குணகணமப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
விளக்கம்
எண்ணுதற்கரிய குணமுடையவரும், காட்சி முதலிய பிரமாணங்களால்
அறியவொண்ணாதவரும்,  உலகங்களைப் படைத்து,  காத்து,  அழிக்கக் காரணமாயும்,  சாந்தமான யோகிகளினுள்ளத்தில் குடிகொண்டவரும், முதல்வருமான தக்ஷிணாமூர்த்தியை இடையறாது நான் துதிக்கின்றேன்.
2-நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
விளக்கம்
வரம்பிலாத இன்பமுடையவரும், விருப்பங்களை அளிப்பவரும், வணங்கியவரின் மனக்கவலைகளைத் தீர்ப்பதில் வல்லுநரும், காட்டைத் தீ அழிப்பதுபோலத் தன் நாமத்தை உச்சரித்த அளவில் பிறவிக் கடலைக் கடக்கச் செய்கின்றவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.
3-த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
விளக்கம்
மூவுலகிற்கு குருவாயும், ஆகமங்களால் உணரப்படுபவரும், உலகங்களுக்குக்
காரணமான யோகமாயையுடையவரும், நூறு சூரியன்போல் ஒளிர்பவரும், இஷ்டங்களை அளிப்பவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.</p>
4-அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
விளக்கம்
உலக வாழ்க்கையை நினைப்பவர்கட்கு எட்டாதவரும், தாமரை அடியிணைகளை தியானிப்பவருக்கு அண்மையிலுள்ள பிறவிக் கடலைத் தாண்ட கப்பல்போன்ற திருவடிகளை உடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.
5-க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
விளக்கம்
எப்போதும் ஆலமரத்தடியிலிருப்பவரும், உபநிடதங்களால் உணர்த்தப்பெறும்
உடலுடையவரும், கைவிரலிலுள்ள சின் முத்திரையினால் மெய்ஞ்ஞானம்
உணர்த்துபவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.
6-த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
விளக்கம்
பிரம்மபுத்திரனால் பூஜிக்கப்பட்ட திருவடித்தாமரைகளில் வணங்கியோர்களுக்கு வீடுபேறு அளிக்க வல்லமையுடையவரும், குருகுல வாசம் செய்த யோகிகளுக்கு நண்பருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.
7-யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
விளக்கம்
துறவிகளினுள்ளத்தில் விளங்குபவரும், கோடி மன்மதனை யொத்த அழகினை
உடையவரும், பரோபகாரிகளுக்குச் சேவிக்கத்தக்க முதல்வருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.
8-ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
விளக்கம்
புன்முறுவல் பூத்த மலர்ந்த முகமுடையவரும், மறைகளாலறியப்படுபவரும்,
விடையேறிய வெண்தாமரை போன்ற ஒளிமிக்க திருமேனியுடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.
9-வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!!
விளக்கம்
விருஷபதேவரால் இயற்றப்பட்ட இஷ்டங்களை அளிக்கவல்ல இத்துதியைத்
தக்ஷிணாமூர்த்தியின் சன்னதியில் படிப்பவர் சகல துக்கங்களிலும் பாபங்களினும் விடுபட்டவராய் மெய்ஞ்ஞானம் பெற்றுச் சிவலோகத்தில் வாழ்வார்.
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.

ஜாதகம் பார்க்க, ஜாதகம் கணிக்க, திருமண பொருத்தம், எண்கணிதம், ராசிரத்தினம் பார்க்க அணுகவும். ராகு, கேது, சுக்கிரன், செவ்வாய், சனி தோஷ நிவர்த்தி செய்து தரப்படும். திருமணத்தடை, புத்திர பாக்கியம் இன்மை, உத்தியோக தடை, கல்வித் தடை, சொந்த வீடு அமையாமை பூமி தோஷம் மற்றும் பல பிரச்சனைகள் நிவர்த்தி செய்து தரப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

வாக்கிய பஞ்சாங்க கணித பிரசன்ன ஜோதிடர், புரோகிதர்.
G.V. மணிகண்ட ஷர்மா
1 / 267, J. J நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை - 600037.
Contact Details
+91-7092103071, 7092103072
+91-9962225358, 9444226039
www.neelajothidam.blogspot.in
 E-mail  :  manisharmajothidam@gmail.com


No comments:

Post a Comment