WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday, 23 August 2014

ஸ்ரீ வாசுதேவன், கருடனை நோக்கி கூறலானார் ஸ்ரீ கருடப் புராணம்



ஸ்ரீ கருடப் புராணம்
பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா! பரந்தாமா! ஸ்ரீ ஹரியே! உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்? என்ன காரணத்தால் சுவர்க்க நரகங்களை அடைகிறார்கள்?. எந்தப் புண்ணியத்தைச் செய்தால், இன்ப வீடான தேவர்களின் உலகை அடைவார்கள். எத்தகைய கர்மங்களால் பாவங்கள் நிவர்த்தியாகும். இறக்கும் வரை யாரை நினைத்தால் நற்கதி கிடைக்கும்? இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகக் கூறியருள வேண்டும் என்று வேண்டினான்.
ஸ்ரீ மந்நாராயணர் எல்லோர் மனதிலும் புகுந்து அனைத்தையும் பார்க்க வல்லவரும், எல்லா செயல்களுக்கும் காரணமாகியவருமான ஸ்ரீ ஹரி பகவான் புன்னகையுடன் பறவை வேந்தனை நோக்கிக் கூறலானார்.
கருடனே! நீ நல்லதொரு கேள்வியை நல்ல முறையில் கேட்டு விட்டாய். அது உலகினருக்குப் புரியாத ரகசியங்கள். அவற்றை நாம் கூறுவோம். கவனமாகக் கேள். எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் என்றாவது இறப்பது நிச்சயம் என்பதை யாரும் நினைப்பதில்லை. உயிர்களைக் கவர்ந்து செல்லும் கூற்றவன்(எமன்) என்றும் விடமாட்டான் என்ற உண்மையை உணர்ந்த மனிதன் பயந்தாவது நல்ல தருமங்கள் இயற்றி அறநெறிப்படி வாழ்வான். அவன் தர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அக்கருமங்களே அவனைக் காப்பாற்றும். தனக்குரிய கர்மங்களை ஒருவன் முறைப்படிச் செய்கிறானோ, அவனே எல்லாவிடத்திலும் மேன்மையடைவான்.
பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு வருணத்தார் இருக்கிறார்கள். பிராமணருக்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறு கர்மங்கள் உள்ளன. ஷக்த்திரியருக்கு ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படைபயித்றல், பொறுத்தல் என்று ஆறுவகைக் கருமங்கள் உண்டு. வைசியருக்கு ஓதல், கேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களைக் காத்தல், ஏரூழல் என ஆறு கர்மங்கள் உண்டு. சூத்திரருக்கு ஓதல், முன்னவருக்கு பணியாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுகாதல், வேட்டல் முதலிய ஆறு கர்மங்கள் உண்டு. அவரவர் குலமரபுக்குரிய ஒழுக்கபடி நடப்பதே பெரிய தவமாகும். அதில் வழுவாது ஒழுங்காக வாழ்பவர் எவரோ, அவரே போகத்தையும் யோகத்தையும் ஒருங்கே அடைந்து நெடுநாள் வாழ்ந்து, இறுதியில் தமக்குரிய உலகை அடைவார்கள். அவாவை ஒழித்து பட்ற்றற்றவர்களே பேரறிஞர்களாவர். என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார் மூன்று ஆசைகள் கொண்ட சிறந்த பிறவிகள்
ஸ்ரீ வாசுதேவன், கருடனை நோக்கி கூறலானார்:

பறவைகளுக்கு அரசே! உலகில் எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்கள் உள்ளன. அவை அண்டகம், உற்பிசம், சராவுசம், சுவேதசம் என்று நான்கு வகையில் உள்ளன. அண்டகம் என்ற வகையில் முட்டையிலிருந்து இருபத்தோரு லட்சம் பறவைகள் தோன்றின. உற்பிச வகையில் இருபத்தோரு லட்சம் மரஞ், செடி, கொடி, தாவர வகைகள் தோன்றின. கருப்பப் பையிலிருந்து தோன்றுவதான சிராயுசம் வகையில் இருபத்தோரு லட்சம் மனிதர்கள் தோன்றினர். வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில் இருபத்தோரு லட்சம் கொசு முதலியவைகளும் தோன்றியுள்ளன. கருடா! பிறவிகள் அனைத்திலும் மானுடப் பிறவி அரிதினும் அரிது. மனிதப் பிறவியே புண்ணியப் பிறவியாகும். எல்லா விதத்திலும் மானிடப் பிறவியே சிறப்புடையது. புண்ணியத்தால் அடைந்த மானுடப் பிறவியால் பாக்கியம் அடையாதவர்கள், தமக்குத் தானே வஞ்சனை செய்து கொள்பவர்களாவார்கள். மண், பொருள் , ஆசைகள் எனப்படும் இம்மூன்று ஆசைகளால், மயக்கமுற்று செய்யத் தகாதவற்றைச் செய்து தன் மனசாட்சிக்கும், மனிதாபிமான உணர்வுக்கும், மாறுபாடான தீயச் செயல்களைச் செய்து, தர்மங்களை அறியாமல் உழல்பவன் எவனோ, அவன் மிருகங்களுக்கு ஒப்பாவான். இதனால் அறிவுணர்வும், அன்புணர்வும், அறநெறி வாழவும் வளராது. அளவில்லாமல் ஆசைகள் வளர்ந்து கொண்டேயிருக்கும். ஆசையே அழிவுக்குக் காரணம் என்று போதிக்கும் மகான்களோ, யாவராலும் போற்றப்பட்டு, நம் இறுதி நாளான அந்திம காலத்தில் சுவர்க்க லோகத்தை அடைவார்கள். ஆசைக்கு அடிமையானவர்கள் வயோதிகப் பருவம் வந்ததும், தன் புத்திரர், பௌத்திரர்கள் துணித்து கிழப் பிணமே! வாய் திறவாமலே வெறுமனே விழுந்து கிட! என்று இழித்தும், பழித்தும், அதட்டியும் பேசும் ஏச்சு மொழியைக் கேட்டு, மனம்பொறுமிக் கிடப்பான்.ஆகையால் கல்வியும் வித்தையும் கற்றுணர்ந்தவனேயானாலும் ஞானம் (மெய்யறிவு) இல்லாவிட்டால் பொண்ணுக்கு அடிமையாகி கிடப்பான்.

கருடா! இந்திரிய உணர்வினாலேயே ஒவ்வோர் ஜீவராசிகள் நாசம் அடையும் போது பஞ்ச இந்திரிய இச்சைகளையுடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாகயிராது என்பதில் சந்தேகமில்லை. இல்லற வாழ்வின் சுகதுக்கங்களில் எது அதிகமாயினும் பெண்டுபிள்ளைகள் அதிகமாகிப் பந்தபாசத்தால் கட்டுண்ட மனிதன் நிம்மதியடைய மாட்டான். உலகில் மனிதன் பிறந்து பிறந்தே இறக்கிறான்.ஆசைகளால் நோயுற்று மாண்டு விடுகின்றான். ஒருவரும் தனக்கு துணையில்லாமல் ஒருவனாகவே யாருக்கும் சொல்லாமல் மடிந்து போகிறான். பொய்யான பத்திரங்கள் எழுதி பொய் சொல்லி, ஏமாற்றி, வழிப்பறி, கொலை புரிந்து, தீயச் செயல்களைச் செய்து, தான் சேர்த்த பொருள்களை, உரியவருக்கு அளித்து, பழி பாவங்களோடு போகிறான். அவன் மனைவி மக்கள் பாவங்களில் பங்கு ஏற்றுக் கொள்வாரில்லை. முக்திக்குச் சாதனமான, தவம், தருமம், தானம் செய்து, பிரபக்தி மார்க்கம் எனப்படும் தேவ சேவைகளை செய்வதே உத்தமமாகும். இவ்வாறு ஸ்ரீ நாராயணர் உணர்த்தியருளினார் பிரேத ஜென்மம் நீங்க வழி
கருடாழ்வார் ஸ்ரீமந் நாராயண பகவானைத் தொழுது வைகுண்ட நாதரே! மனிதர்களுக்கு மிகவும் கொடியதான பிரேத ஜென்மம் வராமல் ஒழியும் மார்க்கம் எது என்பதை தேவரீர் தயவு செய்து கூறியருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். ஸ்ரீமந் நாராயண பகவான் கருடனை நோக்கிக் கூறலானார்.


ஒ கருடா! மனிதர்கள் இறந்தவுடன், பிரேத ஜென்மத்தை நிவர்த்திக்க விரும்பியா யாவரும் ஐந்து வயதுக்கும் மேற்ப்பட்ட யார் இறந்தாலும், அவருக்கு பிரேத ஜென்மம் ஏற்படாமல் இருக்க கர்மம் செய்பவன் விருஷோற்சர்க்கம் செய்தல் அவசியம். இந்தக் கருமத்தைத் தவிர வேறு கர்மங்கள் செய்வதற்கில்லை. இறந்தவருக்கு பிரேத ஜென்மம் வருவதில்லை. இறந்தவர்களுக்கு இறந்த பதினொன்றாம் நாள் விருஷோற்சனம் என்ற கர்மங்கள் தன புத்திரனாவது, மனைவியாவது ஆண், பெண் வயிற்றுப் பிள்ளையாவது, பெண்ணாயினும் செய்யலாம். ஆனால், புத்திரன் செய்வது தான் சிறந்தது. கர்மம் செய்யாமல் சிரார்த்தம் மட்டும் செய்வதால் எந்த பலனுமில்லை. பிள்ளையில்லாமலும், பெண்ணில்லாமலும் ஒருவர் இறந்து, உரிய உத்திரக் கிரியைகளைச் செய்யாமல் விட்டுவிட்டால் அவன் இரவு பகலாக பசியோடும், தாகத்தோடும் ஐயையோ! என்று கூச்சல்லிட்ட வண்ணம் உலகமெங்கும் நெடுங்காலம் வரை அலைந்து, திரிந்து பிறகு புழுக்கள், கிருமிகள் முதலிய ஜென்மங்கள் எடுத்து, பிறந்து பிறந்து மரிப்பான். யாருமேயில்லாதவன் உயிரோடிருக்கும் போதே சாவதற்கு முன்பாக, நற்கர்மங்கள் செய்யக் கடவன் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார். தான தருமங்களும் விருஷோற்சனமும்
வேத வடினனாகிய கருடன் சர்வலோக நாதரான ஸ்ரீமந் நாராயணனை வணங்கி, ஹே பரமாத்மா! ஒருவன் மனத்தூய்மையோடு தானதர்மங்களைத் தன கையாலே செய்வானாயின், அதனால் அவன் அடையும் பயன் என்ன? அவனுக்காக அவனுடைய மகன் முதலியோர் தான தர்மம் செயபவர்களானால்அதனால் உண்டாகும் பயன் என்ன? இவற்றைத் திருவாய் மலர்ந்தருள வேண்டுகிறேன்! என்று வின்னபஞ் செய்ய பாம்பணையில் துயிலும் பரமாத்மா கூறலானார். கருடனே!

மனத்தூய்மை இல்லாமலும், மனவுறுதி இல்லாமலும் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனைப் பயன் உண்டோ, அதனை பயனும் சித்த சுத்தத்தோடு சாஸ்திரங்களில் விதித்த வண்ணம் ஒரு பசுவை நல்லவருக்கு தானம் செய்தால், அதனை பயனும் கிடைக்கும். கோதரணம் கொடுப்பவரும், வாங்குபவரும் மனத்தூய்மை உள்ளவராகயிருக்க வேண்டும். கற்றுணர்ந்த சான்றோருக்குக் கொடுக்கப்படும் தானம். வாங்குபவர் உத்தமராக இருக்க வேண்டும். தானம் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் புண்ணியமுன்டாகும். வேத சாஸ்திரங்களை ஓதாமலும், ஒழுக்க வழியில் நில்லாமலும், பிராமணன் என்ற பெயரை மட்டும் கொண்டவனுக்கு தானம் கொடுத்தால், அந்த தானமே தானங் கொடுத்தவனுக்கு நரகத்தைக் கொடுக்கும். மேலும் தானம் வாங்குவதற்கே தகுதியில்லாதவன் தானம் வாங்குவானாயின் அவன் இருபத்தோரு தலைமுறை உள்ளவர்களோடு நரகம் புகுவான்.  ஒரு பசுவை, ஒருவருக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். சாதுக்களிடம் நல்லப் பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் கொடுத்தவன், அந்தப் பிறவியிலாவது, மறுபிறவியிலாவது அதற்குரிய நற்பயனைச் சந்தேகமின்றி அடைவான். தானம் கொடுப்பவன் எளியவனாக இருந்தால் ஏதாவது ஒருபொருளைக் கொடுத்தாலும் போதுமானது. கருடா! மரித்த பிறகு செய்ய வேண்டிய கிரியைப் பற்றி உனக்கு ஒருவாறு கூறினேன் என்று ஸ்ரீமந் நாராயணர் கூறியருளினார் யம லோகத்திற்கு போகும் வழி  ஸ்ரீ வேத வியாச முனிவரின் மாணவரான, சூதபுராணிகர் நைமிகாரணியவாசிகளான மகரிஷிகளை நோக்கி, அருந்தவ முனிவர்களே கருடாழ்வான். திருமகள் கேள்வனைப் பணிந்து வணங்கி, சர்வலோக நாயகா! யமலோகம் என்பது இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? அதன் தன்மை யாது? அவற்றைத் தயை செய்து கூறியருள வேண்டும் என்று கேட்கவும் கருணைக் கடலான கார்மேக வண்ணன், கருடனை நோக்கிக் கூறலானார்.  கருடனே! மனிதர்கள் வாழும் மானுஷ்ய லோகத்திற்கும் யமபுரிக்கும் இடையில் எண்பத்தாறாயிரம் காதம்( 1காதம் =7km ) இடைவெளியுள்ளது.  அந்த யம லோகத்தில் யெழும் எமதர்மராஜன் கூற்றவன் உலகத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆயுட்காலம் முடிந்ததும் ஜீவனைப் பிடித்து வரும்படியாகத் தன தூதர்களிடம் கூறுவான். விகாரமான மூவகைத் தூதர்களை ஏவியனுப்புவான். வாழ்நாள் முடிந்த ஜீவனைப் பாசத்தால் கட்டிப் பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைத்து யமலோகத்திற்குச் செல்வார்கள். ஆவி உருவ சீவர்களை யமபுரித் தலைவன் கால தேவன் முன்னால் நிறுத்துவார்கள். அவர் அத்தூதர்களை நோக்கி, ஏ கிங்கரர்களே! இந்த சீவனை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டு பன்னிரெண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி மீண்டும் நம் திருச்சபை முன்பு நிறுத்துங்கள் என்று கட்டளையிடுவான். உடனே ஒரு நொடி நேரத்திற்குள் சீவனின் இல்லத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். ஆவி வடிவுடைய அந்த உயிர் சுடுகாட்டிலே தன் சிதைக்கு பத்து முழ உயரத்தில் நின்று, தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரியும் தன் உடலைப் பார்த்து, அந்தோ! ஐயையோ! என்று ஓலமிட்டு அழும். தீயிலோ உடல் எரிந்து வெந்து சாம்பலாகும் போது தன் உறவு பொருள் மீது இருந்த ஆசையானது ஒழியாது. சீவனுக்குப் பிண்டத்தலான சரீரம் உண்டாகும். புத்திரன் பத்து நாட்கள் போடும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உண்டாகும். அவன் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்று அங்கு இருப்பவர்களைப் பார்த்து பசி தாகத்தால் ஆ..ஆ... என்று கதறி பதறி நிற்பான். பன்னிரெண்டாம் நாளில் பிராமணர் மூலமாய் புத்திரனால் கொடுக்கப் பட்டவற்றை உண்டு பதின்மூன்றாம் நாளன்று பிண்டவுருவத்தில் பாகத்தால் பிணித்து கட்டிப் பிடித்துக் கொண்டு போகும் போது தன் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்து கதறிக் கொண்டே யம லோகத்தை அடைவான். பிண்ட சரீரம் பெற்ற சீவனன், யம கிங்கரர்களால் பாகத்தால் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காத வழி இரவுபகலுமாக நடந்து செல்ல வேண்டும். அவன் போகும் வழியில் கல், முள், அடர்ந்த காடுகளைக் கண்டு பிண்ட சீவன் பசியாலும், தாகத்தாலும் வருந்தித் தவிப்பான்.
வைவஸ்வத பட்டணம் என்ற பட்டணமுண்டு. அங்கு அச்சம் தரும் மிகவும் கோரமான பிராணிகளுக்கு இருப்பிடமாகவும், துக்கத்தையே கொடுப்பதாகவும் அமைந்திருக்கும். பாபம் செய்தவர்கள் மிகப் பலர் எப்போதும் ஆ, , , ஊ என்று ஓலமிடுவார்கள். அங்கு வெப்பத்தால் கொதிக்கும் கொதிநீர்தான் காணப்படும். குடிக்க ஒரு துளித் தண்ணீர் கூடக் கிடைக்காது. அருந்துவதற்கு அருகதையற்ற ரத்தம் பொழிவதாக இருக்கும். நான் உயிரோடிருந்த போது எத்தனை பாவங்கள் செய்தேன். ஞானிகளையும், பாகவத சந்நியாசிகளையும் ஏசிப் பேசிப் பரிகாசம் செய்தேன். அவற்றையெல்லாம் இப்போது அனுபவிக்கின்றேன். மலை போன்ற ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமலே என்னை அடித்துப் புடைக்கிறார்களே! அந்தோ! உடலுமில்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேன். ஒவ்வொரு குரலுக்கும் தூதர்கள் அவனைத் துன்புறுத்த அவன் அவர்களால் யமபுரிக்கு இழுத்துச் செல்லப்படுவான்! என்று திருமால் கூறியருளியாதகச் சூதபுராணிகர் கூறினார். சீவன் செல்லும் பாதையில் பரதவித்தல்  சூதபுராணிகர் நைமிசாரணியவாசிகளை நோக்கி, திருமாலின் திருவடி மறவாத பக்தர்களே என்று கூறலானார்.
கருடனுக்குத் திருமால் பின்வருமாறு கூறியதாவது:

யமதூதர்களால் பாசக் கையிற்றால் கட்டுண்டும், அவர்களிடம் உதையுண்டும் செல்லும் சீவன் தன் மனைவி மக்களோடு வாழ்ந்த காலத்தில் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து, துன்பமடைந்து பசியாலும் தாகத்தாலும் மெலிந்து சோர்வுற்று இளைத்து, ஈன ஸ்வரத்தோடு ஐயகோ! நம்மோடு வாழ்ந்த உற்றார் உறவினர் எங்கே? இந்த யம படர்களிடம் சித்ரவதைப்ப்படும்படி விட்டு விட்டார்களே! நான் சேர்த்த பொருள்கள் எங்கே ? ஊரையடித்து உலையில் போட்டோமே, உழைத்தவன் உழைப்பை உறிஞ்சி நயமாக வஞ்சித்து வாழ்ந்தோமே! என்று அலறித் துடிப்பான்.
கருடா! தீய தொழில் புரிந்தோர் அடையும் கதியைப் பார்.
பிறகு அந்த சேதனன் சிறிது தூரம் அனாதையாக காற்றின் வழியிலும் புலிகள் நிறைந்த வழியிலும் இழுத்துச் சென்று ஓரிடத்தில் தங்கி, இறந்த இருபத்தெட்டாம் நாளில் பூமியில் புதல்வனால் செய்யப்படும் ஊனமாகிய சிரார்த்த பிண்டத்தைப் புசித்து முப்பதாம் நாளன்று யாமியம் என்று நகரத்தைச் சேர்வான்.
அங்கு பிரேதக் கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருக்கும். புண்ணிய பத்திரை என்ற நதியும் வடவிருட்சமும் அங்கு உள்ளன. பிறகு "அவ்யாமியம்" என்ற நகரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து இரண்டாவது மாசிக பிண்டத்தை அருந்தி இரவும் பகலும் தூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு யாருக்கும் பயத்தை ஏற்படுத்தும் ஆரண்யத்தின் ஊடே சென்று வழிநடக்கும் வேதனையோடு ஓவென்று அழுது தூதர்கள் செய்யும் கொடுமையால் வருத்தித் துன்புறச் செல்லும் வழியில் திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற அரசனுக்குரிய சௌரி என்ற நகரத்தைச் சார்ந்து அங்கு மூன்றாம் மாசிக பிண்டத்தை புசித்து அப்பால் சென்று, வழியிலே பொறுக்க முடியாத குளிரினால் மிகவும் வருந்துவான். பிறகு "குருரபுரம்" என்ற பட்டணத்தை அடைந்து அங்கு ஐந்தாவது மாசிக பிண்டத்தையுண்டு அப்பால் நடந்து "கிரௌஞ்சம்" என்ற ஊரையடைந்து, அந்த ஊரில் ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கு வாழ்ந்ததை நினைத்து வாய்விட்டு புலம்புவான். அப்போது யமபடர்கள் சினங்கொண்டு அவ்வாயிலே புடைப்பார்கள். வருந்தி செல்லும் வழியில் அஞ்சத்தக்க ரூபமுடைய படகோட்டிகள் பதினாறாயிரம் பேர்கள் கூட்டமாக அவன் முன்பு ஓடிவந்து தீப்பொறி பறக்க விழித்து,
ஏ ஜீவனே! எப்போதாவது வைதரணி சோதானம் என்ற தானத்தைச் செய்திருந்தாயானால் இனி நீ கடந்து செல்ல வேண்டிய வைதரணி நதியை, நீ இனிதாகக் கடக்க நாங்கள் உனக்கு உதவி செய்வோம். இல்லையெனில் அந்த நதியிலே உன்னைத் தள்ளிப் பாதாளம் வரையிலும் அழுத்தித் துன்பப்படுதுவோம். அந்த நதியிலே தண்ணீரே இராது. இரத்தமும், சீழும், சிறுநீரும் மலங்கலுமே நிறைந்து துஷ்ட ஜந்துக்களிலும் கோடி ஜந்துக்கள் வாழும் இடமாகும். பசு தானத்தை நீ செய்திராவிட்டால், வைதரணி நதியிலே, நீண்ட நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும் என்று ஓடக்காரர்கள் கூறுவார்கள்.
பூமியில் வாழ்ந்த காலத்தில் வைதரணி "கோதானம்" என்ற தானத்தை செய்யாமல் போனாலும் அவன் இறந்த பிறகு அவன் குலத்தில் பிறந்த அவன் மகனாவது அவனைக் குறித்துச் செய்ய வேண்டும். செய்திருந்தால் ஜீவன் அந்த நதியைக் கடந்து யமனுக்கு இளையோனாகிய விசித்திரன் என்பவனது பட்டினத்தைச் சார்ந்து ஊனஷானி மாசிகப் பிண்டகத்தை உண்ணும் போது, சில பிசாசுகள் அவன் முன்பு பயங்கரத் தோற்றத்துடன் தோன்றி, அந்த சீவனைப் பார்த்து, அட மூடனே! நீ யாருக்கும் தானம் செய்யாதவனாக இருந்தால், உன் பசிக்கென்று உனக்காக மாதந் தவறாமல் மாசிக சிரார்த்ததைச் செய்து, உன் கைக்கு கிடைத்து, நீ ஆவலோடும், பசியோடும் புசிக்க துடிக்கும் அன்னத்தை, பேய் பிசாசுகள் புடிங்கிச் சென்று விடும்.
பறவைகளின் அரசே! ஒரு பொருளுமே இல்லாத வறிஞனாகப் பூவுலகில் வாழ்ந்தாலும் கூட, தன்னை யாசித்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்றவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் இயன்ற சிறு உதவியாவது செய்ய வேண்டும். அப்படி செய்யாதவர்கள், இறந்த பிறகு தூதர்களால் இழுத்துவரப்பட்ட சீவன், புத்திரன் அவன் பொருட்டு கொடுக்கும் மாசிக பிண்டம் அவனுக்கு சேராமல் பிசாசுகளின் கரங்களிலேதான் சேரும். ஐயகோ! பசியால் என்னை நாடி வந்தவர்களுக்கு கொடுக்காத பாவத்தின் பயனோ இது? வயறு பசிக்க, நாக்கு வறல நான் தவிக்கும் தவிப்பை காண ஒருவருமில்லையே!
பூமியில் பொருள் மிகுந்தவனாக வாழ்ந்த என்னை நவ்விய பொது, அவனுக்கு அரை வயிற்றுப் பசிதீரவாவது அன்னம் கொடுத்தேனா! சாக்காடு என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது என்று புராணங்களில் படித்ததை நம்பினேனா! "செத்த பிறகு என்ன கதி வந்தால் என்ன, இருக்கும்போது நமக்கு ஏன் கவலை!" என்று இருமாந்திருந்தேனே! இப்போது இங்கு நான் படும் தொல்லையை யாரிடம் சொல்வேன். என்னவென்று சொல்வேன்! என்று துக்கப்படுவான்.


அப்போது அவன் அருகே இருக்கும் தூதர்கள் அவனைப் பார்த்து' முழு மூடனே! பூமியில் மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று, மானிட ஜென்மம் கிடைப்பது அரிது. அவன் இன்மைக்கும் மறுமைக்கும் தருமங்களையும் ஏராளமாகத் தான் வாழ்கின்ற காலமெல்லாம் செய்து புண்ணியங்களை சேர்த்திருக்கலாமே, அதை விட்டு மறுமைக்கு பயன் தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங்கழித்த மானிடனை என்னவென்று சொல்வது? பூமியில் வாழ்கின்ற காலத்திலேயே சேக்கிற நல்வினைத் தீவினைப் பயன்களை அடையாமல் உடலை இழந்து ஆவியான பின்பு எதையுமே செய்ய இயலாது. மண்ணுலகத்திலே ஆடம்பரமாக, அகம்பாவமாக, ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், உழைப்பாளியை உதைக்கச் செய்வதும் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் என்பதை அறிவாயாக. இறந்தபின் நினைத்து என்ன பயன்?.

கருடனே! உதக கும்பதானம் என்ற ஒருவகைத் தானமாக செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தை விட்டு மீண்டும் நடந்து செல்வான். இதுவரை பாதி தொலைவைக் கடந்தவனாய் அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அன்னதானம் செய்ய வேண்டும். பிறகு அந்த ஜீவன் பக்குவபதம் என்ற பட்டினத்தைச் சார்ந்து எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து "துக்கதம்" ஊரை அடைந்து உண்பான். விருஷோற்சனம் செய்யாமையால் அநேகம் ஜீவர்கள் பிரேத ஜென்மத்தோடு அப்பட்டணத்தில் கூட்டம், கூட்டமாக கூடி, ஒ ஒ வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச்சீவர்களை பாது அங்குவந்த ஜீவனும் கத்தி கதறிவிட்டு, அப்பால் நடந்து "அதத்தம்" என்ற ஊரையடைந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து "சீதாப்ரம்" என்ற நரகத்தை அடைந்து அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரெண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் பார்த்து ஈனக் குரலில் யமகிங்கர்களே! என் உற்றார் உறவினர்களை காணோமே! ஏழையேன் என் செய்வேன் என்று அழுவான்.

அப்போது எமதூதர்கள் அந்த சீவனை நோக்கி முழுமூடனே! உன் மனைவி மக்கள் இன்னமுமாயிருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசைகள் இன்னும் நீங்கவில்லையா? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண முடியும் என்று அறைவார்கள். ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னது மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன் என்று தனக்குள் தானே மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே ஊனற்பதிக பிண்டத்தை அருந்தி யமபுரி பட்டினமாகிய வைவஸ்வத பட்டினத்தை அடைவான். யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதால் காந்தர்வ அப்சரசுகளோடு கூடியதாய் என்பது நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாகயிருக்கும் ஜீவன்கள் செய்யும் பாப புண்ணியங்கள் அறிந்து, எமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு நிறவனர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்து ஆராதித்தால், ஜீவன் செய்த பாபங்களை யெல்லாம் மறைத்து புண்ணியங்களை மட்டும் சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள் என்று திருமால் கூறியருளினார். பாப புண்ணியங்களை ஆராய்ந்து செல்லும் பன்னிரு சிரவணர்கள்
பாப புண்ணியங்களை ஆராய்ந்து செல்லும் பன்னிரு சிரவணர்கள்

சூதமாமுனிவர், சௌகாதி முனிவர்களை நோக்கிக் கூறலானார். வேத வடிவிலான பெரிய திருவடி பரம காருண்யரான திருமாலின் திருவடிகளைத் தொழுது பெருமாளே! தேவரீர் முன்பு கூறியருளிய அச்சிரவணர்கள் பன்னிருவர்களும் யாவர்? அவர்கள் யாருடைய புதல்வர்கள்? வைவஸ் வத நகரத்தில் அவர்கள் இருப்பதற்கு காரணம் என்ன? மனிதர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அச்சிரவணர்கள் எவ்வாறு அறிவார்கள்? இவற்றையெல்லாம் அடியேனுக்கு நவின்றருள வேண்டுகிறேன் என்று வேண்டினான். அதற்கு திருமால் மகிழ்ந்து கூறலானார்.
புள்ளரசே! கேட்பாயாக! ஊழி காலத்தில் தன்னந் தனியனான ஸ்ரீ மகா விஷ்ணுவானவர் அயனாராதி தேவரோடு யாவரும் யாவும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொண்டு நெடும்புணலில் பள்ளி கொண்டிருந்தார். அப்போது மகா விஷ்ணுவின் உத்திகமலத்தில் நான்முகனாகிய பிரமன் தோன்றி, ஸ்ரீ ஹரியைக் குறித்து நெடுங்காலம் மாதவம் புரிந்து வேதங்களையும் படைத்தருளினார். அவ்வாறு படித்தவுடனேயே உருத்திரன் முதலிய தேவர்கள் எல்லாரும் அவரவர் தொழில்களைச் செய்யத் துவங்கினார்கள். எல்லோரையும் விட ஆற்றல் மிக்க யமதர்மராஜனும் ஜைமினி என்ற நகரத்தை அடைந்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிய வேண்டும் என்று ஆராய்ந்தார். அறிய தொடங்கிய அவனுக்கு சேதனர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து கொள்ள முடியவிலை. பல காலம் முயன்றும் அவனால் அந்தச் செயலில் வெற்றியடைய முடியவில்லை. எனவே யமதர்மராஜன் மனம் வருந்தி நான்முகனைக் கண்டு வணங்கி, சதுர்முகனே! மஹா தேவனே! அடியேன் ஜீவர்களின் பாவ புண்ணியங்களை நீண்ட நாட்கள் ஆராய்ந்தும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. அறிந்தால் அல்லவோ பாவிகளை தண்டிக்கவும், புண்ணியசாலிகளை இரட்சிக்கவும் முடியும். ஆகையால் அவற்றை உணர்ந்து , அறிந்து தக்கவை செய்யவும் எனக்கு அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

அதைக் கேட்டதும் நான்முகன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தெறிந்து, நீண்ட கண்களை உடையவர்களும் மிக்க மேனியசகுடயவர்களும் மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்தது, யமதர்மனைப் பார்த்து தர்மனே! உலகத்தில் பிறந்த ஜீவர்கள் அனைவரும் நினைப்பதையும் பேசுவதையும் செயல்புரிவதையும் உணர்ந்தறிய வல்லவர்கள். இவர்கள் ஜீவர்கள் செய்வதை எல்லாம் அறிந்து உனக்கு அறிவிப்பார்கள். நீ பாப புண்ணியங்களை அறிந்து சிஷையும் ரகைஷயும் செய்வாயாக! என்று சொல்லி, அப்பன்னிருவரையும் யமதர்மனுடன் செல்லும்படிப் பணித்தல். கலனும் பிரமனை வணங்கி அந்தப் பன்னிரு சிரவணர்களோடு தென்புலத்தை அடைந்து, சேதனர்களுடைய புண்ணியங்களையும், பாவங்களையும் அறிந்து அவற்றுக்குத் தக்கவாறு தண்டித்தும் காத்தும் வருவானாயின்.

பக்ஷி ராஜனே! பூவுலகில் வாழ்வின் இறுதிக் காலம் முடிந்தவுடனே, வாயு வடிவனான ஜீவனை யம கிங்கர்கள், யமபுரிக்கு இழுத்துச் செல்வார்கள். அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கு வகை புருஷார்த்தங்களில் தர்மஞ் செய்த உத்தமர்கள் யாவரும் தர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரிக்குச் செல்வார்கள். மோட்சத்தில் இச்சை கொண்டு வேத சாஸ்திர புராணங்களை அறிந்து தெய்வ பக்தி செய்பவர்கள் தேவி விமானம் ஏறி தேவருலகை அடைவார்கள். பாவிகள் கால்களால் நடந்தே செல்வார்கள். கடுமையான, கொடுமையான கரடுமுரடான பாதையை கடந்து செல்ல வேண்டும். வாழுங்காலத்தில் ஜீவன் சிரவணரைப் பூஜித்தவனாகயிருந்தால், ஜீவனின் பாவங்களை மறைத்து புண்ணியங்களை மட்டுமே யமதர்ம தேவனிடம் சொல்வார்கள். பன்னிரண்டு கலசங்களில் தண்ணீர் நிறைந்து அன்னம் பெய்து அக்கலசங்களை அந்தந்தச் சிரவணரைக் குறித்து தானதர்மங்கள் செய்தால் ஜீவனுக்கு யமலோகத்தில் சகலவிதமான நன்மைகளையும் செய்வார்கள்.

கருடா! பன்னிரண்டு சிரவணர்களின் தோற்றம் முதலியவற்றைச் சொல்லும் இந்த புண்ணிய சரிதத்தை பக்தியோடு கேட்டவர்கள் பாபம் நீங்கிய புனிதராவார்கள் என்று கூறியருளினார். 28 கொடிய நரகங்கள்.
பக்ஷி ராஜனான கருடன் திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை


1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.
2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.
3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.
4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.
5. தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.
6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.


7. தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.
8 .அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.
9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.
10.தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.
11 .பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.
12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.
13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.
14 .அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.
15 .கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.
16 .பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.
17 . டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.


18 .வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.
19 .வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவா வதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.
20 .பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.
21 .எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.
22 .தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.
23 .நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.
24 .எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.
25 .தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.
26 .பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.
27 .வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.


28 .செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.

இத்தககைய இருபதெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும் எராளமானவையாக மிகக் கொடியனவாக அமைந்திருக்கும்.
இறந்தவனைக் குறித்து நாள்தோறும் கொடுக்கபடும் உதககும்ப தானத்தை யமதூதர்கள் பெற்று திருப்தி அடைவார்கள். மாசிக வருஷ பதிகம் முதலியவற்றால் ஜீவன் திருப்தியடைவான். அவற்றால் யம கிங்கரர்களும் திருப்தி அடைவார்கள்.
வைனதேயா! ஒருவன் இறந்த ஓராண்டு முடியுந் தருவாயில் அவனது ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடு யமபுரியை அடைவான் என்றோமே! அந்த ஜீவன் யம லோகத்தை அடையும் முன்பாக அந்த பிண்ட சரீரத்தை தவிர்த்து அங்குஷ்ட பரிமாணமுள்ள ஒரு புதிய வடிவம் பெற்று ஒரு வன்னி மரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து அதன் பிறகு கர்மத்தாலாகிய சரீரத்தை பெறுவான். அப்போது யம கிங்கர்கள் அந்த ஜீவனை யமபுரிக்கு அழைத்துச் சென்று தர்ம ராஜனின் கொலுமண்டபத்திற்க்குக் கொண்டு செல்வார்கள் என்று திருமால் கூறியருளினார்.

சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும்

சூதமா முனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு பன்னிரண்டு சிரவணரின்சரிதத்தைச் சொல்லிய பிறகு மேலும் தொடர்ந்து சொன்னார். முனிவர்களே! திருமால் கருடனை நோக்கி கூறலானார்.
கருடா! ஜீவர்கள் பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த பாப புண்ணியங்களை எல்லாம் சித்திர குப்தன் என்ற யம லோக கணக்கன் சிரவணர்களின் மூலமாக அறிந்து யம தர்மராஜனுக்கு அறிவித்து அவனது உத்தரவுப்படியே அவரவரது பாவங்களின் தன்மைக்கேற்ற தண்டனை வாசித்துச் சொல்ல யமதர்மன் தன கிங்கர்களைக் கொண்டு அத்தண்டனைகளை அவ்வவ்போதே நிறைவேற்றிச் செய்து விடுவான். ஜீவனானவன் வாக்கால் செய்த பாவங்களை வாக்காலும், உடலால் செய்த பாவப் புண்ணியங்களை உடலாலும் மனத்தால் செய்த பாவப் புண்ணியங்களை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். பெரியோரை இகழ்ந்து நீச மொழிகளால் ஏசிபேசினால் பாவங்கள் உண்டாகி வாயிலிருந்து புழுக்களாக சொரியும். புண்ணியங்களை மட்டும் செய்தவர்கள் நல்ல சரீரத்தோடு நோய் இன்றி இன்பமாக வாழ்வார்கள். பிறவுயிர்களை ஊட்டி வதைத்தவர்கள் கொடூரமான சரீரத்தை அடைந்து துன்புறுவார்கள்.
பக்ஷி ராஜனான கருடன் திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை யமபுரியும், யமதர்மராஜனும்
சூதமா முனிவர், நைமிசாரணியவாசிகளை நோக்கிக் கூறலானார்:

பறவைகளுக்கு அரசே! அங்குஷ்ட பரிமாணமுள்ள ஜீவன் கர்ம சரீரம் பெற்று வன்னிமரத்தை விட்டு யமகிங்கரர்களுடன் 20 காத தூரவழி விஸ்தாரமுள்ள சித்திரகுப்தனது பட்டினத்தின் வழியாக யமபுரிக்குச் செல்வான்.. அந்த யம பட்டணம் புண்ணியஞ் செய்தோரின் பார்வைக்கு மிகவும் ரம்மியமாகக் காணப்படும் . எனவே இறந்தவனைக் குறித்துப் பூவுலகில் இரும்பாலாகிய ஊன்றுகோல், உப்பு, பருத்தி, எள்ளோடு பாத்திரம் ஆகிய பொருள்களைத் தானம் செய்ய வேண்டும். இத்தகைய தானங்களால் யமபுரியுல்லுள்ள யமபரிசாரகர்கள் மிகவும் மகிழ்ந்து ஜீவன் யம பட்டினத்தை நெருங்கியதுமே காலதாமத படுத்தாமல் அவன் வந்திருப்பதை யமதர்மராஜனுக்குத் தெரிவிப்பார்கள். தர்மத்துவஜன் என்ற ஒருவன், சதாசர்வ காலமும், யமனருகிலேயே இருந்து கொண்டிருப்பான். பூமியில் இறந்தவனைக் குறித்து கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயிறு, துவரை ஆகிய இந்த ஏழு வகையான தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானஞ் செய்தால், அந்தத் தர்மத்துவஜன் திருப்தி அடைந்து யமனிடத்தில் இந்த ஜீவன் நல்லவன், புண்ணியஞ் செய்த புனிதன்! என்று விண்ணபஞ் செய்வான்.

கருடா! பாபம் செய்த ஜீவனுக்கோ! அந்த யமபுரியே பயங்கரமாகத் தோன்றும். அவனுக்கு தர்ம ராஜனாகிய யமனும் அவனது தூதர்களும், அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பார்கள். அந்த மவஞ் செய்தவனும் அவர்களைக் கண்டு பயந்து பயங்கரமாக ஓலமிடுவான். புண்ணியஞ் செய்த ஜீவனுக்கு யமதர்மராஜன் நல்ல ரூபத்தோடு தோற்றமளிப்பான். புண்ணியம் செய்த ஜீவன் யமனைக் கண்டு மகிழ்ந்து இறைவனின் தெய்வீக ஆட்சியை கண்டு வியப்பான். யம தர்மராஜன் ஒருவனேதான் என்றாலும், "பாபிக்குப் பயங்கர ரூபதொடும், புண்ணியஞ் செய்தவனுக்கு நல்ல ரூபதொடும்" தோன்றுவான். புண்ணியஞ் செய்த ஜீவன் யமனருகே தோன்றுவானாயின், 'இந்த ஜீவனுக்குரிய மண்டல மார்க்கமாக பிரம்ம லோகம் சேரத் தக்கவன்' என்று தான் வீற்றிருக்கும் சிம்மா சனிதிலிருந்து சட்டென்று எழுந்து நின்று மரியாதை செலுத்துவான். யம தூதர்களும் வரிசையாக மரியாதை செலுத்துவார்கள். பாவஞ் செய்த ஜீவனை பாசத்தில் கட்டிப் பிணைத்து உலக்கையால் ஓச்சி ஆடுமாடுகளைப் போல இழுத்துக் கொண்டு காலன்முன் நிறுத்துவார்கள்.
அங்கு பூர்வ ஜென்மத்தில் அந்த ஜீவன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வேறு ஜென்மம் அடைவான். அதிகம் புண்ணியம் செய்திருந்தால் அந்த ஜீவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமதர்மன் முன்பு சென்று தேவனாக மாறித் தேவருலகம் செல்வான். பாபம் செய்தவனாகின் யமதர்மனைக் காண்பதற்கும் அஞ்சுவான். உடல் நடுங்க பயப்படுவான். தூதர்கள் யமதர்மன் கட்டளை ஏற்று நரகத்தில் விழுந்து பிறகு கிருமி புழு முதலியவற்றின் ஜென்மத்தை அடைவான். அந்த ஜீவனுக்குப் புண்ணியம் மிதமாக இருக்குமானால் முன்பு போல் மானிடப் பிறவியை பெறுவான். தான தருமங்களைச் செய்தவன் யாராயினும், எந்த ஜென்மத்தை அடைந்தாலும் அவன் செய்த தானதர்ம பயன்களை அந்த ஜென்மத்தில் அடைவான். செல்வந்தன், அறிவிலே பேரறிஞன், வலுவிலே பலசாலி, கலைத் துறையில் பெருங் கலைஞன், விஞ்ஞானி, மதத் தலைவர் என்றெல்லாம் புகழ்ப் பெறுவான். அவன் இறந்தவுடனேயே அவன் உடலில் அரைஞான் கயிறு கூட அறுத்தெறியப்பட்டு விடும். அவன் ஜீவன் பிரிந்த உடனே, அவன் உடலை குழியில் புதைத்து மண்ணோடு மண்ணாகும். மானிடப் பிறவி கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் கூன், குருடு, செவிடு, மலடு நீங்கிப் பிறத்தல் அரிது. ஒழுக்கத்தில் பெற வேண்டிய முக்தியை பெறவில்லை என்றால், தவம் முதலியவற்றைச் செய்து வருந்தித் தன கரத்தில் அடைந்த அமிர்தம் நிறைந்த பொற்கவசத்தைச் சிந்தி பூமியில் கவிழ்ந்தவனுக்கு ஒப்பாகுவான்! என்று திருமால் ஓதியருளினார் பிரேத ஜென்மம் விளைவிக்கும் துன்பம்.

கருடன் கேசவனைத் தொழுது ஸ்வாமி! பாவங்களில் எத்தகைய பாவத்தை செய்தவன், பிரேத ஜென்மத்தை அடைகிறான்? அந்த பிரேத ஜென்மத்திலிருந்து எப்படி நீங்குகிறான்? அந்த பிரேத ஜென்மதொடு பூவுலகில் சஞ்சரிப்பது உண்டா அல்லது யமனுடைய காவலிலேயே கிடப்பானோ? இவற்றையெல்லாம் அடியேனுக்கு விளக்கமாக சொல்ல வேண்டும் என்று வேண்ட, திருமால் கருடனை நோக்கிக் கூறலானார்.
வைன தேயனே! பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் எவனோ, அவனே இறந்த பிறகு வேறு சரீரத்தை யடையாமல் காற்று ரூபமாக பிரேத ஜென்மதையடைந்து பசி தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் நீங்கி எங்கும் திரிவான். யார் ஒருவன் இறந்தவர்களின் பொருள்களை அபகரித்துக் கொள்பவன், தீவாய் நரகங்களை யெல்லாம் அனுபவிப்பான். மோசம் செய்து அபகரிக்கும் பாவியினும் கொடும்பாவி ஒருவனும் இருக்க மாட்டான். பிரேத ரூபத்தில் யாரையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டான். பித்துக்களின் தினத்தில் பிதுக்களை வீட்டுக்குள்ளே போக விடாமல் தடுத்து துரத்துவான். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதையும் அனுபவிக்க விடமாட்டான். தன் புத்திரன் முதலியோருக்கு சந்ததி உண்டாகாமல் வம்சம் நாசமடையும் படி செய்வான். அவர்களுக்கு பல துன்பங்களை உண்டாக்கி வருத்தப்படுவான் என்று கூறி அருளினார்.
அப்போது பறவை வேந்தன் பெருமாளை நோக்கி, ஆதிமூர்த்தி! பிரேத ஜென்மமடைந்தவர் வேறு என்ன செய்வான்? எவ்விதமாக தோற்றமளிப்பான்? பிரேத ஜென்மம் அடைந்திருக்கிறான் என்பதை எப்படி அறிய முடியும்? இவற்றைத் தயவு செய்து நவின்றருள வேண்டும் என்று வேண்ட ஸ்ரீமன் நாராயணர் கூறுகிறார். வைன தேயா! பிரேத ஜென்மம் அடைந்தவன் தான் சார்ந்த குலத்தையே அதிகப்பிடிப்பான். தருமங்கள். தானங்கள் செய்பவருக்கும் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்பவருக்கும் திருவன, பத்ரி முதலிய ஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை ஷேச்த்ராடனம் முதலியவற்றைச் செய்பவருக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது. நற்கருமம் எதையும் செய்யாதவனுக்கும், பாக

ஸ்ரீ கருடப் புராணம்



ஸ்ரீ கருடப் புராணம்
பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா! பரந்தாமா! ஸ்ரீ ஹரியே! உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்? என்ன காரணத்தால் சுவர்க்க நரகங்களை அடைகிறார்கள்?. எந்தப் புண்ணியத்தைச் செய்தால், இன்ப வீடான தேவர்களின் உலகை அடைவார்கள். எத்தகைய கர்மங்களால் பாவங்கள் நிவர்த்தியாகும். இறக்கும் வரை யாரை நினைத்தால் நற்கதி கிடைக்கும்? இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகக் கூறியருள வேண்டும் என்று வேண்டினான்.
ஸ்ரீ மந்நாராயணர் எல்லோர் மனதிலும் புகுந்து அனைத்தையும் பார்க்க வல்லவரும், எல்லா செயல்களுக்கும் காரணமாகியவருமான ஸ்ரீ ஹரி பகவான் புன்னகையுடன் பறவை வேந்தனை நோக்கிக் கூறலானார்.
கருடனே! நீ நல்லதொரு கேள்வியை நல்ல முறையில் கேட்டு விட்டாய். அது உலகினருக்குப் புரியாத ரகசியங்கள். அவற்றை நாம் கூறுவோம். கவனமாகக் கேள். எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் என்றாவது இறப்பது நிச்சயம் என்பதை யாரும் நினைப்பதில்லை. உயிர்களைக் கவர்ந்து செல்லும் கூற்றவன்(எமன்) என்றும் விடமாட்டான் என்ற உண்மையை உணர்ந்த மனிதன் பயந்தாவது நல்ல தருமங்கள் இயற்றி அறநெறிப்படி வாழ்வான். அவன் தர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அக்கருமங்களே அவனைக் காப்பாற்றும். தனக்குரிய கர்மங்களை ஒருவன் முறைப்படிச் செய்கிறானோ, அவனே எல்லாவிடத்திலும் மேன்மையடைவான்.
பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு வருணத்தார் இருக்கிறார்கள். பிராமணருக்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறு கர்மங்கள் உள்ளன. ஷக்த்திரியருக்கு ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படைபயித்றல், பொறுத்தல் என்று ஆறுவகைக் கருமங்கள் உண்டு. வைசியருக்கு ஓதல், கேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களைக் காத்தல், ஏரூழல் என ஆறு கர்மங்கள் உண்டு. சூத்திரருக்கு ஓதல், முன்னவருக்கு பணியாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுகாதல், வேட்டல் முதலிய ஆறு கர்மங்கள் உண்டு. அவரவர் குலமரபுக்குரிய ஒழுக்கபடி நடப்பதே பெரிய தவமாகும். அதில் வழுவாது ஒழுங்காக வாழ்பவர் எவரோ, அவரே போகத்தையும் யோகத்தையும் ஒருங்கே அடைந்து நெடுநாள் வாழ்ந்து, இறுதியில் தமக்குரிய உலகை அடைவார்கள். அவாவை ஒழித்து பட்ற்றற்றவர்களே பேரறிஞர்களாவர். என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார் மூன்று ஆசைகள் கொண்ட சிறந்த பிறவிகள்
ஸ்ரீ வாசுதேவன், கருடனை நோக்கி கூறலானார்:

பறவைகளுக்கு அரசே! உலகில் எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்கள் உள்ளன. அவை அண்டகம், உற்பிசம், சராவுசம், சுவேதசம் என்று நான்கு வகையில் உள்ளன. அண்டகம் என்ற வகையில் முட்டையிலிருந்து இருபத்தோரு லட்சம் பறவைகள் தோன்றின. உற்பிச வகையில் இருபத்தோரு லட்சம் மரஞ், செடி, கொடி, தாவர வகைகள் தோன்றின. கருப்பப் பையிலிருந்து தோன்றுவதான சிராயுசம் வகையில் இருபத்தோரு லட்சம் மனிதர்கள் தோன்றினர். வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில் இருபத்தோரு லட்சம் கொசு முதலியவைகளும் தோன்றியுள்ளன. கருடா! பிறவிகள் அனைத்திலும் மானுடப் பிறவி அரிதினும் அரிது. மனிதப் பிறவியே புண்ணியப் பிறவியாகும். எல்லா விதத்திலும் மானிடப் பிறவியே சிறப்புடையது. புண்ணியத்தால் அடைந்த மானுடப் பிறவியால் பாக்கியம் அடையாதவர்கள், தமக்குத் தானே வஞ்சனை செய்து கொள்பவர்களாவார்கள். மண், பொருள் , ஆசைகள் எனப்படும் இம்மூன்று ஆசைகளால், மயக்கமுற்று செய்யத் தகாதவற்றைச் செய்து தன் மனசாட்சிக்கும், மனிதாபிமான உணர்வுக்கும், மாறுபாடான தீயச் செயல்களைச் செய்து, தர்மங்களை அறியாமல் உழல்பவன் எவனோ, அவன் மிருகங்களுக்கு ஒப்பாவான். இதனால் அறிவுணர்வும், அன்புணர்வும், அறநெறி வாழவும் வளராது. அளவில்லாமல் ஆசைகள் வளர்ந்து கொண்டேயிருக்கும். ஆசையே அழிவுக்குக் காரணம் என்று போதிக்கும் மகான்களோ, யாவராலும் போற்றப்பட்டு, நம் இறுதி நாளான அந்திம காலத்தில் சுவர்க்க லோகத்தை அடைவார்கள். ஆசைக்கு அடிமையானவர்கள் வயோதிகப் பருவம் வந்ததும், தன் புத்திரர், பௌத்திரர்கள் துணித்து கிழப் பிணமே! வாய் திறவாமலே வெறுமனே விழுந்து கிட! என்று இழித்தும், பழித்தும், அதட்டியும் பேசும் ஏச்சு மொழியைக் கேட்டு, மனம்பொறுமிக் கிடப்பான்.ஆகையால் கல்வியும் வித்தையும் கற்றுணர்ந்தவனேயானாலும் ஞானம் (மெய்யறிவு) இல்லாவிட்டால் பொண்ணுக்கு அடிமையாகி கிடப்பான்.

Friday, 22 August 2014

ஆகம சாஸ்திரம்





ஆகம சாஸ்திரம்
சாதாரண மக்களுக்கு நம் மதத்தில் பற்றுதல் அதிகரிக்க வேண்டும். நம் தேசப்பண்பாட்டில் சிரத்தை உண்டாக வேண்டும். நம் பாரத தேசத்தின் சிற்பக்கலை வெகுவாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. இது ஆகம் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆகமம் ஈஸ்வரனா லேயே போதிக்கப்பட்டது என்பது நம் முன்னோர்களின் கருத்து.
ஆகம சாஸ்திரம் மூன்று வகையில் பிரகாசிக்கின்றது. சைவாகமம், பரமசிவனை ஆதியாக கொண்டதாயும், பாஞ்சராத்ரம் மஹாவிஷ்ணு மூலமாகவும், வைகானஸம், பிரம்மா மூலமாகவும் அருளப்பட்டன என சொல்கின்றனர். இவைகளின் நோக்கம் பகவானுடைய ஸ்வரூப, குண வீபுதியை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் முறைகளால் காண வழி காட்டுவதேயாகும். ஞான பாவத்தில், இம்மூன்றும் பகவானைப் பற்றி ஒரே விதமான அரூப நிலையில், ஸச்சிதானந்தமாக பேசும் ஒற்றுமையைக் காண்பிக்கின்றன. யோகபாவத்திலும், அவரவர் இந்திரியங்களை அடக்கிக் கடவுளைக் காண வேண்டுமென்று ஒரே விதமாய்ப் பேசுகின்றன. ஆனால் கிரியா என்னும் பாவத்தில், கடவுளுக்கு பாஹ்யமான ஓர் உருவைக் கொடுத்து, சிலையிலோ அல்லது உலோகத்திலோ அந்த உருவத்தை உண்டு பண்ணி மனிதன் மனிதனை எப்படி எல்லாம் போற்றுவானோ அந்த விதமாக கடவுளை வழிபடும் முறையைக் காண்கிறது. சரியை பாவமானது, அந்தந்த ஆகமங்களுக்கேற்ப ஒழுக்கங்களையும் நியமங்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
ஆலயங்களில் பகவானைத் தொழும் கொள்கையும், விதமும், நம் பாரதத்தில் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. பகவானுக்கு உருவம் உண்டா என்பர் சிலர். ஆனால் அரூபமான ஓர் வஸ்துவை தியானிப்பது எப்படி? ருக்வேதம் இத்தத்துவத்தை அடிப்படியாகக் கொண்டு பேசுகிறது. பகவான் கண்களுக்கு தெம்பட மாட்டார்.யதோவாசோ நிவர்தந்தேஎன்றபடி அவர் நம் சொல்லுக்கும் கருத்துக்கும் எட்டாதவர். இப்படிப்பட்ட கடவுளால் நமக்கு என்ன பயன்? இதற்கு ஓர் உதாரணம் உண்டு. ஒருவன் தன் உடலைப் பரிசுத்தமாக்கி கொள்ள காவேரியில் குளித்தேன்என்று சொல்கிறான். ஆனால் காவிரியென்பது கர்நாடக விலிருந்து தமிழகம் வழியாக ஸமுத்ரம் வரை செல்லும் அந்த புண்ணிய நதியின் பெயராகும். மேலே சொன்னவன் குளித்த இடமும் காவிரிதான். அவனுடைய சக்திக்கு உகந்தபடி அவன் காவிரியை அனுபவிக்கிறான். இதே விதமாகத்தான் நாம் ஒவ்வொருவரும் கடவுளை காண்கிறோம். அனுபவிக்கிறோம். இந்த விதமாகத்தான் நாயன்மார்கள் அணுவுக்கு அணுவானை  அப்பாலுக்கு அப்பாலானைஎன்றெல்லாம் கடவுளைக் கண்டார்கள். மாணிக்கவாசகப் பெருமாள் சென்று, ‘சென்று, சென்று, தேய்ந்து, உறைந்துபகவானைக் கண்டார். கடவுளை அரூப நிலையில் தியானிக்க ஞானிகளுக்குத்தான் முடியும். உருவம் உண்டா, இல்லையா என்ற பிரசனையே அவர்களுக்கு கிடையாது.
நமது ஆகம் சாஸ்திரங்கள் பகவானுக்கு ஒரு உருவைக் கொடுக்கின்றன. ஆலயம் கட்டும் முறையையும், பகவானை உபாசிக்கும் வழியையும் காட்டுகின்றன. பெயரில்லாத ஆதமா, ஒரு சரீரத்தை அடைந்து, பெயரில்லாத பரம்பொருளுக்கு பல உருவங்களையும், பல பெயர்களையும் கொடுக்கக் காண்கிறோம். இந்தத் தத்துவத்தை அனுசரித்து, நமது ஆலயங்களை அழகாக அமைக்க வேண்டும். பரிசுத்தத்தோடு காப்பாற்ற வேண்டும். நமது ஆலயங்கள் ஆகமப்படி, ஏற்கனவே சாந்நித்யம் அடைந்திருக்கின்றன. கடவுள் வழிபாட்டை வழிமுறையுடன் செய்தல் வேண்டும். யாவற்றிற்கும் சில்ப சாஸ்திரம் முக்கியமானது. நமது தேசத்தின் ஹஸ்த சாமர்த்தியங்களை (கை வேலைபாடுகளை) ஆலயங்களிலேதான் குவித்து இருக்கின்றனர் நம் முன்னோர்க

Manikanda Sharma G.V
Neela Matrimony
Neela Infomedia  ( WEBDESIGN )
Neela Computers Sales & Services
99 62 22 53 58
94 44 22 60 39