WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Tuesday 12 April 2016

துர்முகி தமிழ் வருஷம் 14-04-2016 முதல் 13-04-2017 வரை மேஷ ராசி பலன்கள்.



துர்முகி தமிழ் வருஷம் 14-04-2016 முதல் 13-04-2017 வரை 

மேஷ ராசி பலன்கள்.
அசுவினி,  பரணி,  கார்த்திகை 1-ம் பாதம் வரை,  ராசிபலன்  
சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ,
CHU, CHEY, CHO, LA, LI, LU, LEY, LO, AO,
பெயர் எழுத்து கொண்டவர்கள் (மேஷ ராசி) ராசி பலன்கள்

நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த துர்முகி வருடம் குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் வரும் ஆடி மாதம் 18-ஆம் தேதி வரை (02.08.2016) சஞ்சாரம் செய்யவிருப்பதாலும், கேது லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். குழந்தை பாக்கியமும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் ஏற்படும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த கெடுபிடிகள் வம்பு வழக்குகள் யாவும் விலகும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும். எந்தவொரு விஷயங்களிலும் கவனமுடன் செயல்பட்டால் எதையும் எதிர் கொண்டு வெற்றிப் பெறக்கூடிய வலிமையை பெறுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பணவரவுகள் தேவைகேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் கடனில்லாத கண்ணியமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப்பலன்களை அடைய முடியும் என்றாலும் உங்கள் ஜென்ம ராசிக்கு 8-இல் சனி சஞ்சரிப்பதால் அஷ்டம சனி நடைபெறுகிறது இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பயணங்களில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் அக்கரை எடுத்த கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் எதிர் பார்க்கும் பதவி உயர்வுகள் கிட்டும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்ட படியே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட முடியாத அளவிற்கு மனக்குழப்பங்களும், நிம்மதி குறைவும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைக்க முடியும்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள்.

கொடுக்கல், வாங்கல்

பண வரவுகள் சரளமாக இருக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும் என்றாலும் சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத் தானிருக்கும்.

தொழில் , வியாபாரம்

கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து செல்வதும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். எதிலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேறி விடக் கூடிய ஆற்றல் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

உத்தியோகம்

பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர் பார்த்த அளவிற்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன் படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையீடு செய்யாமல் இருந்தால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அரசியல்

மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல் படுவது. தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காதிருப்பது நல்லது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதிருப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். முடிந்த வரை குடும்ப பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது மிகவும் நல்லது.

மாணவ, மாணவியர்

கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் : 1, 2, 3, 9 
நிறம் : ஆழ் சிவப்பு 
கிழமை : செவ்வாய்
கல் : பவளம்
திசை : தெற்கு 
தெய்வம் : முருகன்

பரிகாரம்

மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு இந்த துர்முகி ஆண்டில் குருபகவான் ஆடி மாதம் 18-ஆம் தேதி முதல் ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்கவுள்ளதால் குருவுக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வதும், குரு ப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் நல்லது. இந்த ஆண்டு முழுவதும் 8-ல் சனி சஞ்சரிப்பதால் அஷ்டம சனி நடைபெறுகிறது. இதனால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வதும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. ராகுபகவான் 5-ல் சஞ்சரிப்பதால் துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்

ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம், பார்க்கப்படும், ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம், பிரசன்னம் பார்க்கப்படும், ஜாதகம் கணித்து தரப்படும். கணபதிஹோமம், கிரகபிரவேசம், ருதுசாந்தி, நாமகரணம், ராகு-கேது, செவ்வாய், சனி, சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும், திருமணதடை, புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.
பூஜைக்குறிய யந்திரம்:
கணபதி யந்திரம், லட்சுமிகுபேர யந்திரம், சுதர்ஸன யந்திரம், ஷண்முக யந்திரம், அனுமான் யந்திரம், வியாபாரவிருத்தி யந்திரம், காரிய சித்தி யந்திரம், ஸ்ரீசக்கர யந்திரம், மஹாலட்சுமி யந்திரம், பைரவ யந்திரம், பிரத்தியங்கரா யந்திரம், வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்:
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து வழங்கப்படும்,
இந்த யந்திரம் பெறவிரும்பும் அன்பர்கள். கோத்ரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்

ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்

ஜோதிடர், புரோகிதர்.
G.V. மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
Mobile. 7092103071
Mobile. 7092103072
WhatsApp No 9444226039
https://neelamatrimony.wordpress.com/

தொடர்பு கொள்ளவும். மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனைகளை தெளிவாக குறிப்பிடுடவும்.

No comments:

Post a Comment