WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Showing posts with label 3 ம் பாதங்கள். Show all posts
Showing posts with label 3 ம் பாதங்கள். Show all posts

Wednesday, 1 January 2014

துலாம் ராசி, சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3 ம் பாதங்கள்



புத்தாண்டு பலன்  2014 துலாம்

துலாம் ராசி,  சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3 ம் பாதங்கள்
     
எதிலும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட துலா ராசி நேயர்களே
உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த 2014 ஆம் ஆண்டின் முற்பாதி வரை குருபகவான் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் பணவரவுகள் தாராளமாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் ஜென்ம  சனி நடைபெறுவதும், ஜென்ம ராசியில் ராகுவும் 7-இல் கேதுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 10-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதி குறைவு உண்டாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பற்ற தன்மையால் வேலை பளுவும் அதிகரிக்கும். 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதையும் சமாளித்து முன்னேறக் கூடிய ஆற்றல் உண்டாகும். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 சனி 2-ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடங்கும்.

தேக ஆரோக்கியம்
    இந்த ஆண்டு முழுவதிலும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாக கூடிய மருத்துவ செலவுகளாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடக் கூடிய வலிமையும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதார நிலை
    ஆண்டின் முற்பாதியில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நற்பலனை தரும்.

கொடுக்கல் வாங்கல்
   ஆண்டின் முற்பாதிவரை பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாக கூடும் என்பதால் கொடுக்கல், வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறியான நிலை நீடிக்கும்.

தொழில் வியாபாரிகளுக்கு
    இந்த ஆண்டின் முற்பாதிவரை தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானித்து செயல் படவும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு
   இந்த ஆண்டின் தொடக்கத்தில் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் இடமாற்றங்கள் யாவும் கிடைக்கப் பெறுவதுடன் பணியிலும் நிம்மதியாக செயல்பட முடியும். ஆண்டின் பிற்பாதியில் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் வீண் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன் படுத்தி கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு
    மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்களின் ஆதரவுகளைப் பெற முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதோடு உடல் நிலையும் சோர்வடையும். பெயர் புகழை தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபட வேண்டியிருக்கும்.

விவசாயிகளுக்கு
   பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய உழைக்க வேண்டி வரும். எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கா விட்டாலும், போட்ட முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும்.

பெண்களுக்கு
   உடல் நிலையில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் எந்த வொரு காரியத்திலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. சேமிப்பும் குறையும்.

படிப்பு
   கல்வியில் சற்று மந்த நிலை ஞாபக மறதி போன்றவை ஏற்பட்டாலும் வரவேண்டிய மதிப்பெண்கள் தடையின்றி வரும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நட்பு வட்டாரங்களையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தடை தாமதங்களுக்கு பின் கிடைக்கும்.
   இந்த ஆண்டின் முற்பாதியில் லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பிற்பாதியில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது.

ஜனவரி
   பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ஆம் வீட்டில் இம்மாத முற்பாதி வரை சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். திருமண சுப காரியங்கள் சிறு சிறு தடைகளுக்குப் பின் கைகூடும். ஜென்ம ராசியில் சனி ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குரு பாக்கிய ஸ்தானத்திலிருந்தாலும் வக்ர கதியிலிருப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல் படுவது நல்லது. விரய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் எதிர்பாராத விரயங்கள் பூமி மனையால் பிரச்சனைகள் ஏற்படும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்
11.01.2014 காலை 09.59 மணி முதல் 13.01.2014 இரவு 07.47 மணி வரை.

பிப்ரவரி
   அனைவரையும் எளிதில் மயங்கிடச் செய்யும் வசீகரத் தோற்றம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனியும் ராகுவும், 4-இல் சூரியனும் 12-இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் இம்மாதம் உடல் ஆரோக்கியத்திலும்,  உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்றப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குருவும் வக்ர கதியிலிருப்பதால் பணவரவுகளிலும் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது, குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறு சிறு மன சஞ்சலங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி இருக்காது. ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம் 07.02.2014 மாலை 05.33 மணி முதல் 10.02.2014 அதிகாலை 03.04 மணிவரை.

மார்ச்
   நேர்மையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சனி ராகு சஞ்சரிப்பதால் பயணங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. 4-ஆம் வீட்டில் சுக்கிரனும், மாத பிற்பாதியில் 6-இல் சூரியனும் 9-இல் குருவும் சஞ்சரிப்பதால் பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. திருமணம் போன்ற சுப காரிங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதி நிலவும். இம்மாதம் சனி ப்ரீதி, ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
06.03.2014 இரவு 12.57 மணி முதல் 09.03.2014 காலை 10.13 மணி வரை

ஏப்ரல்
   சிறந்த பேச்சாற்றலும், வாக்கு வன்மையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6-இல் சூரியனும், 9-இல் குருவும் சஞ்சரிப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமும், புத்திர வழியில் பூரிப்பும் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலிலும் நல்ல லாபத்தினை அடைய முடியும். கணவன்&மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. முருகப் பெருமானை வழி படுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்
03.04.2014 காலை 08.19 முதல் 05.04.2014 மாலை 05.25 மணி வரை.

மே
    எக்காரியத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு 9-இல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மைகளும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். ஆடை ஆபரணம் சேரும். 7-இல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். கொடுக்கல்&வாங்கல் திருப்தியளிக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்
30.04.2014 மதியம் 03.51 மணி முதல் 02.05.2014 இரவு 12.42 மணி வரை.
மற்றும் 27.05.2014 இரவு 11.34 மணி முதல் 30.05.2014 காலை 08.07 மணி வரை.

ஜீன்
  மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ, வெளிகாட்டாத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி ராகுவும், 8-இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுடன், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். இம்மாதம் 13-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 10-ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத இடமாற்றங்கள், தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். இம்மாதம் 21-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
24.06.2014 காலை 07.22 மணி முதல் 26.06.2014 மதியம் 03.43 மணி வரை.

ஜீலை
    கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, ஜென்ம சனி தொடருவதும், 10-இல் குரு சஞ்சரிப்பதும் செவ்வாய் 12-இல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டு தான் முன்னேற வேண்டியிருக்கும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களும் நிறைய போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அலைச்சல்களும் அதிகரிக்கும். சேமிப்பும் குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
21.07.2014 மதியம் 03.15 மணி முதல் 23.07.2014 இரவு 11.21 மணி வரை.

ஆகஸ்ட்
    பிறரை கேலி கிண்டல் செய்வதில் வல்லவரான உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் பயணங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 9-இல் சுக்கிரனும் 10-இல் சூரியனும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக ஒரளவுக்கு முன்னேற்றங்களும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கடன்கள் உண்டாகாமல் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் நிலையில் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும். காரியங்களில் கவனம் தேவை. இம்மாதம் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்
17.08.2014 இரவு 10.59 மணி முதல் 20.08.2014 காலை 06.48 மணி வரை.

செப்டம்பர்
   பிறரது ஆலோசனைகளை எளிதில் ஏற்றுக் கொள்ளாத மனம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6-இல் கேதுவும் 11-இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் காரியங்களை முடித்து விடக் கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்ற படி அமையும். குடும்பத்திலுள்ளவர்களிடம் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமைக் குறையாது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் ஒரளவுக்கு அனுகூலங்களை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வரவேண்டிய வாய்ப்புகள் வந்து சேரும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
14.09.2014 காலை 06.39 மணி முதல் 16.09.2014 மதியம் 02.14 மணி வரை

அக்டோபர்
    தோல்வியை கண்டு துவளாத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சனியும் 2-இல் செவ்வாயும், 12-இல் சூரியனும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.  உற்றார் உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் தேவையற்ற பழச்சொற்களை சந்திக்க நேரிடும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
11.10.2014 மதியம் 02.21 மணி முதல் 13.10.2014 இரவு 09.38 மணி வரை

நவம்பர்
   வெளியில் ஒளிவு மறைவின்றி பேசக் கூடிய மனப்பான்மை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-இல் செவ்வாயும் 6-இல் கேதுவும் சஞ்சரிப்பதால் கடந்த காலப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறு அனுகூலங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளை தாண்டி வெற்றிகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவிஷயங்களில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம்
07.11.2014 இரவு 10.08 மணி முதல் 10.11.2014 அதிகாலை 05.08 மணி வரை.

டிசம்பர்
   உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு. ஜென்ம ராசியில் சனியும் 4-இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். இம்மாதம் 16-ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் ஜென்ம ராசிக்கு 2-இல் சஞ்சரிக்கவிருப்பதால் ஏழரை சனியில் பாதசனி தொடங்குகிறது. இதனால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் ஏற்படும். இம்மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஒரளவுக்கு வெற்றி கிட்டும். 6-இல் கேது சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமை உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
05.12.2014 காலை 05.58 மணி முதல் 07.12.2014 மதியம் 12.46 மணி வரை.

சித்திரை 3,4 ம் பாதங்கள்
   செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் எப்பொழுதும், குடிகொண்டிருக்கும். இந்த வருடத்தில் ஏழரைசனியில் ஜென்ம சனி தொடருவதால் நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் தொழில் வியாபாரம் செய்பவர் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பபது நல்லது. கொடுக்கல்&வாங்கலிலும் கவனம் தேவை.

சுவாதி
   ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு சற்று முன் கோபம் இருந்தாலும் எதையும் தந்திரமாக சாதிப்பீர்கள். இந்த ஆண்டின் முற்பாதிவரை நல்ல பொருளாதார மேன்மையும் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஆண்டின் பிற்பாதியில் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள், வீண் பழிச் சொற்கள் உண்டாகும். அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். பணம் கொடுத்தால் திரும்பப் பெற முடியாமல் போகும். உடன் பழகுபவர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது.

விசாகம் 1,2,3 ம் பாதங்கள்

   குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு மற்றவரை எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய சுபாவம் இருக்கும். இந்த ஆண்டின் முற்பாதியில் எல்லா வகையிலும் ஏற்றங்களையும் உயர்வுகளையும் அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்து சேர்க்கைகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆண்டின் பிற்பாதியில் தொழில் வியாபாரம் உத்தியோகம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாதிருப்பது பணியில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 4,5,6,7,8 
நிறம் -வெள்ளை, பச்சை
கிழமை - வெள்ளி, புதன்
திசை - தென் கிழக்கு
கல் - வைரம்
தெய்வம் - லட்சுமி

பரிகாரம்
   துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. வரும் 13.06.2014 முதல் குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நற்பலனை தரும். வரும் 21.06.2014 வரை சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் சஞ்சரிக்கவிருப்பதால் சர்ப சாந்தி செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. 

கும்பம் ராசி, அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள்



புத்தாண்டு பலன்  2014  கும்பம் 

கும்பம் ராசி,  அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள்

        வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே
 உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கேது 3-ல் சஞ்சரிப்பதும், குரு பகவான் 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். இந்த ஆண்டு முழுவதும் சனி 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எந்தவொரு காரியத்திலும் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சுபிட்சம், கணவன்&மனைவியிடையே ஒற்றுமை, எடுக்கும் சுபகாரியங்களில் வெற்றி போன்றவை உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறுவதுடன் லாபமும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய உயர்பதவிகள் கிட்டும். வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளார். இதனால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலிலும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். வரும் 21.06.2014 முதல் சர்ப கிரகங்களான கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிக்க விருப்பதால் கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகளையும், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளையும், உறவினர்களிடையே வீண் பகைமையையும் உண்டாக்கும். இந்த வருட இறுதியில் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-இல் சஞ்சரிக்க விருப்பது குறிப்பிட தக்கது.

தேக ஆரோக்கியம்
        உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். ஏதாவது சிறு சிற பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ள பெரியவர்களால் சற்றே மருத்துவ செலவுகள் உண்டாகலாம். ஆண்டின் பிற்பாதியில் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாவதால் மன நிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை
        இந்த ஆண்டின் தொடக்கமானது எல்லா வகையிலும் ஏற்றத்தைத் தருவதாக அமையும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். திருமண சுபகாரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும். உற்றார்  உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் சிறு சிறு ஆதாயங்களைப் பெறுவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நற்பலனை தரும்.

கொடுக்கல் வாங்கல்
        பணவரவுகள் ஆண்டின் முற்பாதியில் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்&வாங்கலும் திருப்தியளிப்பதாக அமையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதகமாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ஆண்டின் பிற்பாதியில் பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரிகளுக்கு
        இந்த ஆண்டின் தொடக்கம் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தினை  உண்டாக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். ஆண்டின் பிற்பாதியில் புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சனைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு
        பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சாதிக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் மகிழ்ச்சியளிக்கும் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் கிட்டும். ஆண்டின் பிற்பாதியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு
        ஆண்டின் முற்பாதியில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். கட்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலையில் சிறப்பாக இருக்கும். ஆண்டின் பிற்பாதியில் உடன் பழகுபவர்களிடம் சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது பண விரயங்களும் சற்று அதிகரிக்கும் சேமிப்பு குறையும்.

விவசாயிகளுக்கு
        பயிர் விளைச்சல் எதிர் பார்த்த படி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் தடையின்றி அடைய முடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி மனை போன்றவற்றையும் வாங்க கூடிய யோகம் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பூமி மனை போன்றவற்றால் உறவினர்களிடையே பகைமை ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பெண்களுக்கு
        உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். குடும்பத்திலும் ஒற்றுமை, சுபிட்சம் நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும் புதிய வீடு கார் போன்றவற்றையும் வாங்குவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும் ஆடம்பர செலவுகளையும் குறைக்கவும்.

படிப்பு
        கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளையும், பாராட்டுதல்களையும் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகளையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியிலும் ஆதரவு கிட்டும்.

        ஆண்டின் தொடக்கத்தில் ஷேர்,லாட்டரி,ரேஸ் போன்றவற்றில் லாபம் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

ஜனவரி
        இயற்கையான விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவரான உங்களுக்கு 5-இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 9-இல் சனியும் ராகுவும், 10-இல் சூரியன் புதனும் சஞ்சாரம் செய்வதால் தொழில்,வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல அனுகூலங்கள் உண்டாகும். பயணங்களால் லாபம் அமையும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். முருகனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
21.01.2014 காலை 04.56 மணி முதல் 23.01.2014 மதியம் 12.39 மணி வரை.

பிப்ரவரி
        தன்னை கேலி கிண்டல் செய்பவர்களை தண்டிக்கும் குணம் கொண்ட உங்களுக்கு இம்மாதம் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் 8-இல் செவ்வாய் 12-இல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகளால் மனநிம்மதி குறையும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் பிறருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக தானிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம் 17.02.2014 பகல் 12.18 மணி முதல் 19.02.2014 இரவு 08.17 மணி வரை.

மார்ச்
        புரட்சிகரமான தீர்மானங்களை கொண்ட உங்களுக்கு 3-இல் கேதுவும், 5-இல் குருவும் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் தடைபட்ட மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சியும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெற்று மேன்மையளிக்கும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்
16.03.2014 இரவு 07.34 மணி முதல் 19.03.2014 காலை 03.51 மணி வரை.

ஏப்ரல்
        எடுக்கும் முயற்சிகளில் அயராது பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-இல் கேதுவும், 5-இல் குருவும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்து யோகமும் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சரளமாக நடைபெறும். கடன்கள் யாவும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றமும், கூட்டாளிகளால் அனுகூலமும் உண்டாகும். சேமிப்பும் பெருகும். சனி ப்ரீதி, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
13.04.2014 அதிகாலை 02.52 மணி முதல் 15.04.2014 பகல் 11.21 மணி வரை.

மே
        எதிலும் ஆலோசித்து செயல்படக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-இல் சூரியனும் 5-இல் குருவும் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும் என்றாலும் உறவினர்களிடையே வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கணவன்&மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு வெற்றி வாகை சூடுவார்கள். அதிகாரிகளின் பாராட்டுதல்களும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல், வாங்களில் சரளமான நிலையிருக்கும். முருகனை வழிபடுவது நல்லது. 

சந்திராஷ்டமம்
10.05.2014 பகல் 10.13 மணி முதல் 12.05.2014 மாலை 06.52 மணி வரை

ஜீன்
        எதிலும் மன உறுதியுடன் பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு  3-இல் கேதுவும், 9-இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபத்தினைப் பெறுவீர்கள். இம்மாதம் 13-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 6-ஆம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளார். இதனால் பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 21-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிக்கவிருப்பதால் கணவன்&மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
06.06.2014 மாலை 05.40 மணி முதல் 09.06.2014 காலை 02.41 மணி வரை

ஜீலை
        மற்றவர்களை கூர்ந்து கவனித்து செயல்படக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4-இல் சுக்கிரனும் 9-இல் சனியும் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள் என்றாலும் 2-இல் கேதுவும் 8-இல் ராகுவும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
 04.07.2014 அதிகாலை 01.13 மணி முதல் 06.07.2014 பகல் 10.29 மணி வரை மற்றும் 31.07.2014 காலை 08.40 மணி முதல் 02.08.2014 மாலை 06.09 மணி வரை.

ஆகஸ்ட்
        அனைவரிடமும் சர்வ சாதரணமாக பழக கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6-இல் சூரியனும் 9-இல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் எதிர் கொண்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளையும் சமாளிக்க முடியும். சற்றே மந்த நிலை ஏற்பட்டாலம் பொருட் தேக்க மின்றி சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இம்மாதம் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
 27.08.2014 மதியம் 03.59 மணி முதல் 30.08.2014 அதிகாலை 01.41 மணி வரை.

செப்டம்பர்
        பொது நலத்திற்கு பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6-இல் குருவும் 7-இல் சூரியனும், 8-இல் ராகுவும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. 9-இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடக் கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதால் கடன்களின்றி சமாளிக்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலை சோர்வடையும். சிவபெருமானை வழிபடுவது மிகவும் நல்லது.

சந்திராஷ்டமம்
23.09.2014 இரவு 11.10 மணி முதல் 26.09.2014 காலை 09.07 மணி வரை.

அக்டோபர்
        பிறர் வாழ்க்கையில் குறுக்கிடாத பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-இல் கேது, 6-இல் குரு, 8-இல் சூரியன் சுக்கிரன் ராகு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் கணவன்&மனைவியிடையே வீண் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். சுப காரியங்களில் தடை உண்டாகும். பொருளாதார நிலையிலும் தட்டுப்பாடுகள் நிலவுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் நிலையும் பாதிப்படையும். இம்மாதம் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் 21.10.2014 காலை 06.20 மணி முதல் 23.10.2014 மதியம் 04.27 மணி வரை.

நவம்பர்
        தான் கற்றதை சமயமறிந்து செயல்படுத்தும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்தாலும், 9-இல் சூரியனும், 11-இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளிலுள்ள நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமைக் குறையாது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைக்கவும். தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் தான் நடைபெறும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்
17.11.2014 மதியம் 01.25 மணி முதல் 19.11.2014 இரவு 11.59 மணி வரை.

டிசம்பர்
        மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு 6-இல் குரு 8-இல் ராகு, 12-இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பண வரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது, கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். பயணங்களிலும் வேகத்தை குறைப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்
14.12.2014 இரவு 08.51 மணி முதல் 17.12.2014 காலை 07.29 மணிவரை.

நட்சத்திர பலன்

அவிட்டம் 3,4,ம் பாதங்கள்
        செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் உலகமே தலைகீழாக கவிழ்ந்தாலும் வருத்தப்படமாட்டீர்கள். இவ்வருடத்தின் முற்பாதிவரை தாராள தன வரவுகளும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளும் கிட்டும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவுவதால் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்&மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும்.

சதயம்
        ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் நல்ல உடல் வாகும், உழைத்து வாழும் திறனும் இருக்கும். இந்த வருடத்தின் முற்பாதி உங்களுக்கு சாதகமான இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் குடும்ப தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல், வாங்கலும் லாபமளிக்கும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்குவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடப்பது, உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள்.

பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள் 
        குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் பரந்த மனப்பான்மையுடன் காணப்படுவீர்கள். இந்த ஆண்டின் முற்பாதி உங்களுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் உண்டாகும். பணவரவுகளிலும் திருப்திகரமான நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கும் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதுடன் மன நிம்மதியும் குறையும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். சேமிப்பும் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:  5,6,8,14,15,17
கிழமை : வெள்ளி, சனி
திசை : மேற்கு
நிறம் : வெள்ளை, நீலம் 
கல்  : நீலக்கல்,
தெய்வம் :  ஐயப்பன்

பரிகாரம்
        கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு வரும் 13.06.2014 முதல் குருபகவான் 6-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது. 21.06.2014 முதல் சர்ப கிரகங்களான கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிக்க விருப்பதால் சர்ப சாந்தி செய்வது, தினமும் விநாயகரை வழிபடுவது, ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.